கேரளா உருவிய தமிழனின் கோவணமும்! முல்லைபெரியாறு அணையில் தமிழனின் தார்மீக உரிமையும்!

செப்ரெம்பர் 24, 2009 § 3 பின்னூட்டங்கள்


கேரளா உருவிய தமிழனின் கோவணமும்! முல்லைபெரியாறு அணையில் தமிழனின்  தார்மீக உரிமையும்!
vivasaayi

முல்லைபெரியாறு  அணைக்கு மாற்றுஆணைகட்ட ஆய்வினை மேற்கொள்ளுமாறு மன்மோகன்சிங் என்னும் தமிழன் நலம்காக்கும் பாரதபிரதமரின் தலைமையிலான மத்தியரசு கேரளாவிற்கு பச்சைகொடி காட்டி இருக்கிறது. சேட்டன்களும் அணைகட்டுவதற்கு இடத்தினை முடிவுசெய்ததோடு அடுத்தகட்ட பணிகளுக்கு தயாராகிவிட்டதாகதெரிகிறது. ஏற்கனவே மழை பெய்தால்மட்டுமே தண்ணீர் என்றநிலையில் காவேரியும், அணைக்குமேல் அணை என்றுகட்டியதால் பாலாறு வெறும் கனவாகி போய்விட்டது. முல்லைபெரியாரில் கொஞ்சம்போல் தண்ணீர் வந்துகொண்டு இருந்தது அதற்கும் ஆப்பு தயாராகிவிட்டது. வழமைபோலவே தமிழினதலமை உலகத்தமிழர் மாநாட்டிற்கு தோரணம் தொங்கவிடுவதில் கவனமாகஇருக்கிறது.  எதிர்கட்சி என்று ஒன்று இருக்கிறது என்றுகாட்ட அவ்வப்பொழுது அறிக்கைவழியே “சிறுபான்மை அரசு” என்று திட்டிவிட்டு ஓய்வெடுக்க போய்விடுகிறது. முல்லை பெரியாரில் தமிழர்களுக்கு உரிமை இல்லை! என்று உரக்க முழக்கமிடுகிறது கேரளா.
Mullai periyaru 2

முல்லை பெரியார் அணையை பென்னிகுக் என்னும் ஆங்கிலேயே கர்னல் கட்டினார். தனது சொத்துக்களை விற்று கட்டினார் என்பதால் கம்பம் பள்ளத்தாக்கு மக்களுக்கு ஒரு ஆங்கிலேயன் குலதெய்வமாக இருக்கிறார். அணையை கட்டிய ஆங்கில அரசு சென்னைமாகாணத்திற்கும் திருவாங்கூர் சமஸ்தானத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை 999 ஆண்டுகள் செல்லுபடியாகும்படி இயற்றி இருக்கிறது. அணையை பயன்படுத்துவது மற்றும் பழுதுசெய்வது என்று எல்லாஉரிமைகளும் தமிழர்கள்வசம் என்கிறது அந்த ஒப்பந்தம். அணையை மீளக்கட்டுவது என்று ஒருபேச்சுக்கு வைத்து கொண்டால்கூட அதனை தமிழர்வசமே ஒப்படைக்க வேண்டும். ஆனால் ஆங்கிலேயர்போட்ட ஒப்பந்தம் இப்பொழுது செல்லாது என்று கேரளாவும் மத்தியஅரசும் ஒருமித்த கருத்துடன் செயல்படுகின்றன. இவர்கள் உலகளவில் இருக்கும் நடப்புகளை அறிவார்களா? என்றே தெரியவில்லை.  போதை பொருள் விற்பவர்களிடம் ஒரு நாடு இருந்தும் ஒப்பந்தம் காரணமாக சமீபத்தில் விடுவிக்கப்பட்டதும்(ஹாங்காங் 2000 ஆண்டுவரை அங்கிலேயர் வசமிருந்து பின்னர் சீனாவின் அங்கமான வரலாறு), கியுபாவில் ஒப்பந்தம் காரணமாக ஒருசிறைச்சாலை அமெரிக்காவசம் இருப்பதும் இவர்கள் அறிவார்களா? என்று தெரியவில்லை.  உலகளவில் ஒப்பந்தம் என்பது அவ்வளவு எளிதாக மீறமுடியாது என்பதும் 999 ஆண்டுகள் கழித்தே அந்த அணையின் மீது அவர்களுக்கு உரிமை உள்ளது என்பதையும் எடுத்து சொல்ல தமிழகத்தில் ஒரு தலைவன் இல்லை என்பது வேதனையிலும் வேதனை.

அணைபலவீனமாக இருக்கிறது என்பது உண்மைக்கு புறம்பானது என்று நிபுணர் குழுக்கள் கூறியுள்ளது. அணையை வேறு இடத்திற்கு மாறும்பொழுது அணைமீதான தமிழனின் தார்மீக உரிமைகள் மறுக்கப்படும். அணை முழுக்கமுழுக்க கேரளாவிற்கு என்றாகிவிடும் அவர்கள் மனதுவைத்தால் மட்டுமே தமிழனுக்கு தண்ணீர். எவ்வளவு தண்ணீர்தேக்குவது எப்பொழுது தண்ணீர் திறப்பது என்று கேரளாவே முடிவுசெய்யும்.புதிய அணைகட்டவேண்டும் என்றாலும் அதனை தமிழன்தான் தீர்மானிக்க வேண்டும். அணைபலவீனமானது என்று நிருபிக்கபடாதவேளையில் மத்தியஅரசு எப்படி புதிய அணைக்கு பரிந்துரைக்கலாம்? என்று கொதித்து எழவேண்டிய தமிழக தலமைகள் படுத்த இடத்தில் இருந்து எந்திரிக்க முடியாதபடி கோமாவில் கிடக்கின்றன. இந்த லட்சணத்தில் உலகத்தமிழர் மாநாடு வேறு. மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டபொழுது எவ்வித நீர் ஆதாரமும் இன்றி, முல்லை பெரியாரில் உரிமை என்ற ஓட்டு கோவணத்தோடு தமிழன் இருந்தான் இன்று அந்த கோவணமும் களவாடப்பட்டுவிட்டது.  மத்தியரசிற்கு செல்லநாய்குட்டியாக ஆளும்கட்சியும் மக்கள் பிரச்சனைகளை அறிக்கைகள் மூலம்மட்டுமே எதிர்கொள்ளும் எதிர்கட்சியும் இருக்கும் தமிழ்நாட்டில் தமிழன் கோவணம் தொடந்து உருவப்படுகிறது.

முல்லை பெரியாறு அணையின் கட்டுமானப்பணியில் ஈடுபட்டவர்கள் பெரும்பான்மையாக தமிழர்களே! தமிழர்களின் வரிப்பணம் கொண்டே அணைகட்டப்பட்டது. அணை கட்டும்பொழுது பலபேர் இன்னுயிர் நீத்துள்ளனர். பென்னிகுக் என்ற ஆங்கிலேயன் ராமராதபுரத்தின் வறட்சி கண்டு இந்த திட்டத்தினை நிறைவேற்றினான். அடிமைபட்டு கிடந்த காலத்தில் நமக்கு குடிக்க தண்ணீர் குடுத்தான் ஆங்கில கர்னல். இன்று சுதந்திர இந்தியாவில் கேரளாக்காரன் தமிழனுக்கு தண்ணீர் இல்லை என்கிறான் தண்ணீரை உயர்த்த உச்சநீதிமன்றம் தீர்பளித்தால் கேரளா சட்டமன்றம் தன்னிச்சையாக அதற்கு தடை விதிக்கிறது.  தமிழர்கள் சரியான தலைமையை தேர்ந்தெடுக்க தவறியதால் தொடர்ந்து தனது உரிமைகளை இழந்து வருகிறார்கள்.

இந்தியாவில் இருக்கும் அனைத்து தேசிய இனங்களும் தமது வாழ்வியல் உரிமைகளை கட்டமைப்பதில் கவனமாக இருக்கும் வேளையில் நாம் மட்டும் தனிநபர்களின் சுயலாபங்களுக்கு ஒரு இனத்தின் வருங்காலத்தை அடகுவைப்பவர்களாக இருக்கிறோம். இதுபோன்ற ஆளும்கட்சியும், எதிர்கட்சியும் இருக்கும்பொழுது மத்தியில் ஆள்பவர்கள்  தமிழனுக்கு எதிராக எதைவேண்டுமென்றாலும்  செய்யலாம். நீராதரமின்றி தமிழன் பொருளாதாரஅகதிகளாக  மாறும்நாள் வெகுவிரைவில் இல்லை.

mullaiperiyar

முல்லை பெரியாறு சுருக்கமான வரலாறு !

கேரளத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி கடலில் கலந்த பெரியாறு, முல்லை நதிகளுக்கு இடையே அணை கட்டும் பணியை 1874-ல் தொடங்கியவர் பிரிட்டனைச் சேர்ந்த பொறியாளர் பென்னிக்குயிக்.அரசு நிதி உதவியுடன், அடர்ந்த வனப்பகுதியில் 3 ஆயிரத்து 500 அடி உயரத்தில் மேற்கொள்ளபட்ட இந்த அணை கட்டும் பணி ஆரம்பக்கட்டத்தில் தோல்வி அடைந்தது. இதனால் அரசு தனது நிதி உதவியை நிறுத்திவிட்டது. எனினும், பென்னிக்குயிக் தனது சொத்துக்களை விற்று, அணை கட்டும் பணியைத் தொடர்ந்தார்.

1886-ல் அன்றைய திருவாங்கூர் மகாராஜாவுக்கும், அப்போதைய சென்னை மாகாண அரசுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் பெரியாறு அணை கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. 1895-ல் திட்டம் முடிக்கப்பட்டது.

1886ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் நாள் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. அது திருவாங்கூர் மன்னருக்கும் சென்னையில் இருந்த பிரிட்டிஷ் அரசுக்கும் இடையே பெரியாற்றில் ஓர் அணை கட்டவும், அதில் தேங்கும் நீரினை ஒரு குகை மூலமாகத் திருப்பி, சென்னை மாகாணத்தில் இருந்த மதுரை, ராமநாதபுரம் ஜில்லாக்களில் வறண்ட நிலங்களில் பாசனம் செய்யவும் வகை செய்தது. இந்த ஒப்பந்தம் 999 ஆண்டுகளுக்குச் செல்லுபடி ஆகும் என்றும் குறிக்கப்பட்டது.

அதன்படி 1895-ம் ஆண்டு அணை கட்டி முடிக்கப்பட்டு செயல்படத் தொடங்கியது. அறுபது ஆண்டுகள் எவ்வித சிக்கலும் இன்றி பாசனம் நடந்து வந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் இந்தியா சுதந்திரம் அடைந்தது. அங்கே கேரள அரசு உதயமானது. இங்கே தமிழ்நாடு அரசு ஏற்பட்டது.

1955-ம் ஆண்டு பெரியாறு தண்ணீர் தமிழ்நாட்டில் நுழையும் இடத்தில் மின் உற்பத்தி செய்வதற்கு ஒரு திட்டம் வகுக்கப் பெற்றது.

அதற்காக ஒரு புதிய ஒப்பந்தம் போடப்பட வேண்டும் என்று முடிவாகி 1970-ம் ஆண்டு மே மாதம் 29-ம் நாள் கேரள அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே, பழைய ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக புது ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. முதல் ஒப்பந்தத்தில் அணை கட்டுவதால் நீரில் முழ்கும் 8000 ஏக்கர் நிலத்துக்கு வாடகையாக ஆண்டுதோறும் ஏக்கருக்கு 5 ரூபாய் வீதம் மொத்தம் 40,000 ரூபாய் பிரிட்டிஷ் நாணயமாக சென்னை அரசாங்கம் திருவாங்கூர் மன்னருக்குத் தர வேண்டும் என்று இருந்தது (திருவாங்கூர் சமஸ்தானத்தில் அப்போது சக்கரம் என்ற பெயரில் வேறு நாணயம் புழங்கி வந்ததால் பிரிட்டிஷ் நாணயம் என்று குறிக்கப்பட்டது).

மின் உற்பத்திக்காக போடப்பட்ட புதிய ஒப்பந்தத்தில், மூழ்கடிக்கப்பட்ட நிலம் 8000 ஏக்கருக்கு வாடகை 30 ரூபாய் என உயர்த்தப்பட்டது. அதன்படி 2,40,000 ரூபாய் ஆண்டுதோறும் கேரள அரசுக்குத் தமிழ்நாடு அரசு செலுத்தி வருகிறது.

கடந்த 27 ஆண்டுகளாக பெரியாறு அணையின் முழு நீர்மட்டம் 152 அடியிலிருந்து 136 அடியாக குறைக்கப்பட்டு விட்டதால், நீரில் மூழ்கும் நிலம் 8000 ஏக்கராக இல்லாமல் 4677 ஏக்கராகக் குறைந்துவிட்டது. இவ்வாறு வெளிப்பட்ட நிலங்களில் கேரள அரசு பலவிதமான சுற்றுலா கேளிக்கை சாதனங்களை நிறுவியுள்ளது. ஆனால் தமிழ்நாடு அரசு 8000 ஏக்கருக்கான வாடகைப் பணத்தினை தவறாமல் செலுத்தி வருகிறது.


Advertisements

Tagged:

§ 3 Responses to கேரளா உருவிய தமிழனின் கோவணமும்! முல்லைபெரியாறு அணையில் தமிழனின் தார்மீக உரிமையும்!

 • rajakamal சொல்கிறார்:

  பொதுமக்களுக்கு விளங்கும் செய்தி, இரு மாநில அரசுக்கும் விளங்காமல் இருக்குமா? அனைத்து அத்தியாவசிய பொருட்களும் கேரளவிற்கு நாம் அனுப்புகிறோம், கர்நாடகவிற்கு தேவையான மின்சாரம் நாம் அனுப்புகிறோம், அவன் என்னடவென்றால் தரமுடியாது என்கிறான், அவனை என்ன செய்தார்கள் என்று இப்போதும் இவனும் ஆரம்பித்து விட்டான், கர்நாடகவில் ஒரு தமிழ் சூப்பர் ஸ்டார் உருவாக முடியாது, கேரளாவில் சாதரண நடிகனாவே தமிழன் தலை தூக்க முடியாது, ஆனால் தமிழ் நாட்டில் எல்லாம் நடக்கும்.
  தமிழன் மட்டும் போற இடமெல்லாம் அடிவாங்கிட்டு வருவான் ரொம்ப மோசம் சார் அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.

  வருத்தத்துடன்
  ராஜா கமால்

 • M.Thevesh சொல்கிறார்:

  பிரபாகரன் போல் ஒரு தன்மானம் மிக்க தமிழன் பிறக்கும் வரை தமிழநாட்டின் இந்த நிலை தீரப்போவதில்லை.

 • Narayanan M சொல்கிறார்:

  hmm padikka padikka aathangam mattumey michamaakirathu!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

What’s this?

You are currently reading கேரளா உருவிய தமிழனின் கோவணமும்! முல்லைபெரியாறு அணையில் தமிழனின் தார்மீக உரிமையும்! at தமிழன்பன் பக்கம்.

meta

%d bloggers like this: