சுபவீ அய்யா இப்படி பிழைப்பதும் ஒரு பிழைப்புதானா?
மே 1, 2009 § 5 பின்னூட்டங்கள்
சுபவீ அய்யா இப்படி பிழைப்பதும் ஒரு பிழைப்புதானா?
ஈழம் பத்தி எதுவும் தெரியாத எங்களுக்கு எம் இனத்தின் சுதந்திர போராட்ட வரலாறு கூறிய பேராசிரியர் நீங்கள். ஈழத்திற்கு குரல் கொடுத்ததிற்காக நீங்கள் அனுபவித்த ‘அது பொடா காலம்’ மறக்க கூடியது அல்ல. இணையத்தில் நீங்கள் ஈழத்திற்காக ஆற்றிய உரைகள் இன்றும் எங்கோ ஒரு மூலையில் ஒலித்து கொண்டுதான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இவையெல்லாம் நேற்றைய வரலாறு ஆனதே சுபவீ அய்யா. ஈழம் இறுதி யுத்தத்தில் இரத்தம் சிந்தும் வேளையில் உங்களை நாங்கள் உத்து பார்ப்பதில் வியப்பில்லை அல்லவா? இந்த வேளையில் நீங்கள் ஒளிந்து கொண்டு இருக்கும் இடம் கோபாலபுறமாக இருக்கிறதே. நேற்றுவரை தம்பி என்று பிரபாகரனின் புகழ் பாடிய நீங்கள் இன்று தமிழகத்து கருணாவை தமிழ் இனத்தின் இணையற்ற தலைவன் என்று நிலைநாட்ட முயன்று கொண்டிருக்கிறீர்கள். ஈழத்தில் எம் உறவுகள் செத்துவிழ யார் காரணமோ அவர்களுக்கு சேவகம் செய்யும் அடிமைக்கு அடிமையாக இருப்பது அவமானம் இல்லையா சுபவீ அய்யா?

ஈழத்தில் இனி போராளிகள் இருக்க மாட்டார்கள் என்று நினைத்து விட்டீர்கள். இனியும் போராளிகளின் புகழ்பாடி புலம்பெயர்ந்த தமிழர்களிடம் கூலி பெறமுடியாது என்று உங்களுக்கு தோன்றியதால் உங்கள் களத்தை மாற்றிவிட்டீர்கள். உங்கள் விசுவாசத்திற்கு பிரதிபலனாக கலைஞர் தொலைக்காட்சியில் நேரம் ஒதுக்கி இருக்கிறார்கள் உங்கள் தமிழ் அறிவையும் படிப்பு அறிவையும் பணமாக்க நல்ல வாய்பு கிடைத்து விட்டது.
காங்கிரஸ்-திமுக கூட்டணி எந்தவிதத்திலும் தமிழன் நலனை மீட்டு எடுக்காது என்ற நிலையில் உணர்வாளர்கள் எல்லாம் கொதித்து எழுந்து போராடும் இந்த நிலையில் நீங்கள் மட்டும் கலைஞர் பக்கத்திலே தேங்கி போயி விட்டீர்களே அய்யா? அப்படியென்றால் வெறும் பிழைப்பிற்காகத்தான் ஈழத்தை கையில் எடுத்தீர்களா?
நீங்கள் எவ்வளவு முயன்றாலும் கருணாநிதியின் துரோகத்தை தமிழன் மன்னிக்கவோ,மறக்கவோ மாட்டான். அவருக்கு துணைபோகும் உங்களையும்தான். பணத்திற்காக உடலை விற்கும் விபசாரிக்கும் உங்களுக்கும் பெரிதாக வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லை சுபவீ அய்யா. இப்படி பிழைப்பதும் ஒரு பிழைப்புத்தானா என்று நீங்கள் சிந்தித்தால் நல்லது.
கருணாநிதியோடு கூட்டு சேர்ந்து எப்படி நீங்கள் ‘ஈழம்’ குறித்து பேச மறுக்கிறீர்களோ அதுபோல் இனிமேல் தமிழ்இனம் குறித்தும் பெரியார் குறித்தும் பேசமால் இருப்பது நலம். சட்டகல்லூரி பிரச்சனையிலேயே உங்கள் மீது சிறிதாக சந்தேகம் எழுந்தது ஈழப்பிரச்சனையில் அது உண்மை என்றாகிவிட்டது. உங்களுக்கும் வீரமணிக்கும் பெரிதாய் வித்தியாசம் தெரியவில்லை சந்தர்பங்களை பிழைப்புவாதத்திற்க்காக பயன்படுத்தி கொள்வதில்.
த்தூ! இதெல்லாம் ஒரு பொழப்பு இவனுக்கு, இன்னும் என்ன அய்யா.
நாமெல்லாம் அவரைப்பற்றி அதிகம் அறிந்தவர்கள் என்பதால் என்ன சொல்வது புரியவில்லை தோழரே..! நீங்கள் குறிப்பிட்டவாறு அது ஒரு பொடா காலம் மட்டுமல்ல ஈழம் சம்பந்தமான் அவரின் உரைவீச்சும், எழுத்தும் என்றைக்கு மறக்கக்கூடியதோ, மறுதலிக்கக்கூடியதோ அல்ல.. ஆயினும் தமிழ்நாட்டு அரசியல் நிலைகளும், சிலரின் சுயநல போக்குகளாலும் இப்படி நல்லபல சிந்தனையளர்களையும் மாற்றிப்போட்டுவிட்டது. அவர் தன் நிலைக்கான காரணங்களை பலமுறை எம் மக்களுக்கு விளக்க ஊடகங்கள், மற்றும் உரைகள் மூலமாக முயற்சித்தார் ஆனாலும் எமது வலிகளும், ஏமாற்றங்களும், இழப்புகளுக்கும் மத்தியில் அவரின் வாதம் எடுபடவில்லை என்பதே உண்மை. அவர் தனித்து மவுனமாக இருந்திருந்தால் கூட இந்த பிரச்சினைகள் எழுந்திருக்காது அவரின் திரவிட இயக்க தமிழர் பேரவையின் மூலம் ஏதாவது தன்னாலானதை தனித்துவத்தோடு செய்திருக்கலாம். என்ன செய்வது கூற்றுக்கள் பொய்யாவது கூட கால மாற்றம்தானே……..நம்பிக்கையோடு இருப்போம்
“இப்போது தோன்றுகிறது நீங்கள் ஈழத்திற்காக குரல் கொடுத்ததும் கூலிக்காகவே என்று.”
அன்புத்தோழர் தமிழன்பனுக்கு வணக்கம்.சுபவீ அவர்கள் ஈழ போராட்டத்தை ஆதரித்து பேசி கண்ட வருமானத்தை கணக்கிட்டு போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.தோழரே அவரின் எதிரிகள் கூட சொல்ல அஞ்சும் குற்றச்சாட்டுகளை விளையாட்டாக பதிவு செய்கிறீர்.இருக்கட்டும்,சுபவீயை விடுங்கள் முதலில் காலம் உங்களை போன்றவர்கள் மீது காரிதுப்பும் முன் கண் விழியுங்கள்.
யார் யாரையுமே நோக வைப்பதில்லை இந்த ஈழத்தில் பிறந்த ஈனப்பிரப்புகளின் நோக்கம் .
துன்பத்தில் துன்பமான இந்த கொலைக்கரங்கள் நிரந்தரமான விதியாய் ஈழத்தமிழனுக்கு
ஐயோ உலகமே கண்கட்டி நின்றதுவே . உங்கள் தலைவர்கள் மட்டுமில்லையே
எப்படி அதை மறக்க முடியும் .அநியாயத்துக்கே இந்த உலகம் தலை சாய்க்கும் என்பது தமிழருக்கு ஒரு தலைவனாய் கருணா என்னும் மனிதப்பிறப்பு மேலோங்குவதில் இருந்து புரியவில்லையா
_nil_