தமிழச்சியின் கண்ணீர் அல்லது தாமரையின் கருஞ்சாபம்!

செப்ரெம்பர் 11, 2009 § 10 பின்னூட்டங்கள்


தமிழச்சியின் கண்ணீர் அல்லது தாமரையின் கருஞ்சாபம்!

thamarai1

நமக்கு பொதுவா இந்த ‘கவிதை’களையே பிடிப்பதில்லை. தூய தமிழிலி ஒரு வரிக்கு மூன்று அல்லது நான்கு வார்த்தைகளை வைத்து எதையாவது எழுதினால் அது கவிதை என்னும் நம்பிக்கையில் நம்மவர்கள் இருக்கிறார்கள். காதல் கவிதைகள் எழுத முன்னெல்லாம் தெருவுக்கு ஒருத்தர் இருப்பார் இப்பொழுது வீட்டுக்கு ஒருத்தர் இருப்பார் போல. புதுகவிதைன்னு நம்மாளுக எழுதுவதில் பெரும்பாலும் ஒருதலை காதலில் காதலன் காதலியை அபத்தமாக புகழ்வதாகவே இருக்கும். இதில் திரை கவிஞர்கள் பத்தி சொல்லவேண்டியதே இல்லை. வைரமுத்து திரைபாடல்கள் பற்றி சொல்வார் “கவிதை மொழிக்கு ஆடை கட்டி விடுகிறது இசை சிறகுகள் கட்டி விடுகிறது” (திருத்தி எழுதிய தீர்ப்புகள் ) என்று . ஆனால் இன்றைய சூழலில் திரைப்பாடல்கள் மொழியை ஆடைகள் அவிழ்த்து அம்மணம் ஆக்குகிறது. மெட்டுக்கு பாட்டு என்றநிலை மாறி துட்டுக்கு பாட்டு என்று கண்டதை எழுதி தள்ளுகிறார்கள் . திரைப்பட பாடலாசிரியர்களில் தாமரை கொஞ்சம் மனதுக்கு ஆறுதல் தரும் படைப்பாளி. நல்ல தமிழ் சொற்களோடு அவர் எழுதும் பாடல்களை இசைதின்றுவிடுகிறது என்பது வருத்தத்திற்குரியது.

வெறும் திரைப்பாடலாசிரியராக மட்டும் இல்லாமல் சமூக அக்கறை உள்ள படைப்பாளியாக இருக்கிறார் தாமரை. ஈழத்தில் போரை நிறுத்தகோரி பாரதிராசா தலைமையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் தாமரை எரிமலையாக வெடித்தார். நேரடியாக “கலைஞர் அவர்களே ஜெயலலிதா அமாவாசை என்றால் நீங்கள் அதுக்கு அடுத்த நாள்!”] என்று துணிச்சலாக யாருக்கும் அஞ்சாமல் கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவின் துரோகத்தை தோலுரித்தார்.

தமிழகத்தில் வாழும் பல கலைஞர்களுக்கு தாமரையின் நேர்மையோ துணிச்சலோ இல்லை. தமிழன் என்று இனமுண்டு இந்தியன் என்று ஒரு இனமே இல்லை என்று தைரியமாக சொல்பவர் தாமரை. ஈழத்தில் எண்ணற்ற அப்பாவி தமிழ் மக்கள் கொண்டழிக்கப்பட்ட பொழுது எரிமலையான தாமரை “கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம்” என்ற கவிதையை வெளியிட்டார். சமீபத்தில் குமுதம் இணையதளம் நடத்திய நேர்காணலில் கவிதையை வாசித்து காண்பித்தார்

ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!

என்ற வரிகள் வாசிக்கும் பொழுது சகோதரியின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. மேலும் வாசிக்க முடியாமல் அழுத தாமரை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி கொண்டு மீண்டும் வாசித்தார். குழந்தையை பறிகொடுத்த தாயின் துயரம் இன்னொரு தாயுக்குத்தானே தெரியும். நேர்காணலின் இறுதியில் “நான் இந்தியன் என்பதைவிட தமிழச்சி என்பதை பெருமையாக கருதுகிறேன்” என்றார்.

மார்க்சின் இலக்கிய தாதா கும்பலை சேர்ந்த சுகன் இந்தியாவில் இருந்து கொண்டு தாமரை எப்படி இந்தியாவை எதிர்த்து கவி படலாம்? என்று வியக்கனம் செய்துள்ளார்கள். கலைக்காக மக்களே மக்களுக்காக கலை இல்லை என்று கருதும் இலக்கியபோலிகள் மத்தியில். தாமரையின் “கருஞ்சாபம்” கடுப்பை கிளப்பி இருக்கிறது. சமீபத்தில் நான் வாசித்த கவிதைகளிலேயே மிக அருமையான கவிதையாக இதனை கருதுகிறேன். இன்றைய தமிழ் திரையுலகம் ஆசியாவின் பணக்கார குடும்பத்தினரால் சூழப்பட்டு இருக்கிறது. இனி திரையில் தாமரை பாடல் வராமல் தடுக்க முயற்சிகள் நடக்கலாம். இங்கு எத்தனையோ கவிஞர்கள் இருந்தாலும் “தமிழச்சி” தாமரையின் கவிதைக்கு முன்னால் மண்டியிட்டு தங்களது கையாகாததனத்தை நொந்து கொள்வார்கள்.

thamarai
கவிஞர் தாமரையின் கண்ணீர் உங்களுக்காக!

கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!


ஏ இந்தியாவே…!எத்தனை கொடுமைகள்

செய்துவிட்டாய்
எங்கள் தமிழினத்திற்கு…
எத்தனை
வழிகளில்கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும்
தீர்ந்தாயிற்று…

எதுவுமே காதில் விழாத உங்களுக்கு
இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்…
பட்டினியால் சுருண்டு மடிந்த
பிஞ்சிக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து
அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
களைந்த கூந்தலோடும்
வயிரெரிந்து இதோ விடுகிறேன்..

கண்ணகி மண்ணில் இருந்து
ஒரு கருஞ்சாபம்!

குறள் நெறியில் வளர்ந்து
அறநெறியில் வாழ்ந்தவள்
அறம் பாடுகிறேன்!

தாயே என்றழைத்த வாயால்
பேயே என்றழைக்க வைத்துவிட்டாய்
இனி நீ வேறு, நான் வேறு!

ஏ இந்தியாவே!
ஆயுதம் கொடுத்து வேவு விமானம் அனுப்பி
குண்டுகளைக் குறிபார்த்துத்
தலையில் போடவைத்த உன்தலை
சுக்குநூறாய் சிதறட்டும்!

ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!

மழைமேகங்கள் மாற்றுப் பாதைகண்டு
மளமளவென்று கலையட்டும்!

ஒரு பிடி சோற்றுக்கு எங்களை ஓடவைத்தாய்
இனி உன் காடு கழனியெல்லாம் கருகிப்போகட்டும்!

தானியங்கள் எல்லாம் தவிட்டுக்குப்பைகளாய்
அறுவடையாகட்டும்!

மந்தைகளைப் போல் எம்மக்களை துரத்தினீர்கள்
உங்கள் மலைகள் எல்லாம்
எரிமலைக் குழம்புகளைக்
கக்கி சாம்பல் மேடாகட்டும்!

இரக்கமின்றி ரசாயனக் குண்டுவீசிய அரக்கர்களே…
உங்கள் ரத்தம் எல்லாம் சுண்டட்டும்!

உங்கள் சுவாசம் பட்டு சுற்றமெலலாம் கருகட்டும்!
எதிரிகள் சூழ்ந்து
உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!

தெருக்கள் எல்லாம் குண்டுவெடித்து
சிதறிய உடல்களோடு
சுடுகாடு மேடாகட்டும்!

போர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று
கூசாமல் பொய் சொன்ன வாய்களில்
புற்றுவைக்கட்டும்!

வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும்!
எங்கள் எலும்புக் கூடுகள் மீது
ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே…

உங்கள் சிம்மாசனம் வெடித்துத்
தூள்தூளாகட்டும்!
உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்……

பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!

நிர்வாணமாக எங்களை அலையவீட்டீர்களே…
உங்கள் தாய் தந்தையர் பைத்தியம் பிடித்து
ஆடையைக் கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!

எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி
சித்திரவதையில் சாகடித்தீர்களே…
உங்கள் தலையில் பெருமின்னல் பேரிடி இறங்கட்டும்!

எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த
சிங்களவன் மாளிகையில்விருந்து கும்மாளமிட்டவர்களே…
உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!

உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!

நரமாமிசம் புசித்தவர்களே…
உங்கள் நாடி நரம்பெல்லாம்
நசுங்கி வெளிவரட்டும்!

இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு
புல் பூண்டு முளைக்காமல் போகட்டும்…

ஆழிப்பேரலை
பொங்கியெழுந்து
அத்தனையும் கடல் கொண்டுபோகட்டும்!

நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!

நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!
நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்!
……….

பின்குறிப்பு:


உங்கள் குழந்தைகளை சபிக்கமாட்டேன்!
குழந்தைகள் எங்கிருந்தாலும்குழந்தைகளே…
அவர்கள் நீடுழி வாழட்டும்!

எம் குழந்தைகள் அழுதாலும்
உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!
உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!

(இந்த கவிதையை வாசிக்கும் பொழுது உங்கள் கண்ணில் கண்ணீர் துளிர்த்தால் நீங்கள்  உணர்வுள்ள தமிழரே!)
Advertisements

§ 10 Responses to தமிழச்சியின் கண்ணீர் அல்லது தாமரையின் கருஞ்சாபம்!

 • நாமக்கல் சிபி சொல்கிறார்:

  இது எப்பவோ வந்த கவிதையாச்சே!

  http://manamumninavum.blogspot.com/2009/06/blog-post_23.html

 • tamizhanban சொல்கிறார்:

  இந்த கவிதையை தாமரை எழுதி பலநாட்கள் ஆகின்றது.

  தமிழக ஊடகங்களும் எழுத்தாளர்களும் ஈழத்து சோகங்களை கண்டு கொள்ளாமல் இருக்கும் பொழுது தாமரையின் கவிதை தமிழர்களுக்கு ஆறுதலாக இருக்கும் என்ற நோக்கிலே பதிந்து இருக்கிறேன்.

  நன்றி
  தமிழன்பன்

 • jkpillai சொல்கிறார்:

  கண்ணீர் விடவும் சாபங்கள் போடவுமே எமக்கு உரிமை யுண்டு
  நெஞ்சிலே ஈரமற்றவர்களின் விகிதாசாரம் அதிகரிக்க அதிகரிக்க இன்னும் பல பல கொடுமைகள் இந்த உலகில் நடக்கும்
  ஆயினும் அதிப்பற்றி எந்த கவலையுமின்றி தன்னைச்சுற்றிய வாழ்விலும் தன் வங்கிக்கனக்கிலுமே கவனமான அரசியல்வாதிகள் இது எதையுமே கண்ண்டுகொள்ள போவதில்லை. இருக்கின்ற சில ஈரநெஞ்சுகளை மாற்றப் பார்ப்பார்கள் அல்லது சிறையில் பயங்கரவாதி என்று போடுவார்கள் அல்லது கொல்லவும் செய்வார்கள் .
  மனதை பண்படுத்த சரியான வாழ்க்கைமுறை இப்போ இருக்கவில்லை என்பதுவே உண்மை . அதைக்கண்டுபிடித்து சரிசெய்வதாயின் அதன் அழுத்தம் மிகவும் பெரியது. இது நடைமுறையில் சாத்தியமாகுமா?

 • தியான் சொல்கிறார்:

  தாயே
  தாமரை நீ.
  தாவும் மரை போலும் எம் மக்கள்
  ஓடி உயிர்பிழிந்தழுத
  செத்தமண் அள்ளி
  நெஞ்சடித்து சொன்ன உன்
  சொல்லின் கோர்வைகளும்
  வலிபட்டு துடிக்குதம்மா
  தமிழச்சி நீயென்று
  ஈழமண்ணும் சிலிர்க்குதம்மா

  நன்றி
  ப.தியான்

 • padmahari சொல்கிறார்:

  கண்ணீர் கண்டிப்பாக துளிர்க்கும் தமிழுணர்வுள்ள எந்தவொரு தமிழனுக்கும்.ஆனால், இந்த அவலத்திற்கு இன்று வரை எந்தவொரு முடிவும் இல்லையே என நினைக்கும்போது என்னடா இது நாடா? இதுல எல்லாம் நானும் ஒரு அங்கம்னு சொல்லிகிட்டு திரியறதுக்கு பேசாம பிச்சுகிட்டு தனியா போய்டலாமேனு தோனுது.ஆனால் இந்த பிரச்சனைக்கு அதுவல்லவெ தீர்வு!

 • Murthi Krishnan சொல்கிறார்:

  Theervukalai ezhuthuvoum… avarkalin thunbathirkku oru mutru pulli vaippoam. azhuvathaium pulampuvathaium niruthuvom avarkalin thunbathirkku ithu marunthalla…

 • KANESAN MALAYSIA சொல்கிறார்:

  kulantai urangaddumei thayin katakatapil… verondum venamada… thayin karuvaraiyil nulainta unnai enta kadavulum mannikka maddan.

 • சி .நா.மணியன் சொல்கிறார்:

  தாயே உன்னை வணங்குகிறேன் அம்மா .கண்ணிரை தவிர என்னால் மறு
  மொழி எழுத முடிய வில்லை அம்மா

 • saranya சொல்கிறார்:

  tamil valga……athu elam eninum……

 • Suvi Zek Sekar சொல்கிறார்:

  இந்தக் கவிதையை நான் இப்போதுதான் படித்தேன். என் இதயம் இயல்பிழந்துவிட்டது…. வேறொன்றும் சொல்வதற்கில்லை….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

What’s this?

You are currently reading தமிழச்சியின் கண்ணீர் அல்லது தாமரையின் கருஞ்சாபம்! at தமிழன்பன் பக்கம்.

meta

%d bloggers like this: