சுபவீயின் பிழைப்புவாதம் தொடர்கிறது……..!

ஒக்ரோபர் 5, 2009 § 9 பின்னூட்டங்கள்


சுபவீயின் பிழைப்புவாதம் தொடர்கிறது……..

laugh_now_cry_later_by_grace72.png

யாராவது தமிழை தெளிவான உச்சரிப்புடன் அழகியலோடு கையாண்டாலே அவரை தமிழின உணர்வாளர் என்று நம்மனது ஏற்றுகொள்ளும். அப்படி வெகுநாட்களாக தமிழ்கூறும் நல்லுலகில் தமிழின உணர்வாளராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர் பேராசிரியர் சுபவீ. தமிழின உணர்வாளர் என்பதாலே புலம்பெயர் தமிழர்கள் இவரை தோளில்வைத்து கொண்டாடியது முந்தைய வரலாறு. உலகெங்கும் ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலைகள் பத்திவகுப்பெடுத்து வந்த சுபவீ இப்பொழுது அறிவாலயம் பக்கமாக ‘பக்காவாக’ வகுப்பெடுத்து கொண்டிருக்கிறார்.

நாளுக்குநாள் ஈழத்தில் படுகொலைகள் அதிகரிக்க அதிகரிக்க சுபவீயின் கால்கள் ஈழ ஆதரவு போராட்டத்திற்கு எதிர்திசையில் நடைபோட ஆரம்பித்தது. செத்துவிழுந்த தொப்புள்கொடி உறவுகள்பத்தி கவலைப்படவேண்டிய சுபவீ எங்கே கருணாநிதியின் நாற்காலி கவிழ்ந்து விடுமோ? என்று கவலைகொள்ள ஆரம்பித்துவிட்டார். திசைமறந்த பறவைபோலே  ஈழம் என்ற வார்த்தையை உச்சரிப்பதை நிறுத்தி விட்ட சுபவீ மீண்டும் மக்கள் மன்றங்களில் பேசத்துவங்கி இருக்கிறார்.

வருடந்தோறும் கருணாநிதியை வாழ்த்தி ‘வஞ்சப்புகழ்ச்சி தூக்கலாக’ நடைபெறும் கவியரங்கில் மேடையேறிய சுபவீ முழுக்கமுழுக்க கருணாநிதிதாசனாக மாறிப்போனார். வழமையாக எதையாவது அள்ளிவிடும் செகத்ரட்சகனே வெட்கப்படும்படியாக நம்மாளு வெளுத்து வாங்கி இருக்கிறார். அதெல்லாம் அவர்கள் உட்கட்சி விவகாரம் அதைபத்தி நாம் கவலைபடவேண்டியதில்லை.  நமக்கு கவலை எல்லாம் சுபவீயின் “பிரபாகரனின் இருப்பு பற்றிய கசப்பான உண்மை” என்ற தலைப்பில் குமுதம் இணையதளத்தில் கொடுத்தநேர்காணல் பற்றியதுதான்.

suba

இந்த நேர்காணலில் கருணாநிதி விசுவாசத்தை மிகத்தெளிவாக வெளியிட்டு இருக்கிறீர்கள்.பிரபாகரன் இல்லை என்ற தகவலை இந்த நேர்காணலின் மூலமாக உலகத்தமிழ் மக்களுக்குகூற விரும்புவதாக கூறி இருக்கிறீர்கள். உங்களிடமிருந்து எந்தவொரு தகவலையும் உலகத்தமிழ்மக்கள் எதிர்பார்க்கவில்லை என்ற நிதர்சன உண்மையை நீங்கள் அறியாமல் இருக்கமாட்டீர்கள். உலகத்தமிழர்களின் இதயங்களில் இருந்து நீங்கள் தூக்கி எறியப்பட்டு வெகுநாட்கள் ஆகின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை.

ஈழத்தமிழன் கொன்றழிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் உலகத்தமிழ்மாநாடு தேவையா? என்று நியாயமான கேள்விக்கு உங்களது பதில் ஏற்றுகொள்ளும்படி இல்லையே! ஈழத்தமிழர்கள் செத்துவிட்டால் எல்லாம் முடிந்துவிட்டது என்று அர்த்தமா? தமிழை வளர்க வேண்டாமா? என்று அறிவுப்பூர்வமாக கேள்விகேட்கும்  நீங்கள் அதற்கும் ஒருபடி மேலேசென்று இந்த மாநாடுகூட ஒருவழியில் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு  தீர்வுகாணும் என்று அளந்து விடுகிறீர்கள். கேப்பையில் நெய்வழிகிறது என்று இன்னும் எத்தனை காலத்திற்கு கதையளக்கபோகிறீர்கள்?.

ஈழத்திற்காக போராடியர்கள் அப்படியே முடக்கி போனார்களா? அவர்கள் இயங்கவில்லையா என்று கேள்வி கேட்கும் நீங்கள், கலைஞரை குற்றம் சுமத்துபவர்கள்  என்ன தீக்குளிப்பு போராட்டமா நடத்தினார்கள்? என்று கேட்டு இருக்கிறீர்கள். முத்துகுமார் நியாபகம் இருக்கிறதா சுபவீ அவர்களே? முத்துகுமாரின் தியாகத்தை மறைத்து அதே வேளையில் அழகிரியின் பிறந்தநாளை கோலாகாலமாக கொண்டாடிய கருணாநிதியின் துரோகத்தை மறைக்கமுடியுமா?அல்லது கருணாநிதியின் ஊடகங்கள் செய்த இருட்டடிப்பை மறக்கமுடியுமா?  முத்துகுமார் கருணாநிதிபத்தி எழுதியதை மறுவாசிப்பு செய்துபார்க்க சம்மதமா?

அப்படியே உங்கள் முன்னாள் தோழர் சீமானையும் காட்டி கொடுக்கிறீர்கள் “சீமான்  இத்தருணத்தில் உலகத்தமிழ் மாநாடு கூடாது என்கிறார்! அதே நேரத்தில் ‘உத்தரவு’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்” என்கிறீர்கள். கலைஞர் அன்று முதல் இன்றுவரை ஈழத்தமிழனுக்காக உழைக்கிறார் என்கிறீர்கள். அவரின் அந்த உழைப்பினால் இதுவரை ஈழத்தமிழன் துயரம் எந்தளவிற்கு துடைக்கப்பட்டது என்று சொல்லமுடியுமா? அகதி முகாம்கள் அருமையாக இருக்கின்றன என்ற பார்ப்பன இந்து ராமிற்கும் இலங்கையில் சுமூகநிலை நிலவுகிறது என்று சொன்ன கருணாநிதிக்கும் பெரிதாக என்ன வித்தியாசம் இருக்க முடியும் சுபவீ அவர்களே? போர் வந்தால் மக்கள் சாவது இயல்புதான் என்ற செயலலிதாவும்  மழைவிட்டும் துவானம் தூவுவது இயல்புதான் என்று கருணாநிதியும் ஒரே குரலில் ஒலித்தது  உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா?

karunanidhi-sonia1-300x293

ஆகமொத்தம் இங்கே ஈழத்திற்காக நடந்தபோராட்டங்கள் எல்லாமே கருணாநிதியின் ஆட்சியை கவிழ்க  நடந்த சதிமுயற்சி என்கிறார் சுபவீ.  ஈழத்திற்காக உண்மையாக போராடியர் கருணாநிதி மட்டுமே என்று பெரியார்மீது அடித்து சத்தியம் செய்கிறார்.  இவர் கனிமொழியோடு சேர்ந்து ஈழத்தமிழர் விடுதலைக்கு  ‘லாபி வொர்க்’ பார்த்துகொண்டு இருக்கிறாராம்.  கருணாநிதி காங்கிரசோடு கைகோர்த்து கூடசரி என்கிறார் ஈழத்தில் தமிழர்களை கொன்ற ராசபக்சே போன்று இந்தியாவில் முகமதியர்களை கொலை செய்த பா.ச.க ஆட்சிக்கு வந்திடும் அபாயத்தில் இருந்து காப்பதற்கே காங்கிரசு கூட்டணியாம். இதற்கு முன்பு கருணாநிதி பா.ச.கவோடு கைகோர்த்து பற்றிகேட்டால் அது போனமாசம் இது இந்தமாசம் என்று சொன்னாலும் சொல்லுவார். சுபவீயை கொண்டாடியதற்காக புலம்பெயர் தமிழர்கள் கண்டிப்பாக வருந்துவார்கள் அப்படி வருந்துபவர்களில் நானும் ஒருவன்.

‘பெரியார்விருது’ வீரமணிக்கும், ‘அண்ணாவிருது’ கருணாநிதிக்கும் ‘கலைஞர்விருது’ ஸ்டாலினுக்கும் கொடுக்கப்பட்டு விட்டது ‘கனிமொழிவிருது’ நமது சுபவீக்கு அடுத்த ஆண்டு அளிக்கப்படும் என்று நம்புவோமாக!

Advertisements

Tagged:

§ 9 Responses to சுபவீயின் பிழைப்புவாதம் தொடர்கிறது……..!

 • கவுதமன் சொல்கிறார்:

  காலமும், சூழலும் சிலரை அடையாளம் காட்டும். அப்படி அடையாளம் காட்டப்பட்டவர்தான் தோழர்சுபவீ. ஆரியத்தால் வீழ்ந்து, திராவிடத்தால் எழுந்து,தமிழியத்தால் வெல்லப் புறப்பட்டவர், அறிவாலயத்தில் தடுமாறி விழுந்து இன்னொரு வலம்புரிஜானாக, ஒன்றே சொல் நன்றே சொல் என்று தமிழியத்தை வாழவைத்துக்கொண்டுள்ளார். பாவம், அவரை விட்டுவிடுங்கள். வார்த்தை வியாபாரிகள் வாழ்ந்துவிட்டுப்போகட்டும். வரலாறு அவர்களுக்கு பாடம் சொல்லும்.

 • raja சொல்கிறார்:

  எனக்கு எவனாவது சுத்த தமிழை பேசினாலே சந்தேகமாக இருக்கும்…(குறிப்பாக தமிழ்நாட்டில்) பிழைப்புக்காக பேசுவது இவர்களின் முக்கிய தொழில்.. ஈழத்தில் இறந்து போன ஆத்மாக்கள் இவர்களை ஒருபோதும் மன்னிக்காது… வரலாறும் இவர்களை தூ வென்று துப்பி விடும்…… இனிய நண்பா ஒரு நாள் அறம் நிச்சியம் வெல்லும் அதுவே உலக சக்கர சுழற்சியின் நீதி.. மனித வாழ்க்கை உள்ள அளவும் நியாய அநியாயங்கள் நிச்சியம் கணக்கில் கொல்லப்பட்டும் அப்பொழுது இந்த மோசமான ஆத்மாக்கள் நிச்சியம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.. இப்பொழுது வேண்டுமானால் அதிகாரம், பணபலம் கொண்டு பூசி மெழுகலாம் … காலத்தின் முன் எதுவும் எடுபடாது.. மனித விழுமியங்கள் ஒரு நாள் கட்டாயம் ஒரு சமயம் அளக்கப்படும் அது வரை பொறு மனமே.. உங்களை போல் நானும் மனம் புழங்கி வாழுகிறேன் … அவ்வளவே.. உங்கள் நண்பன் இராஜா.

 • இர.செந்தில் சொல்கிறார்:

  “”உங்களிடமிருந்து எந்தவொரு தகவலையும் உலகத்தமிழ்மக்கள் எதிர்பார்க்கவில்லை என்ற நிதர்சன உண்மையை நீங்கள் அறியாமல் இருக்கமாட்டீர்கள். உலகத்தமிழர்களின் இதயங்களில் இருந்து நீங்கள் தூக்கி எறியப்பட்டு வெகுநாட்கள் ஆகின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை.””

  தோழரே ஈழத்திலிருக்கும் வதை முகாமிலிருந்து தப்பித்து தமிழகம் வந்துள்ள ஈழ தேசத்தின் அறிஞர்,எழுத்தாளர் திருநாவுகரசு அய்யாவிடம் போய் கேட்டுவிட்டு பதிவிடுங்கள்.இல்லையென்றால் தொடருங்கள்,உங்களை நாங்கள் புரிந்து கொண்டோம்.”

  ……அய்யயோ நானும் காசு வாங்கிடேனு சொல்லுவிங்களே?????!!!!!!!1

 • tamizhanban சொல்கிறார்:

  இர.செந்தில் அவர்களே என்னை காலம் காரி உமிழ்வது இருக்கட்டும். உங்களின் தலைவர் சுபவீ அவர்களை மீண்டும் புலம் பெயர் தமிழர் மத்தியில் முழங்கச்சொல்லுங்கள் பார்ப்போம். இன்னும் அவரை நம்பி ஏமாற புலம் பெயர் தமிழன் தயாராக இருக்கிறானா? என்று பார்ப்போம்.

  வெறும் வார்த்தை வியாபாரியை நம்பி ஏமாற தமிழர்கள் தயாரில்லை தோழரே!
  கலைஞர் தொலைகாட்சியில் ஒன்றே சொல் நன்றே சொல் என்று ஒரு நிகழ்ச்சி கிடைத்ததும் ஈழம் பத்தி பேசுவதை மறந்துவிட்டார் என்று கூறி இருக்கிறேன் உம்மால் மறுக்க முடியுமா?

  நீங்கள் இன்னும் உறங்கி கொண்டு இருக்கிறீர்கள் அல்லது உறங்குவது போன்று நடித்து கொண்டிருக்கிறீர்கள் என்று நாங்கள் புரிந்து கொள்ள வேண்டியதுதான்.

 • vrinternationalists சொல்கிறார்:

  நல்ல அம்பலப்படுத்தல்

 • thamizini சொல்கிறார்:

  சுப.வீ அவர்களே உங்களுக்கு என்னவேலை கொடுத்தார்களோ அதை மட்டும் செய்யுங்கள் அதை விட்டு வேற வேலை செய்யவேணாம் .நீங்க தி.மு.க கட்சியின் கொ.ப.செ அவ்வளவுதான்

 • surya சொல்கிறார்:

  இதில் சுப வீ என்ன..?? எல்லோரும் தான். ஒன்று விலை. இல்லையென்றால் அடி தடி. பாரதிராஜா என்று ஒருத்தர் இருந்தார். ஆபிஸ் அடித்து நொறுக்கப்பட்டதும் எங்கே போனார் என்றே தெரியவில்லை.

  அங்கே ஒரு கருணா. இங்கேயும் பல கருணாக்கள். துரோகத்தின் மறு பெயர் அது தானோ..??

 • Stalin Felix சொல்கிறார்:

  நல்ல பதிவு. வாழ்த்துக்கள் தோழரே.

 • M.Arumugam சொல்கிறார்:

  நல்ல பதிவு. வாழ்த்துக்கள் தோழரே.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

What’s this?

You are currently reading சுபவீயின் பிழைப்புவாதம் தொடர்கிறது……..! at தமிழன்பன் பக்கம்.

meta

%d bloggers like this: