தமிழ்நாடு மட்டுமே திராவிடநாடு!அல்லது இதுதாண்டா திராவிட நாடு !

செப்ரெம்பர் 3, 2009 § 19 பின்னூட்டங்கள்


தமிழ்நாடு மட்டுமே திராவிடநாடு!அல்லது இதுதாண்டா திராவிட நாடு !

Onam

நேற்று ஓனம் பண்டிகையை தொடர்ந்து செய்திகளில் முதல்வரும் முன்னாள்முதல்வரும் கொடுத்த வாழ்த்துசெய்திகள் வந்தன.ஓனம்  என்பது விஷ்ணுவின் அவதாரமான “உலகை மூன்று அடிகளில் அளந்த நிகழ்வை” குறிக்கும் பண்டிகை.பகுத்தறிவாளர் வாழ்த்துசொன்னதோடு மலையாளிகள் கணிசமாகவசிக்கும் தமிழகபகுதிகளுக்கு விடுமுறை அறிவித்து இருக்கிறார்.
sarvagyar04

கன்னடகவிஞர் சர்வக்ஞர் சிலை சென்னையில் நிறுவப்பட்டிருக்கிறது. தேவகவுடாவின்மகன் குமாரசாமி முதல்வராக இருந்த பொழுது காவேரிதீர்ப்பு வந்ததால் பிரச்சனைவந்தது. குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறினார் தீர்ப்பை உடனே நடைமுறைப்படுத்த வேண்டாம் பேச்சுவார்த்தைகள் பண்ணலாம் என்று கருணாநிதி கடிதம்அனுப்பி இருப்பதாக. “எனது ஆருயிர் நண்பர் தேவகவுடாவிற்கு சங்கராந்தி வாழ்த்து சொன்னேன் வேறதுவும் இல்லை” என்றார் முதல்வர். இந்த நேரத்திலேயா வாழ்த்துசெய்தி? என்று விமர்சனங்கள் வந்தது. கர்நாடகதேர்தலை காரணம்காட்டி ஒகேனக்கல் குடிநீர்திட்டத்தை பரணில் போட்டது கொசுறுசெய்தி.
Y._S._Rajasekhara_Reddy_300

ஆந்திரமுதல்வர் ராஜசேகரரெட்டி பயணம்செய்த விமானம் மாயமாக மறைந்ததாக நேற்று செய்திவந்தது. இன்று விமானத்தில்  பயணம்செய்த அனைவரும் இறந்துவிட்டனர் என்று அதிர்ச்சிகரமான செய்திவந்துள்ளது.  உண்மையாகவே எல்லோரும் அனுதாபப்படவேண்டிய நிகழ்வுதான்.என்னதான் பாலாற்றின் குறுக்கே அணைமேல் ஆணைகட்டினாலும் ராசசேகரரெட்டியின் மரணத்திற்கு இரங்கல் அறிவிப்பு செய்யவேண்டியது முதல்வரின் கடமைதான்.

ஆனால் முதல்வர் ஒருபடி மேலேசென்று ஒருநாள் அரசுவிடுமுறை அறிவித்து இருக்கிறார். தமிழகமக்களில் பலருக்கு “ரெட்டி” யாரென்றே தெரியாது. எதற்கு இந்த விடுமுறை?. அவரே கேள்விகேட்டு அவரே பதில்சொல்வார் நாங்கள் மட்டுமே திராவிட நாடு என்று. திராவிடர்களான தெலுங்கர்களின் முதல்வர் இறந்ததற்காக விடுமுறை என்பார்.அப்படி என்றால் இலங்கை தமிழனும் திராவிடன் தானே? கடைசிநாளில் ஆயிரக்கணக்கில் செத்தானே அப்பொழுது ஏன் அரசுவிடுமுறை விடவில்லை? ஒருவேளை நீங்கள் இந்தியதிராவிடர்களுக்கு மட்டும்தான் இறங்குவீர்களா?

இலங்கை தமிழனுக்காக விடுமுறைவிட்டால் நடந்தது இனப்படுகொலை என்பதை உலகிற்கு உணர்த்தியதாகும்.இலங்கையோடு கூட்டுசேர்ந்து இனப்படுகொலை செய்த காங்கிரசு சும்மா இருக்குமா? அப்புறம் காங்கிரஸ் கட்சியோடு கூட்டுசேர்ந்து கொள்ளை அடிக்க முடியாது. ராஜசேகரரெட்டிக்காக விடுமுறைவிட்டால் காங்கிரசின் விசுவாசியாக காட்டி கொள்ளலாம்.

முல்லை பெரியாறு, பாலாறு,காவேரி என்று பக்கத்து மாநிலங்கள் முறைத்து கொண்டு நிற்க. திராவிடன் என்ற வார்த்தையை உச்சரிக்கவும் (இந்திய) திராவிடனுக்கு வாழ்த்து சொல்லவும் விடுமுறை அறிவிக்கவும் உள்ள ஒரேநாடு(மாநிலம்) தமிழகம்தான். கலைஞருக்கு இருப்பது திராவிட பாசமா? அல்லது காங்கிரஸ் விசுவாசமா? என்று நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள்.

Advertisements

§ 19 Responses to தமிழ்நாடு மட்டுமே திராவிடநாடு!அல்லது இதுதாண்டா திராவிட நாடு !

 • பிரதிபலிப்பான் சொல்கிறார்:

  நண்பரே இந்த விடுமுறையை அரசியலாக்காதீர்கள். நாம் நம்முடைய தலைவர்களுக்கு கொடுக்கும் மரியாதை.

  ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு எப்படி மரியாதை கொடுக்கவேண்டும் என்பதற்கு மூத்த அரசியல் வாதியான கலைஞர் அவர்கள் முன்னோடியாக திகழ்கிறார். இதுதான் நாம் அவரிடம் கற்றுக் கொள்ளவேண்டிய பண்பாடு.

 • ulavu சொல்கிறார்:

  புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
  தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
  http://www.ulavu.com
  (ஓட்டுபட்டை வசதிஉடன் )
  உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

  இவன்
  உலவு.காம்

 • கலைஞன் சொல்கிறார்:

  இதை இன்னொரு கண்ணோட்டத்தில் பார்த்தால் ஒரு தலைவரின் மரணத்திற்க்கு இரங்கல் செய்யக்கூட மனமில்லாத காட்டு மிராண்டியாய் இந்த பதிப்பை நீவீர் பதிவு செய்துள்ளீர் என்பதை உணர்த்துகிறது.

  உம் வலைத்தளம் வெகு விரைவில் செயலிழக்கப்படும்!

  இங்ஙனம்

  இலங்கைத் தமிழர்களின் நலம் விரும்பும் அரசியல் தலைவர்.

 • tamizhanban சொல்கிறார்:

  ஓட்டு மொத்தமாக தமிழினமே கொத்துகொத்தாக கொல்லப்பட்ட பொழுது கண்டும் காணமலும் போனவர்களுக்கு
  எங்களை பார்த்தால் காட்டு மிரண்டியாகத்தான் இருக்கும்.

  திராவிடன் என்ற பெயரில் மொத்த தமிழனும் எமாளியாக்கப்படும் கொடுமையை கண்டிக்காமல் இருக்க எம்மால் முடியாது.

  என் வலைத்தளத்தை செயலிழக்கச்செய்ய போவதாக மிரட்டும் நீங்கள் என்னை காட்டு மிராண்டி என்பதை என்ன சொல்வது?

  உங்கள் அச்சுறுத்தலுக்கு எல்லாம் அஞ்சும் ஆள் நான் கிடையாது தோழரே!

  இலங்கை தமிழர்களின் நலம் விரும்பி நீங்களா?

  தெரியாமல்தான் கேட்க்கிறேன் உங்களின் தலைவன் கருணாநிதியா அல்லது ராசபக்சேவா?

 • tamizhanban சொல்கிறார்:

  நண்பரே இந்த விடுமுறையை அரசியலாக்காதீர்கள். நாம் நம்முடைய தலைவர்களுக்கு கொடுக்கும் மரியாதை.

  ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு எப்படி மரியாதை கொடுக்கவேண்டும் என்பதற்கு மூத்த அரசியல் வாதியான கலைஞர் அவர்கள் முன்னோடியாக திகழ்கிறார். இதுதான் நாம் அவரிடம் கற்றுக் கொள்ளவேண்டிய பண்பாடு.

  ////////////////////////////////

  தங்களை போலே இதை மென்மையாக எடுத்து கொள்ள என்னால் முடியவில்லை தோழரே!

  முதல்வர்தான் இதனை அரசியல் ஆக்குகிறார். நான் தெளிவாக சொல்லிவிட்டேன்.

  ஒவ்வொரு மாநிலமும் அதன் மக்கள் மீது மட்டும் அக்கறை காட்டும் பொழுது தமிழன் வெள்ளந்தியாக தன்னை திராவிடன் என்று எண்ணிக்கொண்டு இருப்பதை சுட்டி காட்டவே இந்த பதிவு.

  கண்டிப்பாக இரங்கல் கொடுக்க வேண்டும் என்றுதான் சொல்லுகிறேன்.அரசு விடுமுறையில்தான் எங்களுக்கு சம்மதம் இல்லை என்று சொல்லி இருக்கிறேன்.

 • dhivagar சொல்கிறார்:

  தெரியாமல்தான் கேட்க்கிறேன் உங்களின் தலைவன் கருணாநிதியா அல்லது ராசபக்சேவா?

  Haha…Wonderful question to these hypocrites!!! I think his leader is gotabaya rajapaksa:-) That why he is threatening that your page will be disabled…

 • கவுதமன் சொல்கிறார்:

  இது பெரியார் பேசிய திராவிடமல்ல. இது தமிழ்”ஈன” த்தலைவர் பேசும்”தேசியதிராவிடம்”. இவர் விடுமுறையும் விடுவார், விழி பிதுங்கவும் அழுவார்.இவருக்கு பாலாறும் அரசியல், தேனாறும் அரசியல்.இவருக்கு ஈழமாவது,இழவாவது.யாரையும் கோபப்படுத்தாதீர்கள்.நடப்பதும் நடக்காது.கிடைப்பதைப் பெற்றுக்கொள்வோம் என்று முள்வேலிக்குள் முடக்கப்பட்ட 3லட்சம் ஈழமக்களைக்காட்டி, கொத்துக்கொத்தாய் செத்துப்போன ஈழத்தமிழர்களின் பினங்களின் மீது ஏறி நின்று புது வியாக்கியாணம் பேசுவார்.அதற்குப் பின்பாட்டுப்பாடி விளக்கம் சொல்ல வீரமுள்ளமணிகள்,சுபவீக்கள்,திருமாக்கள்,தேசியதிலகங்கள்.இவர்களுக்கு எது மனமில்லாத காட்டுமிராண்டிசெயல்! இவர்கள் நலம் விரும்புவதில் ஈழமில்லை,இலங்கைதான் இருக்கிறது. இதிலிருந்தே தெரிகிறதே,”முயல் பிடிக்கும் நாய்களின் மூச்சுகள்” நீங்கள் தொடருங்கள் தோழரே!

 • வணக்கம். நண்பரே.

  வளர்ந்து வரும் இடுகை என்று பெயர் பட்டியலில் பார்த்த போது மிக்க சந்தோஷமாய் இருந்தது. ஆனால் உள்ளே வந்து பார்த்த போது, பதிவும் வந்த பதிலும் பார்த்தபோது மிகவும் வருத்தமாய் இருக்கிறது.

  என்னுடைய கணக்குப்படி என்னுடைய வயதுக்கும் அனுபவத்திற்கும் சற்று குறைவாகவே இருப்பீர்கள் என்று கருதுகிறேன். ஆனால் ஏராளமான வலிகள் உங்களிடம் இருக்கிறது. சமூகம் தந்ததாக தனி மனிதர்கள் தந்ததாக இருக்கக்கூடும்.

  உங்கள் கண்ணோட்டத்தை மொத்தத்தையும் மாற்றிக்கொள்ளுங்கள். உலகத்தில் யாரையும் திருத்த முடியாது. திருத்துவும் நம்முடைய வேலை அல்ல. ஆனால் நூறில் ஒருவரையாவது சிந்திக்க வைக்க முடியும்.

  அந்த நல்ல வாய்ப்பை முகம் தெரியாத இந்த வேர்ட் ப்ரஸ் இந்த தமிழ் கூறும் நல் உலகத்திற்கு கொடுத்துள்ளது. மூன்று மாதமாகத்தான் என்னுடைய மனம் தௌிவாக உள்ளது. அத்தனை குழப்பங்களையும் இறக்கி வைத்த காரணத்தால்.

  துபாய் அமெரிக்கா கனடா இன்னும் பல வேறு நாடுகளில் முகம் தெரியாமல் இன்று வரையிலும் பல நல்ல நண்பர்கள் என் பதிவின் மூலம் அறிமுகமாகி குடும்ப நண்பர்களாக மாறியும் உள்ளனர். நம்ப முடிகின்றதா? திருப்பூர் பதிவர்களுக்கு கூட இன்னமும் என் முகம் கூட தெரியாது. இரண்டு பதிவர்கள் என்னுடைய பதிவை அவர்கள் பதிவுடன் இணைத்து உள்ளார்கள்.

  ஏன்? எனக்கு சோகம் இல்லையா? வெறுப்பு இல்லையா? விரக்தி இல்லையா? எல்லாம் இருக்கிறது. எதை பகிர வேண்டும்? எப்படி பகிர வேண்டும். அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். நம்முடைய தனிப்பட்ட பொது கருத்துக்கள் எல்லாம் நம்முடன் தான் வைத்துக் கொள்ள வேண்டும்.

  மனைவி இருந்தால் அவர்களிடம் போய் பேசிப் பாருங்கள். நான்கு முறை கேட்பார். ஐந்தாவது முறை அறைந்து விடுவார். மனைவியே அப்படி இருக்கும் போது அடுத்தவர் மிரட்டினால் அவரையும் நீங்கள் மிரட்டுவதென்பது என்ன நாகரிகம். படியுங்கள். யோசியுங்கள். அரசியல், நிர்வாகம், தலைவர்கள், சரித்திர நிகழ்வுகள், அந்தரங்கங்கள் இவை அத்தனைக்கும் ஒரு வரை முறை உண்டு.

  நீங்கள் காந்தி குறித்து சொன்ன கருத்துக்கள் போல் ஆயிரம் கருத்துக்கள் என்னிடமும் உண்டு. ஆனால் குணம் நாடி குற்றமும் நாடி என்று பார்த்தால் இன்று இத்தனை உரக்க பேசுவதே காந்தி மாதிரி தியாகவாதிகள் போட்ட பிச்சை. இல்லாவிட்டால் நமது தாய் தந்தையர் எவரோ ஒரு ஆங்கிலேயருக்கும் துப்பரவு வேலை செய்து கொண்டுருப்பார்கள்.

  யோசிக்கக்கூடிய தகுதி இருக்கும் என்பதால் இந்த நீள் கடிதம்.

  நட்புடன்

  தேவியர் இல்லம்.

 • dhivagar சொல்கிறார்:

  One History lesson to Deviar Illam,

  இன்று இத்தனை உரக்க பேசுவதே காந்தி மாதிரி தியாகவாதிகள் போட்ட பிச்சை. இல்லாவிட்டால் நமது தாய் தந்தையர் எவரோ ஒரு ஆங்கிலேயருக்கும் துப்பரவு வேலை செய்து கொண்டுருப்பார்கள்.

  After the second world war, neary 90 countries were born. India was one among them. Beginning of 20th centuary, democracy, change in political systems around the world were all the reason for ending the colonisation. So thinking that one person has freed us shows that how feudalistic and hero worshipping premitive community we are…Read books from Ambethkar, Netaji and Periyar to know about THE GANDHI.

  I would prefer my parents to work for a “democratic” white guys than being slave for “Hindutuva Brahminical” fanatics…

 • nerkuppai.thumbi சொல்கிறார்:

  Jothiji, Deviyar Illam, Tiruppur said:
  //ஆனால் குணம் நாடி குற்றமும் நாடி என்று பார்த்தால் இன்று இத்தனை உரக்க பேசுவதே காந்தி மாதிரி தியாகவாதிகள் போட்ட பிச்சை. இல்லாவிட்டால் நமது தாய் தந்தையர் எவரோ ஒரு ஆங்கிலேயருக்கும் துப்பரவு வேலை செய்து கொண்டுருப்பார்கள்.

  Dhivagar said:
  ..//So thinking that one person has freed us shows that how feudalistic and hero worshipping premitive community we are…Read books from Ambethkar, Netaji and Periyar to know about THE GANDHI.
  I would prefer my parents to work for a “democratic” white guys than being slave for “Hindutuva Brahminical” fanatics…//

  Where is the ‘hindutva”brahminical’ ‘fanatic’ in the news of the death of YSR, and Dr Kalaignar announcing a holiday or the comment by Jothiji?

 • tamizhanban சொல்கிறார்:

  வணக்கம் ஜோதி!

  உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. எனது பதிவுகள் வெறும் எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் காரணமாக அமைவதில்லை. நானும் உங்களைப்போலே கலகலப்பான இளைஞன்தான். எல்லாவற்றையும் நேர்மறையாகவே பார்த்து எழுதுகிறீர்கள் அதுபோலே நான் எழுதுவதில்லை. எனக்கு உங்களின் கருத்து சரியில்லை என்று தோன்றினால் நேரிடையாக சொல்லிவிடுவேன் நீங்கள் வருத்தப்படுவீர்களே என்றெல்லாம் பார்க்க மாட்டேன்.

  நமது கருத்துக்களை பிறருக்காக நாம் ஏன் சமரசம் செய்ய வேண்டும் என்பேன். ஈழத்தில் நடந்த படுகொலைகளை நாம் கண்டும் காணாமல் செல்ல நாமொன்றும் அரசியல்வாதிகள் அல்ல அல்லவா? இனத்துரோகிகள் செய்த பிழையை குறைந்த பட்சம் நமது வலைப்பூவிலாவது பதிவு செய்வோம் என்றே பதிகிறேன்.

  காந்தி இல்லையென்றால் நம் பெற்றோர்கள் வெள்ளையனிடம் வேலை செய்வார்கள் என்கிறீர்கள்? உலகில் இன்று எத்தனை நாடுகளை இங்கிலாந்து ஆளுகிறது? நாற்பதுகோடி மக்களை நாற்பதாயிரம்பேர்களின் காலில் மண்டியிடு என்பதுதான் தியாகமா?

  நீங்கள் சொல்வது போலே வெள்ளையனிடம் இருந்து காந்தியார் சுதந்திரம் பெற்றார் என்பது எவ்வளவு உண்மையோ அதுபோல்தான் சீனர்கள் படையெடுத்தபொழுது நேதாஜியின் இந்தியதேசிய ராணுவம் தடுத்து நிறுத்தியது.

  நாளைய பாரதத்திற்கு ராணுவம் தேவை என்ற தீர்க்கதரிசனம் நேதாஜியிடம் இருந்தது. அந்த ராணுவம் இல்லையென்றால் நீங்களும் நானும் சீனனுக்கு அடிமைதான். எண்ணிக்கையில் நாற்பதாயிரம் இருந்த வெள்ளையனை எதிர்க்க முடியாத நாம் சீனனை எதிர்த்து இருக்க முடியுமா? அதனால்தான் நேதாஜியை இளைஞர்கள் கொண்டாடுகிறார்கள். காந்தியின் காங்கிரஸ் நேதாஜிக்கு வழங்கியது தீவிரவாதி பட்டம். காந்தி என்ற கிழவன் பகத் சிங் நேதாஜி போன்ற இளைஞர்களின் தியாகத்தை வெளியே தெரியவிடாமல் செய்துவிட்டான் என்பதே உண்மை.

  தொடர்ந்து விவாதிப்போம்!

  நட்புடன்
  தமிழன்பன்

 • dhivagar சொல்கிறார்:

  To nerkuppai.thumbi

  It is a response to the statements made by “Deviar Illam’ (‘Tamil Text’ you have highlighted it in your question)…Nothing to do with the actual article. Thanks.

 • sundar சொல்கிறார்:

  Vidunga Boss

  Intha congress pannadainga Eppavume ippadithan

  Maanangettavanunga

 • வேறு வழியே இல்லாமல் என்னுடைய பதிலே பல பேர்கள் ஏறிய பல்லாக்கு போல் ஆகி விட்ட ஆச்சரியத்துடன் மீண்டும் ஒரு முறை என்னுடைய கருத்துக்கள்.

  1. இன்று சமூகத்தில் ஓடுக்கப்பட்டவர்களாக வாழ்ந்து கொண்டுருக்கும் அனைத்து இனமும் எல்லாமே இங்கிருந்த வர்ணாசிரம முறை வேறுபாடுகள் மட்டும் தான் காரணம் என்றும் அதை முன்னெடுத்துச் சென்ற காந்தியும் ஒரு காரணம் என்ற கோபமும் எனக்குப் புரிகின்றது.

  (கருத்து) உங்கள் சிந்தனைகளில் வரும் இன்று ஒடுக்கப்பட்டவர்களுக்காக பாடுபட்டுக்கொண்டுருக்கும் அனைத்து தலைவர்களையும் வேண்டாம் தமிழ்நாட்டு தலைவர்களையும் உங்கள் நினைவுக்கு கொண்டு வாருங்கள். அத்தனை அவர்களின் அந்தரங்களையும் படித்த வரையிலும் பார்த்த வரையிலும் யோசித்தப் பாருங்கள்.

  இவர்கள் சரியானவரா? தவறானவரா? இவர்கள் உண்மையிலே வழிகாட்டக்கூடிய இடத்தில் இருக்க தகுதியானவர்களா?

  2. ஓடுக்கப்பட்ட இனத்தில் பிறந்தவன். மிகுந்த ஏழை. ஆனால் படிப்பில் படி சுட்டி. மேற்கொண்டு மேல்படிப்புக்குச் செல்ல வழியில்லாமல் திருப்பூர் போன்ற தொழில் நகரங்களை நோக்கிச் சென்று கொண்டுருக்கும் அத்தனை இளைஞர்களையும் உங்கள் மனதில் இருத்துங்கள்.

  (கருத்து) உங்கள் நினைவில் உள்ள அத்தனை ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும், நிர்வாகப் பொறுப்பில் உள்ள அத்தனை அதிகார வர்க்கத்தினையும் நீங்கள் பார்த்தவரையில் நினைத்துப் பாருங்கள். இன்று வரையிலும் சம்பளம் தவிர்த்து பெறக்கூடிய வருமானம் மூலம் பெற்ற சுகங்களையும் வாழ்ந்து கொண்டுருக்கும் சொத்துக்களையும் கணக்கில் கொள்ளுங்கள்.

  3. நன்றாக நினைவில் கொள்ளுங்கள். ஓடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், தலித் இன்னும் எத்தனையோ வகைகளை வகைப்படுத்திக்கொள்ளுங்கள். வசதியிருந்தால் வௌியிட்டுருக்கும் பட்டியலை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

  (கருத்து) மாதம் ஒரு லட்சம் ரூபாய் மட்டும் தனியாக வருமானம் பெற்று வாழ்ந்து கொண்டுருக்கும் எத்தனையோ அதிகாரிகளை நான் சந்தித்தவன். அவர்களின் பினாமி தொழிற் கூடங்களை பார்த்தவன்.

  ஒவ்வொரு அதிகாரியும் பத்து மாணவர்களை படிக்க வைத்தே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டால்?

  4. அரசாங்கம் கொடுத்த அத்தனை சலுகைகளையும் அனுபவித்து மேலே வந்தவுடன் இவர்களுக்கு ஏன் தனக்கு பின்னால் தன்னைப் போலவே பின்னால் வந்து கொண்டுருப்பவர்களை பார்க்க மாட்டேன் என்கிறாாகள்?

  5. இன்று வரையிலும் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்துருக்கும் இன பேதங்களை களைவதற்கு உண்மையான முயற்சிகளை அரசியலுக்கு அப்பாற்பட்டு தனிப்பட்ட முறையில் நல்ல பங்களிப்புகளை ஏன் தரக்கூடிய தலைவர்கள் வருவதில்லை?

  6. உண்மையான உத்தமமான ஐ.ஏ.எஸ் அதிகாரி உமாசங்கர் கூட கூட்டத்தில் வாயிலாக முழங்கி தன்னை சுருக்கிக்கொள்வது ஏன்?

  7. நல்ல ஆத்மார்த்மான சிந்தனை படைத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவகாமி போன்றவர்களைக்கூட இதே மக்கள் ஆதரிக்காமல் தோற்கும் நபர்களுக்கு போட மாட்டோம் என்று வாழ்க்கை முழுவதும் தோற்றுக்கொண்டே இருப்பது ஏன்?

  8. உங்கள் பார்வையில் காந்தி கெட்டவராகவே இருக்கட்டும். அம்பேத்கார் சிறப்பானவராகவே இருக்கட்டும். அதுவா இப்போது முக்கியம்.

  9. மேற்கொண்டு படிப்பதற்கு விரும்பி அழைத்த பல்கலைக்கழகம் ஒரு பக்கம். ஆனால் படித்ததற்கு உதவி வாங்கியதற்கு வந்து ஊழியம் பண்ண வேண்டும் என்று அழைத்த மன்னர் ஒரு பக்கம். என்று தவித்த அம்பேத்கார் வேறு வழியே இல்லாமல் இந்தியா திரும்பி வந்தாலும் பழித்தவர்கள் அனைவரும் வியந்து பார்க்கக்கூடிய இடத்துக்கு வந்து நின்றாரே?

  10. பழித்துப் பேசுபவர்களும், ஓடுக்க நினைப்பவர்களும் மத்தியில் அரசாங்கம் கொடுத்த அத்தனை சலுகைகளையும் அனுபவித்து அட்டசாகமாக வௌியே வந்து சாதித்த கூட்டம் எத்தனை பேர்கள் என்று சொல்ல முடியுமா? பத்து என்று சொல்லாதீர்கள். வாழ்ந்தே இவர்கள் முன்னால் காட்டவேண்டும் என்று அனைவருமே முத்தாய் தானே முழங்கிக் கொண்டு வௌியே வரவேண்டுமே?

  வாழ்ந்து காட்டுவதை விட சிறந்த பழிவாங்குதல் வேறு ஏதும் உண்டா?

  காரணம் அன்று இல்லாத அத்தனை சிறப்பான வசதிகளும் இன்று இருக்கிறது.

  ஆனால் உபயோகப்படுத்திக்கொள்ளும் சதவிகிதம் தான் வருடத்திற்கு வருடம் குறைந்து கொண்டே வருவதை நினைத்து ஆதங்கத்தில் இந்த பதில்.

  ஆண்டவர்கள், ஆள்பவர்கள், ஓடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், ஒழிந்து போ என்று தூற்றுபவர்கள் அத்தனை பேரையும் மறந்து விடுங்கள்.

  உங்கள் உள்ளத்தில் உள்ள உன்னதமான லட்சிய வேட்கையை குறைவாக மதிப்பீட எவரால் முடியும்? யாரால் தடுக்க முடியும்?

  சர்ச் பார்க் கான்வெண்டில் படித்து பெறமுடியாத சாதனையை கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன் விற்று அன்றாடம் வயிற்றுப் பாட்டுக்கே பாட்டு பாடிக்கொண்டுருக்கும் குடும்பத்தில் பிறந்த மாணவன் பெற்ற 494 (என்று நிணைக்கின்றேன்) இதை விடவா வேறு சிறந்த பழிவாங்கல் இருக்க முடியும்.

  ஓடுக்கப்பட்ட குடும்பத்தில் பிறந்தாலும் மதிப்பெண் வாங்கிய மாணவன் படைத்த சாதனை இது வென்றால் மாற்று மதம் மனம் கொண்ட ஆசிரியர்கள் சொன்ன விசயத்தையும் நினைத்துப்பாருங்கள்.

  “இவரிடம் மட்டும் தான் மீன் வாங்குவோம். இவருக்காக அல்ல. இந்த வருமானம் அந்தப் பையன் படிப்பதற்கு உதவுமே ”

  நல்லவர்களும் நாதரிகளும் இருப்பதால் தான் தீதும் நன்றும் பிறர் தர வரா?

  பகிர்ந்து கொண்ட அணைத்து நண்பர்களுக்கும் என்னுடைய வணக்கம்.

  நட்புடன்

  தேவியர் இல்லம். திருப்பூர்.

  texlords@aol.in

  http://texlords.wordpress.com

 • கவுதமன் சொல்கிறார்:

  காந்தி பற்றி தோழர் ஜோதிஅவர்களின் வரிகளுக்கு உங்களின் பதில் சிறப்பாக இருந்தது. பொதுவாக காந்தி என்ற மனிதன் மிகமிக சிறப்புக்குரிய மனிதர் தான், ஆனால் காந்தி என்ற காங்கிரசுக்காரர் விமர்சணத்திற்குட்பட்டவர் தான். காந்தியை இன்னும் ஆழமாகவும்,அகலமாகவும் தெரிந்துகொள்ள வேண்டுமெனில் 1925 லிருந்து1947 வரைக்குமான குடிஅரசு களில் உள்ள தந்தைபெரியாரின் எழுத்துக்களையும், பேச்சுக்களையும் அவசியம் படிக்க வேண்டும். படித்தால் தான் தெரியும் எதுவும், யாரும் இன்னமும் மாறவில்லை என்பதும், இது இப்படித்தான் ஆகும் என்பதை பெரியார் எப்படி உறுதியாகச் சொல்லியுள்ளார் என்பதும் புரியும்.

 • tamizhanban சொல்கிறார்:

  தோழர்கள் கவுதமன் திவாகர் கருத்துக்களுக்கு நன்றி.

  தோழர் ஜோதிஜிக்கு!

  மிகவும் ஆழமான அழுத்தமான உங்கள் பின்னூட்டம் கண்டேன். நீங்கள் சொல்லும் காரணங்களை ஒரே வரியில் சொல்வதென்றால் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்து சலுகைகள் பெற்று நல்லநிலைக்கு வந்தவர்கள் தங்கள் சமூகத்தை திரும்பிபார்ப்பதில்லை என்பதே உங்கள் கேள்வி இல்லையா?

  பெரியார் ஒருமுறை சொன்னார் “தாழ்த்தப்பட்ட ஒருவன் கலெக்டர் ஆனால் அவனும் கலெக்டர் சாதி ஆகிவிடுகிறான்” என்று. உண்மைதான் இப்பொழுது நல்லவசதி வாய்ப்பில் உள்ள பலர் தங்கள் சமூகத்தின் மீதான அக்கறை அற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை நானும் அறிவேன். ஆனால் இந்த இடஒதுக்கீட்டு வசதிகள் சேரியில் இருந்து இன்னும் சிலரை நம்பிக்கையுடன் வெளியே வரச்செய்யும் அல்லவா?

  இன்னும் சாதியம் ஒழியாமல் இருப்பதற்கு ஆதிக்க வெறியும் அதனை போதித்த மனுதர்மமும் அதனை பிடித்து தொங்கும் பார்ப்பனிய மற்றும் ஆதிக்க வெறியர்களுமே காரணம்.

  பகத்-சிங் எழுதுகிறார் “எங்கோ இருந்து ஆங்கிலேயன் வந்து நம் மக்களை அடிமை செய்தால் கோவம் வந்து போராடுகிறோம், ஆனால் இதே தேசத்தில் சக மனிதனை சாதியின் பெயரால் அடக்கி அடிமையிலும் கீழாக நடத்தினால் அதை வேதங்களின் பெயரில் சரி என்கிறோமே? சகமனிதனின் சுதந்திரத்தை பத்தி சிந்திக்க முடியாதவர்கள் எப்படி தேசத்தின் சுதந்திரத்தை கட்ட முடியும்?” என்று.

  இதுதான் நடந்தது காந்தி விடயத்தில். காந்தி சூட்டிய ‘ஹரிஜனர்’ பட்டம் பத்திதனியாக பதிவு இடலாம் என்று இருக்கிறேன். “தீண்டாமை ஒரு பாவச்செயல்” என்று மகாத்மா சொன்னாது மதுபுட்டியின் மீது “குடி நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு”ன்னு எழுதுறாங்களே அதுபோலத்தான். சும்மா வெத்து விளம்பரம்.

  நட்புடன்
  தமிழன்பன்

 • NithiChelam சொல்கிறார்:

  தமிழன்பன் நீங்க கேட்டக குடாது கேள்வி எல்லாம் கேக்குறிங்க…..
  அப்பறம் இது திராவிட போர் என்று அறிக்கை விடுவர்

 • ச பிரபாகர் சொல்கிறார்:

  நல்ல ஒரு பின்னூட்ட விவாதம் . நான் என்னுடைய எண்ணம் என்னவென்றால் அவர் பிரபாகரன் மரணத்துக்கு இரங்கல் கவிதை எழுதாதே பெரிய விஷயம் என்கிறேன். அவரு ரெட்டியப் பார்த்து என்ன என்ன திட்டம் கொண்டு வந்திருக்காருன்னு ஒரு பட்டியல் போட்டால் அவர் ஏன் லீவ் விட்டார்னு புரியும். ஒன்னே ஒண்ணுங்க ரெட்டியப் பத்தி சொல்லனும்னா அதுவும் இன்றைய தெலுங்கான பிரச்சனை இருக்கற நிலையில் அவர் இழப்பு பெரிசுதான். ஆனால் அதுக்காக லீவ் விட்டு என்ன செய்யப்போறாங்கன்னு யாராவது சொல்ல முடியுமா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

What’s this?

You are currently reading தமிழ்நாடு மட்டுமே திராவிடநாடு!அல்லது இதுதாண்டா திராவிட நாடு ! at தமிழன்பன் பக்கம்.

meta

%d bloggers like this: