கூடாநட்பு அல்லது கலைஞரோடு திருமா!

ஏப்ரல் 1, 2009 § 1 பின்னூட்டம்


thiruma10

திருமா என்னும் தலைவன் சராசரி அரசியல்வாதி இல்லை என்ற கருத்து நீண்ட நாட்களாக என் நெஞ்சில் உண்டு. சமரசங்கள் செய்ய தெரியாததால்தான் இன்னும்  திருமாவிற்கும் அவர் தோழர்களுக்கும் உரிய பதவிகள் வந்து சேரவில்லை பிழைக்கதெரியாத தலைவன் ‘திருமா’ . விடுதலை சிறுத்தைகள்  என்ற அரசியல் அமைப்பை ஏற்படுத்தி ஆதிக்க சக்திகளுக்கு எதிராக ‘அடங்கமறு’ என்று தலித் மக்களை போராட செய்ததாகட்டும் தமிழுக்கு இன்னல் என்றால் முதல் குரலாக ஒலிப்பதாகட்டும் திருமாவின் செயல்பாடுகள் எப்போதும் போற்றுதலுக்குறியது என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது.

     திருமா என்ற தலைவனின் கடந்தகால அரசியலைவிட நிகழ்கால அரசியல் நாம் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய ஒன்று. அதற்க்கு காரணம் ஈழம் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை. இன்றைய ஈழப்போரில் நம் தமிழ் உறவுகள் தினம்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து ஒழிக்கப்படுவதை தடுத்து நிறுத்த தாயக தமிழனின் அழுத்தம் அவசியம். திமுக அதிமுக என்னும் தமிழகத்தின் முக்கிய ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் பெரிதாய் ஈழவிவகாரத்தில் அக்கறை காட்டாத பொழுது திருமா,வைகோ, ராமதாஸ் போன்றோர்களின் ஒருங்கிணைந்த போராட்டங்கள் அரசியல் அரங்கில் ஈழ ஆதரவு அவசியம் என்பதை உணரவைத்தது.

   ராமதாஸ் வைகோ போன்ற தலைவர்கள் அதிமுகவுடன் தேர்தல் உறவு கொண்ட பின்னர் திருமா மட்டுமே கலைஞர் மற்றும் காங்கிரசோடு கைகோர்த்து நிற்கிறார்.

thiruma-karunanithi

 

ஈழ விவகாரத்தில் கலைஞர் இதுவரை செய்த துரோகங்கள் தமிழக குழந்தைகளும் அறியும். அங்கே நாளுக்கு நாள் எமது மக்கள் சொல்ல முடியாத துயரில் மடியும் வேளையில் ‘சகோதர யுத்தம்’ என்றும் உணவு பொருட்கள் அனுப்புகிறேன் என்றும் எரியும் நெருப்பில் எண்ணை ஊத்துகிறார் கலைஞர்.  கொஞ்சம் கொஞ்சமாக காங்கிரசின் அடிவருடியாக மாறிப்போனார் கலைஞர் என்பது மறுக்க முடியாத உண்மை. ஈழ யுத்தத்தை மறைமுகமாக நடத்துவதே காங்கிரஸ் அரசுதான் என்று துவக்கம் முதலே குற்றம் சுமத்துபவர் திருமா. அதன் பொருட்டு சிறுத்தைகள் காங்கிரசோடு மோதும் சூழல் உருவானது. பழசெல்லாம் மறந்துவிட்டு கலைஞர் மீது உள்ள பாசத்தால் காங்கிரசோடு கைகோர்த்து நிற்கிறார் திருமா.

கடந்த பாராளுமான்றதேர்தலில்  பொடா வாசத்தால் சிறையில் இருந்த வைகோவை சிறையில் நேரில் சென்று சந்தித்து. ‘தம்பி’ தேர்தலுக்காக பிணையில் வெளியேவரவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார் கலைஞர். வைகோவும் பழசை மறந்துவிட்டு ‘அண்ணன்’ அழைத்துவிட்டார் என்று குறைவாக  தொகுதிகள் தந்த பொழுதும் தமிழக வீதி எங்கும் சூறாவளியாக சுற்றி வந்து ‘பிரச்சார பீரங்கி’ என்று அண்ணன் கலைஞரால் புகழப்பட்டார். பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி  பெற்ற பாரிய வெற்றிக்கு வைகோவின் அனல் கக்கிய பிரச்சாரமும் முக்கிய காரணம்.பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் மதிமுக என்ற கட்சி வருங்காலத்தில் தன் மகனுக்கு அரசியல் அரங்கில் எதிராக அமையும் என்று மதிமுகவை நிர்மூலமாக்கும் வேலையை அன்று முதல் இன்றுவரை செய்து வருகிறார் கலைஞர்.

vaiko

   அன்று வைகோ இருந்த இடத்தில் இன்று திருமா. அரசியல் சாணக்கியர் கலைஞரின் பார்வையில் ‘பிரச்சார பீரங்கியாக’ திருமா. இரண்டு தொகுதிகள் தந்து விட்டு நாற்பது தொகுதியிலும் பிரச்சாரம் செய்ய திருமாவை அனுப்புவது கலைஞரின் திட்டம். உளமார சொல்லுங்கள் பதினாறு சீட்டுக்கள் பெற்ற காங்கிரசில் நாற்பது தொகுதியிலும் சென்று பிரச்சாரம் செய்ய யாரேனும் ஒரே ஒரு தலைவரை அடையாளம் காட்ட முடியுமா? காங்கிரசிற்கும் சேர்த்து திருமாதான் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

tbltopnews_58843195439

 

 

 

 

 

 

 

 

 

 

காங்கிரஸ் கூட்டணியை குறை சொல்வதால் உடனே அதிமுகவை ஆதரிக்கிறோம் என்று பொருள் அல்ல. திருமா வைகோ ராமதாஸ் கம்யுனிஸ்டுகள் கூட்டணி கண்டு ஈழத்திற்கான தமிழக ஆதரவை வாக்குகளாக காட்டி இருக்கலாம். அதோடு திமுக அதிமுக காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்றாக அணியை ஏற்படுத்தி இருக்கலாம்.அல்லது இரண்டு தொகுதிகளிலும் தனித்து நின்று தனது கட்சியில் பலத்தை காட்டி இருக்கலாம்.

elatamilar

    கலைஞரின் நட்பு தேர்தலுக்கு பின் எப்படி என்று சொல்ல முடியாது. நாளை அண்ணனின் வாரிசுகளுக்கு போட்டியாக திருமா வரலாம் என்றால் முதல் ஆளாக சதிவலை பின்னுவார். மேலும் இது ஈழத்தில் நடக்கும் இன படுகொலையை எந்த விதத்திலும் தடுத்து நிறுத்தாது.காங்கிரசின் வெற்றி ஈழ தமிழனுக்கு தமிழக தமிழனின் ஆதரவு இல்லை என்றாகிவிடும்.

muthukumar_300

    

  திருமாவின் கலைஞர் பாசம் வரலாற்றில் மன்னிக்க முடியாத குற்றமாக ஆகப்போகிறது என்பதே எங்கள் கவலை. தன் உடலையும் உயிரையும் ஈழ விடுதலைக்கு அர்பணித்த ‘முத்துகுமரன்’ தனது இறுதி வேளையில் அண்ணன் திருமாவிற்கு தெரியப்படுத்துங்கள் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறான். அண்ணன் திருமா பொய்யாக்கியது முத்துகுமாரின் நம்பிக்கையை மட்டுமல்ல முத்துகுமார் போல பல்லாயிரக்கணக்கான தம்பிகளின் நம்பிக்கையையும்தான்.

Advertisements

§ One Response to கூடாநட்பு அல்லது கலைஞரோடு திருமா!

  • Gopes சொல்கிறார்:

    Thiruma pondra thirudargaluku ungalai pondra mutaalgal adi varudi thaan panam sambadhika kathu koduka vendum. Verum varatu perumaikaga sivapu vilaku maati car il sellum ivaniyum nambugiravargalai paarthaal karunanidhi ponra thiramai migundha koalliyargaluku ivvaluvu aadharavu irupadhil sandhega pada thevai illai endre thondrugiradhu

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

What’s this?

You are currently reading கூடாநட்பு அல்லது கலைஞரோடு திருமா! at தமிழன்பன் பக்கம்.

meta

%d bloggers like this: