தமிழினதலைவன் பூனை வெளியே வருகிறது!

மார்ச் 7, 2009 § பின்னூட்டமொன்றை இடுக


kalaignar
தமிழினதலைவன் பூனை வெளியே வருகிறது!

சோடாவுக்கும் மைக்கிற்க்கும் மாரடிக்கும் தமிழ் உணர்வாளர்கள்? ஏத்திவிட்டு ‘தமிழினத்தலைவன்‘ என்ற பட்டத்தை கருணாநிதிக்கு கொடுத்து இருக்கின்றனர். தமிழகவீதியெங்கும் சுவரொட்டிகளில் தமிழினத்தலைவன் என்று வஞ்சப்புகழ்ச்சியில் நெஞ்சம் நிறைந்து கிடக்கிறார் கருணாநிதி. உங்களைமாதிரி நானும் ஒருவேளை ‘இவரு’ உண்மையிலேயே அப்படித்தானோன்னு நினைச்சுக்கிட்டுத்தான் இருந்தேன். ஆனால் நடக்கு நிகழ்வுகளை பார்க்கும் பொழுது தமிழினதலைவன் என்பது கேலிக்கூத்து என்பது புரிகிறது.

கன்னடர்கள் எவனையும் கன்னடதலைவன் என்று அழைப்பது இல்லை தெலுங்கர்கள் எவனையும் தெலுங்குஇன தலைவன் என்று அழைப்பதும் இல்லை பிற மொழிகளும் அப்படி என்றே நினைக்கிறேன் அனால் இந்த தமிழனுக்கு மட்டும் ஏன் தமிழின தலைவன்? மத்தமொழிகள் மாதிரி இல்லாமல் தமிழை மட்டும் ‘அபாத்பாந்தவனாக’ காப்பாற்ற அய்யா கருணாநிதி பிறப்பெடுத்திட்டாரோ?

சரி இந்த கருணாநிதி தமிழ் இனத்துக்கு ஏதாவது செய்து இருக்கிறாரா என்றால் செய்து இருக்கிறார். அதாவது தமிழ்தாய்வாழ்த்து பாட உரிமையை ற்று தந்திருக்கிறார். தமிழில் சிலநூல்கள் எழுதி இருக்கிறார். தமிழ் அறிஞர்கள் என்று சொல்லும் சிலருக்கு மேடை அமைத்து சோடா வாங்கி கொடுத்து இவரின் புகழ் பாட சொல்லி தமிழ் வளர்த்திருக்கிறார். ஒரு தொலைகாட்சி துவங்கி ‘மச்சான்’ தமிழை வளர்த்து எடுத்திருக்கிறார். அப்புறம் இவர் செல்வாக்கால் தமிழை செம்மொழி ஆக்கி இருக்கிறார்( கன்னடம் தெலுங்கு எல்லாம் செம்மொழி எப்படி வாங்குச்சுன்னு கேக்ககூடாது).

 

தமிழினத்திற்கு இவர் செய்த துரோகங்கள்!

தமிழ் இனத்திற்கு கருணாநிதி அய்யா இதுவரை சிலபல துரோகங்களை செய்து இருக்கிறார் அது என்னன்னு பார்ப்போம்.


1. கச்சதீவை சிங்களனுக்கு தாரை வார்த்தது.

2. மீனவர்கள் கொலைக்கு கடிதம் எழுதியே காலத்தை கடத்தியது.

3. இவரும் இவர் கட்சிக்காரர்களும் செய்த ஊழலில் அரசு வழங்கும் கல்வியான தமிழ்கல்வியை மண்ணாக்கியது.

4. தினகரன் அலுவலகத்தை எரித்த அழகிரியை புத்திரபாசத்தால் தட்டிகேட்க்க துப்பிலாமல் ‘விசாரணை கமிஷன்’ என்று பசப்பியது.

5. ஈழ படுகொலையை கண்டிக்காமல் ‘சகோதரயுத்தம்’ என்று பிரச்னையை திசை திருப்பியது.

6. காவேரி முல்லை பெரியார் பாலாறு இப்படி எந்த ஒரு நீர் பிரச்சனையிலும் தமிழனின் உரிமைக்குரலாக ஒலிக்காமல் மெத்தனமாக இருந்தது.

340x
பெரியாரின் பாசறையின் கூர்தீட்டபட்டதாக சொல்லும் இவர் உண்மையில் முனைமங்கியவாள் என்பதே எங்கள் கருத்து. திராவிட கழகத்தை உடைத்த இவர்கள் அய்யா யாரை கடுமையாக எதிர்த்தாரோ அந்த ‘குலகல்வி’ அம்பி ராஜாஜியின் ஆதரவோடுதான் பச்சைத்தமிழர் காமராஜரின் ஆட்சியை பறித்தார்கள். அப்புறமா அனைத்துசாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் சமத்துவபுரம் அப்படி இப்படின்னு பெரியார் பேரன்போலே காட்டிகொண்டாலும் அவ்வப்போது பார்ப்பனியசேவை ஆற்றுவதிலும் ஆர்வம் உள்ளவராகவே காட்சி அளிக்கிறார்.

இவரின் ஐம்பதுவருட பொதுவாழ்க்கையின் போராட்டத்தில் இவர் மக்கள் நல்லசெல்வசெழிப்புடன் இருக்கின்றனர்.ஆனால் தமிழ் மக்கள் அப்படியே பரதேசிகளாகத்தான் இருக்கின்றனர். அப்படின்னா இவுங்க தமிழ் இனம் என்று சொல்லுவது இவரின் குடும்பத்தையா?

ஈழமக்கள் அங்கே தினம்தோறும் செத்து கொண்டிருக்கின்றனர் காங்கிரஸ் பேரியக்கம் தமிழன் சாவை ரசிக்கிறது தமிழககாங்கிரஸ் கைகூலிகள் இனஉணர்வு அற்று வேடிக்கை பார்க்கின்றனர். தமிழகத்தில் அனைத்து மக்களும் ஈழத்திற்காக போராட்டம் செய்யும் வேளையில் எவன் அங்கே தமிழனை கொன்று குவிப்பதற்கு ஆதரவாக இருக்கின்றானோ அவனை கூட்டு சேர்த்துகிட்டு ஈழஆதரவு நாடகங்களை நடத்தி கொண்டிருக்கிறார்.

பார்ப்பனியசேவை அல்லது ஒரேகல்லில் இரண்டுமாங்காய்!
00008565
பெரியார் விருது பெற்ற கருணாநிதி விருதை தக்கவைத்துக்கொள்ள நீதிமன்றத்தில் தடியடி நடத்திகாட்டி இருக்கிறார். அதுவும் பெரியாரின்பேரன் சுசாமிக்காக. தில்லைகோவிலை அரசே எடுத்துநடத்துவது என்று முடிவெடுத்து அதனை கைபற்றியது. இத்தனைநாள் தில்லை கோவில்மூலம் ‘ஸ்வாகா’ போட்ட தீட்சிதர்கள் நீதிமன்றங்களை நாடினார்கள்.சுசாமி தீட்சிதர்கள் சார்பில் தன்னையும் வழக்கில் சேர்த்துகொள்ளவேண்டும் என்று தானேமுன்வந்தார். ஏற்கனவே ஈழ ஆதரவாக போராட்டத்தில் இருந்த வழக்கறிஞர்கள் சுசாமியின் தமிழின விரோத செயலின்பொருட்டு முட்டைகளால் தாக்கினர். இதன் பொருட்டு நீதிமன்றத்தில் நுழைந்த காவல்துறை வழக்கறிஞர்கள் ‘நைய’புடைத்தது.

ஈழ விவகாரத்தில் சிக்கலை ஏற்படுத்துவதும் தமிழகம் குறித்து வடநாட்டு ஊடகங்களுக்கு தவறான தகவலை கொடுப்பதும். தமிழக அரசுக்கு எதிராக தீட்சிதர்களுக்கு ஆதரவாகவும் கொக்கரிப்புடன் வழக்கு தொடுக்க வந்த சுசாமியை தாக்கிய வழக்கறிஞர்கள் உண்மையான பெரியார் தொண்டனால் வாழ்த்தப்பட வேண்டும். ஆனால் காவல்துறையை ஏவிவிட்டு வழக்கறிஞர்களை நையபுடைந்து எடுத்து இருக்கிறார் வாழும்பெரியார். அப்புறமா எனக்கு தெரியாம நடந்துடுச்சு நான்வேணும்னா ஆம்புலன்சுல வரேன் கோவிச்சுக்காதிங்க அப்படின்னு கடிதம் போட்டுட்டு காத்திருக்கிறார் தமிழினதலைவன்.

வழக்கறிஞர்கள் மீது திட்டமிட்டே தாக்குதல் நடத்தபட்டிருக்கிறது. முத்துகுமாரின் மரணத்திற்கு பிறகு வழக்கறிஞர்கள் நடத்தும் போராட்டம் அரசு இயந்திரத்தை செயலிழக்க செய்ததோடு மக்களின் ஆதரவை பெற்றிருக்கிறது. இதைமுடக்க வேண்டும் அதேநேரத்தில் தனது செயலால் பார்ப்பனியஊடகங்கள் திருப்தி அடையவேண்டும் என்று இரண்டு மாங்காய்க்காக கல்லைவிட்டு எறிந்திருக்கிறார் கருணாநிதி. வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டது பார்ப்பானுக்காக என்று பார்ப்பனியஊடகங்கள் அமைதிகாக்கின்றன. மறுபுறம் வழக்கறிஞர்கள் வன்முறையாளர்கள் என்று நிறுவும்முயற்சியில் இருக்கின்றனர் இதன் பொருட்டு போராட்டம் முடங்கிவிடும் என்று மருத்துவமனையில் முடங்கிகிடக்கும்முதல்வர் திட்டமிடுகிறார். ஆக ஒரே கல்லில் இரண்டு மாங்காய் பார்ப்பனிய ஊடகங்களின் ஆதரவு ஈழபோராட்டத்தில் முட்டுகட்டை!
போராட்டங்களை நசுக்க நசுக்கத்தான் மேலெழும் என்று தெரியாமல் பார்ப்பானுக்கு சேவகம் பண்ணிக்கொண்டு இருக்கிறார். இவர் கையில் பெரியார்விருது அய்யாவுக்கு நேர்ந்த அவமானம் பாரீர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

What’s this?

You are currently reading தமிழினதலைவன் பூனை வெளியே வருகிறது! at தமிழன்பன் பக்கம்.

meta

%d bloggers like this: