நான் தமிழன் சாதியத்தின் முகவரி!

மார்ச் 27, 2009 § 5 பின்னூட்டங்கள்

நான் தமிழன் சாதியத்தின் முகவரி!

periyarzv5

ஈழத்தில் தமிழன் என்ற ஒரு இனமே பூண்டோடு அழிக்கப்படும் பொழுது உலகெங்கிலும் வாழும் தமிழன் தம்முள் வேற்றுமைகள் மறந்து தமிழன் என்ற உணர்வுடன் ஒருங்கினைதலின் அவசியத்தை புரிந்து இருக்கின்றான். தமிழர் தாம் வாழும் தளங்களில் எல்லாம் ஈழத்திற்கான ஆதரவு குரலை உரக்க கொடுக்க ஆரம்பித்து இருக்கின்றனர்.

இப்படி தமிழனமே உணர்வுகுவிலாக இருக்கும்வேளையில் தமிழனின் இதயத்துடிப்பு என்ற விளம்பரத்துடன் வியாபாரம் செய்யும் இதழில் நான்தமிழன் என்ற பெயரில் ஒரு தொடர்கட்டுரை வெளிவருகிறது. இன்றைய சூழலில் நான்தமிழன் என்ற வார்த்தை தமிழன் ஒருங்கிணைய பயன்படவேண்டிய தருணத்தில் இந்த கட்டுரை சாதியத்தின் பெருமை பேசுகிறது.

முதலியார், நாடார், தேவர்,செட்டியார், ரெட்டியார் அப்படி இப்படின்னு தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு சாதியின் பூர்விகம் மற்றும் அந்த சாதியில் இருக்கும் பிரபலங்கள் அந்த சாதியின் சாதனை அப்படி இப்படின்னு கதை பேசுகிறது நான் தமிழன். சுருக்கமாக சொல்வதென்றால் இந்த சாதிகளின் பெருமைதான் தமிழனின் பெருமை என்று சொல்வதுதான் நான் தமிழன்.

தமிழனாக ஒருங்கிணைவதுக்கு இடைஞ்சலாக இருப்பதே சாதிதான் என்பது நாம் அறிந்ததே. சாதியின் பெயரால் தமிழன் பிரிந்து தங்களுக்குள் அடித்து கொண்டிருக்கும் இந்த வேளையில் ஒவ்வொரு சாதிக்கும் கடந்த கால நிகழ்கால வரலாறு பேசி அவர்கள் காலரை உயர்த்த செய்வது நியாயம்தானா?

sathyaraj_0064
sivaji_ganesan_chronicle1
இந்த கட்டுரை எழுதுபவரின் யோக்கியதை சொல்லவேண்டும் என்றால் கவுண்டர் என்ற தலைப்பில் பெரியார்வாதி நடிகர் சத்யராஜை கவுண்டராக அடையாளப்படுத்துகிறார். சிவாஜி கணேசனை தேவராக அடையாளங்காட்டுகிறார் இப்படியே இந்த பிரபலம் இந்த சாதி என்று அடையாளம் காட்டுவதில் இருந்தே இந்த கட்டுரையின் நோக்கம் புரியும்.

தந்தை ‘பெரியார்’ தொட்டு எவ்வளவோ பேர் எப்படியாவது இந்த சாதிய நஞ்சை தமிழக மண்ணில் இருந்து அகற்றிவிடலாம் என்று போராடி. இன்னும் பக்கத்து மாநிலங்களில் நாயர் கவுடா ரெட்டி நாயுடு என்று அலைந்து கொண்டிருக்கும் வேளையில் சாதிய பெயரை தமிழகத்தில் இருந்து துடைத்து எறிந்து இருக்கிறார்கள்.

தமிழனுக்கு எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் அதை பத்தி கவலைப்படாமல் பிறசாதியினரை அடக்கி ஒடுக்குவதே தங்கள் நோக்கமாக கொண்டு தமிழ் இனத்தை சீரழித்து கொண்டிருக்கின்றனர். இனம் என்பதை சாதியின் அடிப்படையில் பார்ப்பவர்களே தமிழ் இனத்தின் சாபமாக இருக்கிறார்கள். இந்த வேளையில் ஆதிக்க வெறியர்களை சொறிந்துவிடும் இது போன்ற தொடர்கள் தேவைதானா?. ஏற்கனவே ஞானிகள் மூலம் கண்டதை எழுதி புண்ணியம் தேடும் இந்த இதழ்கள் மணிகண்டன்கள் மூலம் செய்யும் சாதிய சால்ராக்கள் வேறு.

நான் தமிழன் என்னும் பொழுதே சாதி மறந்து போக வேண்டும். உங்கள் சாதிய துதிபாடலுக்கு தயவு செய்து தமிழன் என்ற சொல்லை மட்டுமாவது பயன்படுத்தாமல் இருங்கள். இந்த இதழிடமும் அந்த எழுத்தாளரிடமும் நாங்கள் வைக்கும் கோரிக்கை ஒன்றுதான் ‘அய்யா தயவுசெய்து தமிழினத்தை வாழவிடுங்கள்’

Advertisements

தாயக தமிழனின் முதல் வீர வணக்கம்!

மார்ச் 27, 2009 § 2 பின்னூட்டங்கள்

தாயக தமிழனின் முதல் வீர வணக்கம்!

muthukumar_300
ஈழத்தமிழனுக்கு மிகவும் பரிச்சயமான வார்த்தை ‘வீர வணக்கம்’. ஈழத்தில் வீர மரணம் அதிகம். தாயககனவுடன் சாவினை தழுவிய வீரர்களை வீரவணக்கம் செலுத்தி மாவிரக்குரிய மரியாதையுடன் அடக்கம் செய்தல் ஈழ போராளிகளின் பண்பாடு. மாவீரர் தினம் என்ற ஒன்றை வீர சாவை தழுவிய போராளிகளை மரியாதை செய்யும் நிமித்தமாக போராளிகள் கொண்டாடுகிறார்கள். ஆயுத போராட்டத்தில் உயிர்விட்ட முதல் போராளி சங்கர் உயிர்விட்டது நம் தாயக மண்ணான தமிழகம்தான். அங்கு எழுந்ததே புலிகளின் முதல் வீர வணக்கம்.

வரலாறு திரும்புகிறது தாயக தமிழகத்தில் வீரவணக்கம் என்ற வார்த்தையை இன உணர்வுள்ள தமிழன் ஒவ்வொருவனும் உச்சரிக்கும் தருவாயை ஏற்படுத்தி தந்திருக்கிறது மாவீரன் முத்துகுமாரின் வீரச்சாவு. தமிழகத்தையே உலுக்கி எடுத்திருக்கிறது நம் சகசகோதரன் முத்துகுமாரின் ‘இறுதி அறிக்கை’. தன்மானமுள்ள அனைத்து தமிழனுன் தயக்கம் இல்லாமல் உச்சரிக்கும் வார்த்தை ‘வீரவணக்கம் வீரவணக்கம்’.

சுயநல தலைவர்கள் அரசியல் ஆதாயம் தேடி தமிழனை குழப்பியதால் ஈழப்போராட்டம் வழுவிழந்து அணைந்த தீபமான பொழுது. தன்னையே திரியாக்கி மீண்டும் அந்த தீபத்தை சுடர்விட்டு ஏறிய செய்திருக்கிறான் முத்துகுமார். தாயக தமிழம் தள்ளாடிய வேளையில் போராட்டபாதைக்கு அடித்தளம் அமைத்து நம்மை வழிநடத்தி செல்கிறது முத்துகுமார் தன் சாவுக்கு முன் எழுதிய தமிழர்களுக்கான உயில்

தோழர் முத்துகுமாரின் மரணத்தை வெறும் தற்கொலை என்றோ கோழைத்தனமான செயல் என்றோ அவசரத்தில் எடுத்த முடிவேன்றோ யாரேனும் சொல்வார்களேயானால் அவர்கள் முகத்தில் அறைந்தது போலே மரண நேரத்தில் ‘காவியம்’ படைத்து சென்றிருக்கிறான் முத்துகுமார். இது அவரசரத்தில் எடுத்த முடிவுகள் அல்ல தோழர்களே! மிக தெளிவான சிந்தனையாளன் எடுத்த தீர்க்கமான முடிவே இது என்பதற்கு அவன் அறிக்கையே சாட்சி. மரணத்தை தீர்மானித்த எவனும் இதுபோலே தெளிவான கடிதத்தை எழுதிட முடியாது என்பதே உண்மை. கடிதத்தின் ஒருவரியை கூட படித்திடாமல் சிலர் இதை நாம் ஆதரிக்க கூடாது என்று உளருவது வேதனைக்குரியது.
bhagat_singh_1929
இந்த வீரமரணத்தை கடந்த காலங்களோடு ஒப்பிடும் பொழுது ஈழப்போராளி திலீபனோடும் தோழர் பகத் சிங்கும் நம் நினைவில் நிழலாடுகிறார்கள். திலீபனின் தண்ணீரும் அருந்தாத உண்ணாவிரதம் பரவலாக ஈழப்போராட்டத்தில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது. கொண்ட லட்சியத்திற்காக உண்ணா நோம்பில் உயிரைவிட்ட திலீபனின் மரணம் அகிம்சை போராட்டம் தீர்வாகாது என்ற உண்மையை உணர்த்தியதோடு போராட்டத்தில் போராளிகளின் மன உரத்தை உலகிற்கு உணர்த்தியது.

மரணத்தை கண்டு கொஞ்சமும் அஞ்சாமல் தன் போராட்டத்தின் உண்மையை உணத்த மரணத்திற்கு முந்தைய நாளில் கடிதம் எழுதிய பகத்சிங்கின் வீரம் மாந்த சமூகத்தை வியப்பில் ஆழ்த்தியதோடு இல்லாமல் போராட்டத்திற்கு ஆதரவாக வீறு கொண்டு எழும்படி இளைஞர்களை தூண்டியது. தான் வீழ்ந்தாலும் தன் கொள்கைகள் மேலே மேலே செல்ல அவரது எழுத்துக்கள் பயன்பட்டது.
p106aa
இந்த இருவரின் வீரமும் தோழர் முத்துகுமாரிடம் ஒருங்கே அமைந்து இருக்கிறது. இருவரோடும் மரணத்தை தழுவிய முறையில் வேணுமெனில் முத்துகுமார் மாறுபடலாமே அன்றி கொள்கையை முன்னெடுத்து செல்வதில் இருவரின் ஒன்றுபட்ட உருவமாகவே தெரிகிறார் முத்துக்குமார்.

மேலும் பகத்சிங்கின் தந்தை கொடுக்கவிருந்த கருணைமனு தனது போராட்டத்தை இழிவு படுத்துவதாக கூறி மறுத்த செயலும். தமிழக அரசு அறுவித்த கருணை தொகையை மறுத்த முத்துகுமாரின் தந்தையின் செயலும் வேறுவேறு அல்ல.

tn_20090130009
தோழர் முத்துகுமாரின் அறிக்கையை தமிழகம் மற்றுமன்று உலகெங்கும் கொண்டு சேர்க்கும் சேவையை தமிழ் பற்றாளர்கள் செய்து கொண்டிருக்கின்றனர்.கட்சி சார்பில்லாத சாதி, சார்பில்லாத தமிழர்கள் முத்துகுமாரின் தியாகத்திற்கு வீரவணக்கம் செய்துகொண்டிருக்கின்றனர். முத்துகுமாரின் மரணத்தை தொடர்ந்து அவரது ஆசைப்படி அவரது உடலை சட்டகல்லூரி மாணவர்கள் கைபற்றியதோடு அல்லாமல் கட்சிக்காரர்களோ சாதிசங்கத்தினரோ நெருங்காமல் அரண் போல் காத்தனர். மகஇக தோழர்கள் கட்டுகோப்போடு இறுதிஊர்வலம் வரை கோசங்கள் எழுப்பி உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
தலைவர்கள் வழக்கம் போலே ஆளும் தரப்பிற்கு ஆதரவாக நடவடிக்கைகள் எடுத்திருந்தாலும் மாணவர்கள் மீது அந்த கருத்துக்களை திணிப்பது அவ்வளவு சுலபமாக இல்லை என்பதை அங்கு காண முடிந்தது. உணர்ச்சி பிழம்பாக இருந்த மாணவர்கள் முத்துகுமாரின் உடலை துருப்பு சீட்டாக வைத்து போராட்டத்தை தொடர நினைத்த பொழுது பாகுபாடு இல்லாமல் அனைத்து கட்சியும் தங்களின் ஆளுவர்க்கத்தின் ஆதரவான போக்கையே வெளிப்படுத்தியது நாம் கவனிக்க வேண்டியது.

முத்துகுமாரின் வேண்டுகோள்கள் அனைத்து தரப்பு மக்களையும் சற்று கவனிக்க செய்திருக்கிறது. மெத்த படித்த மேதைகளுக்கு முத்துகுமாரின் வேண்டுகோள்கள் ‘படிக்க’ நேரமில்லாத அளவுக்கு வேலைப்பழு வந்து விட்ட நிலையில் பாமர மக்கள் ஆச்சரியத்துடன் கூறுகின்றனர் சிங்கள காதலர்களுக்கும் குரல் கொடுத்த முத்துகுமாரின் பறந்துவிரிந்த பார்வை பற்றியும் தமிழக மீனவ படுகொலைக்கு நியாயம் கேட்ட பாங்கும். இணையம் பயன்படுத்தும் மேதாவிகளை சென்றடையாத முத்துகுமாரனின் கோரிக்கைகள் எம்மின பாட்டாளிவர்க்கத்தின் காதுகளை சென்றடைந்தது ஆச்சரியமே!

இறுதி ஊர்வலத்தில் வீரவணக்கம் செலுத்திய மாணவர் படைகள் மத்திய மாநில அரசுகளின் தமிழர் விரோத போக்கினை கண்டித்து எழுப்பிய கோசங்கள் ஆளும்வர்க்கத்தை நடுநடுங்க வைத்திருக்கிறது அதற்க்கு கல்லூரி மூடல் உத்தரவே சான்று. கட்டுக்கடங்காத அளவில் மாணவர்கள் உணர்ச்சி அலைகள் எழுந்ததை கண்டு காவல்துறை கொஞ்சம் ஆடித்தான் போனாது. பொதுமக்கள் பெருமளவில் சாலைகளில் நின்று வேடிக்கை பார்ப்பது தமிழனின் பிறவி குணம் என்பது போல வேடிக்கை பார்த்ததும் பதிலுக்கு தோழர்களின் ‘வேடிக்கை பார்க்கும் தமிழினமே! வீதியில் வந்து போராடு’ என்று கோசங்கள் ஒலிப்பதும் நடந்தது.

முதன்முதலில் தமிழவீதிஎங்கும் ஒலிக்கும் வீரவணக்கம் முழக்கங்கள் தமிழ்நாட்டிற்கு புதிதுதான். ஈழத்தில் எரியும் நெருப்பு ஒவ்வொரு தமிழனின் நெஞ்சங்களிலும் எரிய துவங்கி இருக்கிறது என்பது தோழர்களின் முழக்கங்கள் மூலம் உணரமுடிகிறது. போராளிகளை வெளிப்படையாக ஆதரித்தும் புலிக்கொடிகள் ஏந்தியும் தோழர்கள் ஆர்பரித்த காட்சி புதிய நம்பிக்கையை விதைத்திருக்கிறது.

முத்துகுமரன் தன்னுடலை எரித்து ஈழத்தில் சர்வதேச வெளிச்சம் படுவதற்கு பாடு பட்டிருக்கின்றான் தமிழன தலைவன் என்று அடையாளம் காட்டப்படும் தலைமை எப்பாடு பட்டாவது இந்த நெருப்பை இருட்டடிப்பு செய்துவிடலாம் என்று துடிக்கிறது.

இவர்கள் தொலைக்காட்சிகள் செய்தித்தாள்களில் செய்திகள் இருட்டடிப்புகள் செய்தால் நம் தோழனின் கனவுகள் முடங்கிவிடுமா என்ன? கல்லூரியை பூட்டிவைத்தால் மாணவர்கள் ஒருங்கிணைய முடியாது என்று தமிழக ஆளும் வர்க்கம் முடிவு எடுத்திருக்கிறது. எங்கள் சகோதரன் இங்கே விளைத்துவிட்டு போன கேள்விகள் முடங்கிபோகாது தோழர்களே! நீங்கள் எவ்வளவு அடக்கினானாலும் இருட்டடிப்பு செய்தாலும் மீண்டும் மீண்டும் வீரத்தமிழன் சொல்லுவான்

dsc00228
‘வீரவணக்கம் வீரவணக்கம்’
‘முத்துகுமாருக்கு வீரவணக்கம்’

பெங்களூர் போராட்டம் முதல் முயற்சி!

மார்ச் 24, 2009 § பின்னூட்டமொன்றை இடுக

பெங்களூர் போராட்டம் முதல் முயற்சி!

பெங்களூரில் கடந்த ஞாயிறு(15/02/2008) ல் அண்ணன் அறிவழகன் தலைமையில் ஒரு போராட்டத்தை நடத்தி காட்டி இருக்கிறோம். கொஞ்சம் நிதானமாக திரும்பி பார்க்கும் பொழுது போராட்டத்தின் அடித்தளம் என்ன என்று சிந்திக்க தோன்றுகிறது. ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலைகளை தமிழனாக நமது எதிர்ப்பை பதிவு செய்யவேண்டும் என்ற எண்ணம் உங்களை போலத்தான் எங்களுக்கும் இருந்தது. எங்களிடம் உணர்வு இருந்ததே தவிர அது நடைமுறை சாத்தியமா என்ற ஐயமே எப்போதும் எங்களிடம் மிச்சம் இருந்தது. பெங்களூரில் தமிழ் உணர்வாளர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற எண்ணமுடைய அண்ணன் அறிவழகன் அவர்கள் ஒரு சந்திப்பின் போது ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்து இனப்படுகொலைக்கு எதிரான நமது உணர்வுகளை உலகிற்கு காட்ட வேண்டும் என்று அவரது எண்ணத்தை கூறினார்.

பெங்களூரில் தமிழ் உணர்வாளர்களை அடையாளம் காண்பது அவ்வளவு எளிதான பணி அல்ல. மேலும் தமிழினம் சார்ந்த போராட்டத்திற்கு அனுமதி பெறுவது அவ்வளவு எளிதானது இல்லை. படம் பார்க்க கிரிக்கெட்டு பார்க்க கூட்டம் கூடும் தமிழன் இன உணர்வு சார்ந்த போராட்டம் என்றால் ‘நமக்கு எதுக்குடா வேண்டாத வேலை’ என்பான். அப்படியே ‘நம் இனத்துக்கு நாமில்லாமல் வேறு யார் போராடுவா?’ என்று கேள்வி எழுப்பினால் நமக்கு ‘தமிழ் திவிரவாதி’ பட்டம் கண்டிப்பாக கிடைக்கும். அதனாலே நாங்கள் கையறு நிலையில் சில நாட்களை கழித்தோம்.

முத்துகுமரனின் தியாகம் முகத்தில் அறைந்தது போன்ற ஒரு பாதிப்பை எங்களிடம் ஏற்படுத்தியது. ஒரு உணர்வாளன் தன் உயிரையே கொடுத்து இருக்கிறான் நம்மால் ஒருநாள் போராட்டத்தை நடத்த முடியாதா என்ற கேள்வியை எங்களுள் விதைத்து சென்றான் மாவீரன் முத்துகுமார்.

dsc05356
உண்ணாநிலை போராட்டம் அவ்வளவு எளிதாக அனுமதி கிடைக்காது என்று சொன்ன அறிவழகன் அண்ணன் அறவழி போராட்டத்திற்கு அனுமதி பெறுவது சாத்தியம் என்ற உண்மையை சொன்னார். நாங்கள் சந்தித்த பொழுது நான் வெங்கடேசன் மாற்றும் அண்ணன் ஆகிய மூன்று பேர் மட்டுமே இருந்தோம். அறப்போராட்டத்தில் கண்டிப்பாக உணர்வாளர்களை ஒருங்கிணைத்து மாபெரும் வெற்றியாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. வெறும் மூன்றில் துவங்கிய எங்கள் பயணம் அடுத்த அடுத்த கட்டத்தை நோக்கி நகர துவங்கியது.

அறிவழகன் அண்ணன் போராட்டம் குறித்த இழையை போட்ட பின்னர் சிறிது சிறிதாக ஆதரவு பெருகியது. உடனுக்குடன் எங்களுக்கு அழைப்பு விட்டு போராட்டத்தை எப்படி நடத்துவது என்று பலவாறு முடிக்கிவிடும் பணியை அண்ணன் பார்த்துக்கொண்டார். நிகழ்சி எப்படி நடத்துவது என்ற கூட்டம் அடிக்கடி நடந்து கொண்டே இருந்தது. சந்திப்பின் போது வரும் தோழர்களின் எண்ணிக்கை கூடிகொண்டே இருந்தது.வேல்முருகன் மோகன் மணிமாறன் தமிழ்வேந்தன் எழில் என்று உணர்வாளர்களின் கூட்டம் போராட்டத்தை புது உத்வேகத்துடன் நகர்த்தியது. அலைபேசிகளின் வாயிலாக போராட்டத்திற்கான ஆதரவுகளை நண்பர்கள் தெரிவித்தார்கள்.

பதாகைகள் தட்டிகள் துண்டு பிரச்சாரம் வழங்குவது போன்ற பணிகளை பகிர்ந்ததோடு நிகழ்சிநிரலும் தயாரானது. இதுவரை எந்த ஒரு போராட்டத்தையும் முன்னின்று நடத்திறாத இளம்கன்றுகளான நாங்கள் களம் காண தயாராகினோம்.அவரவரர் அவர்களது பணிகளில் மும்முரமாக இயங்கினோம். போராட்ட நாளும் வந்தது.

dsc05366
ஞாயிறு காலை திட்டமிட்டபடி மகாத்மா காந்தி சாலையில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. மிக நேர்த்தியாக இருநூறுபேர் உட்காரும்படி பந்தல் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஒன்பது மணியளவில் ஒன்றுகூடிய நாங்கள் பேனர்களை கட்டும் பணிகளில் மும்முரமானோம். வாழை அமைப்பை சேர்ந்த நண்பர்கள் சென்னை தகவல் தொழில்நுட்ப அமைப்பை சேர்ந்த நண்பர்கள் மற்றும் நமது ‘உலகத்தமிழ்மக்கள்’ அரங்கின் தலைமை நிர்வாகி ‘சசி’, நண்பன் ‘கோபி’, ரமணன். நிதி போன்ற நண்பர்கள் உடனிருந்த வேளையில் நமது அறப்போராட்டம் துவங்கியது.

பந்தல் முழுக்க உடல்சிதறிய எம்தமிழ் உறவுகளின் புகை படங்கள் அடங்கிய பெரிய புகைப்படபலகைகள் இருந்தன. புகைப்பட பலகைகளை வடிவமைப்பதில் தோழர் மோகன், வெங்கடேஷ், கருப்பு, மணிமாறன் எடுத்து கொண்ட பங்களிப்பை நாம் பந்தலில் பார்க்க முடிந்தது. இளகிய மனம் படைத்த அனைவரையும் கண்ணீர் சிந்த வைக்கும்விதமாக வடிவமைத்து இருந்தார்கள்.

நிகழ்வு துவங்குவதற்கு முன்னர் அந்த சாலையின் வழியே சென்ற ஊனமுற்ற பெரியவர் இதனை பார்த்துவிட்டு தானும் போராட்டத்தில் கலந்து கொள்வேன் என்று கூறியதோடு நமது பந்தலில் முதல் நபராக அமர்ந்து தனது உணர்வுகளை வெளிப்படுத்தினார். அந்த முதியவரின் இன உணர்வு இளையோர் சமூகத்திடம் இல்லையே என்ற வருத்தத்தோடு நிகழ்வின் முதல் நிகழ்ச்சியான மாவீரன் முத்துகுமாருக்கு மலர்மாலை அந்த பெரியவரின் கைகளால் இடப்பட்டது. அதனை தொடர்ந்து தோழர் வெங்கடேஷ் வரவேற்புரை கொடுத்தார். வரவேற்பு உரையோடு இலங்கை அரசின் மனித உரிமைகளை மீறும் செயலை சுட்டிகாட்டி நடப்பது போர் அல்ல இனப்படுகொலை என்று ஆணித்தரமாக தனது கருத்துக்களை முன்வைத்து வரவேற்புரையை நிறைவுசெய்தார்.

dsc05340
sen1
நிகழ்வின் விளக்க உரையை துவங்கிய அறிவழகன் இனப்படுகொலையை தடுத்து நிறுத்து என்ற வேண்டுகோளோடு. சென்னையில் இருந்து கொண்டு நக்கீரன் ஆசிரியருக்கு மிரட்டல்விடுக்கும் இலக்கைதூதுவனுக்கு எச்சரிக்கைமணி அடித்ததோடு ஈழவரலாறு தெரியாமல் தமிழன் எதற்கு இலங்கை போனான் என்று பிதற்றிய ஜெயலலிதாவின் வரலாற்று அறிவு பத்தி ஆதங்கப்பட்டார். ஜெயலிதா வரலாறு நமக்கு தெரியாதா அண்ணா? என்று எண்ணத்தோன்றியது. தமிழினவிரோதிகளை தமிழகத்தைவிட்டு விரட்டுவோம் என்ற முழக்கத்தோடு தனது முன்னரை முடித்து கொண்டார்.

கருப்பு என்ற வேல்முருகன் அவர்கள் தொடர்முழக்கங்களை துவங்கி வைத்தார். ‘காந்தி தேசம் கொடுக்குதே புத்ததேசம் கொல்லுதே’, தமிழ் ஈழத்தை அங்கீகரி, ராணுவ உதவிகளை திரும்பிவாங்கு,மழலைகளை கொள்ளாதே! போன்ற முழக்கங்களும் பதாகைகளில் உள்ள இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் தோழர்களின் துண்டு பிரசுரங்கள் எங்களை கடந்து சென்ற மக்களின் மனசாட்சிகளை தட்டியிருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

ஊடகவியலாளர்கள் அறிவழகன் அண்ணனையும் தோழர் வேல்முருகனையும் கேள்விகளால் துளைத்து எடுத்த பொழுதும் நம் தோழர்கள் தெளிவாக விளக்கினர் அங்கே நடைபெறும் போரை முன்னின்று நடத்துவது இந்தியா என்று. போரை நிறுத்துவது இந்தியாவின் கைகளிலேயே இருக்கிறது மிகத்தெளிவாக விளக்கினர்.

image0101
மகாத்மா காந்தி சாலையில் நாங்கள் பந்தலிட்டிருந்த இடம் மையமான இடம் போக்குவரத்தில் அதிகமான மக்கள் கடந்து செல்லும் இடம். கடந்து செல்லும் மக்களில் பலர் அங்கு நாங்கள் வைத்திருந்த பதாகைகளை ஆர்வமுடன் கண்டனர் புகைப்படங்கள் பார்த்த உள்ளம் பதறினர் பெண்கள். துண்டு பிரச்சாரங்களை தோழர்கள் மணிமாறன், வெங்கடேஷ் ராஜூ(நம் அரங்க உறுப்பினர்தான்) எழில் மக்களிடம் கொண்டு சேர்த்தனர். இடையிடையே கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் முழக்கங்கள் இடப்பட்டன.

தமிழ்சங்கம் நடத்தும் பேரணி இருப்பதாலும் கன்னட அமைப்பு ஒன்று எங்கள் போராட்ட இடத்தை கேட்டதாலும் 12:00 மணியளவில் எனது நன்றியுரையோடு நிகழ்ச்சி நிறைவு பெற்றது. நன்றி உரை வழங்கும்பொழுது தமிழின தலைவனா? தமிழின துரோகியா? என்று பேசி உணர்ச்சி கொந்தளிப்போடு உரையை நிறைவு செய்ய வேண்டியதாகியது.

ஈழத்தை நேரில் கண்ட தோழரின் உரை

நாங்கள் நிகழ்வை முடிக்கும் தருவாயில் அங்கே எங்களோடு நின்றிருந்த தோழர் ஒருவர் வெகு நேரமாக பேசவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து கொண்டிருந்தார். நாங்களும் அவரை பேசும்படி அனுமதி கொடுத்தோம். ஈழத்திற்கு அடிக்கடி தொழில் விடயமாக சென்றுவரும் தோழர் ஈழத்தின் தற்போதைய நிலவரம் பற்றி கூறினார். இங்கே படங்களில் இருப்பது போன்று கைகால் சிதறி ரோட்டில் சிதறி கிடக்கும் குழந்தைகளை தினம்தினம் பார்ப்பவன் நான். அங்கே எப்போதும் குண்டு வெடிப்பு சத்தம் கேட்ட வண்ணம் இருக்கிறது. தமிழனின் உடைமைகள் சாலையில் போட்டு விற்கப்படுகிறது. பச்சை குழந்தைகூட தமிழன் என்றால் திவிரவாதிதான். உடல்சிதறிய பிஞ்சுக்களை என் கரங்களாலே தூக்கி இருக்கிறேன், சார்க் மாநாட்டுக்கு போன இந்திய படைகள் இன்னும் அந்த மண்ணிலே தங்கி போருக்கு துணை போவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். அங்கே செத்துவிழும் தமிழனின் பிணத்தை எடுத்து புதைக்கவும் ஆளில்லை என்று ஈழத்தின் நிலவரம் அவர் சொன்ன பொழுது சொல்ல முடியாத துயரத்தில் எங்கள் மனது ஆழ்ந்தது. எம்தமிழ் இனத்தின் துயரம் நாமன்றி யார் துடைப்பார் என்ற எண்ணமும் எழுந்தது. இந்திய அரசு நேரடியாக ஈழத்தில் இந்தியப்படைகளை இறக்கி தமிழனுக்கு செய்யும் துரோகம் தோழரின் உரையால் தோலுரிக்கப்பட்டது.

dsc05405
போராட்டம் எங்களுள் விதைத்த நம்பிக்கைகள்!

பெங்களூர் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் என்றாலே இன உணர்வு செத்துப்போய் தாங்கள்தான் மாபெரும் அறிவாளி கூட்டம் தங்களை அமெரிக்கர்கள் போலே காட்டிக்கொள்ள மெனக்கெடும் கூட்டம் என்று நினைத்து கொண்டிருந்த பொதுமக்களுக்கு இல்லை இல்லை இந்த கூட்டத்தில் இனத்திற்காக குரல்கொடுக்கும் இளைஞர்களும் உண்டு என்று அடையாளம் காணச்செய்திருக்கிறது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட உணர்வாளர்கள் ஒவ்வொருவருமே தங்களால் குறைந்தது நான்கு நண்பர்களை அடுத்தகட்ட போராட்டத்திற்கு அழைத்துவர முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. இதுவரை பெங்களூரில் ஐடி இளைஞர்களுக்கு தமிழ் உணர்வை பறைசாற்றும் அமைப்புக்கள் இல்லை இனிமேல் நமது உலகத்தமிழ் மக்கள் அரங்கு அப்படி இருக்கும். தூங்கி கொண்டிருக்கும் தமிழனின் இன உணர்வுகளை தட்டி எழுப்பும். தொடர்ந்து தமிழனுக்காக குரல் கொடுக்கும். இந்த போராட்டம் வெறும் ஒத்திகையே பெங்களூரில் அடுத்தடுத்து தமிழனின் குரல் ஓங்கி ஒலிக்கும் அது ஈழத்தில் இன்னலுறும் தமிழனுக்கு ஆதரவை கொடுக்கும் இந்திய தேசியத்தின் பகையை உலகிற்கு விளக்கும்.

இளம் கன்றுகளை முறைப்படுத்தி வழிநடத்திய அண்ணன் அறிவழகனுக்கு இது பெங்களூரில் முதல்வெற்றியை பெற்றுதந்திருக்கிறது ஈழத்தில் அமைதி திரும்பும்வரை எங்களுக்கு ஓய்வு இல்லை தொடர்ந்து போராடுவோம். ஓர்குட் வாய்பேச்சு வீரர்களின் தளம் என்பதை பொய்யாக்குவோம்.

தமிழினதலைவன் பூனை வெளியே வருகிறது!

மார்ச் 7, 2009 § பின்னூட்டமொன்றை இடுக

kalaignar
தமிழினதலைவன் பூனை வெளியே வருகிறது!

சோடாவுக்கும் மைக்கிற்க்கும் மாரடிக்கும் தமிழ் உணர்வாளர்கள்? ஏத்திவிட்டு ‘தமிழினத்தலைவன்‘ என்ற பட்டத்தை கருணாநிதிக்கு கொடுத்து இருக்கின்றனர். தமிழகவீதியெங்கும் சுவரொட்டிகளில் தமிழினத்தலைவன் என்று வஞ்சப்புகழ்ச்சியில் நெஞ்சம் நிறைந்து கிடக்கிறார் கருணாநிதி. உங்களைமாதிரி நானும் ஒருவேளை ‘இவரு’ உண்மையிலேயே அப்படித்தானோன்னு நினைச்சுக்கிட்டுத்தான் இருந்தேன். ஆனால் நடக்கு நிகழ்வுகளை பார்க்கும் பொழுது தமிழினதலைவன் என்பது கேலிக்கூத்து என்பது புரிகிறது.

கன்னடர்கள் எவனையும் கன்னடதலைவன் என்று அழைப்பது இல்லை தெலுங்கர்கள் எவனையும் தெலுங்குஇன தலைவன் என்று அழைப்பதும் இல்லை பிற மொழிகளும் அப்படி என்றே நினைக்கிறேன் அனால் இந்த தமிழனுக்கு மட்டும் ஏன் தமிழின தலைவன்? மத்தமொழிகள் மாதிரி இல்லாமல் தமிழை மட்டும் ‘அபாத்பாந்தவனாக’ காப்பாற்ற அய்யா கருணாநிதி பிறப்பெடுத்திட்டாரோ?

சரி இந்த கருணாநிதி தமிழ் இனத்துக்கு ஏதாவது செய்து இருக்கிறாரா என்றால் செய்து இருக்கிறார். அதாவது தமிழ்தாய்வாழ்த்து பாட உரிமையை ற்று தந்திருக்கிறார். தமிழில் சிலநூல்கள் எழுதி இருக்கிறார். தமிழ் அறிஞர்கள் என்று சொல்லும் சிலருக்கு மேடை அமைத்து சோடா வாங்கி கொடுத்து இவரின் புகழ் பாட சொல்லி தமிழ் வளர்த்திருக்கிறார். ஒரு தொலைகாட்சி துவங்கி ‘மச்சான்’ தமிழை வளர்த்து எடுத்திருக்கிறார். அப்புறம் இவர் செல்வாக்கால் தமிழை செம்மொழி ஆக்கி இருக்கிறார்( கன்னடம் தெலுங்கு எல்லாம் செம்மொழி எப்படி வாங்குச்சுன்னு கேக்ககூடாது).

 

தமிழினத்திற்கு இவர் செய்த துரோகங்கள்!

தமிழ் இனத்திற்கு கருணாநிதி அய்யா இதுவரை சிலபல துரோகங்களை செய்து இருக்கிறார் அது என்னன்னு பார்ப்போம்.


1. கச்சதீவை சிங்களனுக்கு தாரை வார்த்தது.

2. மீனவர்கள் கொலைக்கு கடிதம் எழுதியே காலத்தை கடத்தியது.

3. இவரும் இவர் கட்சிக்காரர்களும் செய்த ஊழலில் அரசு வழங்கும் கல்வியான தமிழ்கல்வியை மண்ணாக்கியது.

4. தினகரன் அலுவலகத்தை எரித்த அழகிரியை புத்திரபாசத்தால் தட்டிகேட்க்க துப்பிலாமல் ‘விசாரணை கமிஷன்’ என்று பசப்பியது.

5. ஈழ படுகொலையை கண்டிக்காமல் ‘சகோதரயுத்தம்’ என்று பிரச்னையை திசை திருப்பியது.

6. காவேரி முல்லை பெரியார் பாலாறு இப்படி எந்த ஒரு நீர் பிரச்சனையிலும் தமிழனின் உரிமைக்குரலாக ஒலிக்காமல் மெத்தனமாக இருந்தது.

340x
பெரியாரின் பாசறையின் கூர்தீட்டபட்டதாக சொல்லும் இவர் உண்மையில் முனைமங்கியவாள் என்பதே எங்கள் கருத்து. திராவிட கழகத்தை உடைத்த இவர்கள் அய்யா யாரை கடுமையாக எதிர்த்தாரோ அந்த ‘குலகல்வி’ அம்பி ராஜாஜியின் ஆதரவோடுதான் பச்சைத்தமிழர் காமராஜரின் ஆட்சியை பறித்தார்கள். அப்புறமா அனைத்துசாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் சமத்துவபுரம் அப்படி இப்படின்னு பெரியார் பேரன்போலே காட்டிகொண்டாலும் அவ்வப்போது பார்ப்பனியசேவை ஆற்றுவதிலும் ஆர்வம் உள்ளவராகவே காட்சி அளிக்கிறார்.

இவரின் ஐம்பதுவருட பொதுவாழ்க்கையின் போராட்டத்தில் இவர் மக்கள் நல்லசெல்வசெழிப்புடன் இருக்கின்றனர்.ஆனால் தமிழ் மக்கள் அப்படியே பரதேசிகளாகத்தான் இருக்கின்றனர். அப்படின்னா இவுங்க தமிழ் இனம் என்று சொல்லுவது இவரின் குடும்பத்தையா?

ஈழமக்கள் அங்கே தினம்தோறும் செத்து கொண்டிருக்கின்றனர் காங்கிரஸ் பேரியக்கம் தமிழன் சாவை ரசிக்கிறது தமிழககாங்கிரஸ் கைகூலிகள் இனஉணர்வு அற்று வேடிக்கை பார்க்கின்றனர். தமிழகத்தில் அனைத்து மக்களும் ஈழத்திற்காக போராட்டம் செய்யும் வேளையில் எவன் அங்கே தமிழனை கொன்று குவிப்பதற்கு ஆதரவாக இருக்கின்றானோ அவனை கூட்டு சேர்த்துகிட்டு ஈழஆதரவு நாடகங்களை நடத்தி கொண்டிருக்கிறார்.

பார்ப்பனியசேவை அல்லது ஒரேகல்லில் இரண்டுமாங்காய்!
00008565
பெரியார் விருது பெற்ற கருணாநிதி விருதை தக்கவைத்துக்கொள்ள நீதிமன்றத்தில் தடியடி நடத்திகாட்டி இருக்கிறார். அதுவும் பெரியாரின்பேரன் சுசாமிக்காக. தில்லைகோவிலை அரசே எடுத்துநடத்துவது என்று முடிவெடுத்து அதனை கைபற்றியது. இத்தனைநாள் தில்லை கோவில்மூலம் ‘ஸ்வாகா’ போட்ட தீட்சிதர்கள் நீதிமன்றங்களை நாடினார்கள்.சுசாமி தீட்சிதர்கள் சார்பில் தன்னையும் வழக்கில் சேர்த்துகொள்ளவேண்டும் என்று தானேமுன்வந்தார். ஏற்கனவே ஈழ ஆதரவாக போராட்டத்தில் இருந்த வழக்கறிஞர்கள் சுசாமியின் தமிழின விரோத செயலின்பொருட்டு முட்டைகளால் தாக்கினர். இதன் பொருட்டு நீதிமன்றத்தில் நுழைந்த காவல்துறை வழக்கறிஞர்கள் ‘நைய’புடைத்தது.

ஈழ விவகாரத்தில் சிக்கலை ஏற்படுத்துவதும் தமிழகம் குறித்து வடநாட்டு ஊடகங்களுக்கு தவறான தகவலை கொடுப்பதும். தமிழக அரசுக்கு எதிராக தீட்சிதர்களுக்கு ஆதரவாகவும் கொக்கரிப்புடன் வழக்கு தொடுக்க வந்த சுசாமியை தாக்கிய வழக்கறிஞர்கள் உண்மையான பெரியார் தொண்டனால் வாழ்த்தப்பட வேண்டும். ஆனால் காவல்துறையை ஏவிவிட்டு வழக்கறிஞர்களை நையபுடைந்து எடுத்து இருக்கிறார் வாழும்பெரியார். அப்புறமா எனக்கு தெரியாம நடந்துடுச்சு நான்வேணும்னா ஆம்புலன்சுல வரேன் கோவிச்சுக்காதிங்க அப்படின்னு கடிதம் போட்டுட்டு காத்திருக்கிறார் தமிழினதலைவன்.

வழக்கறிஞர்கள் மீது திட்டமிட்டே தாக்குதல் நடத்தபட்டிருக்கிறது. முத்துகுமாரின் மரணத்திற்கு பிறகு வழக்கறிஞர்கள் நடத்தும் போராட்டம் அரசு இயந்திரத்தை செயலிழக்க செய்ததோடு மக்களின் ஆதரவை பெற்றிருக்கிறது. இதைமுடக்க வேண்டும் அதேநேரத்தில் தனது செயலால் பார்ப்பனியஊடகங்கள் திருப்தி அடையவேண்டும் என்று இரண்டு மாங்காய்க்காக கல்லைவிட்டு எறிந்திருக்கிறார் கருணாநிதி. வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டது பார்ப்பானுக்காக என்று பார்ப்பனியஊடகங்கள் அமைதிகாக்கின்றன. மறுபுறம் வழக்கறிஞர்கள் வன்முறையாளர்கள் என்று நிறுவும்முயற்சியில் இருக்கின்றனர் இதன் பொருட்டு போராட்டம் முடங்கிவிடும் என்று மருத்துவமனையில் முடங்கிகிடக்கும்முதல்வர் திட்டமிடுகிறார். ஆக ஒரே கல்லில் இரண்டு மாங்காய் பார்ப்பனிய ஊடகங்களின் ஆதரவு ஈழபோராட்டத்தில் முட்டுகட்டை!
போராட்டங்களை நசுக்க நசுக்கத்தான் மேலெழும் என்று தெரியாமல் பார்ப்பானுக்கு சேவகம் பண்ணிக்கொண்டு இருக்கிறார். இவர் கையில் பெரியார்விருது அய்யாவுக்கு நேர்ந்த அவமானம் பாரீர்

Hello world!

மார்ச் 7, 2009 § 1 பின்னூட்டம்

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!

Where Am I?

You are currently viewing the archives for மார்ச், 2009 at தமிழன்பன் பக்கம்.