அம்பேத்காரே மன்னிக்க மாட்டார்! நீதியரசர்களே இது நியாயம் தானா?

செப்ரெம்பர் 4, 2009 § 4 பின்னூட்டங்கள்


judge

இலங்கையில் நடக்கும் முத்தரப்பு கிரிக்கெட்டுக்கு இந்தியஅணியை அனுப்ப கூடாதென்று மதுரை உயர்நீதிமன்றகிளையில் பல்வேறு வழக்கறிஞர்கள் இணைந்து வழக்கு தொடுத்தனர். யுத்தம் முடிந்து மூன்று மாதமாகியும் சர்வதேசஊடகங்கள் மற்றும் தொண்டுநிறுவனங்களை அனுமதிக்காத இலங்கையில் இந்தியகிரிக்கெட்டுஅணி விளையாடுவது சரியல்ல என்பது வழகறிஞர்கள்வாதம். வழக்குதொடுத்ததோடு வழக்குவிபரத்தை தொலைநகல்(பேக்ஸ்) மூலம் கிரிக்கெட்டுவாரியம் மற்றும் நடுவண்அரசிற்கும் அனுப்பி வைத்துள்ளனர் .

வழக்கு விபரத்தை தொலைநகலில் அனுப்பியதை ஏற்க சட்டத்தில் இடமில்லை என்று நீதிபதிகள் 6 வாரத்திற்கு வழக்கை தள்ளிவைத்துள்ளனர். ‘சிவில்’ வழக்குகளில் தொலைநகல் அனுப்பவது நடைமுறையில் உள்ளது என்ற வாதம் ஏற்றுகொள்ளப்படவில்லை. வழக்கை ஆறுமாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர் நீதிபதிகள்.

வரும் எட்டாம்(செப் 8)தேதியில் போட்டிகள் துவங்குகின்றன. அடுத்த ஆறுவாரத்திற்கு அப்புறம் வழக்கை விசாரித்து என்ன செய்வது? நமக்கு ‘சட்டநுனுக்கம்’ எல்லாம் தெரியாதுங்க. ‘தொலைநகல்’ என்பது  சட்டம் இயற்றிய நாட்களில் இல்லை அதனால் அதுபத்தி சட்டபுத்தகத்தில் எழுதாமல் இருக்கலாம். அன்று தபால்மூலம் அனுப்புவது நடைமுறையில் இருந்ததால் இன்னும் அப்படியே கடைபிடிக்கவேண்டுமா என்ன?

தாமதமாக வழக்கப்படும் நீதி கூட அநீதிதான் என்று படித்து இருக்கிறோம்.நீதிமன்றம் என்றாலே வழக்கை இழுத்து இழுத்து வழக்கு தொடுத்தவர்களை அலைக்கழிக்கும் ஒன்று என்பது பரவலான ஒரு கருத்து. இன்னும் நான்கு வாரத்திற்குள் இவர்கள் சுட்டி காட்டிய முத்தரப்பு கிரிக்கெட்டு முடிந்துவிடும். அதற்க்கு பின்னர் வழக்கை விசாரிப்பது கேலிகூத்தாக இருக்கும் அல்லவா? ஒருவேளை இந்தியஅணி இலங்கை செல்லக்கூடாது என்று நீங்கள் தீர்ப்பு அளித்தால் அந்த தீர்ப்பினால் யாருக்கு என்ன பயன்?. அதற்க்கு நீங்கள் வழக்கை தள்ளுபடிசெய்து இருந்தால்கூட மரியாதையாக இருந்து இருக்கும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எழுதிய சட்டமேதை அம்பேத்கார் இன்று இருந்தால் இன்றைய நீதிபடும்பாட்டை பார்த்து கண்டிப்பாக கண்ணீர் வடித்து இருப்பார்.
cry
இந்திய கிரிக்கெட்டு அணியை தடுத்து நிறுத்தவேண்டும் என்று நான் சொல்லவில்லை. உணர்வுள்ள தமிழனாக இந்த போட்டிகளை பார்ப்பதை கைவிட்டு வெகுநாட்கள் ஆகிறது.உண்மையில் உணர்வுள்ள தமிழர்கள் இலங்கையோடு விளையாடும் அணிகளை புறக்கணிக்கட்டும் என்பதே எனது கருத்து. வழக்கறிஞர்கள் முயற்சி என்பது வெறும் கிரிக்கெட்டு அணியை தடுப்பது அன்று இலங்கையின் இனவெறியை இதன்மூலம் விவாதிக்க வழிகிடைக்கும் என்பதாலே இந்த வழக்கு.

வழக்கம் போலவே தமிழர்களுக்காக தொடுத்த வழக்கில் ‘ஓட்டை’ கண்டுபிடித்து நம்மை ஓரங்கட்டிவிட்டார்கள். உங்கள் தீர்ப்பை விமர்சனம் செய்பவனாக அல்ல அண்ணல் அம்பேத்கார் எழுதிய சட்டத்தின்பால் நம்பிக்கை உள்ளவனாக சொல்லுகிறேன் கொஞ்சம் மாந்தநேயத்துடனும் திறந்த உள்ளத்துடனும் சிந்தியுங்கள் நீதி அரசர்களே! நீங்கள் செய்வது சரிதானா?

Advertisements

Tagged:

§ 4 Responses to அம்பேத்காரே மன்னிக்க மாட்டார்! நீதியரசர்களே இது நியாயம் தானா?

 • ulavu சொல்கிறார்:

  புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
  தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
  http://www.ulavu.com
  (ஓட்டுபட்டை வசதிஉடன் )
  உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

  இவண்
  உலவு.காம்

 • Satheesh சொல்கிறார்:

  //இன்னும் நான்கு வாரத்திற்குள் இவர்கள் சுட்டி காட்டிய முத்தரப்பு கிரிக்கெட்டு முடிந்துவிடும். அதற்க்கு பின்னர் வழக்கை விசாரிப்பது கேலிகூத்தாக இருக்கும் அல்லவா? ஒருவேளை இந்தியஅணி இலங்கை செல்லக்கூடாது என்று நீங்கள் தீர்ப்பு அளித்தால் அந்த தீர்ப்பினால் யாருக்கு என்ன பயன்?.//

  முதலில் சில அடிப்படை விஷயங்களை தெரிந்துகொள்ளுங்கள் தமிழன்பன்:

  கிரிக்கட்டை கண்டிப்பாக பார்க்கவேண்டும் என்று யாரையும் யாரும் கட்டாயப்படுத்தவில்லை… பிடிக்கவில்லை என்றால் யார் வேண்டுமானாலும் பார்க்காமல் புறக்கணிக்கலாம்.

  விளையாட்டு என்பதை விளையாட்டாக மட்டுமே பார்ப்பது நல்லது.. இல்லையென்றால் பாகிஸ்தானுடன் நாம் விளையாடுவது கூட சில சிறுமதியாளர்களால் குறை சொல்லப்பட்டுவிடக்கூடும்

  எந்த நீதிமன்றமும் இது போன்ற அடிப்படை அற்ற விஷயத்துக்காக கிரிக்கெட்டுக்கு தடை போடாது… அது நீங்கள் நம்பிக்கை வைத்து இருக்கும் நீதி புத்தகமே சொல்லும்.

  நீங்கள் மன்னிக்கமாட்டார் என்று கூறும் அம்பேத்கர், சட்டம் பொதுவானது, அது இனம், மொழி, பால் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது என்று சொல்லி இருக்கிறார்.. எனவே தமிழன் என்று சொல்லி வழக்கு தொடர்ந்ததர்காகவே சட்டம் உங்களுக்கு சலாம் போட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

  விளம்பர வெளிச்சத்துக்காகவும் வெற்று பரபரப்புக்காகவும் யாரோ என்னவோ செய்துவிட்டு போகட்டும்… நீங்கள் படித்தவர்… அதற்கு துணை நின்று உங்களை நீங்களே கேலி செய்துகொள்ளவேண்டாம்…

  நட்புடன் – சதீஷ்!!

 • tamizhanban சொல்கிறார்:

  சதீஷ் அவர்களே!

  அம்பேத்கார் எழுதிய சட்டம் தமிழனுக்கு வக்காலத்து வாக்கனும்னா நான் எழுதி இருக்கேன்? எவன் வழக்கு தொடுத்தாலும் போட்டி முடிஞ்ச பின்னாடி விசாரிக்கலாம்கிற “யாருமே இல்லாத கடையில் யாருக்குய்யா டீ ஆத்துரீங்கன்னுதானே கேட்டேன்” .

  விளையாட்டை விளையாட்டாக பார்க்கணும்னா ஜிம்பாவே தென் ஆப்பிரிக்கா மேல எல்லாம் எதுக்கு இனவெறி குற்றசாட்டை வைத்து விளையாடவிடாம பண்ணினாங்கன்னு கேட்டு சொல்ல முடியுமா?

  சிங்கள அரசு செய்த இனப்படுகொலையை நிருபிக்க அவருக்கு வாய்ப்பு கொடுக்காமலே செய்வது என்ன நீதி?

  ஒரு இனமே அழித்து ஒழிக்கப்பட்டு முள்வேலி கம்பிக்குள் முடங்கிகிடக்கும் பொழுது அதனை கண்டித்து வழக்கு தொடர்வது விளம்பரம் தேடுவதா?

  சினேகா செருப்போடு கிரிவலம் வந்தார்னு வழக்கு போட்டால்தான் சமூக அக்கறையா?

 • NithiChelam சொல்கிறார்:

  நண்பர் தமிழன்பன் கருத்து ஏற்கத்தக்கது…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

What’s this?

You are currently reading அம்பேத்காரே மன்னிக்க மாட்டார்! நீதியரசர்களே இது நியாயம் தானா? at தமிழன்பன் பக்கம்.

meta

%d bloggers like this: