சீமானை கண்டாலே உதறல் கொள்ளும் தமிழின விரோதிகள்!

ஒக்ரோபர் 6, 2009 § 14 பின்னூட்டங்கள்


சீமானை கண்டாலே உதறல் கொள்ளும் தமிழின விரோதிகள்!

seeman

சமீபகாலமாகவே ‘சீமான்’ என்ற பெயரினை கேட்டாலே தமிழின விரோதிகளுக்கு உதறல் எடுக்க ஆரம்பித்து விடுகிறது. சீமானை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள துணிவில்லாத கோழைகள் சீமானை சைமன் என்றழைத்து தங்கள் அரிப்பை தீர்த்து கொள்கிறார்கள்.  சீமானை பெரும்பாலும் குறிவைப்பவர்கள் இந்துத்துவாசக்திகளே என்பதை நான் சொல்லி தெரியவேண்டுமா என்ன?  சிலநேரம் தவறான புரிதல்காரணமாக சில முற்போக்குவாதிகளும் தங்களை முற்போக்குவாதிகள் என்று காட்டதுடிக்கும் சில பிழைப்புவாதிகளும் சீமானை எதிர்ப்பது உண்டு. சீமான் பெரியாரின் பேரனா? என்று இவிகேஸ் இளங்கோவனின்  குரலை கடன்வாங்கி சில பெரியார்வாதிகள் கேள்விகள் எழுப்பினது வேதனையிலும் வேதனை.

சீமான் இந்துத்துவவாதிகளை நோக்கி தொடுத்த கேள்விகணைகள் கண்டிப்பாக அவர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கும். கண்டிப்பாக அவர்களால் சீமானை கருத்துரீதியாக எதிர்கொள்ள முடியாது. உடனே நம்மாளுக கையில் எடுத்த ஆயுதம்தான் சைமன். அதாவது சீமான் என்பது உண்மையான பெயர் இல்லையாம் சைமன் என்பதுதான் அவரின் உண்மையான பெயராம். இதன் மூலம் இவர்கள் நிறுவமுயல்வது சீமான் என்ற கிருத்துவன் எப்படி இந்துமதம் பத்தி பேசலாம் என்பதே. அப்படியே இந்த இந்துமதவெறியர்கள் தமிழினகாவலர்களாக வேடமணிந்து கொண்டு “நாம்தமிழர் இயக்கம்” குறித்து அவதூறுகள் பரப்பி கொண்டு இருக்கிறார்கள். சரி அப்படியே  தமிழினத்தை காப்பதே இவர்களின் குறிக்கோள் என்றால் ஈழத்தில் செத்துமடிந்த தமிழ் உறவுகளுக்காக குரல்கொடுத்து இருக்கலாமே? அங்கேயும் போராளிகள் குறித்து அவதூறுகளை அள்ளிவீசினார்கள்.  கிருத்துவன் எப்படி தமிழர்களுக்காக போராடலாம்? என்று புதிதாக கண்டுபிடித்திருக்கிறார்கள் போலும். ஈழத்தில் தமிழர்கள் செத்துவிழுந்தபொழுது தமிழனுக்காக குரல்கொடுக்காமல் ராசபக்சேவுடன் கைகுலுக்கியவர்கள் பார்பன இந்து ‘ராம்’கள் என்பதை தமிழன் மறந்துவிடவில்லை.  இந்த பார்பன இந்துத்துவா கூட்டமே தமிழனுக்கு காலம்காலமாக தூரோகம் இழைத்து வந்தாலும். நாமெல்லாம் இந்து என்று நம்மை நோக்கி வேப்பிலை அடிக்க தவறியதில்லை. இதை நம்பி கொஞ்ச பேரு நாமெல்லாம் இந்துன்னு நினைச்சுக்கிட்டு இருக்கலாம் ஆனால் ஓட்டு மொத்த தமிழினமும் ஏமாந்துவிடாது.

ஈழத்தில் போரை நிறுத்து! என்று நாமெல்லாம் குரல் கொடுத்து கொண்டிருந்த பொழுது நமது குரல்வளையை நெறிப்பது போலே சீமான் மீதும் கொளத்தூர் மணி அவர்கள் மீதும் தேசியபாதுகாப்பு சட்டத்தை வீசியது ஆளும்வர்க்கம். அந்த சட்டத்தை உடைத்து வெளியேவந்த சீமான் மீண்டும் மீண்டும் தமிழின தூரோகத்தை அம்பலப்படுத்தினார். அடக்குமுறைகளை மீறி தமிழகம் எங்கும் ஈழப்போராட்டத்தில் தமிழர்களின் தார்மீக உரிமையை எடுத்து சொல்லிவந்தார்.சீமான் செல்லும் இடமெல்லாம் இளைஞர்படை அவருக்கு பின்னால் அணிவகுத்து நின்றது.  தனிநபரின் பழிவாங்கல் உணர்வுகாரணமாக சிங்களனோடு கைகுலுக்கிய  காங்கிரசின் இரத்தம் தோய்ந்த ‘கை’யை தமிழகத்தில் வீழ்த்துவது என்று சபதம் ஏற்ற சீமான்   தமிழகம் முழுவதும் வலம்வந்தார். சீமானை அரசியல் இயக்கம் எதுவும் ஆதரிக்காத நிலையில் அதிமுக கூட்டணிக்கு ஓட்டுபோடுங்கள் என்று பரப்புரை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். தமிழனின் உணர்வுகளை பிரதிபலிக்க ஒரு கட்சிவேண்டுமென்றே ‘நாம்தமிழர்’ இயக்கத்தினை கட்டும் முயற்சியில் இருக்கிறார் சீமான். அரசு சீமான் மீது தொடுத்த தேசியபாதுகாப்பு சட்டத்திலேயே ‘சீமான்’  என்று குறிப்பிட்டு இருக்கிறது. இந்தியரசு வழங்கிய கடவுசீட்டிலும் சீமான் என்ற பெயரே இருக்கிறது அப்படி இருக்கும் பொழுது இந்த பார்ப்பன கும்பல் சைமன் என்று எதன் அடிப்படையில் கூறுகிறது என்று தெரியவில்லை. அப்படியே சைமன் என்பது உண்மையான பெயராக இருந்தாலும் உங்களுக்கு என்னடா பார்ப்பன நாய்களா? என்று கேட்க தமிழன் தயாராகவே இருக்கிறான்.

சீமானை அவதூறு செய்த அதே கும்பல் ஒரு காலத்தில் பெரியாருக்கு எதிராக இயங்கியது. இந்துமதம் குறித்து பெரியார் என்ன விமர்சித்தாரோ அதையேதான் சீமானும் விமர்சிக்கிறார். ஈவிகேஎஸ் இளங்கோவன் தேர்தல்நேரத்தில் சீமான் பெரியாருக்கு தவறானவழியில் பேரனாக பிறந்து இருக்கலாம் என்று பெரியாரையும் சீமானின் பிறப்பையும் தவறாக விமர்சித்து தேர்தலில் மண்ணை கவ்வி இன்று வீட்டிற்குள் பதுங்கிகிடக்கிறார். இந்த பைத்தியக்காரன்தான் முத்துகுமார் யாருன்னு கேட்ட மேதாவி என்பது கொசுறு தகவல். இப்படி பல்முனை எதிர்ப்புகள் சீமானுக்கு எதிராக எழுப்பபட்டாலும் மக்கள்மன்றத்தில் சீமானின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்ததே தவிர சிறிதும் குறையவில்லை.ஈழத்திற்காக சீமான் பேசியபேச்சுகள் தமிழ் உணர்வாளர்களின் நெஞ்சில் அவருக்கு நிரந்தர  இடத்தை ஒதுக்கிதந்துள்ளது. தமிழ் உணர்வுள்ள இளைஞர்கள் தொடர்ச்சியாக சீமானை நோக்கி நகரத்துவங்கி இருப்பது பார்ப்பனர்களுக்கு எரிச்சலை உண்டுபண்ணி  இருக்கிறது. எங்கே தமிழனுக்காக வலுவான இயக்கம் தோன்றிவிடுமோ? என்ற அச்சத்தில்  சீமானுக்கு எதிராக அவதூறுகளை அள்ளிவிடுகின்றனர். “புரட்சி எப்போதும் வெல்லும் அதை நாளைய தமிழீழம் சொல்லும்” என்று தொடர்ந்து முழங்கி ஈழத்திற்கான பரவலான ஆதவை சீமான் திரட்டிவருகிறார். “இங்கே செத்தவிழுந்த தமிழகமீனவனுக்காகவும் ஈழத்தில் செத்துவிழுந்த நமது தாய்த்தமிழ் உறவுகளுக்காகவும் எதுவும்செய்யாத இந்த அரசியல்கட்சிகளை தூக்கி எறியவேண்டும்” என்ற கோரிக்கையோடு நாம்தமிழர் இயக்கம் தொடர்ந்து நடைபோடுகிறது.

seeman1

சீமான் குரல் எப்போதும் பாமரதமிழனின் குரலாகவே இருக்கும். “உலகெங்கும் அடிவாங்கிய தமிழன் திருப்பி அடித்த ஒரே இடம் தமிழீழம் மட்டுமே!” “உலகபந்தில் தமிழன் வாழாத நாடில்லை ஆனால் தமிழனுக்கு என்று ஒரு நாடில்லை!” என்று சீமான் எழுப்பிய சொற்றொடர்கள் உலகமெங்கும் தொடர்ந்து ஒலித்து கொண்டுதான் இருக்கிறது. பெரியாரின் பேரன் பிரபாகரனின் தம்பி தொடர்ந்து தனது லட்சியபாதையில் முன்னேறட்டும்.

சீமானை சைமன் என்பவர்கள் தங்களை தாங்களே அம்பலப்படுத்தி கொள்கிறார்கள்.  ஈழப்போரில் தமிழர்களுக்கு எதிராக துரோகங்களை செய்த இந்துபாசிச அமைப்புகள் திடீரென்று தமிழர்கள் மீது பாசம் கொண்டதைபோலே சீமானை கிருத்துவர் என்று வசைபாடுகிறது.  கிறுத்துவன் பிறப்பால் திராவிடனாகவும் உணர்வால் தமிழனாகவும் இருக்கிறான். பார்ப்பான் ஒருபோதும் தமிழனாக இருந்ததில்லை என்று எங்களுக்கு தெரியும் பார்பனர்களே இந்த சோ, சுப்பிரமணியசாமி, இந்து ராம் வேலைகள் எல்லாம் எங்களிடம் வேண்டாம்.சீமான் கிறுத்துவன் என்று இந்துத்துவா சக்திகளின் பரப்புரையை தமிழகத்தில் யாரும் பெரிது படுத்தவில்லை. யார் உண்மையான தமிழன் என்பதில் தமிழர்கள் தெளிவாக இருக்கிறார்கள். முட்கம்பிவேலிகளை அறுத்தெறிவோம் என்று தமிழகம் முழுவதும் குரல்கள் ஒலிக்கத்துவங்கி விட்டன.  தடுப்புமுகாமில்  இருக்கும் தமிழர்களை விடுவிக்க தாயகதமிழர்கள் ஓரணியில் கைகோர்ப்பது அவசியம்.கடந்த காலத்தில் அதிமுகவை ஆதரித்தது போன்ற தவறான சூழலுக்கு நாம் தள்ளப்படாமல் இருக்க “நாம்தமிழர் இயக்கம்” வலுப்பெறுதல் அவசியம்.

இந்துத்துவா சக்திகள் முடிந்தால் சீமானோடு ஒரேமேடையில் விவாதிக்கட்டும்.  விவாதிக்கும் திறன் அவர்களுக்கு இல்லை என்பது நமக்கு நன்றாகத்தெரியும். இவர்களின் அவதூறுகள் காலத்தால் புறம் தள்ளப்படட்டும். சீமான் என்ற எளியவன் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமால்  ஈழ ஆதரவு போராட்டத்தில்  தொடர்ந்து செல்லட்டும். உலகத்தமிழனை ஒருங்கிணைக்கும் பேச்சாற்றலும் சிந்தனையும் சீமானுக்கு உண்டு என நாமறிவோம்.  சீமான் பெரியாரியலை பரப்ப கருவியாக இருக்கிறார் என்பது பெரியாரின் தொண்டர்களுக்கு நன்றாகத்தெரியும். சீமானின் பேச்சுகள் தொடர்ந்து இந்துத்துவவாதிகளின் தூக்கத்தை கெடுக்கட்டும் தமிழர்களுக்கு பகுத்தறிவை கொடுக்கட்டும்.

Advertisements

Tagged:

§ 14 Responses to சீமானை கண்டாலே உதறல் கொள்ளும் தமிழின விரோதிகள்!

 • Suresh Kumar சொல்கிறார்:

  பிழைப்பு வாதிகளுக்கு சீமான் வளர்ந்தால் பிழைப்பு இல்லை தானே

 • செல்வி சொல்கிறார்:

  சின்னப் பெரியார்…சீமான்!
  பெரியாரின் சின்னம்…சீமான்!
  பெரியாரின் எண்ணம் சீமான்!

 • Indrajith சொல்கிறார்:

  seeman simon alla singam

 • anony சொல்கிறார்:

  பெரியார் கன்னடக்காரர், கருணாநிதி தெலுங்கர் என்று பல வருடங்களாகஎழுதி வருகிறார்கள். தமிழ்நாட்டில் யாரும் கன்டுக்க்தான் இல்லை. இந்த லூசுகளை சீரியஸா எடுத்துக்க வேண்டியதில்லை.

  இவர்களை விட மோசமானவர்கள் தமிழகத்து ‘தமிழ் ‘ அரசியல்வாதிகள். ஆளாளுக்கு இப்போ அகதிகளுக்கு குடியுரிமை என்று அறிக்கை போர் நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள் . தேர்தலின்போது நடத்திய அதே திசை திருப்பும் முயற்சி. இப்ப குடியுரிமை வேண்டுமென்று யாராவது கேட்டாங்களா ?

 • ஜெரி ஈசானந்தா சொல்கிறார்:

  நானும்,என் குடும்பத்தாரும் இருக்கிறோம் சீமான் என்ற சிங்கத்தின் பக்கம்.

 • தமிழன் சொல்கிறார்:

  ஆமாம் சீமானை கண்டால் உலகமே நடுங்குது

 • Velan சொல்கிறார்:

  The Tamil youth from all around the world like Seeman very much….especially his speech attracted many Tamils. Mainly in Canada and Europe they respect him the way they respect Velupillai Pirabaharan. Like President Brack Obama, Seema is very good front of Microphone.

 • Senthil சொல்கிறார்:

  நீங்க பேச பேச தமிழன் விழிப்பான் ….
  முட்டலாய் தெரிந்தவன் யோசிப்பன்…
  தன்னக்கு என்று ஒரு மூலை இருப்பதை உணர்கிறான் … தொடரட்டும் உமது பனி ….

 • மகிழ்நன் சொல்கிறார்:

  சரி….முத்துராமலிங்கத்துக்கு ஏன் தோழர் மாலை அணிவித்தார்……….தோழர் சீமான்

 • tamizhanban சொல்கிறார்:

  வணக்கம் மகிழ்நன்!

  முத்துராமலிங்கத்துக்கு மாலை அணிவித்த சீமானை அழைத்து மும்பையில் நீங்கள் ஏன் அம்பேத்கார் பின்னலாடை அணியும் விழா எடுத்தீர்கள் என்று கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்?

  இந்த கட்டுரை எழுதுவதற்கு முன்பாக சீமான் மாலை அணிவித்து இருந்தால் நீங்கள் இப்படி கேட்கலாம். மதிமாறன் வலைப்பூவில் இளையராசா குறித்த கேள்விகளை நான் முன்வைத்த பொழுது உடனே சிலர் என் கேள்விகளை கருத்தியல் ரீதியில் எதிர்கொள்ளாமல் “சாதி அபிமானி” என்று அவதூறை அள்ளிவிட்டனர். அவர்களின் குரலில் நீங்கள் சீமானை நான் சாதிய ரீதியாக ஆதரிக்கிறேன் என்பது போலே கேள்வி எழுப்பி இருக்கிறீர்கள்.

  சீமான் மீது பெரியார் கருத்துக்களை பரப்புபவர் இந்துத்துவா வாதிகள் தொடர்ந்து சைமன் என்ற அவதூறு செய்ததின் பொருட்டே இந்த பதிப்பை வெளியிட்டேன். முத்துராமலிங்கத்திற்கு மாலை அணிவித்து அவர் மீதான மதிப்பீடுகளை மாற்றி கொள்ள செய்யும் செயலாகவே பார்கிறேன்.

  நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றும் முயற்சியில் முழுக்க முழுக்க ஓட்டு பொருக்கி அரசியல் நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறார். பெரியார் ஓட்டு பொருக்கி அரசியலுக்கு ஆதரவானவர் அல்ல.

  சீமானும் ஓட்டு பொருக்கி அரசியலில் முகவரி இழந்த மனிதராக காட்சி அளிக்கிறார் என்பதே எனது கருத்து. முத்துராமலிங்கத்துக்கு மாலை அணிவித்ததை கடுமையாக கண்டிக்கிறேன்.

 • மகிழ்நன் சொல்கிறார்:

  சீமானை நீங்கள் ஆதரிப்பதாக கூறவில்லை…

  சீமானை ஒரு கருவியாகத்தான் பார்த்தேன்…பெரியாரியலை பரப்புவதற்கு……….

  பெரியாரை ஏற்றுக்கொள்ளும் யாரும் முத்துராமலிங்கத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்…நீங்களும் அப்படித்தான் என்பதில் மகிழ்ச்சியே……!

  பெரியாரை முன்னிருத்தும் நபர்கள், அம்பேத்கரை சாதி ஒழிப்பின் குறியீடாகத்தான் பார்க்க வேண்டும், சாதியத்தின் அடையாளமாக அல்ல…

  அந்த வகையில் பெரியாரியலின் மிகுந்த மரியாதையும், பற்றும் கொண்ட தோழர்கள் என்ற முறையில்…..பெரியாரை பற்றி ஊரெல்லாம் பேசித்திரிந்த சீமானை வரவழைத்தது தவறாக அன்று படவில்லை…

  ஆனால, அவர் முத்துராமலிங்கம் என்ற சாதி குறியீட்டை ஓட்டுப்பொறுக்கி அரசியலின் பொருட்டு……….மாலை போட்டு அதற்கு ஒரு அற்பத்தனமான விளக்கம் கூறிக்கொள்வதைத்தான் எம்மால் சகித்துக் கொள்ளமுடியவில்லை…

  அதோடு முந்தைய பின்னூட்டம், ஆதங்கத்தை பகிர்ந்து கொள்வதற்குத்தானேயொழிய…குற்றம் சுமத்துவதற்கு அல்ல..

  தோழமையுடன்,
  மகிழ்நன்

 • arunprabhus சொல்கிறார்:

  முத்துராமலிங்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் என்ன தவறு ? நான் தேவர் இனத்தை சேர்ந்தவன் அல்ல. நீங்கள் குற்றம் சாட்டும் சீமானும் தேவர் இனத்தை சேர்ந்தவர் அல்ல.

  காங்கிரஸ் தலைவராக காந்தியின் வேட்பாளரையே வீழ்த்தி வெற்றி பெற்ற நேதாஜியை காந்தி சுற்றிவளைத்து கட்சியை விட்டு விரட்டியபோது, அனைவரும் வியக்கும் வண்ணம் அவரை வைத்து மதுரையில் மிகப்பெரிய பேரணி நடத்தி அவருக்கு எப்போதும் உருதுணையாக நின்றவர். சுதந்திர போராட்ட தியாகி. அவருக்கு மாலை அணிவிப்பதில் எந்த தவறும் இல்லை.

 • Makizhnan(மகிழ்நன்) சொல்கிறார்:

  முத்துராமலிங்கத்தை தங்கள் சாதிய பெருமையின் குறியீடாக பார்ப்பதனால்தான், பொதுதளத்திற்கு வந்திருக்கும் சீமானிற்கும், முத்துராமலிங்கத்திற்கு மாலை போடும் கட்டாயம் ஏற்பட்டது என்பதே உண்மை நிலை………

  முத்துராமலிங்கம் விடுதலைக்காக போராடினாரா?
  எப்படி இடுப்புல குண்டு வச்சிருக்கேன்……..என்று சொல்லியா?

  சாதி வெறியின் குறியீடு முத்துராமலிங்கம்…….கால ஓட்டத்தின் பரப்புரையின் ஊடாக அதை கடந்து வருவது……….

  தமிழ்ச்சமூகத்தின் விடுதலைக்கு முக்கிய காரணியாக இருக்க முடியும்……….

  முத்துராமலிங்கத்தை தூக்கி பிடிக்கும் ஒரு தமிழன், சாதி வெறியில்லாத ஆதிக்க சாதி உணர்வில்லாத தமிழனை கூட்டிட்டு வாருங்கள்………………பார்ப்போம்………..

  தமிழன் என்று சொல்லிக் கொண்டால் மட்டும் போதாது…….தமிழனாக வாழ கொஞ்சம் வரலாற்றை நுட்பமாக கற்றுக் கொள்ளுங்கள்

  • arunprabhus சொல்கிறார்:

   நான் மதுரையில் பிறந்து வளர்ந்தவன். தேவர் ஜெயந்தி என்ற பெயரில் அங்கு நடந்த அங்கிரமங்கள் எல்லாம் அறிந்தவன். எனவே உங்கள் கோபம் புரிகிறது.

   தேவர்களுக்கு ஆதரவாக குற்றப்பறம்பரை என்ற சட்டத்தை எதிர்த்து போராடிய முத்துராமலிங்கரின் வாழ்க்கையின் ஒரு பக்கம்.

   அதே வேளையில் காந்தியே இறங்கி வந்து நேதாஜியை துரத்தியரடிக்க வேலை செய்த போது, முதலில் நேதாஜிக்கு ஆதரவாக காங்கிரசில் லாபி நடத்தியவர் முத்துராமலிங்கர் தான். அதே போல் காங்கிரசால் வெயியேற்றப்பட்டபின் மீண்டும் அவரை வைத்து தெற்கில் மிகப் பெரியமாநாடு நடத்தியதும் அவர்தான்.

   நேதாஜி ஒன்றும் தேவர் இல்லையே !! நான் காமராசரின் தீவிர பக்தன். அவர் இருந்த காலத்தில் அவருக்கு அனைத்து நெருக்கடியும் கொடுத்தவர் தேவர். இருந்தும் தேவரின் போராட்டங்களை .

   இன்று தேவரை முழு சாதிய சக்தியாக ஆக்கியவர்கள் அரசியல்வாதிகள் தான். அவரும் நாட்டுக்காக போராடியுள்ளார்.

   http://en.wikipedia.org/wiki/Netaji
   http://en.wikipedia.org/wiki/U._Muthuramalingam_Thevar

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

What’s this?

You are currently reading சீமானை கண்டாலே உதறல் கொள்ளும் தமிழின விரோதிகள்! at தமிழன்பன் பக்கம்.

meta

%d bloggers like this: