தமிழக மீனவர்களும் திராவிடமுன்னேற்றகழக நாடககுழுவும்!

செப்ரெம்பர் 18, 2009 § 4 பின்னூட்டங்கள்


தமிழக மீனவர்களும் திராவிடமுன்னேற்றகழக நாடககுழுவும்!

 fisherman

நீங்கள் இந்த கட்டுரையை வாசிக்கும் நேரத்தில் கூட தமிழகமீனவன் ஒருவன் இலங்கை கடல்படையினால் தாக்கப்பட்டு கொண்டு இருக்கலாம், அனுராதாபுரத்தின் சிறைக்கூடத்தில் ஒவ்வொரு வினாடியையும் நரகமாக எண்ணி கண்ணீர்விட்டு கொண்டு இருக்கலாம். சிங்களனால் சுடப்பட்ட தமிழகமீனவனின் சடலத்தை சுத்தி நின்று அவனது உறவுகள் அழுது கொண்டு இருக்கலாம்.  மத்திய அரசுதலைவிட வலியுறுத்தி தனது பத்தாயிரத்தொன்றவது கடிதத்தை திமுக நாடகக்குழுவின் தலைவர் எழுதி கொண்டு இருக்கலாம். கன்னித்தீவு கூட ஒருநாள் முடிந்து போகலாம் முடியாமல் தொடரும் தமிழக மீனவனின் கண்ணீரும் திமுக தலைமையின் நாடகமும்.

உடல்மண்ணுக்கு உயிர் தமிழுக்கு இதை உரக்க சொல்வோம் உலகிற்கு! என்று நாடக வசனங்களை எழுதியும் உச்சரித்தும் ஆட்சியை பிடித்தவர்கள் தமிழனுக்கும் தமிழுக்கும் ஏதாவது செய்தார்களா? இருப்பது ஒரு உயிர் அதுபோவது தமிழுக்கென்றால் அதைவிட பெருமை உண்டா? என்றெல்லாம் உணர்ச்சிகரமான நாடகபாணி வசனங்களை பேசி கழகம் வளர்த்தவர்கள் தமிழனுக்கு இன்னல் நேர்ந்தால் அதே நாடகத்தை தங்கள் ஊடகங்கள் வாயிலாக நடத்திகாட்டுகிறார்கள்.

adadey-kalainjar-karunanidhi-murasoli-letters-govt-dmk

தமிழ் தமிழன் என்று பேசினால் நம்மை பிரிவினைவாதி என்று முத்திரை குத்துபவர்கள் செத்து விழுந்த தமிழகமீனவர்களுக்காக ஏதேனும் செய்தார்களா? எல்லை கடக்காதே!என்று எச்சரிக்கை செய்கிறார்கள் கடலில் எல்லை தெரியாமல் தமிழன் இலங்கை எல்லைக்குள் காலடி வைக்கிறான் என்றே வைத்து கொண்டாலும் சுட்டு வீழ்த்தும் சிங்களனை தட்டி கேட்க்க தைரியமில்லாத இந்தியா வளரும் வல்லரசு என்றால் நகைப்பிற்கு உரியது அல்லவா?

சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளும் மன்மோகன்சிங் மீனவர் பிரச்சனை குறித்து இலங்கையோடு பேசமாட்டோம் என்று அறிக்கையோ வாசிக்கிறார். பிரனாப்முகர்சி மீனவர்கள் உயிருக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று சொல்லுகிறார். எண்ணி பாருங்கள் தமிழன் தவிர வேறு எந்த மாநிலத்தவனையும் நோக்கி இவ்வாறு ஆளும்வர்க்கம் அறிக்கை வாசிக்க முடியுமா? உலகெங்கிலும் இப்படித்தான் மீனவர்கள் கேள்வி இன்றி சுடப்படுகிரார்களா? கடிதம் எழுதுவதோடு முதல்வரின் கடமை முடிந்து விடுகிறதா?

முதல்வர் ஆவேசம் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் உயர்மட்ட காவல்துறை அதிகாரிகள் மத்தியில் மீனவர் குறித்து பேசினார் என்று செய்தி வருகிறது. உங்கள் நடிப்பிற்கு அளவில்லையா?  தமிழக மீனவர்களின் உடைமைகள் சிங்களவனால் சூறையாடப்பட்டு கைது செய்யப்பட்டு அடித்து துன்புறுத்தப்பட்டு, அனுராதாபுரத்தில் அவமானத்திற்கு ஆளாகும் மீனவனுக்கு திராவிட கட்சிகள் என்ன செய்தன? கடிதம் எழுதியே காலம் காலத்தை கடத்தியதை தவிர.நீங்கள் உணர்ச்சிகரமாக கடிதங்கள் எழுதி கொண்டிருந்த நாட்களில் ஐநூறு மீனவர்கள் செத்து விழுந்து இருக்கிறார்கள். உங்கள் நாடகமும் நாளுக்கு நாள் அதிக பார்வையாளர்களுடன் அமோகமாக ஓடுகிறது. கச்சத்தீவை தாரைவார்த்த பொழுதும் இப்படித்தான் எங்களுக்கு மத்தியில் நடித்து கொண்டு இருந்தீர்கள். நாடகம் பார்த்தே நாசமாய்போன தமிழக தமிழனும் கொல்லப்படுவது தனது சகோதரன் என்று உணராமல் உங்கள் நாடகத்தில் தன்னை மறந்து இருந்தான்.

ஈழத்தமிழனுக்காக போர்நிறுத்தம் கேட்க்கிறோம் என்று நீங்கள் நடத்திய நாடகங்கள் ஒன்றா ரெண்டா? உங்கள் கல்லா நெம்பியத்தை தவிர வேறதுவும் நடக்கவில்லை. இப்பொழுது ஈழத்தமிழர்களின் அகதிமுகாம் பத்தி தயாநிதிமாறன் பிரதமருடன் பேசுகிறாராம் கூடவே எம் கே நாரயனமேணனை அழைத்து செல்கிறார். இன்னுமா உங்கள் நாடகம் ஈழத்தமிழர்களின் இந்த நிலையிலும் உங்கள் இதயம் இறங்கவில்லையா? பாவம் ஈழத்தமிழர்களுக்கு உங்களால் அடுத்து என்ன துன்பம் வரப்போகிறதோ என்று இதயம் பதறுகிறது. எப்படியும் இந்த நாடகக்குழு ஆட்சியின் போதே ஈழத்தமிழன் என்ற இனத்தை அழித்து முடித்துவிடுவது என்று சிங்களன் முடிவு எடுத்துவிட்டான் போல.ஈழத்தில் தமிழர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்த பின்னர் தமிழக கடல்கறைபக்கம் கவனம் செலுத்துகிறான் சிங்களன் என்று எடுத்துக்கொள்ளலாம். மீனவர்கள் எத்தனை பேர் செத்துவிழுந்தாலும் சங்கத்தமிழில் இவர்கள் நடத்தும் நாடகங்கள் நிற்காது.

Advertisements

§ 4 Responses to தமிழக மீனவர்களும் திராவிடமுன்னேற்றகழக நாடககுழுவும்!

  • raja சொல்கிறார்:

    மிக்க நன்றி தோழா உனது கட்டுரைக்கு எனது நட்பும் ஆதரவும் எப்பொழுதும் உங்களுக்கு உண்டு.உங்களுடைய இந்த அரசியல் பார்வை என்னை வெகுவாக கவர்ந்துள்ளது தொடர்ந்து எழுதுங்கள் பிரச்சினை எதாக இருப்பின் மின்னஞ்சல் தகவல் தெரிவியுங்கள் முடிந்த ஆளவு உதவுகிறேன்.உங்கள் தோழன் இராஜா.

  • கணபதி சொல்கிறார்:

    உடல் மண்ணாங்கட்டி. உயிர் புண்ணாக்கு. பதவி குடும்பத்திற்கு. வேதனை தமிழனுக்கு.
    அன்று எட்டப்பன். இன்று கலைஞர்.இவர் ஒரு தமிழ்க்கொலைஞர்.இவரின் நடிப்புக் கண்டு 8கோடி தமிழனும் வெட்கித் தலைகுனிகின்றான்.குடிகாறன் பேச்சு விடிந்தால் போச்சு. கலைஞரின் பேச்சு கடிதத்தோடு போச்சு. பத்தோடு பதினொன்றாக வந்தவர். இன்று பத்தாயிரம் கோடிக்கு அதிபதி.சோனியாவுக்கு இவர் வலது கை. சிங்களவனுக்கும் இவர் இடது கை. படிப்பது திருக்குறள். இடிப்பது தமிழீழம். சிங்களவன் அடித்தால் கைகொட்டிச்சிரிப்பார். மீனவன் செத்தால் கைகட்டிப் பார்த்திருப்பார். இவரின் அட்டகாசமோ பொறுக்க முடியவில்லை. எங்கள் சோகத்திற்குமோ முடிவில்லை.யாரை நோவோம். யாரிடத்தில் போயுரைப்போம்.தாயே! தமிழ்த்தாயே! தாங்க முடியவில்லையடி.

  • NithiChellam சொல்கிறார்:

    Innum antha Kolongar ai Nambi valum oru kootam iruku inge…..

    Avar romba nalavar avarukku idukku mela onnum panna mudiyathu..

    avar muyarchi pannitar avolo dhan…

    Yendru solli inge irukkum siru kootam iruku..

    yaar yaar Kolangar ari Nambi irunthangolo avalgalukku povam suma vidathu…..

  • MATHU சொல்கிறார்:

    arumaiyana katurai

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

What’s this?

You are currently reading தமிழக மீனவர்களும் திராவிடமுன்னேற்றகழக நாடககுழுவும்! at தமிழன்பன் பக்கம்.

meta

%d bloggers like this: