ஈழத்து பங்காளியும் காங்கிரசு முதலாளியும்!
ஒக்ரோபர் 14, 2009 § 3 பின்னூட்டங்கள்
இந்த பதிவை எழுதுவதற்கு முன்னர் இதுதான் தோன்றியது “இன்னுமாய்யா நம்ம மக்கள் இவனுகள நம்புதுன்னு”. தாயக தமிழகத்தின் மிக அருகிலேயே எண்ணற்ற தமிழர்கள் கொலைசெய்யப்பட்டு மீததமிழகர்கள் முகாம் என்ற பெயரில் முள்வேலிக்கம்பிக்கு பின்னால் சிறைவைக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்திலும் நில்லாமல் தொடர்கிறது துரோகநாடகங்கள். ஈழத்தில் தொப்புள்கொடி உறவுகள் மீது கொத்துகொத்தாய் குண்டு விழுந்தபொழுது துடித்துபோன தயகதமிழர்கள் போரை நிறுத்துங்களேன் என்று வேண்டுகோள் விடுத்தோம். எம்மால் கொதித்து எழமுடியவில்லை காரணம் “நானும் ஈழத்தமிழ் ஆதரவாளன்!” என்று முழக்கமிட்ட திமுகவின் ஆட்சி தமிழகத்தில். போர் நிறுத்தத்தை வலியுறுத்துவார்கள் என்று நாம்நினைத்தால் அதற்கு மாறாக நிவாரணபொருட்கள் அனுப்புகிறேன் என்று திசைதிருப்பியது திமுக. குண்டுவிழுவதை எம்மால் நிறுத்தமுடியாது வேண்டுமானால் சோத்துபொட்டலம் அனுப்புகிறேன் என்றது.
திமுக கூட்டணியின் முதலாளி காங்கிரசு ஆயுதங்களையும் வட்டியில்லாகடனா சில ஆயிரம்கோடிகளையும் சிங்கள அரசிற்கு கொடுத்தது முதலாளியின் இந்தபாதகசெயலை மூடிமறைக்கும்விதமாக நிதிதிரட்டி அனுப்புகிறோம் என்று அனுப்பியது திமுக அரசு.அந்த நிவாரணபொருட்கள்கூட தமிழர்களைசென்று சேர்ந்ததா? என்று இவர்கள் உறுதி செய்யவில்லை அனுப்பிவிட்டோம் கொடுப்பார்கள் என்று நம்புகிறோம் என்றேதொடர்ந்து ஒலித்தது. அப்போதும் நமக்கு புத்தியில்லை திரும்பதிரும்ப “முதல்வர் அய்யா எப்படியாவது காப்பாத்துங்க” வென்று தொடர்ந்து குரல்கொடுத்தோம். தொடர்உண்ணாவிரதங்கள் கொட்டும்மழையில் மனிதசங்கிலி, தீக்குளிப்பு, பேரணி, கண்டன கூட்டங்கள் என்று பலதிசையில் நாம் பயனப்பட்டாலும் சிங்களனுக்கு உதவி என்ற நிலையில் சிறிதும் பின்வாங்காமல் தொடந்து சென்று காங்கிரசு தலைமை.ஈழ ஆதரவு போராட்டம் தமிழகத்தில் பெரியளவில் கிளர்த்து எழுந்துவிடாமல் அனைத்து வழிகளிலும் காயடிப்பு வேலைகளை கச்சிதமாக பார்த்து கொண்டது திமுக அரசு.
இந்தியா சீன பாகிஸ்தான் என்று பக்கத்து நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து உதவிகள் செய்ய தம்மால் முடிந்தளவிற்கு இனப்படுகொலைகளை எந்தவிததடயமுமின்றி நடத்திகாட்டியது சிங்களபேரினவாத அரசு. இறுதிநாட்கள் மிகச்சரியாக காங்கிரசு இந்தியாவில் பெற்றவெற்றியினை தொடர்ந்து நடந்தேறியுள்ளது. வெட்கமில்லாமல் தமிழகத்தில் பெருவாரியாக வாக்களித்து காங்கிரசுகூட்டணிக்கு வெற்றியை தந்திருக்கிறார்கள் தாயகதமிழர்கள். காங்கிரசுதலமை எப்படி கர்நாடகதேர்தலை முன்னிட்டு ஒகேனக்கல் குடிநீர்திட்டத்தை ஒத்தி வைக்கும்படி தனது வேலைக்காரனான திமுகவை கேட்டு கொண்டதோ அதேபோலே தேர்தல் முடியும் வரை பொறுத்திருங்கள் என்று சிங்களவர்களிடம் கட்டளை இட்டு இருக்கலாம் என்றேதோன்றுகிறது.
போர் நடந்து முடிந்து இவ்வளவுநாளாகியும் முள்வேலி கம்பிகளுக்கு உள்ளே சிறைப்பட்டிருக்கும் தமிழர்களை விடுவிக்க மறுத்துவருகிறது சிங்கள இனவாத அரசு. முகாம்மக்களை விடுதலை செய்யும்படி உலகின் பல்வேறு மனித உரிமைகள் அமைப்புகள் குரல்கொடுத்துவருகின்றன. அல்ஜசீரா என்னும் தொலைக்காட்சி முகாமின் தற்போதைய நிலையை தெளிவாக உலகிற்கு தெரிவித்தது. இந்தநிலையில் முகாமிலிருந்து தமிழர்களை விடுவிக்கவேண்டும் என்ற கோரிக்கையை நம்மாளுங்க திமுகதலைவரிடமே கொண்டு சென்றார்கள். சிங்களன் எத்தனை தமிழர்களைகொன்று ஒழித்தாலும் எம்முடைய உறவு சிங்களனுடந்தான் என்ற நிலையிலிருந்து மாறுவதில்லை என்கிறது காங்கிரசு முதலாளி. சிங்களனுக்கு தேவையான பணவுதவிகளை செய்வதற்கு தயாராகவும் இருக்கிறது இது திமுக கைகூலிகளுக்கும் நன்கு தெரியும். வழமை போலவே திமுக தனது நாடகத்தை இங்கே துவங்கிவிட்டது இந்தியநாடாளுமன்றகுழு தமிழர்களுக்காக அனுப்புகிறோம் என்று பேரில் அனுப்பி இருக்கிறார்கள். சிங்களன் கைகாட்டும் முகாம்களைமாத்திரம் இவர்கள் பார்வை இடுவார்கள் முகாம் சிறப்பாக இருக்கிறது அதே வேளையில் உனக்கு பற்றாக்குறை இருக்கிறது என்று சொல்லப்போகிறார்கள். தமிழர்களுக்கு உதவுகிறோம் என்ற பெயரில் சிங்களனுக்கு நிதி வழங்கப்போகிறார்கள். முள்வேலி கம்பிகளுக்கு இடையே சிக்கிதவிக்கும் மக்கள் தொடர்மழையாலும் தொற்றுநோய்களாலும் படப்போகும் இன்னல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்க போகின்றன.
சிங்களனுக்கு நிதி வழங்கும் திட்டத்திற்குத்தான் இந்த குழுக்கள் பயன்படப்போகின்றன. மேலும் பிறநாடுகளில் தன்னாவர்வ அமைப்புகள் தமிழககுழுக்களே அங்கே அவலம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள் நமக்கு என்ன? என்று அமைதியாகிவிடப்போகின்றன. சிங்களனுக்கு சென்று சேர்ந்த நிதி தமிழனுக்கு சென்றுசேர்ந்ததாக கூறி ‘திமுக’ தலைவருக்கு இங்கே பாராட்டுவிழாக்கள் கூட நடக்கலாம்.
இனவெறியன் ராசபக்சேவிற்கு பொன்னாடைபொத்தி கட்டிபிடித்து தமிழர்களை கருவழித்தமைக்கு தமது வாழ்த்துக்களை தனது வேலைக்காரனான திமுக மூலம் செய்து முடித்துவிட்டது காங்கிரசு தலைமை. அங்கே இன்னலுறும் மக்களை காணச்சென்ற குழு ஏதோ திருவிழா போன்று சிலைக்கு மாலை அணிவித்தல், பொன்னாடை போர்த்தல், பூக்குடை வழங்குதல் என்று இருக்கிறது. இந்த திருவிழா கூட்டத்தில் திருமாவளவன் காணமல் போன குழந்தையாக காட்சியளிக்கிறார். இதற்க்கு இந்தியா சீக்கியர்கள் அல்லது வேறுமாநில (திராவிட மாநிலங்கள் அல்ல) ஊறுப்பினர்களைகூட அனுப்பி இருக்கலாம் . அவர்களிடம் கூட சிறிதளவு மனிதாபிமானத்தை நாம் எதிர்பார்க்கலாம். இந்த திமுககூட்டணி கூலிப்படையைவிட கேவலமாக இருக்கிறது.
இந்த குழுவினை பத்தி நம்மிடம் கேள்விகள் சில மிஞ்சியுள்ளன.
1. சிங்கள அரசின் விருந்தினராக இவர்கள் போயிருக்கிறார்களா அல்லது தமிழர் பிரதிநிதிகளாக போயிருக்கிறார்களா?
2. முகாம்நிலை படுமோசம் என்று இந்தகுழு கூறினால் இலங்கையோடு உறவை இந்தியா முறித்து கொள்ளுமா?
3. இந்த குழுவிற்கு என்ன அதிகாரம் இருக்கிறது? இதன் அறிக்கை சிங்களரசிற்கு உதவி செய்வதைவிட வேறு என்னவாக இருக்க முடியும்?
4. தமிழர்களுக்காக சென்ற குழு ராசபக்சேவுடன் நெருக்கம் காட்டவேண்டிய அவசியம் என்ன? அரசு விருந்தினரான உங்களிடம் மக்கள் எப்படி உண்மையை எதிர்பார்க்க முடியும்.
5. தமிழர்களின் பிரச்சனைக்கு எந்தவிதத்தில் இந்த குழு தீர்வு சொல்லும்.
இலங்கை தூதரகத்தின் பூத்தொட்டிகளை உடைத்த புதியதமிழகம் கட்சி உறுப்பினர்களை சிங்களனை திருப்திபடுத்த காங்கிரசு முதலாளி கைது செய்கிறது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து சுடப்படுகிறார்கள் அது குறித்து இலங்கையை தட்டிகேட்க திமுக பயப்படுகிறது. சிங்களன் கோவித்து கொண்டால் முதலாளியும் கோவித்து கொள்வார் இல்லையா? முல்லை பெரியார் குறித்தோ மீனவர் படுகொலைகள் குறித்தோ, ஒகேனக்கல் குடிநீர் திட்டம் குறித்தோ முதலாளியின் உத்தரவிற்காக வேலைக்காரன் காத்துகிடக்கிறான்.
யாரோ ஒரு நண்பர் சொல்லி இருந்தார் (தி)முகவின் வலது கையில் ஈழத்தமிழனின் இரத்தமும் இடது கையில் சிங்களனின் மலமும் ஒட்டி கொண்டிருக்கிறது என்று. அது உண்மைதான் போலும். காங்கிரசின் கைகூலிகளை திட்டினால் உடனே சுபவீக்களுக்கு சுருக்கென்று இருக்கும் உடனே கிளம்பிடுவாய்ங்க.
today he s said that 50 000 tamilians will be resettled…. he wont say where…no word on the war crimes by sla….. no word about sinhalese colonisation of tamil homelands…..no word on the rapes of tamil women… he s definitely a good family man…..m k is…..the tragedy is that it seems that they ll win again in 2011…..we(tamils of tamil nadu) hav lost all self respect…..che…idhuvum oru vaazhkai…..and he s calling himself tammizhinathalaivar….
எந்த தகுதியும் இல்லாம இவனுக்கு பிறந்தால் போதும் என்ற நிலை இருந்தால். நாட்டில் வப்பாட்டிகள் எண்ணிக்கை பெருகிவிடும். குடும்ப உறவு சீர் குலையும். பிரியாணிக்கு அலையும் நாய்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.
அப்பாவித் தமிழனுக்கு டி.வி பொட்டி!
சுபவீ போன்ற அறிவு ஜிவி தமிழனுக்கு டி.வி பொட்டி நிகழ்ச்சி !!