தமிழர்களின் சாதிய அபிமானம்! அல்லது என்று தணியும் இந்த சாதிய மோகம்?

ஓகஸ்ட் 24, 2009 § 12 பின்னூட்டங்கள்


என்று தணியும் இந்த சாதிய மோகம்!

vijay

நேற்று இரவு விஜய் தொலைக்காட்சியில்(23/8/2009) நீயா? நானா? நிகழ்ச்சி ஓடிக்கொண்டு இருந்தது உறங்குவதற்கு முன் கொஞ்சம் பொழுது போக்கலாமேன்னு விஜய் தொலைக்காட்சி பக்கம் ஒதுங்கினால் காரசாரமான விவாதம் ஓடிக்கொண்டு இருந்தது. தலைப்பு தென்மாவட்டங்களில் காதல் திருமணங்கள் தடைசெய்யப்படுவது சரியா?. நாமளும் தென்மாவட்ட ஆள்தான் என்பதால் அப்படி என்னதான் பேசுறானுங்க என்று பார்த்தால்…….

தென்மாவட்டத்தை சேர்ந்த ஒவ்வொருவனும் பேச ஆரம்பிச்சாய்ங்க! ஒருந்தன் சொன்னான் எங்க சாதிக்குத்தான் முதல் மரியாதை, அடுத்தவன் சொன்னான் நாங்கெல்லாம் ‘ராசராசன்’ பரம்பரைன்னு. அடுத்தவன் நாட்டாமையாம் அதுக்கு அடுத்தவன் சொன்னாத்தான் சாமியே கோவிலவிட்டு கிளம்புமாம். இப்படியே அவனவன் அவனோட சாதியபத்தி பெருமை அடிச்சாய்ங்க இவங்க சொன்னதில இருந்து பார்த்தா எல்லா பயலுவளும் ‘என்னசாதி’ன்னு தெளிவா தெரிஞ்சுச்சு. தென்மாவட்டம்னாலே ‘அருவா’தான் போல. தங்கச்சங்கலியும் முறுக்கு மீசையும் ‘அவுக’ பெருமைன்னு சொல்லிக்கிட்டாக. தாழ்த்தப்பட்ட ஒருவர் கூட அங்க இல்லைன்னு தெளிவா தெரிஞ்சுச்சு.

ஏன் காதலை தடை விதிக்கிறோம்? என்று ஊரு நாட்டாமையும் அதோட அல்லகையும் பேச ஆரம்பிச்சிச்சு.முதல்ல அல்லக்கை ஆரம்பிச்சுச்சு “வெளியூர் பயலுகள ஊருக்குள்ள விடமாட்டோம் எங்க ஊரு பிள்ளைகள வெளியில படிக்கவோ வேறு எதுக்குமோ அனுப்ப மாட்டோம். வெளியூருல இருந்து வந்தாலும் எங்க சாதி பயலுகள மட்டும்தான் அனுமதிப்போம். அப்படியே காதலிச்சு கல்யாணம் கட்டிக்கிட்டா அடிச்சு ஊரைவிட்டு விரட்டுவோம். காதலர்களோட அப்பா அம்மாவை ஊரைவிட்டு தள்ளி வைப்போம் எல்லாரு காலுளையும் விழவைப்போம் அப்படின்னு சிரிச்சுக்கிட்டே ஏதோ இவரு எவரெஸ்டுல எப்படி ஏறுவதுன்னு விளக்குவது போல விளக்கிகிட்டு இருந்தாப்ள.

vijay1

அப்படியே அல்லக்கை சொல்லுச்சு மேலும் விவரங்களுக்கு நாட்டாமையை அணுகுங்கள் அப்படின்னு பக்கத்திலேயே தாடியும் மீசையுமா ‘நம்மநாட்டாமை’ காதலிச்சா சாமி கோவிச்சுக்கும் நாங்க தெய்வத்தை நம்புற ஆளுங்க, ஆதனால்தான் எங்க ஊரு ஆளுகள படிக்க கூட வெளில அனுப்புறது இல்ல. காதலிச்சா சமூதாயம் அழிஞ்சுபோகும். வேறசாதி பையனை காதலிக்கிறது மாகாபாவம். காதலிச்சா சொல்லிபார்ப்போம் இல்லைன்னா ஆளையே காலி பண்ணிடுவோம். எங்களுக்கு சாதிதான் முக்கியம் “ அப்படின்னு பேசின பிறகுதான் தோணிச்சு இதுக்கு இவன் அல்லக்கையே தேவல போலிருக்கேன்னு. இவனெல்லாம் ஒரு நாட்டாமை இவனை நம்பியும் ஒரு ஊரு . திண்டுக்கல் பக்கத்துலதான் இவரது கிராமமாம் போயி பார்க்கலாம்னு தோணினாலும் நம்மள மாதிரி வேற “சமூக ஆளுங்கள” உள்ள விடமாட்டானுங்கன்னு திட்டத்தை கைவிட்டுட்டேன்.

ராசராசன் பரம்பரை அதுக்கு மேல! நாங்கெல்லாம் பயங்கரமான ஆளுங்க, உங்களுக்கு எல்லாம் வளர்ப்பு சரியில்ல அப்படின்னு சொல்லிட்டு எதிர்தரப்புல இருந்த பெண்மணி ஒருத்தரை பார்த்து சொன்னாரு “ஆச்சாரமான குடும்பத்துல இருந்து வந்த நீங்க இப்படி பேசலாமான்னு” ராசராசனைவிட ‘அவா’தான் உயர்த்தசாதின்னு அவரே ஒத்துக்கிறார்(இவரு உண்மைலேயே ராசராசன் பரம்பரைதான் போலிருக்கு!). நல்லவேளையாக அந்த பெண்மணியின் சொற்களில் பார்ப்பனியம் இருந்தாலும் எண்ணத்தில்  பார்ப்பனியம் இல்லை.(நிகழ்ச்சியில் ஒரே ஆறுதல் இவர்தான்!) சாதிவெறி தவறு என்று சொல்லிக்கொண்டு இருந்தார்.

இந்த நீயா? நானா? சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடாது என்று உங்களைப்போலே எனக்கும் தெரியும்தான். இப்படி வெகுஜன ஊடகம் என்ற எண்ணம்(வெட்கமும்) கொஞ்சமும் இல்லாமல் எப்படி இந்த சாதிய வெறியர்களால் கொக்கரிக்க முடிகிறது என்பதே எண் கேள்வி. இதுல படித்த ஆண்கள், பெண்கள் வேறு. “எங்கசாதிதான் உயர்த்து” “காதலிச்சா சும்மா விடமாட்டோம் “என்றும் சலம்பல்கள் . ஏதோ இவர்களது கிராமம்தான் உலகம் என்பதைப்போலே காதலிப்பவர்களை இன்னும் ஊரைவிட்டு தள்ளி வைத்து கொண்டிருக்கிறார்கள். காதலித்தவர்களின் பெற்றோர்களை ஊரைவிட்டு நான்குமாதம் தள்ளிவைத்து ஊர்மக்கள் காலில் விழவைத்து தோப்புக்கரணம் போட வைத்து காதலித்த பிள்ளைகளோட எந்த தொடர்பும் வைத்து கொள்ளகூடாது என்று நிர்பந்திப்போம் என்று கூறிய ‘தற்குறி’ நிகழ்வு முடியும்வரை தனது சாதனைகளை எண்ணி எண்ணி சிரித்து கொண்டே இருந்தது.

kaathalar

வெகுஜன ஊடகங்களிலேயே இப்படி கொக்கரிக்கிற இந்த ஆதிக்க வெறியர்கள் தங்கள் சாதி பெருமையை நிலைநாட்ட கிராமங்களில் என்னவெல்லாம் செய்வார்கள்? என்று எண்ணிப்பாருங்கள். இன்னும் எத்தனை எத்தனை பெற்றோர்கள் ஊரின் மத்தியில் தோப்புக்கரணம் போட்டு அவமானப்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறார்களோ? மாற்றம் என்ற ஒன்றினை ஏற்க மறுத்து கிராமங்களில் சாதிய திமிரோடு இன்னும் இவர்கள் நடைப்போட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். ‘படித்த’ இவர்களது வாரிசுகள் இவர்களைவிட சாதி வெறியர்களாக இருப்பது மிகப்பெரிய வேதனை.

நகரங்களில் உங்களுக்கு நெருக்கமான நண்பனுக்கு கிராமத்தில் அவனுக்கு வேறுமுகம் இருக்கிறது என்பது மறக்க முடியாத உண்மை.கிராமங்கள் சாதியத்தின் பிறப்பிடமாகவும் அதனை ஊக்குவிக்கும் இடமாகவும் இருக்கிறது. கிராமங்கள் அழியவேண்டும் என்று பெரியார் சொன்னதன் அர்த்தம் இப்பொழுதுதான் விளங்குகிறது.

இந்த நூற்றாண்டிலும் சாதிய வெறியர்கள் தங்கள் ஆதிக்கவெறி தவறென்று உணராமல் இருப்பதை நாம் உணரவேண்டும். இவ்வளவு கட்டுக்காவலையும் காதல் காலங்கலாமாக உடைத்து கொண்டிருக்கிறது என்பது மறைக்க முடியாத உண்மை. இப்பெல்லாம் யாருங்க சாதி பார்க்கிறா? என்று பிற்போக்குத்தனமாக சாதிய பூசணிக்காயை மறைக்கும் போக்கினை விடுத்து சாதிவெறி அகற்ற அணிசேர்வோம் தோழர்களே! முதலில் நம் நண்பர்களிடம் விவாதிப்போம் சாதிய எண்ணங்கள் எவ்வளவு கொடியது என்று புரியும்படி செய்வோம். சுயசாதி அபிமானம் உடையவர்களை அதிலிருந்து மீட்டெடுப்போம். சமூகம் என்பதை சாதியின் அடிப்படையில் பார்ப்பவர்கள் இருப்பதால்தான் தமிழ்சமூகத்திற்கு என்ன நேர்ந்தாலும் தமிழன் கைக்கோர்க்க மறுக்கிறான். சாதியம் அழிந்தால்தான் தமிழ்சமூகம் பிறக்கும். சாதியம் நிறைந்த தமிழ்சமூகத்தால் யாருக்கு என்ன பயன்?

நம் வீட்டில் யாரேனும் சாதிவிட்டுசாதி காதலித்தால் முதலில் நம் ஆதரவை கொடுப்போம். அந்த காதல் வெற்றி பெறச்செய்வோம். சாதியத்தின் கரங்களில் இருந்து காதலர்களை காப்போம். காதல்திருமணம் சாதியை மட்டுமல்ல வரதட்சனை, மூடநம்பிக்கைகளை கொண்ட சடங்குகளையும்தான் அழிக்கிறது.காதலுக்கு தோள் கொடுப்போம். சாதியவெறியை வேரறுப்போம்.

Advertisements

§ 12 Responses to தமிழர்களின் சாதிய அபிமானம்! அல்லது என்று தணியும் இந்த சாதிய மோகம்?

 • இராஜராஜன் சொல்கிறார்:

  வணக்கம்
  இந்தவகையான சாதிய பிறயோகங்கள் தவறு என்று இவர்களுக்கு புரியவைக்க செயலாற்றாத பெரியாரின் பிள்ளைகள்தான் இதற்கு முதல் பொறுப்பு

  இராஜராஜன்

 • Dr. S. Ramakrishnan சொல்கிறார்:

  Good article. Those who praising their castes and proud of their foolish behaviour by punishing the lovers are really barbarians. We will become humans after demolishing the caste system for that we need to destroy the Hindu religion which is preaching castism.

 • thumbi சொல்கிறார்:

  வெட்கப் படவேண்டிய நிலை. எனக்கு ரத்தம் கொதிக்கிறது

  /நல்லவேளையாக அந்த பெண்மணியின் சொற்களில் பார்ப்பனியம் இருந்தாலும் எண்ணத்தில் பார்ப்பனியம் இல்லை.(நிகழ்ச்சியில் ஒரே ஆறுதல் இவர்தான்!) சாதிவெறி தவறு என்று சொல்லிக்கொண்டு இருந்தார்//:

  ‘”அந்த பெண்மணி நடந்து கொண்டது இப்போது பார்ப்பனர்கள் பார்ப்பனீயத்தை விட்டு விட்டார்கள்; ஆனால் இதர சாதியினர் அதைக் கைவிடவில்லை. கொலை வெறியோடு தூக்கி கொண்டு அலைகிறார்கள் என எண்ண வைத்தது ” எனப் பதிவர் சொல்ல விரும்பியிருப்பார் என எண்ணுகிறேன். அதே பெரும் பாலான அளவுக்கு உண்மையும் கூட.

 • jkpillai சொல்கிறார்:

  தமிழன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுவதைவிட
  நல்ல தமிழனாய் இருப்பதில் இந்த இன வெறியர்கள் பெருமைப்படுவதில்லை
  இது எல்லாத்தமிலனுக்கும் பொருந்தாது
  எப்படி முஸ்லிம்கள் எல்லோரும் பயங்கர வாதி இல்லையோ
  அப்படியே தமிழர் எல்லோரும் சாதி வெறி பிடித்தவர்கள் இல்லை
  த்மிளிச்சியாய் இருப்பதில் நான் சந்தோசம் அடைகிறேன் அதற்க்காக நான் தமிழிச்சி என்று வெறி பிடித்ததாக அர்த்தம் இல்லை
  நான் எனது குழந்தையை அன்பு செய்கிறேன் என்றால் மற்ற குழந்தைகளை வெறுக்கிறேன் என்பதா அர்த்தம் ?
  தமிழ் என்னும் மொழியில் வந்த முன்னோர்கள் பெரியவர்கள் அனுபவ முதிர்ச்சியுடையோர்களின் படைப்புகள் போற்ற தக்கன
  அதன்படி வாழ்வது உலகியிலின் முதலாந்தர வெற்றி . அந்த நல்வழியில் வாழ்பவர்களால் நாடு சிறக்கின்றது நாடு சிறந்தால் உலகம் சிறக்கும்
  அதைவிட்டு அவர்களின் முன்னேட்டத்தை கண்டு அதிர்ச்சியும் பொறாமையும் பிடித்த வெட்டு இனங்களின் வெறிக் கூத்து தமிழர்களை அழிப்பது மட்டுமல்லாமல்
  தமிழினால் உலகம் அடையும் நன்மைகளையும் அழிக்கின்றது

 • tamizhanban சொல்கிறார்:

  வணக்கம்
  இந்தவகையான சாதிய பிறயோகங்கள் தவறு என்று இவர்களுக்கு புரியவைக்க செயலாற்றாத பெரியாரின் பிள்ளைகள்தான் இதற்கு முதல் பொறுப்பு

  இராஜராஜன்
  //////////////////////////////////////////////////////

  தங்கள் பதிலுக்கு நன்றி ராஜராஜன்!

  ஆனால் பெரியார் தொண்டர்படைக்கு அந்த வேலையை கொடுத்துவிட்டு நாம் ஒதுங்கி கொள்ள முடியாது அல்லவா?

  தமிழகத்தில் பெரியார் பிள்ளைகள் எண்ணிக்கையில் சிறுபான்மையே!. சாதிய சகதியை அகற்ற நாமெல்லாம் கைகோர்த்தால் அன்றி இயலாது. முதலில் நம் குடும்பத்தில் சாதிய துவேசம் இல்லாமல் பார்த்துக்கொள்வோம்.

  நட்புடன்
  தமிழன்பன்!

 • tamizhanban சொல்கிறார்:

  தமிழன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுவதைவிட
  நல்ல தமிழனாய் இருப்பதில் இந்த இன வெறியர்கள் பெருமைப்படுவதில்லை
  இது எல்லாத்தமிலனுக்கும் பொருந்தாது
  எப்படி முஸ்லிம்கள் எல்லோரும் பயங்கர வாதி இல்லையோ
  அப்படியே தமிழர் எல்லோரும் சாதி வெறி பிடித்தவர்கள் இல்லை
  த்மிளிச்சியாய் இருப்பதில் நான் சந்தோசம் அடைகிறேன் அதற்க்காக நான் தமிழிச்சி என்று வெறி பிடித்ததாக அர்த்தம் இல்லை

  ////
  வணக்கம் தோழி!

  தமிழர் என்று பெருமை கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் தமிழினம் நெருக்கடியான நிலையில் இருக்கும் இந்த காலகட்டத்தில் தமிழன் இன்னும் தம்மிடம் சாதியம் பேசுவது நியாயமா?

  ஒரு தாழ்த்தப்பட்ட தமிழன் எப்படி எல்லாம் சக தமிழனால் துன்புறுத்தப்படுகிறான் என்று சிந்தியுங்கள். அப்புறம் எப்படி தமிழன் என்ற உணர்வு அனைவருக்கும் வரும்.

  இப்ப யாருங்க சாதி பார்க்கிறா என்று சொல்வதை விடுத்து நாமெல்லாம் சாதியத்தை வேரறுக்க ஒன்றுபட வேண்டும்.

  காதல் திருமணங்கள் சாதியத்தை வேரறுக்கும் என்பது எனது நம்பிக்கை. தங்கள் கருத்து பகிர்தலுக்கு மிக்க நன்றி.

  நட்புடன்
  தமிழன்பன்!

 • tamizhanban சொல்கிறார்:

  Good article. Those who praising their castes and proud of their foolish behaviour by punishing the lovers are really barbarians. We will become humans after demolishing the caste system for that we need to destroy the Hindu religion which is preaching castism.
  ///////////////////////////////////////////

  உங்களின் கருத்துக்கள் மறுக்க முடியாத உண்மை. நான் நீட்டி முழக்கி சொல்லி இருப்பதை நாலே வரியில் அழகாக சொல்லிட்டீங்க. உங்களின் உணர்வுகள்தான் நாம் அனைவருக்கும் தேவை. இந்துமதம் குறித்த உங்கள் பார்வைக்கு எனது நன்றி.

  நட்புடன் தமிழன்பன்

 • thumbi@wordpress.com சொல்கிறார்:

  இதர பின்னூட்டங்களுக்கு பதில் கூறியது போல் என் பின்னூட்டத்துக்கும் பதிலை எதிர்பார்க்கலாமா? அன்புடன்: தும்பி

 • tamizhanban சொல்கிறார்:

  வெட்கப் படவேண்டிய நிலை. எனக்கு ரத்தம் கொதிக்கிறது

  /நல்லவேளையாக அந்த பெண்மணியின் சொற்களில் பார்ப்பனியம் இருந்தாலும் எண்ணத்தில் பார்ப்பனியம் இல்லை.(நிகழ்ச்சியில் ஒரே ஆறுதல் இவர்தான்!) சாதிவெறி தவறு என்று சொல்லிக்கொண்டு இருந்தார்//:

  ‘”அந்த பெண்மணி நடந்து கொண்டது இப்போது பார்ப்பனர்கள் பார்ப்பனீயத்தை விட்டு விட்டார்கள்; ஆனால் இதர சாதியினர் அதைக் கைவிடவில்லை. கொலை வெறியோடு தூக்கி கொண்டு அலைகிறார்கள் என எண்ண வைத்தது ” எனப் பதிவர் சொல்ல விரும்பியிருப்பார் என எண்ணுகிறேன். அதே பெரும் பாலான அளவுக்கு உண்மையும் கூட.
  /////////////////////////////////////////////////

  தங்கள் கருத்து பகிர்தலுக்கு நன்றி தோழர்.

  நான் பார்பனியர்கள் திருந்தி விட்டார்கள் என்று சொல்லவில்லை. பார்பநியர்களை கடுமையாக எதிர்க்கும் நாம் சாதிய வெறியர்களாக இருக்கும் ஆதிக்கவெறியர்களை அவ்வளவாக எதிர்ப்பதில்லை. பிறப்பின் அடிப்படியில் நாம் பார்பனியத்தை வரையறை செய்ய முடியாது பார்ப்பானாக பிறந்து எண்ணத்தில் பார்ப்பனியம் இல்லாதவர்களை நாம் வரவேற்பதோடு பார்பனியத்தை தலையில் சுமக்கும் அனைவைரும் எதிர்க்க வேண்டும்.

  தென் மாவட்டம் மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே சாதிய அபிமானம் உள்ளது. ஆதிக்க வெறியர்களை அம்பலப்படுத்த வேண்டியது நம்முடைய கடமை என்ற நினைக்கிறேன்.

  உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு மடல் அனுப்பிவிட்டு பதில் போடலாம் என்று எண்ணி இருந்தேன். இவ்வளவு பின்னூட்டங்கள் இதுவரை வந்ததில்லை நன்றி!

 • வணக்கம்.

  ஈரோட்டுக்காரர் அவர் கூட பதிவில் பகிர்ந்து கொள்கிறாரா என்ற ஆச்சரியத்தில் உள்ளே வந்தேன். ஆனால் ஈரோடு தமிழன்பன்க்கு எந்த வகையிலும் நீங்கள் குறையில்லை. நீங்கள் சொல்லியுள்ள நிகழ்ச்சியை ஒரு இடைவௌி விளம்பரத்தில் ஒருவர் மட்டும் பேசிய விசயத்தை பார்த்த போது பல மணி நேரம் விக்கித்து நின்று விட்டேன். ஆனால் பணியின் காரணமான பார்க்க மறந்து விட்டேன்.

  நீங்கள் சொல்வது போல் மற்ற விஷயங்களுக்குள் உள்ளே வரவிருப்பமில்லை. ஆனால் என்னுடைய பார்வையில் மனதில் பட்டதை சிலவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில்

  1. இருபது வருடங்கள் நானும் வாழ்ந்து இருக்கிறேன். எங்களைப் போன்றவர்கள் பிறந்த குலத்திற்கு சம்மந்தமில்லாத மூன்று நேரமும் அசைவம் என்ற வாழ்க்கை தந்த பழக்கத்தையே சுற்றி உள்ள கூட்டத்தினால் பெற்ற நண்பர்களால் அவஸ்த்தையான அந்த அசைவ பழக்கவழக்கங்கள் தனியாக திருப்பூர் வந்து 8 ஆண்டுகள் கழித்து 2000 ஆண்டு முதல் சுத்த சைவமாக மாற வைத்தது. இன்று வரையிலும் தொடர்கின்றது.

  2. ஆக்ரோஷம் எங்கிருந்து பிறக்கிறது? எதனால் இத்தனை தவறான முரட்டுத்தனம் பிறக்கிறது? தவறு என்று தெரிந்தும் ஏன் தன் நிலை உணர முடியவில்லை?

  3. என்னுடைய குற்றச்சாட்டு ஒரு ஜாதி குறித்தோ பழக்கவழக்கங்கள் குறித்தோ இல்லை. எல்லாவற்றிலும் இருக்கிறது. அவர்களிடம் சற்று அதிகமாக இருக்கிறது.

  அதிலும் அவர் சொன்ன நான் பார்த்த காட்சியில் ” வெட்டிக் கொன்று போட்டுவிடுவோம் ” என்ற வார்தைகளை பார்த்தவுடன்

  4. கருத்துச் சுதந்திரம் என்பது என்ன? என்பதும் கலங்கரை விளக்கமாக இருக்க வேண்டியவர்கள் கல்லறைக்கு வழி காட்டுபவர்களாக இருப்பதும் ஆச்சரியம் அளித்தது.

  5. அவர்களை மறந்து விடுங்கள். ஜாதி, மதம் அத்தனையும் மனதில் இருந்து அழித்து விடுங்கள். எத்தனை பேர்கள் மதம் மாறி, ஜாதி வேறு பாடு பார்க்காமல் திருமணம் செய்து இன்று வரையில் அல்லது சாகும் வரையில் நல்ல முறையில் பணம் இருக்கிறதோ இல்லையோ நல்ல புரிதலோடு வாழ்கிறார்கள். எண்ணிக்கை எனக்கு தெரிவிக்க முடியுமா?

  6. நீங்கள் வருத்தப்பட்டாலும்? முற்பட்ட வகுப்பினர், பிற்பட்ட வகுப்பினர் இருவரையும் விட்டு விடுங்கள். மிகவும் பிற்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்டவர்கள், தலித், பழங்குடியினர் இது போன்ற புறக்கணிப்புகளை ஒவ்வொரு கால சூழ்நிலையிலும் பெற்று இன்று உள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி உன்னத நிலை அடைந்தவர்களை நீங்கள் ஏதாவது ஒரு இடத்தில் அலுவலகத்தில் அரசாங்க வர்க்கத்தின் பிரதிநிதியாக பார்த்து தான் வந்து இருப்பீர்கள். நாம் பட்ட அவமானம் அவஸ்த்தைகள் நம்முடைய வழித்தோன்றல்கள் பெற்று விடக்கூடாது என்று இவர்கள் இணைந்து அணைவருமே சேர்ந்து கல்வி என்ற ஒரு விஷயத்துக்கு மட்டுமாவது கரை சேர்க்க உதவியிருந்தால் ? உண்மையா பொய்யா?

  நான் ஜாதி வெறி பிடித்தவன் என்றோ ஒரு வகையினருக்கு சார்பாளன் என்றோ கருத மாட்டீர்கள் என்று நம்புகிறேன். மிக முக்கிய காரணமான இந்த அவலங்களுக்கு பின் நான் உணர்வது தனி மனித படித்த நபர்கள் கூட தங்களால் முடிந்த பங்களிப்பை அளிக்க தயாராய் இருக்க விரும்பவில்லை என்பது, உண்மையான விழிப்புணர்ச்சி என்பதையே அறியாமல் உறக்கத்தில் இன்று வரை இருந்ததால் தான் இது போன்ற நிகழ்ச்சிகள், ஏமாற்றும் தலைவர்கள் ஏற்றம் பெற்றுக் கொண்டும் வளர்ந்து கொண்டுருகிறார்கள்

  உங்களுக்கு நேரம் இருந்தால் என் பழைய பதிவான நம்பிக்கைகளை மாற்றும் நாச கார கூட்டங்களை படித்துப் பாருங்கள். பதில் அளித்தால் உங்கள் சமூக அக்கறை சிந்தனைக்கு தலை வணங்குகிறேன்.

  தவறு இருந்தால் திருத்துங்கள்?

  தீதும் நன்றும் பிறர் தர வரா?

  நட்புடன்

  தேவியர் இல்லம். திருப்பூர்.

  http://texlords.wordpress.com

  texlords@gmail.com

 • tamizhanban சொல்கிறார்:

  தோழமைமிக்க ஜோதிஜிக்கு.

  முதலில் தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி. நான் தங்களின் வலைப்பூவினை முன்னரே வாசித்து இருக்கிறேன். தங்களைப்போன்றவர்களின் வாழ்த்துக்களே என்னை ஊக்கப்படுத்தி எழுத வைக்கிறது.

  தங்களின் பின்னூட்டத்தின் மூலம் நீங்கள் சாதியத்தை எதிர்ப்பவர் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. அதே வேளையில் காதல் திருமணங்கள் எதார்த்தவாழ்வினில் வெற்றிகரமாக இருக்காது என்று கருதுகிறீர்கள்.

  திருப்பூர் காதலித்து ஓடிவந்த பலர் படும் இன்னல்களை நீங்கள் நிறைய பார்த்து இருக்கலாம் அதனால் காதல் திருமணம் தேவைதானா? நடைமுறையில் இருக்கும் சிக்கல்களை நீங்கள் பேசுகிறீர்கள் என்பது தெரிகிறது. எல்லா காதல் திருமணங்களும் வெற்றியடைவதில்லை என்பதும் உண்மைதான் வீட்டினில் பார்த்து நடத்தி வைக்கும் திருமணங்களும் இதற்க்கு விதிவிலக்கு இல்லை அல்லவா?

  எத்தனை பேர் காதலித்து நல்லமுறையில் வாழ்கிறார்கள் என்று எண்ணிக்கை அடிப்படையில் சொல்வதைவிட என் பெற்றோர்களிடம் இருந்து நான் சொல்கிறேன். என் பெற்றோர்கள் காதல் திருமணத்தின் வெற்றிக்கு உதாரணமாகவே உணருகிறேன். எங்கள் குடும்பம் எவ்வளவோ சோதனைகளையும் எவ்வளவோ அவமானங்களையும் சந்தித்து இருக்கிறது. அதனால் நாங்கள் உடைந்து போய்விடவில்லை வென்று காட்டி இருக்கிறோம் என்றே உணருகிறேன்.

  வெறும் சாதியின் அடிப்படையில் மட்டுமே வருவதில்லை ஆதிக்கவெறி வாழும் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே ஆதிக்க திமிர் வருகிறது.

  காதல் திருமணங்களை ஆதரியுங்கள் என்று ஒற்றைவரியில் செல்வதாக எண்ண வேண்டாம் . ஒரு பெண்ணோ ஆணோ காதல் செய்தால் காதலிக்கப்படுபவர் குணநலம் பத்தி நாம் சிந்திப்பதில்லை வெறுமனே சாதியின் அடிப்படியிலே எதிர்க்கிறோம்.

  வரதட்சனை காரணமாக ஒரு பெண்ணின் திருமணம் தள்ளி போகலாம் அதே வேறசாதிக்காரன் நல்ல மனதுடன் கல்யாணம் செய்து கொள்ளவந்தால் ஏற்று கொள்ள மாட்டார்கள்.

  உங்களைப்போலவே படிக்கும் பதிவுகளுக்கு பின்னூட்டம் இடும் நேர்மையை கடைப்பிடிப்பது என்று தீர்மானித்து இருக்கிறேன்.உங்கள் பதிவுகளை மீள்வாசிப்பு செய்து பதிவிடுகிறேன்.

  தோழமையுடன்
  தமிழன்பன்

 • முதன் முதலாய் என்னை மீண்டும் பதிவுக்கு வரவழைத்தும் உங்கள் படித்த பதில் எழுத்துகள் என்னை வியக்க வைக்கின்றது.

  தௌிவான தீர்க்கமான சிந்தனைகள். உங்கள் பெற்றோர்கள் இட்ட பிச்சை அல்லது பாக்யம்.

  நல்ல எதிர்காலம் உங்களுக்கு இருக்கிறது என்பது மட்டும் தௌிவாய் தெரிகிறது.

  நாற்பது வருடங்களில் காதலித்து வெற்றி பெற்று அதனுடன் இல்லாமல் அவர்களின் வாரிசு என்னுடன் உரையாடியது இதுவே முதல் முறை. நம்புங்கள்.

  அதுவும் அந்த வாரிசு இத்தனை பொறுமையாய் சிறப்பாய் இருப்பதும் இதை விட முக்கியம்.

  மூன்று மாதங்கள் ஆகின்றது இந்த உலகத்திற்குள் வந்து.

  55 பதிவுகள் எழுதி உள்ளேன். 500 பதிவுகள் பார்த்து இருப்பேன். யோசிக்க வைத்தால் உடனடியாக பதிலை ஏற்றி விடுவேன்.

  காரணம் நான் நல்லவனாக இருந்தால் தான் மற்றவர்களைப் பற்றி யோசிக்க முடியும். நரை முடிகளுடன் இருப்பவன் நல்ல கருமை முடிகளை பெற்றவனைப் பார்த்து பொறாமைப்படத் தான் முடியும்.

  அதனால் தான் சொன்னேன் தீதும் நன்றும் பிறர் தர வரா?

  நீங்களே ஒரு சபதம் ஏற்று இருக்கிறீர்கள் அல்லவா?

  சத்தியம் ஜெயிக்கும். சற்று தாமதமாய்.

  வாழ்த்துக்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

What’s this?

You are currently reading தமிழர்களின் சாதிய அபிமானம்! அல்லது என்று தணியும் இந்த சாதிய மோகம்? at தமிழன்பன் பக்கம்.

meta

%d bloggers like this: