ராஜபக்சேகூட தமிழக தேர்தல்களில் வெல்லலாம்!
ஓகஸ்ட் 21, 2009 § 3 பின்னூட்டங்கள்
ராஜபக்சேகூட தமிழக தேர்தல்களில் வெல்லலாம்!
தமிழகத்தின் ஒவ்வொரு இடைத்தேர்தலுக்கு பின்னாலே தலைவர்களின் அறிக்கைகளோ விமர்சகர்களின் பார்வைகளோ பொதுவாக ‘இதனால்தான் இந்த வெற்றி’ என்று மக்களின் உள்ள கிடக்கை தெரிவிப்பார்கள்.
வெற்றி பெற்ற தலைவர்களை கேட்டால் ” இது எங்கள் கட்சியின் சாதனைக்கு கிடைத்த வெற்றி” என்றும் “எதிர்கட்சிகளை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள்” என்றும் கதைவிடுவார்கள். விமர்சகர்களோ அந்த தொகுதியில ‘இந்த சாதி’ அல்லது ‘இந்த மத’ வாக்காளர்கள் அதிகம் அதனால் இந்த வேட்பாளருக்கு வெற்றி என்றும் எதிர்கட்சிகளின் பிரச்சார உக்தி வேறுமாதிரி இருந்து இருக்கலாம் என்று தமக்கு தோன்றியதை எழுதுவார்கள்.
உண்மை இதுதானா? மக்கள் ‘ஒருமுடிவு’ எடுத்து விட்டுத்தான் வாக்களிக்கிறார்களா? . அட போங்கப்பா நீங்கவேற, காசு எவன் அதிகமா கொடுக்குரானோ அவனுக்குத்தான் ஓட்டு. அழகிரியை மதுரையிலும் ஜே.கே.ரித்தீசை ராமநாதபுரத்திலும் மக்கள் அத்தனை ஓட்டு வித்தியாசத்துல வெல்லவைத்தது எதனால? வைகோ, தா.பாண்டியன் எல்லாம் தோற்றது எதனால? உடனே ஈழப்பிரச்சனை தமிழக மக்களிடம் எடுபடவில்லை அப்படின்னு நினைச்சுகாதீங்கப்பா.
“ஜெயலலிதாவை ஆண்டிபட்டியில் தோற்கடிப்பேன்” “விஜயகாந்தை மதுரையில் தோற்கடிப்பேன்” அப்பிடின்னு நம்ம அஞ்சாநெஞ்சன் வீராவேசம் காட்டுறாரே எந்த நம்பிக்கையில்?. எல்லாம் ‘ப’ படுத்தும் பாடு. வேண்டுமானால் “ராசபக்சே”வை வேட்பாளராக்கி அஞ்சாநெஞ்சனை பொருப்பாளராக்கி மதுரையில் நிறுத்தி பாருங்கள் கண்டிப்பாக எதிர்த்து நிற்ப்பவர் ‘டெபாசீட்’ இழப்பார். வரலாறு காணாத வெற்றியை “ராஜேபக்சே” பெற்று தமிழகமீனவர்களுக்கு அமைச்சராக்கூட முடியும்.
காசேதான் கடவுளுப்பா !
நம்ம வாக்காளர்களுக்கு
நல்லா தெரியுமப்பா!
செருப்படி…………..!
மக்களை இதிலிருந்து மீட்டெடுக்க வேண்டும்…
இல்லையேல் நம் அடுத்த தலைமுறை பேராபத்தை சந்திக்கும்
எச்சி எலைக்கு கீழ காந்திய படுக்க போட்டா வெற்றி நிச்சயம்…..தேர்தலிலே !
பொருப்பாளரா(?)
எதார்த்தம் சுடுகின்றது.
தேவியர் இல்லம் திருப்பூர்.
http://deviyar-illam.blogspot.com