50000 மக்கள் மீள் குடியேற்றம் என்ற பரப்புரைகளில் உண்மையில்லை.

ஒக்ரோபர் 25, 2009 § 1 பின்னூட்டம்

50000 மக்கள் மீள் குடியேற்றம் என்ற பரப்புரைகளில் உண்மையில்லை.

பெங்களூர் அக்-25

rafugee

தெற்காசியாவில் மனிதவுரிமைகள் மீறல்கள் என்ற கருத்தரங்கு (25/10/2009) நடைபெற்றது. நிகழ்வில் தெற்காசியாவின் மனிதவுரிமை மீறல்களை எடுத்து வைத்து பேசிய மனிதவுரிமை ஆர்வலர்கள் 50000 ஈழத்தமிழர்கள் மீள்குடியேற்றம் என்பது சுத்த பொய் என்றும் வன்னிமுகாமிலிருந்து ஜப்னா முகாமிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதே உண்மை என்று குற்றம் சுமத்தினர். ஈழத்தில் நடைபெற்ற மனிதபேரவலங்கள் தெற்காசியாவின் மனித உரிமை மீறல்களை மேலும் ஊக்குவிக்கும் என்றும் ஈழத்தில் வெற்றிகரமாக  செயல்படுத்தப்பட்ட சோதனைகள் இந்தியாவின் வடகிழக்கு மாகாணங்கள் மற்றும் காஷ்மீரிலும்  நடைபெறுவதற்கான அபாயங்கள் அதிகம் உள்ளன என்று கவலை தெரிவித்தனர்.

தெற்காசியாவில் மனிதவுரிமை மீறல்கள்   என்ற தலைப்பில் தெற்காசிய மனிதவுரிமை ஆர்வலர்கள் மற்றும் பெங்களூர் பல்கலைகழகம் இணைந்து யுடிசி கல்லூரியில் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்வில் சிவ சுந்தர் ( ‘o eezham’ என்ற கன்னட புத்தகத்தை எழுதியவர்), பால் நியுமென் ( விரிவுரையாளர் பெங்களூர் பல்கலைகழகம்) முருகானந்தம்( செயலாளர் தமிழக மீனவர்சங்கம் ) எலிசபெத் ( விரிவுரையாளர் National Law School ) தீனா ( பத்திரிக்கையாளர் other media ) ஆகியோர் கலந்துகொண்டனர்.

Human-rights-violations-25-10-09

நிகழ்வில் முதலாக பேசிய சிவ சுந்தர் இலங்கையின் ராணுவமயமாக்கல் மற்றும் பத்திரிக்கை சுதந்திரம் பற்றி  உரை நிகழ்த்தினார்.போரின் பிடியில் இல்லாத  ஜப்னாவில் ஐந்து லட்சம் மக்களுக்கு ஐம்பதாயிரம் ராணுவவீரர்களை இலங்கை அரசு நியமித்துள்ளது பத்து பேருக்கு ஒரு இராணுவ வீரர்  என்ற விகிதத்தில் இருப்பதால் அங்குள்ள மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டுள்ள குறித்து கவலை தெரிவித்தார் மேலும் ராணுவவீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டம் இலங்கை அரசிடம் இருப்பதையும் சுட்டிகாட்டிய சிவசுந்தர் பத்திரிக்கை சுதந்திரம் இலங்கையில் படும்பாடு குறித்தும் விளக்கமாக பேசினார்.

அடுத்தாக ‘சிறப்பு முகாம்களின் அவலங்கள்’ என்ற தலைப்பில் பேசிய பால் நியுமென் சிறப்பு முகாம்களில் இருந்து 50000 மக்கள் மீள்குடியேற்றம் செய்யபட்டுள்ளனர் என்று பொய்யான பரப்புரைகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டினார். வன்னி சிறப்புமுகாமிலிருந்து ஜப்னா முகாமிற்கு இடம்மாற்றம் செய்யபட்டதை தவறாக மீள்குடியேற்றம் என்று பரப்புரை செய்வதையும்.இலங்கையில்  தேர்தல் முடியும்வரை ராசபக்சே அரசு மீள்குடியேற்றம் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை என்பதும் முகாம்மக்களின் வாக்குகள் தமக்கு எதிராக அமையும் என்ற அச்சத்திலேயே ராசபக்சேவின் அரசு மவுனம் சாதிக்கிறது என்றும் மழைகாலம் துவங்கினால் மிகப்பெரியளவில் மனிதபேரவலம் நடைபெறவாய்புகள் உள்ளன என்றும் சுட்டிகாட்டினார்.

தமிழக மீனவர்கள் மீதான மனிதவுரிமை மீறல்கள் என்ற தலைப்பில் பேசிய முருகானந்தம் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடல்படை  நிகழ்த்திய தாக்குதல்களால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து மிகவிளக்கமாக கூறினார் மத்தியரசும் மாநில அரசும் தமிழக மீனவர்களை கைவிட்டு விட்டமையையும் ஈழத்தமிழர்கள் பக்கம் நின்றிருக்க வேண்டிய இந்தியரசு சிங்களர்கள் பக்கம் நின்றதால் இந்தியாவிற்கே அது ஆபத்தாக போய்விட்டன என்று எடுத்துரைத்தார்.தமிழக மீனவர்கள் இலங்கை கடல்படையால் சுடப்பட்டு இறக்கும்பொழுது தமிழக காவல்துறையினால் விபத்தில் மீனவர்கள் இறந்ததாகவே இதுவரை  வழக்குகள் பதியப்பட்டு வருவதாகவும். தமிழக மீனவர்கள் தம்மை தற்காத்து கொள்ள ஆயுதம் எந்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றார்.

தொடர்ந்து பேசிய எலிசபெத் இந்தியாவின் வடகிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சிறப்பு சட்டங்கள் மற்றும் ஆளும்வர்க்கத்தின் அடக்குமுறைகள் பற்றி பேசினார் ஈழத்தில் செயல்முறைப்படுத்தப்பட்ட சோதனை முயற்சிகளை இந்தியா வடகிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தும் ஆபத்து உள்ளதாக கூறினார்.

காஷ்மீரின் மனிதவுரிமைகள் பத்தி பேசிய தீனா ‘ஜம்மு காஷ்மீரில் பிறந்தவன் என்றாலே தீவிரவாதி’ என்று பார்க்கும் சூழல் உள்ளது என்றும் ராணுவமயமாக்கல் ஏற்படுத்தும் வாழ்வியல் சிக்கலையும் பட்டியலிட்ட தீனா. இலங்கையில் நடந்த மனித பேரவலம் நியாயமான உரிமைகளுக்கான போராட்டங்களை நசுக்குவதற்கு முன்மாதிரியாக அமைந்துள்ளது என்று கூறினார்.

Advertisements

“தெற்காசியாவில் மனித உரிமை மீறல்கள்”கருத்தரங்க‌ம்

ஒக்ரோபர் 15, 2009 § பின்னூட்டமொன்றை இடுக

பெங்களூரில் “தெற்காசியாவில் மனித உரிமை மீறல்கள்”என்ற பெயரில் கருத்தரங்கம் நடைபெறபோகிறது.

ஈழத்தில் நடைபெறும் மனிதப்பேரவலத்தை உலகிற்கு உணர்த்தும் விதமாகவும் அதேவேளையில் நம்மை சுற்றி நடைபெறும் மனித உரிமைமீறல்களை கண்டிக்கும் விதமாகவும் இந்த கருத்தரங்கு நடைபெறவிருக்கிறது.

பல்வேறு மனிதவுரிமை அமைப்புக்களை சார்ந்த உறுப்பினர்கள் பங்குபெறுவதால் கருத்தரங்கு முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே இருக்கும் என்பதை தெளிவுபடுத்திகொள்கிறோம். இந்த கருத்தரங்கின் மூலமாக மனித உரிமை அமைப்பினர் வெளியிடும் செய்திகளை ஊடகங்களின் உதவியுடன் அடுத்த தளத்திற்கு நகர்த்துவதே நமது எண்ணம். முழுக்கமுழுக்க எளிவர்களான எம்மால் முன்னெடுக்கப்படும் நிகழ்வு இது. இனமானமுள்ள தோழர்களே கைகொடுங்கள் ஈழப்போராட்டத்தை அடுத்த தளத்திற்கு நகர்த்துவோம். நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை மனித உரிமை அமைப்புகளே. அவர்கள் மூலமாக ஈழப்பிரச்சனையை அடுத்தகட்டம் நோக்கி நகர்த்துவோம்.

maanadu_tamil copy

blore maanadu copy

த‌லைப்புக‌ள் ‍மற்றும் பேச்சாள‌ர்க‌ள்


1) இலங்கையின் மனித உரிமை மீறல்கள்

அ) பத்திரிக்கைச் சுதந்திரம் மற்றும் இராணுவமயமாக்கல் .R.K.Mattu (Chief journalist – Indian express)

ஆ) இடப்பெயர்வு முகாம்களின் அவ‌ல‌ நிலை ‍.Father.Prakash louise (South asia Director – JFG REFUGEE SERIVCE)  .

2) தமிழக‌ மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் – Mr.Muruganandham (Seceretry – Tamil nadu fisherman associatioந்) .

3) இந்திய வட கிழக்கு மாநிலங்களில் மனித உரிமை மீறல்களும்

அ)வட கிழக்கு மாநிலங்களில் மனித உரிமை மீறல்கள் . Mr.Venhu (General Seceratry – Naga people movoment)

ஆ)குடிமை மீறல் சிறப்பு சட்டங்கள்.Mr.Vijay kumar (National Law school)

இ) காஷ்மீரின் வரலாறும், மனித உரிமை மீறல்களும்.Mr.Deena (Other media)

4) தெற்காசிய நாடுகளில் மனித உரிமை மீறல்கள் .Mr.Sethu(friends of Tibet)

5) புவி சார் அரசியலும் , பொருளாதார நலன்களும் .Mr.arivazhagan(Freelance journalist)

6) மனித உரிமை அமைப்பின் செயல்பாடுகள். Mr.paul Newman(Lecturer – bangalore university)

இடம்.யுனைட்டட் தியாலஜிக்கல் கல்லூரி

(United thelogical collage – #63,Millers Road,Benson Town,Bangalore-46. Landmark- Behind contonement railway station)

நாள்.25/10/2009 நேரம். மாலை 3.00 மணியிலிருந்து 7.00 மணிவரை (Evening-3.00P.m to 7.00P.M)


இந்த நிகழ்வு வெற்றிபெற உங்களது பங்களிப்பாக நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். இதனை பெங்களூர்வாழ் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள். மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தெரியப்படுத்துங்கள்.

மின்னஞ்சலுக்கு வசதியாக ஆங்கிலத்தில் கீழே:

The Conference On “ Human rights violation in South Asia”

Topics

1) srilanka’s human right violations

a)freedom of journalists.  R.K.Mattu (Chief journalist – Indian express)

b) militrization . R.K.Mattu (Chief journalist – Indian express)

c) situation’s of the IDP camps. Father. Prakash louise (South asia Director – JFG REFUGEE SERIVCE)  .

2)  Human rights violation of tamil fisherman– Mr.Muruganandham (Seceretry – Tamil nadu fisherman association) .

3) human right violations in north-east states of India

a) special laws which protect government-Mr.Vijay kumar (National Law school)

b) freedom of journalist- Mr.Venhu (General Seceratry – Naga people movoment)

c) The History of Kashmir & their human rights violation -Mr.Deena (Other media)

4) human right violations in south asian region

a) dibet , nepal , miyanmar -Mr.Sethu(friends of Tibet)

5) geographic politics & their financial supports-Mr.arivazhagan(Freelance journalist)

6) Functions of a Human right organizations -Mr.paul Newman(Lecturer – bangalore university)

Place – United thelogical collage – #63,Millers Road, Benson Town,Bangalore-46. Landmark- Behind cantonment railway station)

Date : 25/10/2009  Time – Evening-3.00P.m to 7.00P.M

ஈழத்து பங்காளியும் காங்கிரசு முதலாளியும்!

ஒக்ரோபர் 14, 2009 § 3 பின்னூட்டங்கள்

DMK front team-1

இந்த பதிவை எழுதுவதற்கு முன்னர் இதுதான் தோன்றியது “இன்னுமாய்யா நம்ம மக்கள் இவனுகள நம்புதுன்னு”. தாயக தமிழகத்தின் மிக அருகிலேயே எண்ணற்ற தமிழர்கள் கொலைசெய்யப்பட்டு மீததமிழகர்கள் முகாம் என்ற பெயரில் முள்வேலிக்கம்பிக்கு பின்னால் சிறைவைக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்திலும் நில்லாமல் தொடர்கிறது துரோகநாடகங்கள். ஈழத்தில் தொப்புள்கொடி உறவுகள் மீது கொத்துகொத்தாய் குண்டு விழுந்தபொழுது துடித்துபோன தயகதமிழர்கள் போரை நிறுத்துங்களேன் என்று வேண்டுகோள் விடுத்தோம். எம்மால் கொதித்து எழமுடியவில்லை காரணம் “நானும் ஈழத்தமிழ் ஆதரவாளன்!” என்று முழக்கமிட்ட திமுகவின் ஆட்சி தமிழகத்தில். போர் நிறுத்தத்தை வலியுறுத்துவார்கள் என்று நாம்நினைத்தால் அதற்கு மாறாக நிவாரணபொருட்கள் அனுப்புகிறேன் என்று திசைதிருப்பியது திமுக. குண்டுவிழுவதை எம்மால் நிறுத்தமுடியாது வேண்டுமானால் சோத்துபொட்டலம் அனுப்புகிறேன் என்றது.

திமுக கூட்டணியின் முதலாளி காங்கிரசு ஆயுதங்களையும் வட்டியில்லாகடனா சில ஆயிரம்கோடிகளையும் சிங்கள அரசிற்கு கொடுத்தது முதலாளியின் இந்தபாதகசெயலை மூடிமறைக்கும்விதமாக நிதிதிரட்டி அனுப்புகிறோம் என்று அனுப்பியது திமுக அரசு.அந்த நிவாரணபொருட்கள்கூட தமிழர்களைசென்று சேர்ந்ததா? என்று இவர்கள் உறுதி செய்யவில்லை அனுப்பிவிட்டோம் கொடுப்பார்கள் என்று நம்புகிறோம் என்றேதொடர்ந்து ஒலித்தது. அப்போதும் நமக்கு புத்தியில்லை  திரும்பதிரும்ப “முதல்வர் அய்யா எப்படியாவது காப்பாத்துங்க” வென்று தொடர்ந்து குரல்கொடுத்தோம். தொடர்உண்ணாவிரதங்கள்  கொட்டும்மழையில் மனிதசங்கிலி, தீக்குளிப்பு, பேரணி, கண்டன கூட்டங்கள் என்று பலதிசையில் நாம் பயனப்பட்டாலும் சிங்களனுக்கு உதவி என்ற நிலையில் சிறிதும் பின்வாங்காமல் தொடந்து சென்று காங்கிரசு தலைமை.ஈழ ஆதரவு போராட்டம் தமிழகத்தில்  பெரியளவில் கிளர்த்து எழுந்துவிடாமல் அனைத்து வழிகளிலும் காயடிப்பு வேலைகளை கச்சிதமாக பார்த்து கொண்டது திமுக அரசு.

p112

இந்தியா சீன பாகிஸ்தான் என்று பக்கத்து நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து உதவிகள் செய்ய தம்மால் முடிந்தளவிற்கு இனப்படுகொலைகளை எந்தவிததடயமுமின்றி நடத்திகாட்டியது சிங்களபேரினவாத அரசு.  இறுதிநாட்கள் மிகச்சரியாக காங்கிரசு இந்தியாவில் பெற்றவெற்றியினை தொடர்ந்து நடந்தேறியுள்ளது. வெட்கமில்லாமல் தமிழகத்தில் பெருவாரியாக வாக்களித்து காங்கிரசுகூட்டணிக்கு வெற்றியை தந்திருக்கிறார்கள் தாயகதமிழர்கள். காங்கிரசுதலமை எப்படி கர்நாடகதேர்தலை முன்னிட்டு ஒகேனக்கல் குடிநீர்திட்டத்தை ஒத்தி வைக்கும்படி தனது வேலைக்காரனான திமுகவை கேட்டு கொண்டதோ அதேபோலே தேர்தல் முடியும் வரை பொறுத்திருங்கள் என்று சிங்களவர்களிடம்  கட்டளை இட்டு இருக்கலாம் என்றேதோன்றுகிறது.

போர் நடந்து முடிந்து இவ்வளவுநாளாகியும் முள்வேலி கம்பிகளுக்கு உள்ளே சிறைப்பட்டிருக்கும் தமிழர்களை விடுவிக்க மறுத்துவருகிறது சிங்கள இனவாத அரசு. முகாம்மக்களை விடுதலை செய்யும்படி உலகின் பல்வேறு மனித உரிமைகள் அமைப்புகள் குரல்கொடுத்துவருகின்றன. அல்ஜசீரா என்னும் தொலைக்காட்சி முகாமின் தற்போதைய நிலையை  தெளிவாக உலகிற்கு தெரிவித்தது. இந்தநிலையில் முகாமிலிருந்து தமிழர்களை விடுவிக்கவேண்டும் என்ற கோரிக்கையை நம்மாளுங்க திமுகதலைவரிடமே கொண்டு சென்றார்கள். சிங்களன் எத்தனை தமிழர்களைகொன்று ஒழித்தாலும் எம்முடைய உறவு சிங்களனுடந்தான் என்ற நிலையிலிருந்து மாறுவதில்லை என்கிறது காங்கிரசு முதலாளி. சிங்களனுக்கு தேவையான பணவுதவிகளை செய்வதற்கு தயாராகவும் இருக்கிறது இது திமுக கைகூலிகளுக்கும் நன்கு தெரியும். வழமை போலவே திமுக தனது நாடகத்தை இங்கே துவங்கிவிட்டது இந்தியநாடாளுமன்றகுழு தமிழர்களுக்காக அனுப்புகிறோம் என்று பேரில் அனுப்பி இருக்கிறார்கள். சிங்களன் கைகாட்டும் முகாம்களைமாத்திரம் இவர்கள் பார்வை இடுவார்கள் முகாம் சிறப்பாக இருக்கிறது அதே வேளையில் உனக்கு பற்றாக்குறை இருக்கிறது என்று சொல்லப்போகிறார்கள். தமிழர்களுக்கு உதவுகிறோம் என்ற பெயரில் சிங்களனுக்கு நிதி வழங்கப்போகிறார்கள். முள்வேலி கம்பிகளுக்கு இடையே சிக்கிதவிக்கும் மக்கள் தொடர்மழையாலும் தொற்றுநோய்களாலும் படப்போகும் இன்னல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்க போகின்றன.

சிங்களனுக்கு நிதி வழங்கும் திட்டத்திற்குத்தான் இந்த குழுக்கள் பயன்படப்போகின்றன. மேலும் பிறநாடுகளில்  தன்னாவர்வ அமைப்புகள் தமிழககுழுக்களே அங்கே அவலம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள் நமக்கு என்ன?  என்று அமைதியாகிவிடப்போகின்றன. சிங்களனுக்கு சென்று சேர்ந்த நிதி தமிழனுக்கு சென்றுசேர்ந்ததாக கூறி  ‘திமுக’ தலைவருக்கு இங்கே பாராட்டுவிழாக்கள் கூட நடக்கலாம்.

இனவெறியன் ராசபக்சேவிற்கு பொன்னாடைபொத்தி கட்டிபிடித்து தமிழர்களை கருவழித்தமைக்கு  தமது வாழ்த்துக்களை தனது வேலைக்காரனான திமுக மூலம் செய்து முடித்துவிட்டது காங்கிரசு தலைமை. அங்கே இன்னலுறும் மக்களை காணச்சென்ற குழு ஏதோ திருவிழா போன்று சிலைக்கு மாலை அணிவித்தல், பொன்னாடை போர்த்தல், பூக்குடை வழங்குதல் என்று இருக்கிறது. இந்த திருவிழா கூட்டத்தில் திருமாவளவன் காணமல் போன குழந்தையாக காட்சியளிக்கிறார். இதற்க்கு இந்தியா சீக்கியர்கள்  அல்லது வேறுமாநில (திராவிட மாநிலங்கள் அல்ல) ஊறுப்பினர்களைகூட அனுப்பி இருக்கலாம் . அவர்களிடம் கூட சிறிதளவு மனிதாபிமானத்தை  நாம் எதிர்பார்க்கலாம். இந்த திமுககூட்டணி கூலிப்படையைவிட கேவலமாக இருக்கிறது.

இந்த குழுவினை பத்தி நம்மிடம் கேள்விகள் சில மிஞ்சியுள்ளன.

1. சிங்கள அரசின் விருந்தினராக இவர்கள் போயிருக்கிறார்களா அல்லது தமிழர் பிரதிநிதிகளாக போயிருக்கிறார்களா?


2.  முகாம்நிலை படுமோசம் என்று இந்தகுழு கூறினால் இலங்கையோடு உறவை இந்தியா முறித்து கொள்ளுமா?

3. இந்த குழுவிற்கு என்ன அதிகாரம் இருக்கிறது? இதன் அறிக்கை சிங்களரசிற்கு உதவி செய்வதைவிட வேறு என்னவாக இருக்க முடியும்?

4. தமிழர்களுக்காக சென்ற குழு ராசபக்சேவுடன் நெருக்கம் காட்டவேண்டிய அவசியம் என்ன? அரசு விருந்தினரான உங்களிடம் மக்கள் எப்படி உண்மையை எதிர்பார்க்க முடியும்.

5. தமிழர்களின் பிரச்சனைக்கு எந்தவிதத்தில் இந்த குழு தீர்வு சொல்லும்.

இலங்கை தூதரகத்தின் பூத்தொட்டிகளை உடைத்த புதியதமிழகம் கட்சி உறுப்பினர்களை சிங்களனை திருப்திபடுத்த காங்கிரசு முதலாளி கைது  செய்கிறது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து சுடப்படுகிறார்கள் அது குறித்து இலங்கையை தட்டிகேட்க திமுக பயப்படுகிறது. சிங்களன் கோவித்து கொண்டால் முதலாளியும் கோவித்து கொள்வார் இல்லையா?  முல்லை பெரியார் குறித்தோ மீனவர் படுகொலைகள் குறித்தோ, ஒகேனக்கல் குடிநீர் திட்டம் குறித்தோ முதலாளியின் உத்தரவிற்காக வேலைக்காரன் காத்துகிடக்கிறான்.

யாரோ ஒரு நண்பர் சொல்லி இருந்தார் (தி)முகவின் வலது கையில் ஈழத்தமிழனின் இரத்தமும் இடது கையில் சிங்களனின் மலமும் ஒட்டி கொண்டிருக்கிறது என்று. அது உண்மைதான் போலும். காங்கிரசின் கைகூலிகளை திட்டினால் உடனே சுபவீக்களுக்கு சுருக்கென்று இருக்கும் உடனே கிளம்பிடுவாய்ங்க.

யார் உண்மையான பத்திரிக்கையாளன்?

ஒக்ரோபர் 9, 2009 § 11 பின்னூட்டங்கள்

யார் உண்மையான பத்திரிக்கையாளன்?

lasantha

அவன் ஒரு சிங்கள பத்திரிக்கையாளன் நாட்டின் ஜனாதிபதியுடன் விருந்துண்ணும் அளவிற்கு செல்வாக்கு பெற்றவன், ஜனாதிபதியின் நெருங்கிய நண்பனும் கூட. ஆனால் தனதுநாட்டில் அரசின் ஆசிர்வாதத்துடன் சிறுபான்மை மக்களின் வாழ்வியல் உரிமைகளை பறிக்கும் சிங்களபேரினவாதத்தை கண்டு உள்ளம் கொதிக்கிறான். ஒரு பத்திரிக்கையாளனாக உண்மை செய்திகளை தனது ஊடகத்தின் மூலம் உலகிற்கு  தெரிவிக்கிறான். ஆளும்வர்க்கம் கோவம் கொள்கிறது. பேரம் நடக்கிறது இருந்தும் தனது கடமையை புறம்தள்ள அந்த பத்திரிக்கையாளனால் முடியவில்லை. தொடர்ந்து சிங்கள பேரினவாதத்தை உலகிற்கு தோலுரித்து காட்டுகிறான்.  இவன் மேலும் வாய்திறந்தால் நமக்கு ஆபத்து என்ற முடிவுக்கு வந்த அரசு உயிர் பயம் காட்டுகிறது. உயிரே போனாலும் தனது லட்சியத்தில் பின்வாங்குவதில்லை என்ற முடிவிற்கு அந்த பத்திர்க்கையாளன் வருகிறான். தனது முடிவு இதுவாகத்தான் இருக்கும் என்று முன்கூட்டியே உணர்ந்து கொண்டு தனது மரணசாசனம் தீட்டுகிறான். எதிர்பார்த்தது போலவே ஆளும்வர்கத்தால் படுகொலை செய்யப்படுகிறான். அவன் மரணத்தை தொடர்ந்து அவனது மரணசாசனம் வெளிவந்தது அந்த பத்திரிக்கையாளனின் நெஞ்சுரத்தை உலகிற்கு உணர்த்துகிறது.

thisainaayam

அவன் ஒரு தமிழ் பத்திர்க்கையாளன் தனது நாட்டில் தன்னுடைய இனத்தை சேர்ந்த மக்களுக்கு எதிராக நடக்கும் இன ஒதுக்கல் மற்றும் இனப்படுகொலைகளை நேரிடையாக பார்க்கிறான். ஒரு பத்திர்கையாளனின் கடமை என்னவென்பதை நன்கறிந்து இருந்தாலும் தான் வாழும் நாட்டில் பத்திரிகை சுதந்திரம் கேலிக்கூத்தான ஒன்று என்பதை நன்கறிவான். தனது எழுத்துக்களால் சொல்லன்னா துயர்களை தான் அடையவேண்டியிருக்கும் என்பதும் அவனுக்கு தெரிந்திருந்தது. இருந்தாலும் தனது சிறுபான்மை இனத்திற்காகவும் தனது பத்திரிகை தொழிலின் நேர்மையின் பொருட்டும் உண்மைகளை எழுதுவது என்று தீர்மானித்தான். தொடர்ந்து எழுதினான் மிரட்டல்கள் தொடர்ந்தது இருந்தும் எழுதினான். அரசு கடுமையான சட்டத்தின் மூலம் சுமார் 425 நாட்கள் சிறையில் அடைத்தது. நீதிமன்றமோ இருபது ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை என்று தீர்ப்பளித்து இருக்கிறது.   நியூயார்க்கைச் சேர்ந்த ‘பத்திரிகையாளர் பாதுகாப்பு குழு‘ என்ற அமைப்பு  ஆண்டிற்கான ‘பன்னாட்டு ஊடக சுதந்திர விருது‘ அளித்திருக்கிருக்கிறது. இருந்தும் இந்த பத்திரிக்கையாளர் சிறைக்கம்பிகளுக்கு பின்னே கடுங்காவலுக்கு மத்தியில் சிறைத்தண்டனை அனுபவித்து கொண்டிருக்கிறார்.

மேலே கூறிய இரண்டு நிகழ்வுகளும் தமிழகத்தின் மிக அருகே இருக்கும் இலங்கை தீவில் நடைபெற்றவை. சிங்களரான லசந்தாவும் தமிழரான திசநாயகமும் தாம் மேற்கொண்ட ஊடகவியல் தொழிலின் பொருட்டு ஒருகணமும் தமது நேர்மையில் பின்வாங்காமல் இருந்து பெரும் துயருக்கு ஆளானவர்கள்.  தனது நாட்டின் சர்வாதிகாரபோக்கினை நன்கு உணர்ந்திருந்தாலும் தமது கடமையை மறக்காத இந்த இரண்டு ஊடகவியலாளர்களும் நாம் வாழும் காலத்தில் நமக்கு மிக அருகில் இயங்கி கொண்டு இருந்திருக்கிறார்கள். இவர்கள் பெயர்களை கேட்டாலே ஊடகவியலாளர்கள் மேலே நமக்கு தன்னாலே மதிப்பு ஏற்படும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியுமா?
inthuram
இதே நேரத்தில் இந்தியாவிலும் எத்தனையோ பத்திரிக்கையாளர்கள் இருக்கிறார்கள். லசந்தாவை போன்றே சிங்கள ஜனாதிபதியுடன் விருந்துண்ணும் அளவிற்கு நெருக்கமான ‘இந்து’ ராம். ஒரு ஊடகவியலாளராக சிங்கள அரசின் அகதிமுகாம்களை பார்வையிடுகிறார். அகதிமுகாமின் நிலைமையை சிங்கள ஊடகவியலாளர்களே கடுமையாக விமர்சிக்கும் பொழுது ஜனநாயகநாட்டின் ஊடகவியலாளர் அகதி முகாமிற்கு நற்சான்றிதழ் வழங்குகிறார். பொய்யாக அகதிமுகாம் பற்றிய தனது புனைவுகள் மூலம் மக்கள் நலமுடன் இருப்பதாக எழுதுகிறார்.

அதே நேரத்தில் தமிழகத்தில் தேநீர்கடைகளில் அதிகம் விற்பனையாகும் நாளிதழ் ஒன்றின் ஊடகவியலாளர் விபச்சாரத்தில் ஈடுபட்டு காவல்துறையில் மாட்டிக்கொண்ட ஒரு பெண்மணி காவல்துறையிடம் அளித்ததாக சொல்லி பிரபல நடிகைகள் சிலரின் படத்தோடு செய்தி வெளியிடுகிறார். கொதித்தெழுந்த திரைத்துறை காவல்துறையிடம் முறையிடுகிறது கண்டன கூட்டம் நடத்துகிறது. உடனே காவல்துறை பொருப்பாசிரியரை கைது செய்து 15 நாட்கள் சிறையில் தள்ளுகிறது. உடனே ஒருங்கிணைந்த தமிழகபத்திரிகையாளர்கள்  பத்திரிகை சுதந்திரம் போச்சேன்னு கூப்பாடு போடுகிறது. அந்த ஊடகவியலாளர் வெளிட்ட செய்திக்கு கைது செய்வது சரியா வேண்டுமென்றால் வழக்கு போடுங்கள் பார்த்து கொள்ளலாம் என்று பத்திரிகையாளர்கள் வாதம் செய்கிறார்கள். ஈழம் பற்றி சிங்கள பேரினத்தின் குரலாக இந்த பத்திரிகை செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

முற்போக்கு முகமுடிக்கு சொந்தக்காரர் ‘ஞானி’ இதே நேரத்தில் ஒரு திரைப்பட இயக்குனர் பத்தி எழுதி அவரு இவருக்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து பதலுக்கு இவரு அவரைவிட கடுமையான பதிவை வெளியிட்டு பரப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

இலங்கையில் கடுமையான சட்டங்களுக்கு மத்தியில் தனது உயிரையும் உடமையையும் பொருட்படுத்தாமல் நேர்மையாக செயல்பட்டு உரிமையையும் உயிரையும் இலங்கை ஊடகவியலாளர்கள் இழந்துவிட்ட இந்த சூழலில் இந்தியாவில் ‘அம்சா’ என்ற சிங்கள கைக்கூலி மூலம் பணம் பெற்று சிங்களபேரினவாத கருத்துக்களை வெளியிட்டு உள்ளனர் என்ற குற்றச்சாட்டுக்களோடு ஜூனியர் விகடனில் இருந்து பணிநிக்கம் செய்யப்பட்டுள்ளார் ஊடகவியலாளர் ஒருவர்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பத்திரிக்கையாளர்கள் நடிகைகளின்  விபச்சாரம், திரைப்படம் குறித்த விமர்சனங்கள் மட்டுமே பத்திரிகை தர்மம் என்று நம்பிக்கொண்டு செயல்படும் இன்றைய சூழலில் லாசந்தா திசநாயகம் போன்றோர்களின் செயல்பாடுகள் இந்து ‘ராம்’ முற்போக்கு ‘ஞானி’ தினமலர் ‘லெனின்'(  இந்த பேரு வைத்தவர்களை என்ன சொல்வது?) முகங்களில் காரி உமிழ்வதாக இருக்கிறது.

சீமானை கண்டாலே உதறல் கொள்ளும் தமிழின விரோதிகள்!

ஒக்ரோபர் 6, 2009 § 14 பின்னூட்டங்கள்

சீமானை கண்டாலே உதறல் கொள்ளும் தமிழின விரோதிகள்!

seeman

சமீபகாலமாகவே ‘சீமான்’ என்ற பெயரினை கேட்டாலே தமிழின விரோதிகளுக்கு உதறல் எடுக்க ஆரம்பித்து விடுகிறது. சீமானை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள துணிவில்லாத கோழைகள் சீமானை சைமன் என்றழைத்து தங்கள் அரிப்பை தீர்த்து கொள்கிறார்கள்.  சீமானை பெரும்பாலும் குறிவைப்பவர்கள் இந்துத்துவாசக்திகளே என்பதை நான் சொல்லி தெரியவேண்டுமா என்ன?  சிலநேரம் தவறான புரிதல்காரணமாக சில முற்போக்குவாதிகளும் தங்களை முற்போக்குவாதிகள் என்று காட்டதுடிக்கும் சில பிழைப்புவாதிகளும் சீமானை எதிர்ப்பது உண்டு. சீமான் பெரியாரின் பேரனா? என்று இவிகேஸ் இளங்கோவனின்  குரலை கடன்வாங்கி சில பெரியார்வாதிகள் கேள்விகள் எழுப்பினது வேதனையிலும் வேதனை.

சீமான் இந்துத்துவவாதிகளை நோக்கி தொடுத்த கேள்விகணைகள் கண்டிப்பாக அவர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கும். கண்டிப்பாக அவர்களால் சீமானை கருத்துரீதியாக எதிர்கொள்ள முடியாது. உடனே நம்மாளுக கையில் எடுத்த ஆயுதம்தான் சைமன். அதாவது சீமான் என்பது உண்மையான பெயர் இல்லையாம் சைமன் என்பதுதான் அவரின் உண்மையான பெயராம். இதன் மூலம் இவர்கள் நிறுவமுயல்வது சீமான் என்ற கிருத்துவன் எப்படி இந்துமதம் பத்தி பேசலாம் என்பதே. அப்படியே இந்த இந்துமதவெறியர்கள் தமிழினகாவலர்களாக வேடமணிந்து கொண்டு “நாம்தமிழர் இயக்கம்” குறித்து அவதூறுகள் பரப்பி கொண்டு இருக்கிறார்கள். சரி அப்படியே  தமிழினத்தை காப்பதே இவர்களின் குறிக்கோள் என்றால் ஈழத்தில் செத்துமடிந்த தமிழ் உறவுகளுக்காக குரல்கொடுத்து இருக்கலாமே? அங்கேயும் போராளிகள் குறித்து அவதூறுகளை அள்ளிவீசினார்கள்.  கிருத்துவன் எப்படி தமிழர்களுக்காக போராடலாம்? என்று புதிதாக கண்டுபிடித்திருக்கிறார்கள் போலும். ஈழத்தில் தமிழர்கள் செத்துவிழுந்தபொழுது தமிழனுக்காக குரல்கொடுக்காமல் ராசபக்சேவுடன் கைகுலுக்கியவர்கள் பார்பன இந்து ‘ராம்’கள் என்பதை தமிழன் மறந்துவிடவில்லை.  இந்த பார்பன இந்துத்துவா கூட்டமே தமிழனுக்கு காலம்காலமாக தூரோகம் இழைத்து வந்தாலும். நாமெல்லாம் இந்து என்று நம்மை நோக்கி வேப்பிலை அடிக்க தவறியதில்லை. இதை நம்பி கொஞ்ச பேரு நாமெல்லாம் இந்துன்னு நினைச்சுக்கிட்டு இருக்கலாம் ஆனால் ஓட்டு மொத்த தமிழினமும் ஏமாந்துவிடாது.

ஈழத்தில் போரை நிறுத்து! என்று நாமெல்லாம் குரல் கொடுத்து கொண்டிருந்த பொழுது நமது குரல்வளையை நெறிப்பது போலே சீமான் மீதும் கொளத்தூர் மணி அவர்கள் மீதும் தேசியபாதுகாப்பு சட்டத்தை வீசியது ஆளும்வர்க்கம். அந்த சட்டத்தை உடைத்து வெளியேவந்த சீமான் மீண்டும் மீண்டும் தமிழின தூரோகத்தை அம்பலப்படுத்தினார். அடக்குமுறைகளை மீறி தமிழகம் எங்கும் ஈழப்போராட்டத்தில் தமிழர்களின் தார்மீக உரிமையை எடுத்து சொல்லிவந்தார்.சீமான் செல்லும் இடமெல்லாம் இளைஞர்படை அவருக்கு பின்னால் அணிவகுத்து நின்றது.  தனிநபரின் பழிவாங்கல் உணர்வுகாரணமாக சிங்களனோடு கைகுலுக்கிய  காங்கிரசின் இரத்தம் தோய்ந்த ‘கை’யை தமிழகத்தில் வீழ்த்துவது என்று சபதம் ஏற்ற சீமான்   தமிழகம் முழுவதும் வலம்வந்தார். சீமானை அரசியல் இயக்கம் எதுவும் ஆதரிக்காத நிலையில் அதிமுக கூட்டணிக்கு ஓட்டுபோடுங்கள் என்று பரப்புரை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். தமிழனின் உணர்வுகளை பிரதிபலிக்க ஒரு கட்சிவேண்டுமென்றே ‘நாம்தமிழர்’ இயக்கத்தினை கட்டும் முயற்சியில் இருக்கிறார் சீமான். அரசு சீமான் மீது தொடுத்த தேசியபாதுகாப்பு சட்டத்திலேயே ‘சீமான்’  என்று குறிப்பிட்டு இருக்கிறது. இந்தியரசு வழங்கிய கடவுசீட்டிலும் சீமான் என்ற பெயரே இருக்கிறது அப்படி இருக்கும் பொழுது இந்த பார்ப்பன கும்பல் சைமன் என்று எதன் அடிப்படையில் கூறுகிறது என்று தெரியவில்லை. அப்படியே சைமன் என்பது உண்மையான பெயராக இருந்தாலும் உங்களுக்கு என்னடா பார்ப்பன நாய்களா? என்று கேட்க தமிழன் தயாராகவே இருக்கிறான்.

சீமானை அவதூறு செய்த அதே கும்பல் ஒரு காலத்தில் பெரியாருக்கு எதிராக இயங்கியது. இந்துமதம் குறித்து பெரியார் என்ன விமர்சித்தாரோ அதையேதான் சீமானும் விமர்சிக்கிறார். ஈவிகேஎஸ் இளங்கோவன் தேர்தல்நேரத்தில் சீமான் பெரியாருக்கு தவறானவழியில் பேரனாக பிறந்து இருக்கலாம் என்று பெரியாரையும் சீமானின் பிறப்பையும் தவறாக விமர்சித்து தேர்தலில் மண்ணை கவ்வி இன்று வீட்டிற்குள் பதுங்கிகிடக்கிறார். இந்த பைத்தியக்காரன்தான் முத்துகுமார் யாருன்னு கேட்ட மேதாவி என்பது கொசுறு தகவல். இப்படி பல்முனை எதிர்ப்புகள் சீமானுக்கு எதிராக எழுப்பபட்டாலும் மக்கள்மன்றத்தில் சீமானின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்ததே தவிர சிறிதும் குறையவில்லை.ஈழத்திற்காக சீமான் பேசியபேச்சுகள் தமிழ் உணர்வாளர்களின் நெஞ்சில் அவருக்கு நிரந்தர  இடத்தை ஒதுக்கிதந்துள்ளது. தமிழ் உணர்வுள்ள இளைஞர்கள் தொடர்ச்சியாக சீமானை நோக்கி நகரத்துவங்கி இருப்பது பார்ப்பனர்களுக்கு எரிச்சலை உண்டுபண்ணி  இருக்கிறது. எங்கே தமிழனுக்காக வலுவான இயக்கம் தோன்றிவிடுமோ? என்ற அச்சத்தில்  சீமானுக்கு எதிராக அவதூறுகளை அள்ளிவிடுகின்றனர். “புரட்சி எப்போதும் வெல்லும் அதை நாளைய தமிழீழம் சொல்லும்” என்று தொடர்ந்து முழங்கி ஈழத்திற்கான பரவலான ஆதவை சீமான் திரட்டிவருகிறார். “இங்கே செத்தவிழுந்த தமிழகமீனவனுக்காகவும் ஈழத்தில் செத்துவிழுந்த நமது தாய்த்தமிழ் உறவுகளுக்காகவும் எதுவும்செய்யாத இந்த அரசியல்கட்சிகளை தூக்கி எறியவேண்டும்” என்ற கோரிக்கையோடு நாம்தமிழர் இயக்கம் தொடர்ந்து நடைபோடுகிறது.

seeman1

சீமான் குரல் எப்போதும் பாமரதமிழனின் குரலாகவே இருக்கும். “உலகெங்கும் அடிவாங்கிய தமிழன் திருப்பி அடித்த ஒரே இடம் தமிழீழம் மட்டுமே!” “உலகபந்தில் தமிழன் வாழாத நாடில்லை ஆனால் தமிழனுக்கு என்று ஒரு நாடில்லை!” என்று சீமான் எழுப்பிய சொற்றொடர்கள் உலகமெங்கும் தொடர்ந்து ஒலித்து கொண்டுதான் இருக்கிறது. பெரியாரின் பேரன் பிரபாகரனின் தம்பி தொடர்ந்து தனது லட்சியபாதையில் முன்னேறட்டும்.

சீமானை சைமன் என்பவர்கள் தங்களை தாங்களே அம்பலப்படுத்தி கொள்கிறார்கள்.  ஈழப்போரில் தமிழர்களுக்கு எதிராக துரோகங்களை செய்த இந்துபாசிச அமைப்புகள் திடீரென்று தமிழர்கள் மீது பாசம் கொண்டதைபோலே சீமானை கிருத்துவர் என்று வசைபாடுகிறது.  கிறுத்துவன் பிறப்பால் திராவிடனாகவும் உணர்வால் தமிழனாகவும் இருக்கிறான். பார்ப்பான் ஒருபோதும் தமிழனாக இருந்ததில்லை என்று எங்களுக்கு தெரியும் பார்பனர்களே இந்த சோ, சுப்பிரமணியசாமி, இந்து ராம் வேலைகள் எல்லாம் எங்களிடம் வேண்டாம்.சீமான் கிறுத்துவன் என்று இந்துத்துவா சக்திகளின் பரப்புரையை தமிழகத்தில் யாரும் பெரிது படுத்தவில்லை. யார் உண்மையான தமிழன் என்பதில் தமிழர்கள் தெளிவாக இருக்கிறார்கள். முட்கம்பிவேலிகளை அறுத்தெறிவோம் என்று தமிழகம் முழுவதும் குரல்கள் ஒலிக்கத்துவங்கி விட்டன.  தடுப்புமுகாமில்  இருக்கும் தமிழர்களை விடுவிக்க தாயகதமிழர்கள் ஓரணியில் கைகோர்ப்பது அவசியம்.கடந்த காலத்தில் அதிமுகவை ஆதரித்தது போன்ற தவறான சூழலுக்கு நாம் தள்ளப்படாமல் இருக்க “நாம்தமிழர் இயக்கம்” வலுப்பெறுதல் அவசியம்.

இந்துத்துவா சக்திகள் முடிந்தால் சீமானோடு ஒரேமேடையில் விவாதிக்கட்டும்.  விவாதிக்கும் திறன் அவர்களுக்கு இல்லை என்பது நமக்கு நன்றாகத்தெரியும். இவர்களின் அவதூறுகள் காலத்தால் புறம் தள்ளப்படட்டும். சீமான் என்ற எளியவன் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமால்  ஈழ ஆதரவு போராட்டத்தில்  தொடர்ந்து செல்லட்டும். உலகத்தமிழனை ஒருங்கிணைக்கும் பேச்சாற்றலும் சிந்தனையும் சீமானுக்கு உண்டு என நாமறிவோம்.  சீமான் பெரியாரியலை பரப்ப கருவியாக இருக்கிறார் என்பது பெரியாரின் தொண்டர்களுக்கு நன்றாகத்தெரியும். சீமானின் பேச்சுகள் தொடர்ந்து இந்துத்துவவாதிகளின் தூக்கத்தை கெடுக்கட்டும் தமிழர்களுக்கு பகுத்தறிவை கொடுக்கட்டும்.

சுபவீயின் பிழைப்புவாதம் தொடர்கிறது……..!

ஒக்ரோபர் 5, 2009 § 9 பின்னூட்டங்கள்

சுபவீயின் பிழைப்புவாதம் தொடர்கிறது……..

laugh_now_cry_later_by_grace72.png

யாராவது தமிழை தெளிவான உச்சரிப்புடன் அழகியலோடு கையாண்டாலே அவரை தமிழின உணர்வாளர் என்று நம்மனது ஏற்றுகொள்ளும். அப்படி வெகுநாட்களாக தமிழ்கூறும் நல்லுலகில் தமிழின உணர்வாளராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர் பேராசிரியர் சுபவீ. தமிழின உணர்வாளர் என்பதாலே புலம்பெயர் தமிழர்கள் இவரை தோளில்வைத்து கொண்டாடியது முந்தைய வரலாறு. உலகெங்கும் ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலைகள் பத்திவகுப்பெடுத்து வந்த சுபவீ இப்பொழுது அறிவாலயம் பக்கமாக ‘பக்காவாக’ வகுப்பெடுத்து கொண்டிருக்கிறார்.

நாளுக்குநாள் ஈழத்தில் படுகொலைகள் அதிகரிக்க அதிகரிக்க சுபவீயின் கால்கள் ஈழ ஆதரவு போராட்டத்திற்கு எதிர்திசையில் நடைபோட ஆரம்பித்தது. செத்துவிழுந்த தொப்புள்கொடி உறவுகள்பத்தி கவலைப்படவேண்டிய சுபவீ எங்கே கருணாநிதியின் நாற்காலி கவிழ்ந்து விடுமோ? என்று கவலைகொள்ள ஆரம்பித்துவிட்டார். திசைமறந்த பறவைபோலே  ஈழம் என்ற வார்த்தையை உச்சரிப்பதை நிறுத்தி விட்ட சுபவீ மீண்டும் மக்கள் மன்றங்களில் பேசத்துவங்கி இருக்கிறார்.

வருடந்தோறும் கருணாநிதியை வாழ்த்தி ‘வஞ்சப்புகழ்ச்சி தூக்கலாக’ நடைபெறும் கவியரங்கில் மேடையேறிய சுபவீ முழுக்கமுழுக்க கருணாநிதிதாசனாக மாறிப்போனார். வழமையாக எதையாவது அள்ளிவிடும் செகத்ரட்சகனே வெட்கப்படும்படியாக நம்மாளு வெளுத்து வாங்கி இருக்கிறார். அதெல்லாம் அவர்கள் உட்கட்சி விவகாரம் அதைபத்தி நாம் கவலைபடவேண்டியதில்லை.  நமக்கு கவலை எல்லாம் சுபவீயின் “பிரபாகரனின் இருப்பு பற்றிய கசப்பான உண்மை” என்ற தலைப்பில் குமுதம் இணையதளத்தில் கொடுத்தநேர்காணல் பற்றியதுதான்.

suba

இந்த நேர்காணலில் கருணாநிதி விசுவாசத்தை மிகத்தெளிவாக வெளியிட்டு இருக்கிறீர்கள்.பிரபாகரன் இல்லை என்ற தகவலை இந்த நேர்காணலின் மூலமாக உலகத்தமிழ் மக்களுக்குகூற விரும்புவதாக கூறி இருக்கிறீர்கள். உங்களிடமிருந்து எந்தவொரு தகவலையும் உலகத்தமிழ்மக்கள் எதிர்பார்க்கவில்லை என்ற நிதர்சன உண்மையை நீங்கள் அறியாமல் இருக்கமாட்டீர்கள். உலகத்தமிழர்களின் இதயங்களில் இருந்து நீங்கள் தூக்கி எறியப்பட்டு வெகுநாட்கள் ஆகின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை.

ஈழத்தமிழன் கொன்றழிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் உலகத்தமிழ்மாநாடு தேவையா? என்று நியாயமான கேள்விக்கு உங்களது பதில் ஏற்றுகொள்ளும்படி இல்லையே! ஈழத்தமிழர்கள் செத்துவிட்டால் எல்லாம் முடிந்துவிட்டது என்று அர்த்தமா? தமிழை வளர்க வேண்டாமா? என்று அறிவுப்பூர்வமாக கேள்விகேட்கும்  நீங்கள் அதற்கும் ஒருபடி மேலேசென்று இந்த மாநாடுகூட ஒருவழியில் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு  தீர்வுகாணும் என்று அளந்து விடுகிறீர்கள். கேப்பையில் நெய்வழிகிறது என்று இன்னும் எத்தனை காலத்திற்கு கதையளக்கபோகிறீர்கள்?.

ஈழத்திற்காக போராடியர்கள் அப்படியே முடக்கி போனார்களா? அவர்கள் இயங்கவில்லையா என்று கேள்வி கேட்கும் நீங்கள், கலைஞரை குற்றம் சுமத்துபவர்கள்  என்ன தீக்குளிப்பு போராட்டமா நடத்தினார்கள்? என்று கேட்டு இருக்கிறீர்கள். முத்துகுமார் நியாபகம் இருக்கிறதா சுபவீ அவர்களே? முத்துகுமாரின் தியாகத்தை மறைத்து அதே வேளையில் அழகிரியின் பிறந்தநாளை கோலாகாலமாக கொண்டாடிய கருணாநிதியின் துரோகத்தை மறைக்கமுடியுமா?அல்லது கருணாநிதியின் ஊடகங்கள் செய்த இருட்டடிப்பை மறக்கமுடியுமா?  முத்துகுமார் கருணாநிதிபத்தி எழுதியதை மறுவாசிப்பு செய்துபார்க்க சம்மதமா?

அப்படியே உங்கள் முன்னாள் தோழர் சீமானையும் காட்டி கொடுக்கிறீர்கள் “சீமான்  இத்தருணத்தில் உலகத்தமிழ் மாநாடு கூடாது என்கிறார்! அதே நேரத்தில் ‘உத்தரவு’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்” என்கிறீர்கள். கலைஞர் அன்று முதல் இன்றுவரை ஈழத்தமிழனுக்காக உழைக்கிறார் என்கிறீர்கள். அவரின் அந்த உழைப்பினால் இதுவரை ஈழத்தமிழன் துயரம் எந்தளவிற்கு துடைக்கப்பட்டது என்று சொல்லமுடியுமா? அகதி முகாம்கள் அருமையாக இருக்கின்றன என்ற பார்ப்பன இந்து ராமிற்கும் இலங்கையில் சுமூகநிலை நிலவுகிறது என்று சொன்ன கருணாநிதிக்கும் பெரிதாக என்ன வித்தியாசம் இருக்க முடியும் சுபவீ அவர்களே? போர் வந்தால் மக்கள் சாவது இயல்புதான் என்ற செயலலிதாவும்  மழைவிட்டும் துவானம் தூவுவது இயல்புதான் என்று கருணாநிதியும் ஒரே குரலில் ஒலித்தது  உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா?

karunanidhi-sonia1-300x293

ஆகமொத்தம் இங்கே ஈழத்திற்காக நடந்தபோராட்டங்கள் எல்லாமே கருணாநிதியின் ஆட்சியை கவிழ்க  நடந்த சதிமுயற்சி என்கிறார் சுபவீ.  ஈழத்திற்காக உண்மையாக போராடியர் கருணாநிதி மட்டுமே என்று பெரியார்மீது அடித்து சத்தியம் செய்கிறார்.  இவர் கனிமொழியோடு சேர்ந்து ஈழத்தமிழர் விடுதலைக்கு  ‘லாபி வொர்க்’ பார்த்துகொண்டு இருக்கிறாராம்.  கருணாநிதி காங்கிரசோடு கைகோர்த்து கூடசரி என்கிறார் ஈழத்தில் தமிழர்களை கொன்ற ராசபக்சே போன்று இந்தியாவில் முகமதியர்களை கொலை செய்த பா.ச.க ஆட்சிக்கு வந்திடும் அபாயத்தில் இருந்து காப்பதற்கே காங்கிரசு கூட்டணியாம். இதற்கு முன்பு கருணாநிதி பா.ச.கவோடு கைகோர்த்து பற்றிகேட்டால் அது போனமாசம் இது இந்தமாசம் என்று சொன்னாலும் சொல்லுவார். சுபவீயை கொண்டாடியதற்காக புலம்பெயர் தமிழர்கள் கண்டிப்பாக வருந்துவார்கள் அப்படி வருந்துபவர்களில் நானும் ஒருவன்.

‘பெரியார்விருது’ வீரமணிக்கும், ‘அண்ணாவிருது’ கருணாநிதிக்கும் ‘கலைஞர்விருது’ ஸ்டாலினுக்கும் கொடுக்கப்பட்டு விட்டது ‘கனிமொழிவிருது’ நமது சுபவீக்கு அடுத்த ஆண்டு அளிக்கப்படும் என்று நம்புவோமாக!

Where Am I?

You are currently viewing the archives for ஒக்ரோபர், 2009 at தமிழன்பன் பக்கம்.