இனப்படுகொலையை கண்டித்து பெங்களூரில் சாலை மறியல்!

ஏப்ரல் 12, 2009 § பின்னூட்டமொன்றை இடுக

இனப்படுகொலையை கண்டித்து பெங்களூரில் சாலை மறியல்! பெங்களூர் 12 : இன்று காலை சரியாக 09:30 க்கு கர்நாடகத் தமிழர் பேரவை மற்றும் உலக தமிழ் மக்கள் அரங்கம் சார்பில் தமிழ்நாடு-கர்நாடக எல்லை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடுத்து நிறுத்தப்பட்டது. பெங்களூர் ஓசூர் எல்லையான அத்திபள்ளி வளைவில் தமிழக, கர்நாடக போக்குவத்து தடுத்து நிறுத்தப்பட்டது. சுமார் ஒருமணி நேரம் நடைபெற்ற போராட்டத்தில் பெருமளவிலான பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டது. வாகனங்களில் இருக்கும் மக்களிடையே பெருமளவில் துண்டறிக்கைகள் கொடுக்கப்பட்டது. இந்திய அரசும் சிங்கள இனவெறி அரசும் இணைந்து நடத்தும் தமிழின படுகொலைகளை கண்டித்து தொடர் முழக்கங்கள் இடப்பட்டன. நச்சு குண்டுகளால் உயிரிழந்த தமிழ் ஈழமக்களின் நிழற்படங்கள் பதாகைகளாக ஏந்தப்பட்டன. போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் மக்களுக்கு ஏற்பட்ட காலதாமதம் பதைபதைப்பை பொருட்படுத்தாமல் பெருமளவில் ஆதரவு கொடுத்தனர்.மறியல் போராட்டம் ஈழத்தில் செத்துவிழும் நம் சொந்தங்களுக்காகத்தான் என்பதை உணர்த்து பேருந்தில் இருந்த தமிழர்கள் துண்டறிக்கைகளை ஆர்வமுடன் படித்தனர். மறியல் தகவல் அறிந்த கர்நாடக காவல்துறை விரைந்துவந்து தடியடி நடத்தியது. தடியடியில் சிறிதும் மனம்தளராத தோழர்களை வலுகட்டாயமாக சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். போக்குவரத்து சீராக பலமணி நேரம் பிடித்தது. கர்நாடக காவல்துறையால் தமிழின உணர்வாளர்கள் கை.அறிவழகன் உட்பட பல பேர் கைதுசெய்து அழைத்து செல்லப்பட்டனர். மறியல் போராட்டத்தை தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுப்பது என்று கர்நாடகவாழ் தமிழர்களால் முடிவெடுக்கப்பட்டுள்ளது. போராட்ட துண்டறிக்கையில் தமிழ் உணர்வாளர்கள் முன்வைத்த கோரிக்கைகள்.

1.இந்திய அரசே! புலிகள் மீதான தடையை நீக்கு

2.தனித் தமிழீழத்தை உடனே ஒப்பேற்கவும்.

3. போர்க்கால அடிப்படையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு அனைத்து ஏந்துகளையும் செய்க.

karnataka_12_04_2009_0021

karnataka_12_04_2009_003

karnataka_12_04_2009_005

karnataka_12_04_2009_0062

karnataka_12_04_2009_001

Advertisements

தமிழின தலைவர் தங்கபாலுக்கு சில கேள்விகள்

ஏப்ரல் 8, 2009 § பின்னூட்டமொன்றை இடுக

(சென்ற ஆண்டு எழுதிய கட்டுரை மீண்டும் பதிகிறேன்!)

tbltopnews_588431954391

தமிழின தலைவர் தங்கபாலுக்கு சில கேள்விகள்

காங்கிரஸ் என்னும் தமிழனின் நலம் காக்கும்? இயக்கத்தின் தற்போதைய தலைவர் ‘தங்கபாலு’ அவர்களுக்கு வணக்கமுங்கோ. இதுவரை உங்களை ஒரு பொருட்டாக மதிச்சு தமிழகத்தில் யாரும் பேசியதில்லை.அவ்வளவு ‘அமுக்கமான’ தலைவர் நீங்க. நீங்க ஈழப்போராட்டம் குறித்து பேசினதை கேட்டதும் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்னு தோணிச்சுங்க. வழக்கம் போல காமராஜர் ஆட்சி அமைப்போம்னு சொல்லிட்டு வீட்டில தூங்கிடும் உங்க ஆளுங்க ஆட்சியை கலை அவனை கைது பண்ணுன்னு கோசம் எழுப்பி உங்க தலைமையின் மனதை குளிர்விக்கும் செயல்களை பார்க்கும் போது உங்கள் தமிழ் இன உணர்வு புல்லரிக்க வைக்குதுங்க.

இந்த மாநிலத்தை தமிழ்நாடு என்று அழைப்பதையே விரும்பாமல் தமிழ் மாநில காங்கிரசு என்று சுவரொட்டி போடும் நீங்கள் தமிழனுக்கு என்று ஒரு நாடு உருவாவதை ஏற்க்க மாட்டிங்க என்று எங்களுக்கு நல்லாவே தெரியும் தலைவரே. ஈழத்தமிழன் வீட்டில் இன்னைக்கு இழவு விழுந்துகிட்டு இருக்கும்போது அங்கு வந்தும் அரசியல் லாபம் தேடுரிங்களே இது நியாயமா அய்யா. அங்கே தமிழன் கஞ்சிக்கு வழியில்லாமல் காணிவிட்டு குழந்தைகளையும் பெண்களையும் காப்பதற்கு ஓடிகிட்டு இருக்கானே பச்சிளம் குழந்தைகள் செல்லடிக்கு செத்து மடியும் வேளையில் எப்போதோ இறந்து போன ராஜீவுக்கு துக்கம் கொண்டாடுரிங்களே நீங்கள் உண்மைலேயே தமிழ் தாய்க்கு பிறந்தவர்தானா என்ற எண்ணம் தோன்றுவதை எங்களால் தவிர்க்க முடியவில்லை அய்யா!

060814chencholai1

ஈழத்தில் செத்து மடியும் எங்கள் உறவுகள் எழுப்பும் குரல்கள் எங்கள் தூக்கங்களை கலைத்து விட்டது. அவர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை போராளிகள் என்ற நிலை இருக்கும் போது. போராளிகளை திவிரவாதிகள் என்று சொல்லி அவர்களுக்கு குரல்கொடுத்தால் கடுமையான சட்டங்கள் பாயும் என்கிறீர்கள். இருக்கட்டும் அய்யா புலிகளை நாம் புறக்கணித்து விடுவோம். ஈழத்தில் செத்து விழும் தமிழனை காத்து நிப்பது யார் ?உங்களால் முடியுமா? சிங்கள வெறியர்களிடம் இருந்து தமிழ் பெண்களையும் குழந்தைகளையும் காக்க கடல் கடக்க சம்மதமா? இல்லை இதுக்கும் உங்கள் அன்னையிடம் டெல்லி சென்று அனுமதி பெற வேண்டுமா?

இப்படி ஒரு மாபெரும் இன அழிவை தமிழ் இனம் சந்திக்கும் போது சிறிதும் மனித நேயம் இல்லாமல் முச்சந்தியில் நின்று விடுதலை புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்காத கட்சியுடன் கூட்டணி என்று அறிக்கை வாசிக்கிறின்களே இப்படி தமிழன் சாவிலும் அரசியல் ஆதாயமா? இதுதான் நீங்கள் தேர்தல் கூட்டணிக்கு ஆள்பிடிக்கும் களமா? நீங்கள் கொடுத்த கூட்டணி சிக்னலுக்கு அம்மையாரின் பதில் அறிக்கை வந்து விட்டது புலிகளை ஆதரிப்பவர்களை கடுமையாக ஒடுக்க வேண்டுமென்று. ராஜீவ் உயிர் மட்டும்தான் உயிர் மூன்று மாணவிகள் நெருப்பில் கருகிய கொடுமையை நீங்கள் எப்போதும் வன்முறை என்று ஏற்ப்பதில்லையே! ஆரம்பியுங்கள் உங்கள் அடுத்த அத்தியாயத்தை அம்மையாரோடு.
vanni_200902100022

காங்கிரஸ் காத்த தமிழின உரிமைகள்

நீங்கள் முன்னெடுத்து செல்லும் காங்கிரஸ் என்னும் பேரியக்கம் தமிழனுக்கு பெற்று தந்த உரிமைகளை கொஞ்சம் பட்டியல் இட முடியுமா தலைவரே? காவேரியில் தண்ணி வேண்டும் என்று நீங்கள் நடுவண் அரசை நிர்பந்தித்தது உண்டா இல்லை முல்லை பெரியார் பத்தி ஏதாவது உங்களுக்கு தெரியுமா?. நமது அண்டை மாநில காங்கிரஸ் எல்லாம் அந்தந்த மாநில உரிமைகள் பேசும்போது தமிழ் மாநில காங்கிரஸ் மட்டும் நடுவண் அரசுக்கு செல்ல நாய்குட்டிகளாக இருப்பது ஏன் தலைவரே?

ஈழத்தில் சிங்களன் சுட்டு வீழ்த்தும் தமிழனுக்கு குரல் எழுப்பத்தான் உங்களால் முடியவில்லை சிங்களன் சுட்டு வீழ்த்தும் இந்திய மன்னிக்கவும் தமிழக மீனவனுக்காக எப்போதாவது குரல் கொடுத்து இருக்கிறீர்களா இல்லை நடுவண் அரசிடம் மனுவாவது கொடுத்து இருக்கிறீர்களா?

காவேரி, பாலாறு, முல்லை பெரியார் மீனவர் பிரச்சனை என்று எங்கே தமிழன் நலம் கேட்டாலும் ஓடி ஒழிந்து கொள்ளும் நீங்கள் ஈழம் என்றாலே ராஜீவ் கொலை என்று கொதித்து எழும் மர்மம் என்ன தலைவரே? ராஜீவ் மரணம் என்ற கோமாவில் இருந்து நீங்கள் இன்னும் எழவேயில்லையா?

seeman1
இந்திய இறையாண்மை

நீங்கள் தற்போது சீமான் போன்ற தமிழ் இன உணவாளர்களுக்கு எதிராக கையில் எடுத்திருக்கும் துருப்பிடித்த ஆயுதம் இந்திய இறையாண்மை. அது என்னங்க இந்திய இறையாண்மை? எங்களை பொறுத்த வரை இறை என்பது பொய். நீங்கள் இந்தியாவிற்கு இருப்பதாக சொல்லும் ஆண்மையும் எங்கள் மீனவர்கள் சிங்களனால் சுட்டு வீழ்த்தப்படும் கோரத்தை தட்டி கேட்க்க முடியாத பொழுதே பொய் என்று ஆகிவிட்டது. இப்படி இல்லாத ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு எங்கள் தோழர்களை நசுக்க முனைவது நியாயமா?

காவேரில் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று சொல்ல ஒரு எஸ்எம் கிருஷ்ணாவால் முடிகிறது. தலைமையால் அவர்களுக்கு உத்தரவிட முடியவில்லை. ஆனால் நீங்கள் எப்போது தமிழக நலனுக்காக சிறிதேனும் குரலை உங்கள் தலைவியிடம் உயர்த்தியது உண்டா? அப்போது இந்திய இறையாண்மை எங்கே போனது? தண்ணீர் பிரச்சனையில் இந்தியாவின் இறையாண்மை பாதிக்கப்படாதா? ஒகேனக்கல் நீர் தமிழத்தின் உரிமை என்று உங்களால் உரக்க சொல்ல முடியுமா?

அது என்னங்க இந்திய இறையாண்மை தமிழனுக்கு மட்டும் தொடர்ந்து போதிக்கப்படுகிறது? இந்தியாவில் பிறவாத ஒருவரை இந்திய பிரதமராக்க நீங்கள் முயலும் பொழுது வெளிநாடுகளில் வாழும் நம் தமிழர்களுக்காக குரல்கொடுத்தால் அது குற்றமா?

சீக்கிய படுகொலைக்கு ஒற்றை வார்த்தையில் பிரயச்சித்தம் தேடிக்கொண்ட நீங்கள் ஒற்றை மனிதன் மரணத்தை வைத்து எத்தனை நாள் அரசியல் செய்யபோகிறீர்கள்? ராஜீவ் மரணத்திற்கு உரிய தண்டனை வேண்டும் எனும் நீங்கள் அமைதிப்படையின் கொடுஞ்செயல்களுக்கு நீதி விசாரணை வைக்க தயாரா?

051201indiangeneral1

rajiv-gandhi1

கூடாநட்பு அல்லது கலைஞரோடு திருமா!

ஏப்ரல் 1, 2009 § 1 பின்னூட்டம்

thiruma10

திருமா என்னும் தலைவன் சராசரி அரசியல்வாதி இல்லை என்ற கருத்து நீண்ட நாட்களாக என் நெஞ்சில் உண்டு. சமரசங்கள் செய்ய தெரியாததால்தான் இன்னும்  திருமாவிற்கும் அவர் தோழர்களுக்கும் உரிய பதவிகள் வந்து சேரவில்லை பிழைக்கதெரியாத தலைவன் ‘திருமா’ . விடுதலை சிறுத்தைகள்  என்ற அரசியல் அமைப்பை ஏற்படுத்தி ஆதிக்க சக்திகளுக்கு எதிராக ‘அடங்கமறு’ என்று தலித் மக்களை போராட செய்ததாகட்டும் தமிழுக்கு இன்னல் என்றால் முதல் குரலாக ஒலிப்பதாகட்டும் திருமாவின் செயல்பாடுகள் எப்போதும் போற்றுதலுக்குறியது என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது.

     திருமா என்ற தலைவனின் கடந்தகால அரசியலைவிட நிகழ்கால அரசியல் நாம் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய ஒன்று. அதற்க்கு காரணம் ஈழம் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை. இன்றைய ஈழப்போரில் நம் தமிழ் உறவுகள் தினம்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து ஒழிக்கப்படுவதை தடுத்து நிறுத்த தாயக தமிழனின் அழுத்தம் அவசியம். திமுக அதிமுக என்னும் தமிழகத்தின் முக்கிய ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் பெரிதாய் ஈழவிவகாரத்தில் அக்கறை காட்டாத பொழுது திருமா,வைகோ, ராமதாஸ் போன்றோர்களின் ஒருங்கிணைந்த போராட்டங்கள் அரசியல் அரங்கில் ஈழ ஆதரவு அவசியம் என்பதை உணரவைத்தது.

   ராமதாஸ் வைகோ போன்ற தலைவர்கள் அதிமுகவுடன் தேர்தல் உறவு கொண்ட பின்னர் திருமா மட்டுமே கலைஞர் மற்றும் காங்கிரசோடு கைகோர்த்து நிற்கிறார்.

thiruma-karunanithi

 

ஈழ விவகாரத்தில் கலைஞர் இதுவரை செய்த துரோகங்கள் தமிழக குழந்தைகளும் அறியும். அங்கே நாளுக்கு நாள் எமது மக்கள் சொல்ல முடியாத துயரில் மடியும் வேளையில் ‘சகோதர யுத்தம்’ என்றும் உணவு பொருட்கள் அனுப்புகிறேன் என்றும் எரியும் நெருப்பில் எண்ணை ஊத்துகிறார் கலைஞர்.  கொஞ்சம் கொஞ்சமாக காங்கிரசின் அடிவருடியாக மாறிப்போனார் கலைஞர் என்பது மறுக்க முடியாத உண்மை. ஈழ யுத்தத்தை மறைமுகமாக நடத்துவதே காங்கிரஸ் அரசுதான் என்று துவக்கம் முதலே குற்றம் சுமத்துபவர் திருமா. அதன் பொருட்டு சிறுத்தைகள் காங்கிரசோடு மோதும் சூழல் உருவானது. பழசெல்லாம் மறந்துவிட்டு கலைஞர் மீது உள்ள பாசத்தால் காங்கிரசோடு கைகோர்த்து நிற்கிறார் திருமா.

கடந்த பாராளுமான்றதேர்தலில்  பொடா வாசத்தால் சிறையில் இருந்த வைகோவை சிறையில் நேரில் சென்று சந்தித்து. ‘தம்பி’ தேர்தலுக்காக பிணையில் வெளியேவரவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார் கலைஞர். வைகோவும் பழசை மறந்துவிட்டு ‘அண்ணன்’ அழைத்துவிட்டார் என்று குறைவாக  தொகுதிகள் தந்த பொழுதும் தமிழக வீதி எங்கும் சூறாவளியாக சுற்றி வந்து ‘பிரச்சார பீரங்கி’ என்று அண்ணன் கலைஞரால் புகழப்பட்டார். பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி  பெற்ற பாரிய வெற்றிக்கு வைகோவின் அனல் கக்கிய பிரச்சாரமும் முக்கிய காரணம்.பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் மதிமுக என்ற கட்சி வருங்காலத்தில் தன் மகனுக்கு அரசியல் அரங்கில் எதிராக அமையும் என்று மதிமுகவை நிர்மூலமாக்கும் வேலையை அன்று முதல் இன்றுவரை செய்து வருகிறார் கலைஞர்.

vaiko

   அன்று வைகோ இருந்த இடத்தில் இன்று திருமா. அரசியல் சாணக்கியர் கலைஞரின் பார்வையில் ‘பிரச்சார பீரங்கியாக’ திருமா. இரண்டு தொகுதிகள் தந்து விட்டு நாற்பது தொகுதியிலும் பிரச்சாரம் செய்ய திருமாவை அனுப்புவது கலைஞரின் திட்டம். உளமார சொல்லுங்கள் பதினாறு சீட்டுக்கள் பெற்ற காங்கிரசில் நாற்பது தொகுதியிலும் சென்று பிரச்சாரம் செய்ய யாரேனும் ஒரே ஒரு தலைவரை அடையாளம் காட்ட முடியுமா? காங்கிரசிற்கும் சேர்த்து திருமாதான் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

tbltopnews_58843195439

 

 

 

 

 

 

 

 

 

 

காங்கிரஸ் கூட்டணியை குறை சொல்வதால் உடனே அதிமுகவை ஆதரிக்கிறோம் என்று பொருள் அல்ல. திருமா வைகோ ராமதாஸ் கம்யுனிஸ்டுகள் கூட்டணி கண்டு ஈழத்திற்கான தமிழக ஆதரவை வாக்குகளாக காட்டி இருக்கலாம். அதோடு திமுக அதிமுக காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்றாக அணியை ஏற்படுத்தி இருக்கலாம்.அல்லது இரண்டு தொகுதிகளிலும் தனித்து நின்று தனது கட்சியில் பலத்தை காட்டி இருக்கலாம்.

elatamilar

    கலைஞரின் நட்பு தேர்தலுக்கு பின் எப்படி என்று சொல்ல முடியாது. நாளை அண்ணனின் வாரிசுகளுக்கு போட்டியாக திருமா வரலாம் என்றால் முதல் ஆளாக சதிவலை பின்னுவார். மேலும் இது ஈழத்தில் நடக்கும் இன படுகொலையை எந்த விதத்திலும் தடுத்து நிறுத்தாது.காங்கிரசின் வெற்றி ஈழ தமிழனுக்கு தமிழக தமிழனின் ஆதரவு இல்லை என்றாகிவிடும்.

muthukumar_300

    

  திருமாவின் கலைஞர் பாசம் வரலாற்றில் மன்னிக்க முடியாத குற்றமாக ஆகப்போகிறது என்பதே எங்கள் கவலை. தன் உடலையும் உயிரையும் ஈழ விடுதலைக்கு அர்பணித்த ‘முத்துகுமரன்’ தனது இறுதி வேளையில் அண்ணன் திருமாவிற்கு தெரியப்படுத்துங்கள் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறான். அண்ணன் திருமா பொய்யாக்கியது முத்துகுமாரின் நம்பிக்கையை மட்டுமல்ல முத்துகுமார் போல பல்லாயிரக்கணக்கான தம்பிகளின் நம்பிக்கையையும்தான்.

Where Am I?

You are currently viewing the archives for ஏப்ரல், 2009 at தமிழன்பன் பக்கம்.