இலக்கிய உலக சகுனி அல்லது ஞானி!

செப்ரெம்பர் 17, 2009 § 4 பின்னூட்டங்கள்


இலக்கிய உலக சகுனி அல்லது ஞானி!

gnani-sankaran

தமிழ்நாட்டில் சமூக அக்கறையுடனும் முற்போக்கு கருத்துக்களை திறம்பட எழுதுபவர் பலர் இருப்பினும். தமிழ்நாட்டிற்கு வந்த சோதனையாக முற்போக்கு எழுத்தாளர் என்ற போலியான முன்னுரைகளுடன் தமிழக ஊடகங்கள் கொண்டாடிய எழுத்தாளர் ஞானி.  தன் எழுத்துக்கள் அதிகமான பின்விளைவுகளை ஏற்படுத்த வேண்டும் என்ற  விளம்பரநோக்குடனே அவரது எழுத்துக்கள் இருப்பதை தொடர்ந்து வாசிப்பவர்கள் உணரலாம். தன் எழுத்துக்களும் எண்ணங்களும் பன்முகதன்மைகொண்டன என்ற நம்பிக்கையுடன் எழுதி தள்ளுபவர் ஞானி.

ஞானியின் எழுத்துக்களில் அதிகமாக விளம்பரத்திற்க்காளன ‘ஒ’ பக்கங்களில் இவர் தன்னை அரசியல், சினிமா, இசை, நூல் விமர்சகராகவும் ஓரின சேர்க்கை, லிவிங் டுகெதர்,  ஆதரவாளராகவும் பெரியார்வாதியாகவும் முன்னிறுத்த விரும்புகிறார். தொட்டுக்கொள்ள ஊறுகாய் போன்று அவ்வப்போது ‘ஈழம்’ பத்தியும் எழுதி கொண்டிருக்கிறார். இவரது எழுத்துக்களை முதன் முதலில் படிப்பவர்கள் கொஞ்சம் குழம்பி போவார்கள். என்னய்யா நம்மாளு சொல்லவராருன்னு. தொடர்ந்து படித்த பின்னாலதான் உணர்வாளர்கள் ஞானி எழுத்துலக சகுனி என்று.

அரசியல் விமர்சகராக ஞானியை ஏற்றுக்கொள்ள முடியுமா? அவரது அரசியல் ஆராய்சிகள் பெரும்பாலும் தனது முன்னாள் முதலாளி கருணாநிதியை சாடுவதாகவே இருக்கும்.  ஜெயலலிதா பத்தி எப்போதும் மேம்போக்காவே விமர்சனம் செய்வார். ஒருதலைபட்சமானது இவரது அரசியல் பார்வை என்று அனைவரும் அறிவார்கள். சினிமா விமர்சனம் செய்யும் அளவிற்கு தனக்கு சினிமா தெரியுமா என்று அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும். திரையுலகில் ஐம்பதாண்டுகாலம் நிறைவுசெய்த கமலைவிட விக்ரம் சிறந்த நடிகர் என்று சிண்டு முடிந்திருக்கிறார்.  ‘மொழி’ படத்தை குறைகள் இல்லாத படைப்பு என்றும் பருத்திவீரன் ‘கழிசடை ‘என்றும் கூறியிருக்கிறார். தனக்கு வேண்டியவர் என்றால் ஒருமாதிரியாகவும் தனக்கு வேண்டாதவர் என்றால் வேறுமாதிரியாகவும் மாதிரியும் விமர்சிப்பார் என்று இவரது முன்னாள் சகபத்திரிக்கையாளர் சுசிகனேசு அம்பலப்படுத்தி இருக்கிறார்.

தேர்ந்த இசைவிமர்ச்சகர் போன்று அஸ்கர் வென்ற ‘ரகுமானை’ வாழ்த்துகிறேன் என்று அவரது மூத்த தலைமுறையினர்களான இளையராசா விசுவநாதனுக்கு ரகுமானிடமிருந்து கற்று கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்கி கடுமையான கண்டனத்திற்கு ஆளானார். இவரது ஓரினசேர்க்கை ஆதரவு மணமாகாமல் சேர்ந்து வாழ்தல் பற்றி பெரிதாக எதிர்ப்போ ஆதரவோ இல்லாததால் இவரது ஈழம் பற்றிய படைப்புகள் பத்தி பார்ப்போம்.

ஈழத்தில் கொத்து கொத்தாக தமிழர்கள் குண்டுவிழுந்து செத்து கொண்டிருந்த பொழுது கொதிக்காத ஞானி சிங்கள இயக்குனர் சென்னையில் தாக்கப்பட்ட பொழுது பொங்கி எழுந்தார். சுபவி, திருமா, சீமான்  போன்றோர்களுக்கு அறத்தை போதிக்கும் செயலை செவ்வனே செய்தார். திடீரென ஈழ ஆதவாளர்களோடு சொற்போரை துவங்கி பிரபாகரன் பத்தி உளறிவைத்தார்.  காவேரி பத்தி கவலைபட்டாரா? கூவம் பத்தி கவலைபட்டாரா? வன்னி மக்களை பத்திமட்டுமே கவலைபடுகிறார் பிரபாகரன் என்று தனது பேரறிவை உலகிற்கு உணர்த்தினார். தொடர்ந்து ஈழ உணர்வாளர்களுடன் வார்த்தை யுத்தத்தை துவங்கி பெரியார் திராவிடகழக  கொளத்தூர்மணி அவர்களை காட்டிகொடுக்கும் ‘எட்டப்பன்’ வேலைகளை செய்பவராகவும் அடுத்த பரிமாணத்தை அடைந்தார்.

ஈழ ஆதரவாளர்களை விட்டேனா பார் என்று தன்னுடைய தன்தோன்றித்தனமான விமர்சனங்களை அள்ளிவிட்டு ஈழத்திற்காக வேலைநிறுத்தம் செய்துவந்த வழக்கறிஞர்களை   கிண்டலும் கேலியும் செய்து எழுதிவந்தார்.  ஈழ ஆதரவாளர்களையும் ஈழப்போராளிகளையும் தொடர்ந்து விமர்சனம் செய்துவந்தார் ஞானி. எப்போதும் கருணாநிதிக்கு  ‘கொட்டு’ வைக்கும் ஞானி இலங்கையில் சிங்களர்கள் கோவப்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கருணாநிதி முத்துக்களை உதிர்த்தும் உடனே பூங்கொத்துக்களை நீட்டுகிறார். விமர்சிப்பது தமிழர்களை மட்டுமே மறந்தும் சிங்களவர்களையோ ராசபக்சேவையோ விமர்சித்து விடக்கூடாது என்று கண்ணும் கருத்துமாக இருந்து வந்தார்.

lawyers

கருணைகொலைகள் பத்தி இந்தவாரம் எழுதியுள்ள ஞானி சேனல் 4 வெளியிட்ட கண்கட்டி நிர்வாணநிலையில் நடந்த படுகொலைகள் பற்றி ஒருவரியும் எழுதவில்லை. அல்ஜசீரா வெளியிட்ட அகதிமுகாம் பத்திய செய்திகளையும் தனது எழுத்துக்களில் பதிவு செய்யவில்லை இந்த முற்போக்குவாதி. வழக்கறிஞர்கள் தங்கள் போராட்டத்தின் பொழுது நகல்களை எரித்தார்கள் ஒரிஜினலை எரிக்கவில்லையே? என்று காட்டி கொடுக்கவும் நம்மாளு தயங்கவில்லை. நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள்  மீது காவல்துறை கண்மூடித்தனமாக தாக்குதல் நிகழ்த்தியபொழுது வழக்கறிஞர்கள்  இப்படி சீரழிந்து போனார்களே? என்று ஒருதலைபட்சமாக வருந்திய ஞானி பெண்வழக்கறிஞர்கள் யாரும் வன்முறையில் ஈடுபடவில்லை என்று ஆறுதல் தேடிக்கொண்டார்.

hindu_ram

இவ்வளவு தெள்ளத்தெளிவாக விமர்சனம் செய்யும் ஞானி இலங்கையில் சிங்களவன் அமைத்த   அகதிமுகாம்கள் பத்தி மாபெரும் புளுகு மூட்டையை அவிழ்த்து விட்ட சிங்கள ரத்னா  இந்து ‘ராம்’ பத்தி வாய்திறக்கவில்லை. சிதம்பரம் நடராசர் கோவிலை அரசு கையகப்படுத்தும் வழக்கில் தன்னை இணைத்து கொள்ளவேண்டும் என்று நீதிமன்றம் சென்று நீதிமன்றத்தில் பின்னாளில் நடைபெற்ற காவல்துறையின் அத்துமீறலுக்கு வித்திட்ட  சுப்பிரமணியசாமி பத்தியும் அவர் அடிக்கடி அவிழ்த்துவிடும் கட்டுகதைகள் பத்தியும் நம்மாளு எழுதியதில்லை.  இதற்க்கு காரணம் தொழில் தர்மமா? அல்லது பார்ப்பன தர்மமா? என்று ஞானிதான் விளக்க வேண்டும். சுப்பிரமணியசாமி வழக்கறிஞர்களால்  தாக்கப்பட்டதும் ஞானிக்கு தானாடாவிட்டாலும் தன்தசை ஆடிவிட்டது போலும்.

குமுதம் இணையதளத்தில் நம்மாளு நடத்திய “ஞானி பேசுகிறேன்” அரங்கம் முழுக்கமுழுக்க பார்பனர்களால் நிரம்பி வழிந்தது அவ்வப்பொழுது சீமான், அமீர் போன்றவர்களுக்கு நேரம் ஒதுக்கினார்.  அந்த அரங்கில் எஸ்.வி சேகர் பார்பனர்களுக்கு இங்கேதான்(தமிழ் நாட்டில் ) பிரச்சனை மும்பையில் நல்ல மரியாதை இருக்கிறது என்றும்.  தான் பார்ப்பானாக பிறக்க போனஜென்மத்தில் புண்ணியம் செய்த புண்ணிய  ஆத்மா! என்றும் ஊரையே சுத்தும் செய்பவன் தன் வீட்டையும் சுத்தமாக வைத்துகொள்வான் அல்லவா? ஆகவே பிறப்பின் மூலம்தான் எல்லாம் என்றவர். பிறமதங்கள் தங்கள் அடையாளத்தை சினிமாவில் காட்டலாம் இந்து பூணுலை வெளியே தெரியும்படி நடித்தால் பிரச்சனை என்று ரெம்பவே வருத்தப்பட. எஸ்வி நிறைய ரத்ததானம் செய்யும் புண்ணிய ஆத்மா என்று சர்டிபிகேட் கொடுத்து அனுப்பினார். சீமானை அவரது கொள்கை சார்ந்து பேசவிடாமல் “எப்போ கல்யாணம்?” வாழ்த்துக்கள் ஏன் தோற்றது? அடுத்தபடம் என்ன? உதவி இயக்குனர்களுக்கு சம்பளம் கொடுக்குறீங்களா? என்று மொக்கை போட்டு அனுப்பி வைத்தார்.

தன்னை பெரியார்வாதி என்று காட்டி கொண்டு இவர் செய்யும்வேலைகள் எல்லாம் பெரியார் தொண்டர்களை காட்டி கொடுப்பதுதான். பெரியார் குடும்பத்தில் புகுந்த உளவாளி என்று அறிவுமதி அண்ணன் ஏற்கனவே ஞானி பத்தி எழுதி இருக்கிறார். தனது பார்ப்பனமுகம் தெரியாமலிருக்க அவ்வப்பொழுது பெரியார் முகமூடி மாட்டிக்கொண்டு திரிபவர்தான் இந்த ஞானி. ஜான்மகேந்திரன் இயக்கிய ஈழம்பத்திய  திரைப்படம் (“ஆணிவேர் “) குறுந்தகடு தன்னிடம் கொடுக்கப்பட்டது ஆனால் அதை பார்க்க நேரமில்லை என்று ‘ஒ’  பக்கங்களில் எழுதி தனது திரைப்படம் சார்ந்த அறிவையும் ஈழம் பத்திய எரிச்சலையும் ஒருங்கே காட்டி இருக்கிறார். இன்னும் ‘ஆணிவேர்’ பார்க்க ஞானிக்கு நேரம் கிட்டவில்லை போலும்.

ஈழத்திற்காக தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்றபொழுது மட்டுமே ஞானிக்கு  தமிழக பிரச்சனைகள் ஞாபகத்திற்கு வரும். ஈழத்திற்காக போராடிய வழக்கறிஞர்களை அவதூறு செய்வதும் ஈழ ஆதரவு இயக்கங்களை கிண்டலும் கேலியும் செய்வதும். ஈழப்போராட்டத்தை மழுங்கடிக்க ஆளும் வர்க்கம் செய்யும் அடக்குமுறைகளுக்கு தோள்கொடுப்பதுமே ஞானியின் முழுநேர எழுத்து பணியாக இருந்து இருக்கிறது. எப்படியாவது தனக்கு விளம்பரம் வேண்டும் என்றும் தனது பார்ப்பன முகம் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்றும் பல்துறைகள் சார்ந்து இவர் எழுதும் ‘ஒ’ பக்கங்கள் எதனையும் முழுமையாக சொல்லாமல் பிச்சைக்காரன் எடுத்த வாந்திபோல செரிமானமாகாத இவரது அபத்த கருத்துக்களின் நாற்றத்தோடு இருக்கிறது.

அரசியல் விமர்சகர், சினிமா விமர்சகர், இசை விமர்சகர், முற்போக்குவாதி என்று எடுத்த அவரது அவதாரங்களும் தோல்வியில்தான் முடிந்து இருக்கின்றன. உள்ளே ஒன்றை வைத்து விசமத்தனத்துடன் வேறொன்றை வெளியில் எழுதுபவர்தான் ஞானி. பார்பனர்களுக்கு எங்கெல்லாம் பிரச்சனை தோன்றுகிறதோ அங்கெல்லாம் பெரியார்வாதியாக  அவதாரம் எடுப்பார் பெரியாரின் உண்மை தொண்டர்களை காட்டிகொடுக்கும் வேலையும் செய்வார்.

கடைசியாக ஞானி அவர்களிடம் ஒரு கேள்வி அம்சாவிடமிருந்து ‘கவர்’ மாதாமாதம் சரியாக வந்து சேர்ந்து விடுகிறதா? இந்து ‘ராம்’  சுப்பிரமணியசாமியிடமிருந்து பங்கு சரியாக கிடைக்கிறதா?

(புலிகளிடமிருந்து தமிழக ஈழ ஆதரவாளர்கள் பணம் பெறுகிறார்கள் என்று பரப்புரை செய்யும்  தமிழக ஊடகங்கள் சிங்கள தூதுவர் அம்சாவிடம் கவர் பெற்ற ஊடகவியலாளர்கள் பத்திய செய்தியை அமுக்க பார்ப்பது  அழகோ அழகு ! இதுதான் தொழில் தர்மம் போலும் )

Advertisements

Tagged:

§ 4 Responses to இலக்கிய உலக சகுனி அல்லது ஞானி!

  • மாற்றுக்கருத்து இருந்தாலும் உங்களின் ஆளுமை வியக்க வைக்கின்றது. கோர்வையாக எடுத்த விஷயத்தில் பின்வாங்காமல் மூச்சு விட முடியாமல் படித்த பிறகு தோன்றிய கருத்து நிறைய சமூகத்தை ஊடகத்தை உள்வாங்கிக்கொண்டுருக்கிறீர்கள்?

  • முத்துக்குமரன் சொல்கிறார்:

    நல்ல பதிவு தோழர்,என் எண்ணங்களை அப்படியே பிரதிபளிக்கும் கட்டுரை இது…..

  • Bluemail சொல்கிறார்:

    பதிவு முழுவதும் மதிமாறன் வாந்தி…தாங்கல !

  • vijaygopalswami சொல்கிறார்:

    வாழ்த்துக்கள் நண்பரே. இணைய குழுமம் ஒன்றில் இந்த ஞாநியைப் பற்றி சில காலம் விவாதித்து எழுதியதுண்டு. ஆனால் ஞாநிக்கே பாடம் நடத்தக் கூடிய சிலர் விவாதிக்க வந்ததால் அந்த முயற்சியையும் கைவிட்டேன். இதில் வலி மிகுந்தது ஈழத் தமிழர்கள் சிலரே நாங்கள் ஏன் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டது. எதற்காகவெல்லாம் கருணாநிதியைக் குட்டுகிறாரோ அதே காரணத்துக்காக ஞாநி குட்டப்படுவதற்கும் முகாந்திரம் இருக்கிறது. நாகரிகம் கருதி அவற்றைக் குறித்து இங்கே சொல்லத் தயக்கமாக இருக்கிறது. அருமையான கட்டுரை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

What’s this?

You are currently reading இலக்கிய உலக சகுனி அல்லது ஞானி! at தமிழன்பன் பக்கம்.

meta

%d bloggers like this: