தமிழ்நாட்டு ஊடகங்கள் யாருக்காக இயங்குகின்றன?

செப்ரெம்பர் 9, 2009 § 10 பின்னூட்டங்கள்


தமிழ்நாட்டு ஊடகங்கள் யாருக்காக இயங்குகின்றன?

aljazeera
அல்ஜசீரா தொலைக்காட்சியானது இலங்கையின் தடுப்புமுகாம்களின் கோரத்தை உலகிற்கு சொல்லி இருக்கிறது. சிலநாட்களுக்கு முன்னர் “சேனல்-4” என்ற தொலைக்காட்சி இலங்கையில் அப்பாவி பொதுமக்களை கண்ணை கட்டி சுட்டு வீழ்த்தும் கொலைகாட்சியை வெளியிட்டது. இந்த இரண்டு செய்தியும் இலங்கையில் நடக்கும் மனிதபேரவலத்தை உலகிற்கு காட்ட அந்தந்த ஊடகங்கள் ஆற்றிய ஊடகவியல் கடமையை நமக்கு காட்டுகிறது. வடஇந்திய ஊடகங்கள் வழமைபோலவே இந்த செய்திகளை பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டன.தமிழகத்தில் செய்திதாள்கள்,தொலைக்காட்சி என்று எத்தனையோ ஊடகங்கள் உண்டு. உலக நடப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பத்திரிக்கைகளில் முற்போக்கு எழுத்தாளர்கள் அறிவுஜீவிகள் என்று பலபேர் பக்கங்களை நிரப்பி கொண்டிருக்கின்றனர். தொலைக்காட்சி ஊடகங்களில் “சமூக அவலங்களை தோலுரிக்க” கருத்து மோதல் நிகழ்ச்சிகளும் புலனாய்வு என்ற பெயரில் தங்கள் சாகசத்தால் கண்டறிந்த உண்மைகளை மக்களுக்கு சொல்லி வருகின்றன. இப்படி பொறுப்புள்ளதாக காட்டி கொள்ளும் தமிழ்நாட்டு ஊடகங்கள்  “மக்கள் தொலைக்காட்சி” தவிர மேற்கூறிய இருநிகழ்சிகள் பற்றி பெரிதாய் அலட்டி கொள்ளவில்லை சில இருட்டடிப்பு செய்து பிற செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளன.

பொதுவாகவே ‘தினமலர்’ பத்திரிகை சிங்களவனின் ஊதுகுழலாகவே எப்போது இருந்து வந்திருக்கிறது என்பது நாமறிந்த உண்மை. யுத்த காலத்தில் கூட தமிழர்களை கொல்வது புலிகளே என்று தொடர்ந்து எழுதி வந்தது.கே.பி கைதை கொண்டாடிய தினமலர் ஆதாரத்தோடு வெளியிடப்பட்ட இந்த செய்திகளை தினமலரின் “ஊடக தர்மத்தின்படி” கண்டும்காணாமல் விட்டிருக்கிறது.

gnani-sankaran
தமிழகத்தின் “இதயத்துடிப்பு” என்று மார்தட்டும் பத்திரிகையில், தன்னைவிட்டால் தமிழ்நாட்டில் எழுதிதள்ள யாருமில்லை என்று “சமூக” அக்கறையோடு “ஒ” போடும் முற்போக்கு ஞானியோ அப்பாவி தமிழர்களை நிர்வாணமாக்கி கண்ணைகட்டி சுட்டுதள்ளிய கொடுஞ்செயல் நடந்தவேளையிலே “நொந்தசாமியான கந்தசாமி “ திரைப்பட குழுவிற்கு ஆலோசனை வழங்கி கொண்டிருக்கிறார். திருமதி Vrs சிறுபான்மைஅரசு “குடுமிபிடி” சண்டை பத்தி விலாவரியாக அலசி ஆராய்ந்த விகடனாரோ சேனல் 4 செய்திகளை ‘துண்டு செய்தி’களாக பிரசரித்துள்ளது. பிராபாகரன் எப்படி பிடிபட்டார், எப்படி கொல்லப்பட்டார் என்று புலனாய்வு கதைகளை அவிழ்த்துவிட்ட விகடன் குழுமமோ துண்டு செய்தியோடு தனது கடமை முடிந்துவிட்டதாக நினைத்து கொண்டது போலும்.
suntv-mar-14-2008

உடனே நம்மாளுக “அவைகள் எல்லாம் பார்ப்பன ஊடகங்கள் தோழர்! தமிழனுக்கென்று ஒரு ஊடகம் இல்லையே?” என்று வருந்திகொள்வார்கள். அப்படியே “தமிழர்கள்” நடத்தும் ஊடகங்களை பார்த்தோமானால் அதுக்கு பார்ப்பானே பரவாயில்லை என்று தோணும். இப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெறவேயில்லை என்று சூடம் அடித்து சத்தியம் பண்ணியானாலும் பண்ணுவார்கள கருணாநிதி குடும்ப ஊடகங்களை சேர்ந்தவர்கள். சூரிய மற்றும் கலைஞர் தொலைக்காட்சி ஊடகங்களை பொறுத்தவரை கருணாநிதி “சும்மாச்சுக்கும்” உண்ணாவிரதம் இருந்தநாளோடு ஈழத்தின் போர் நின்று சூமுகநிலை வந்துவிட்டது. ஜெயாதொலைக்காட்சி செய்திநேரங்களில் வளர்மதி போன்ற அம்மாவிசுவாசிகள் கருணாநிதியின் குடும்பத்தாரை சந்திக்கு இழுக்கும் சொல்லாடல்களை மட்டுமே ஒளிபரப்புகிறது. இதுல காங்கிரசும் தன் பங்கிற்கு இரண்டு தொலைகாட்சி ஊடகங்களை வைச்சி இருட்டடிப்பு செய்து கொண்டிருக்கிறது

marks
தாங்கள் எழுதுவதெல்லாம் “இலக்கியம்” இதில் பின்நவினத்துவம் முன்நவினத்துவம் முக்கால் நவினத்துவம் என்று எழுதித்தள்ளும் ஒரு அறிவுஜீவி கும்பலும் இவர்களுள் அடக்கம். இதில் முக்கியமானது மார்க்சு குழுவினர். சோபாசக்தி, சுகன் போன்ற இலக்கியபோலிகளின் உதவிகளோடு தொடர்ந்து சிங்களநாதம் இசைத்து கொண்டிருக்கின்றார் மார்க்சு . சிங்கள பத்திரிக்கையாளர் லசந்தாவை கொலை செய்தது ஏன் புலிகளாக இருக்க கூடாது? என்று கேட்கும் அளவிற்கு சுகன் சிங்களஅடிவருடியாக இருக்கிறார். சிங்கள இனவாதபோரே வெள்ளாளர்க்கும் சிங்களவருக்கும் இடையிலானது என்று கும்மி அடிப்பதே இவர்களின் முழுநேர வேலையாக இருக்கிறது. புலிகளை விமர்சிக்கிறோம் என்ற பேரில் இவர்கள் ராசபக்சேவின் ஏவலர்களாக செயல்பட்டு கொண்டு இருக்கிறார்களே தவிர கம்பி வேலிக்குள் அடைபட்டு கிடக்கும் அப்பாவி மக்களை பற்றி அக்கறை கொண்டவர்களாக இல்லவேஇல்லை. “பேசாப்பொருளை பேசும்” மார்க்சுக்கும் சிங்கள இனவாதம் என்று வரும் பொழுது ஒரு பக்கமாக  கைகால்கள் இழுத்து கொள்கிறது போலும்.இணையத்தில் தங்கள் எண்ணங்களை பதியும் இணைய பதிவர்களில் கூட பெரும்பாலோனோர் “மொக்கையாக” ஒரு திரைப்படம் வந்தால் அதை விமர்சிக்க காட்டும் ஆர்வத்தில் சிறிதளவேனும் ஈழத்தில் நடக்கும் மனிதபேரவலம் குறித்து எழுதுவதில் காட்டமறுக்கின்றனர். இணையத்தில் எழுதுபவர்கள் கூட “அல்ஜசீரா தொலைக்காட்சியால் இலங்கைக்கு அடுத்த தலையிடி” என்று சிங்களன் பத்தி அபத்தமாக கவலை கொள்பவர்களாகவே இருக்கிறார்கள்.

090706aljazeera_3jpg

தமிழகத்தில் பல ஊடகங்கள் உண்டு அதில் தமிழர்கள் நடத்தும் ஊடகங்களும் உண்டு. இவையாவும் ஈழத்தில் துன்பமுறும் தமிழனின் நிலையை ‘தாண்டி’ செல்லவே விரும்புகின்றன அன்றி அது பத்தி ஆராய்ந்து எழுதிட ஆர்வம் இல்லாதவர்களாக இருக்கின்றனர். கள்ளதொடர்புகளையும் போலிசாமியார்களையும் காமம் சொட்ட சொட்ட அலசி ஆராய்ந்து எழுதும் இவர்களது நெஞ்சம் ஈழத்தை ‘அலச’ மறுக்கிறது. ஈழத்தமிழன் கண்கள் கட்டப்பட்டு நிர்வாணநிலையில் சுடப்பட்ட பொழுதும் அகதியான மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி விலங்கினும் கீழாக நடத்தப்பட்டபொழுதும் உலகின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஊடகங்கள் அதனை அம்பலப்படுத்தியபொழுதில் இவர்கள் அமைதிகாத்தார்கள். அவர்கள் அம்பலபடுத்திய செய்தியையாவது தமிழகமக்களுக்கு சொல்லவேண்டிய தார்மீக கடமையை ஆற்றாத தமிழ்நாட்டு ஊடகங்கள் யார் பக்கம் நிற்கின்றன? என்று நீங்களே முடிவெடுத்து கொள்ளுங்கள்.

Advertisements

Tagged:

§ 10 Responses to தமிழ்நாட்டு ஊடகங்கள் யாருக்காக இயங்குகின்றன?

 • ulavu சொல்கிறார்:

  புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
  தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
  http://www.ulavu.com
  (ஓட்டுபட்டை வசதிஉடன் )
  உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

  இவண்
  உலவு.காம்

 • ♠புதுவை சிவா♠ சொல்கிறார்:

  இது வருந்த தக்க செய்திதான்
  மேலும் இவர்கள் தங்கள் கொடுக்கும் தகவல்கள் தவறான முன் உதாரணமாக அமைந்து விட்டது.

  ஆழ்ந்த கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

 • ஆ.தமிழ்ச்சுடர் சொல்கிறார்:

  தமிழ் நாட்டில் தமிழர்கள் நடத்தும் செய்தி ஊடகங்களா…! அதுங்க கன்னித்தீவில் சாய்ந்து கிடக்கும் ஆண்டிப் பண்டாரங்களாச்சே!

 • மதிபாலா சொல்கிறார்:

  நியாயமான ஆதங்கம் தமிழன்பன்.

  ஆனால் காரணம் நாம்தான்.அவர்கள் எதைச் செய்தாலும் தமிழர்கள் செக்குமாடு மாதிரி ஆமாம் சாமி போட்டுக்கொண்டிருப்பதுதான் மிக முக்கிய காரணம்

 • vanathy சொல்கிறார்:

  உங்கள் ஆதங்கமே என் போன்ற பலரின் ஆதங்கமும்.
  ஆனாலும் நாம் என்னதான் சொன்னாலும் நிலைமை மாறப்போவதில்லை என்ற சலிப்பினால் இந்த விஷயங்கள் பற்றிப் பேசுவதையே தவிர்க்கத் தொடங்கிவிட்டோம்.
  இந்தத் தமிழ் ஊடகங்கங்கள் ,அறிவுஜீவிகள் ,ஜனநாயகவாதிகள் ஆகியோரோடு ஒப்பிடும்போது சில சிங்கள ஊடகத்துறையினர் நேர்மையாகவும் துணிச்சலோடும் பணி புரிகின்றனர்.இலங்கை அரசின் அடக்குமுறையில் பாதிக்கபடுவோம் என்று பலர் மௌனம் சாதித்தாலும் ஒரு சிலர் துணிவுடன் செயல்படுகின்றனர்
  இலங்கையில் உள்ள தமிழ் சிங்கள பத்திரிகையாளருக்கு உயிருக்கே உத்தரவாதமில்லை ,ஆனால் தமிழ்நாட்டு ஊடகங்கள் இலங்கை அரசின் அக்கிரம நடவடிக்கைகளை வெளியே காட்டக்கூடிய வாய்ப்பு இருந்தும் இப்படி நடந்து கொள்வது மிகவும் வருந்தத்தக்கது.
  –வானதி

 • ஆல் இன் ஆல் அழகுராஜா சொல்கிறார்:

  நமக்கான அரசியல் தலைமை சரியாக அமையாத வரை அரசை அண்டிப்பிழைக்கும் அம்சாவிடம் கவர் வாங்கும் பத்திரிக்கையாளர்களும் ஊடகங்களும் இருக்கவே செய்வார்கள்….இப்போது அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் ஒருவேளை சன் குழும கலைஞ்ர்குழும ஊடகங்கள் ஈழ பிரச்சனையை ”தெளிவாக”கையாண்டிருக்கும் அதுவே மற்ற ஊடகங்களுக்கும் அழுத்தத்தை தந்திருக்கும்.. கலைஞ்ரின் நரித்தனமே ஈழ மக்கள் அழிவுக்கும் சிங்களனின் வெற்றிக்கும் ஊடக அசிங்களுக்கும் காரணம்….

 • சி .நா.மணியன் சொல்கிறார்:

  நாம் தமிழன் என்று உடலில் பச்சை குத்தாமல் மூலையில் kuttik kolla வேண்டும்
  kandavanai எல்லாம் தமிழன் என்று enni emarum sinthanai mara vendum

 • vijay சொல்கிறார்:

  தமிழக பத்திரிகைகள் அரசியல் சார்ந்தே அவர்கள் போடும் பிச்சைக்காக ( அரசு விளம்பரங்கள்) நடந்து வருகின்றது. இதனால் அவர்களுக்கு அடுத்த பிச்சை எங்கே கிடைக்காமல் போய்விடுமோ என்ற கவலையே தவிர தமிழன் செத்தால் என்ன எவன் செத்தால் என்ன?

 • சுந்தரராஜன் சொல்கிறார்:

  தமிழ்நாட்டு ஊடகங்கள், அவற்றின் முதலாளிகளுக்காக மட்டுமே இயங்குகின்றன.

  இந்த நிலை மாறுவதற்கு மாற்று ஊடகங்கள் அதிகரிக்க வேண்டும். வணிக ஊடகங்களை விமரிசன கண்ணோட்டத்தோடு அணுகும் பயிற்சி அனைவருக்கும் தேவை. தவறிழைக்கும் ஊடகங்களை அம்பலப்படுத்தும் முயற்சிகள் தேவை.

  அதற்கான முதல்படியாக வலைபதிவுகளை பயன்படுத்த வேண்டும்.

 • சீ.பிரபாகரன் சொல்கிறார்:

  தமிழ்நாட்டில் இயங்கும் “மக்கள் தொலைக்காட்சி”, “தினமணி”, “தமிழ்ஓசை” போன்ற குறிப்பிட்ட ஒருசில ஊடகங்களை தவிர மற்ற அனைத்து ஊடங்களும் தமிழினத்திற்கு எதிரானவையே.

  ஊடகத்தின் பேயரில் அவர்கள் விபச்சாரமே செய்கிறார்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

What’s this?

You are currently reading தமிழ்நாட்டு ஊடகங்கள் யாருக்காக இயங்குகின்றன? at தமிழன்பன் பக்கம்.

meta

%d bloggers like this: