போன மச்சான் திரும்பி வந்தான்!

மே 23, 2009 § பின்னூட்டமொன்றை இடுக

May28307

போன மச்சான் திரும்பி வந்தான்!

மந்திரிசபையில மஞ்சள் துண்டு போட்டு இடம் பிடிக்க சென்ற தமிழின தலைவர் வெறுங்கையுடன் திரும்பியுள்ளதாக தெரிகிறது.

இலங்கை விவகாரத்தில் காங்கிரசின் செயல்பாடுகள் ‘திருப்தி’ அளிப்பதாக திருவாய் மலர்ந்த தமிழின தலைவர் சீட்டு பேரத்தில் திருப்திக்கு பதிலாக காங்கிரஸ் ‘திருப்பதி’ அளிப்பதாக கூறி சென்னைக்கு டிக்கெட்டு போட்டு இருக்கிறார்.

வெளியே இருந்து ஆதரவு என்பதன் மூலம் கூட்டணிக்கு உள்ளே இருந்து எதிர்ப்பு என்பது தெளிவாகிறது. நாளைக்கு முரசொலியில் இதுபத்தி உடன்பிறப்பிற்கு விளாவரியாக கவிதை எழுதி கண்ணீர் விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன செய்யபோகிறார் வாழும் வள்ளுவர் என்று பொறுத்து இருந்து பார்ப்போம் எப்படியாவது பேரம் பேசி மறுபடியும் சீட்டு பிடிப்பார் என்று ஒரு பேச்சு இருக்கிறது.

இப்போதைக்கு போன மச்சான் திரும்பி வந்தான் கோவணத்தோட என்று தெளிவாகிறது.

தமிழகம் வழியே இலங்கைக்கு ஆயுதம்!

மே 2, 2009 § பின்னூட்டமொன்றை இடுக

தமிழகம் வழியே இலங்கைக்கு ஆயுதம்!

scania_93m_norwegian_military
இன்று மதியம் இலங்கைக்கு சேலம் கோவை கொச்சி வழியாக என்பது 80 வாகனங்களில் ஆயுதங்கள் செல்கின்றன என்ற செய்தி வந்தது. கோவையில் தடுத்து நிறுத்த பெரியார் திக தோழர்களும் தமிழ் உணர்வாளர்களும் குழுமி உள்ளனர் என்று செய்திகள் வந்தன. செய்தியை கேட்ட பொழுது இது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றியது. இம்மாதியான சூழலில் அதுவும் தமிழகம் வழியே ஆயுதம் கொண்டு செல்லும் தைரியம் நடுவண் அரசுக்கு வருமா என்ற எண்ணம் வந்தது.

சற்றுமுன் தொலைக்காட்சியை பார்த்த பொழுது இரு வெவ்வேறான செய்திகளை காண நேர்ந்தது. இலங்கைக்கு சென்ற ஆயுதம் தாங்கிய லாரிகளை பொதுமக்கள் தாக்கினர் என்று மக்கள் தொலைக்காட்சியிலும் ராணுவ வாகனங்கள் தாக்கப்பட்டது கலகக்காரர்கள் கலைக்கப்பட்டார்கள் என்று இலங்கைக்கு ஆயுதம் என்னும் செய்தியை பின்னுக்கு தள்ளிய  செய்தியை சூரிய தொலைக்காட்சியும் வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே தமிழகம் வழியே டாங்குகளை அனுப்பி வைத்தது என்ற குற்றசாட்டுகள் இருக்கும் பொழுது இப்போது மீண்டும் ஆயுதங்களா அதுவும் தமிழகத்தின் வழியாக? என்ன நடக்கிறது இப்பொழுது இந்த செய்திகளை திரித்து சொல்ல சூரிய தொலைக்காட்சி ஆரம்பித்து விட்டது.

25pdr

எத்தனை எத்தனை போராட்டங்கள் எத்தனை தீக்குளிப்புக்கள் எத்தனை உண்ணா நோம்பு இவ்வளவுக்கு பின்னும் தமிழகத்தின் வழியாக சிங்களனக்கு ஆயுதமா? சாகும்வரை உண்ணாவிரதம் அதை தொடர்ந்து போர் நிறுத்த அறிவிப்பு பின்னர் கனரக  ஆயுதங்கள் பயன்படுத்த வேண்டாம் என்று மட்டுமே அறிவுறுத்தினோம் என்று முன்னுக்கு பின்னான தகவல்கள் என்று மாபெரும் நாடகத்தை நடத்தி கட்டி விட்டு இப்பொழுது தமிழகம் வழியே ஆயுதங்களை அனுப்பி வைப்பது.

இதையும் வேறாக மாத்தி ராணுவ வாகங்களை  தாக்கிய பெரியார் திகவினர் என்று செய்தி வெளியிடும் கலைஞரின் குடும்ப தொலைக்காட்சி. மழைக்கு பின்னால் துவானம் போலே பெரிய உதவிகளை முடித்து கொண்டு சின்னதாக உதவுகிறார்கள் போல் இருக்கிறது. ராணுவ வாகனங்களை தவறான தகவல்களின் அடிப்படையில் தாக்கிவிட்டார்கள் என்று செய்திகள் நம்மை வந்தடையும் என்பதில் ஐயமில்லை.

சுபவீ அய்யா இப்படி பிழைப்பதும் ஒரு பிழைப்புதானா?

மே 1, 2009 § 5 பின்னூட்டங்கள்

subavee

சுபவீ அய்யா இப்படி பிழைப்பதும் ஒரு பிழைப்புதானா?

நேற்றுவரை தமிழ் இனஉணர்வாளர்களின் பெரும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவராக இருந்து இன்று ‘அய்யா நீங்களுமா?’ என்று கேட்க்கும் அளவிற்கு நிறம்மாறி நிற்கும் சுபவீ அய்யாவிற்கு வணக்கம்.

ஈழம் பத்தி எதுவும் தெரியாத எங்களுக்கு எம் இனத்தின் சுதந்திர போராட்ட வரலாறு கூறிய பேராசிரியர் நீங்கள். ஈழத்திற்கு குரல் கொடுத்ததிற்காக நீங்கள் அனுபவித்த ‘அது பொடா காலம்’ மறக்க கூடியது அல்ல. இணையத்தில் நீங்கள் ஈழத்திற்காக ஆற்றிய உரைகள் இன்றும் எங்கோ ஒரு மூலையில் ஒலித்து கொண்டுதான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இவையெல்லாம் நேற்றைய வரலாறு ஆனதே சுபவீ அய்யா. ஈழம் இறுதி யுத்தத்தில் இரத்தம் சிந்தும் வேளையில் உங்களை நாங்கள் உத்து பார்ப்பதில் வியப்பில்லை அல்லவா? இந்த வேளையில் நீங்கள் ஒளிந்து கொண்டு இருக்கும் இடம் கோபாலபுறமாக இருக்கிறதே. நேற்றுவரை தம்பி என்று பிரபாகரனின் புகழ் பாடிய நீங்கள் இன்று தமிழகத்து கருணாவை தமிழ் இனத்தின் இணையற்ற தலைவன் என்று நிலைநாட்ட முயன்று கொண்டிருக்கிறீர்கள். ஈழத்தில் எம் உறவுகள் செத்துவிழ யார் காரணமோ அவர்களுக்கு சேவகம் செய்யும் அடிமைக்கு அடிமையாக இருப்பது அவமானம் இல்லையா சுபவீ அய்யா?

kalaingar
ஈழத்திற்காக உலகின் பலமூலைகளிலும் சென்று முழங்கிவரும் தமிழ் உணர்வாளர்கள் ஈழத்தமிழர்களிடம் பணம் பெறுகிறார்கள் ஈழத்தமிழர்களின் பணத்தில் செகுசாக ஊர் சுற்றுகிறார்கள் என்ற குற்றசாட்டு வந்த பொழுது குற்றம் சாட்டியவர்கள் மீது கடும் கோபம் உண்டானது. தாய்ப்பாலுக்கு தாய் கூலி கேக்கிறாள் என்று சொல்வது போலே இருக்கிறது என்றி எண்ணியவர்கள் நாங்கள். ஆனால் இப்போது தோன்றுகிறது நீங்கள் ஈழத்திற்காக குரல் கொடுத்ததும் கூலிக்காகவே என்று.

ஈழத்தில் இனி போராளிகள் இருக்க மாட்டார்கள் என்று நினைத்து விட்டீர்கள். இனியும் போராளிகளின் புகழ்பாடி புலம்பெயர்ந்த தமிழர்களிடம் கூலி பெறமுடியாது என்று உங்களுக்கு தோன்றியதால் உங்கள் களத்தை மாற்றிவிட்டீர்கள். உங்கள் விசுவாசத்திற்கு பிரதிபலனாக கலைஞர் தொலைக்காட்சியில் நேரம் ஒதுக்கி இருக்கிறார்கள் உங்கள் தமிழ் அறிவையும் படிப்பு அறிவையும் பணமாக்க நல்ல வாய்பு கிடைத்து விட்டது.

ஈழ போராட்டத்தின் முழு வரலாறு தெரிந்த நீங்கள், அங்கே செத்துவிழும் நம் சொந்தங்களின் நேற்றைய நம்பிக்கையாக இருந்த நீங்கள் ஈழத்துரோகிகளை தோலுரித்து ஈழமக்களுக்கான கடமையை ஆற்றாமல் துரோகியோடு கைகோர்த்து மவுனமாகிவிட்ட மர்மம் என்ன சுபவீ அய்யா?

காங்கிரஸ்-திமுக கூட்டணி எந்தவிதத்திலும் தமிழன் நலனை மீட்டு எடுக்காது என்ற நிலையில் உணர்வாளர்கள் எல்லாம் கொதித்து எழுந்து போராடும் இந்த நிலையில் நீங்கள் மட்டும் கலைஞர் பக்கத்திலே தேங்கி போயி விட்டீர்களே அய்யா? அப்படியென்றால் வெறும் பிழைப்பிற்காகத்தான் ஈழத்தை கையில் எடுத்தீர்களா?

நீங்கள் எவ்வளவு முயன்றாலும் கருணாநிதியின் துரோகத்தை தமிழன் மன்னிக்கவோ,மறக்கவோ மாட்டான். அவருக்கு துணைபோகும் உங்களையும்தான். பணத்திற்காக உடலை விற்கும் விபசாரிக்கும் உங்களுக்கும் பெரிதாக வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லை சுபவீ அய்யா. இப்படி பிழைப்பதும் ஒரு பிழைப்புத்தானா என்று நீங்கள் சிந்தித்தால் நல்லது.

கருணாநிதியோடு கூட்டு சேர்ந்து எப்படி நீங்கள் ‘ஈழம்’ குறித்து பேச மறுக்கிறீர்களோ அதுபோல் இனிமேல் தமிழ்இனம் குறித்தும் பெரியார் குறித்தும் பேசமால் இருப்பது நலம். சட்டகல்லூரி பிரச்சனையிலேயே உங்கள் மீது சிறிதாக சந்தேகம் எழுந்தது ஈழப்பிரச்சனையில் அது உண்மை என்றாகிவிட்டது. உங்களுக்கும் வீரமணிக்கும் பெரிதாய் வித்தியாசம் தெரியவில்லை சந்தர்பங்களை பிழைப்புவாதத்திற்க்காக பயன்படுத்தி கொள்வதில்.

Where Am I?

You are currently viewing the archives for மே, 2009 at தமிழன்பன் பக்கம்.