ஈழம் மவுனவலியும் கருணாநிதியின் முதுகுவலியும்!
நவம்பர் 19, 2009 § 4 பின்னூட்டங்கள்
ஈழம் மவுனவலியும் கருணாநிதியின் முதுகுவலியும்!
‘நாம்’ மற்றும் ‘போருக்கு எதிரான பத்திரிக்கையாளர்கள் அமைப்பு’ என்ற பெயருடன் பல்வேறு பிரபலங்களின் கவிதை தொகுப்பினை ஈழம் மவுனத்தின் வலி என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. ஜாக்கிவாசுதேவ் என்னும் சாமியாரும் கஸ்பார் என்னும் பாதிரியாரும் முன்னின்று நடத்திய இந்த புத்தகவெளியீடு பல்வேறு விமர்சனங்களை கிளப்பி இருக்கிறது. இதுகிட்டத்தட்ட கருணாநிதி ஆதரவாளர்களால் கருணாநிதிக்காக நடந்த்தப்பட்ட நிகழ்வாகவே தெரிகிறது. ‘நக்கீரன்’கோபால் புத்தகவெளியீட்டில் கருணாநிதிக்கு வாழ்த்துப்பா இயற்றியதாக தெரிகிறது.
முன்னர் “சகோதரயுத்தம்” என்று சுருங்கசொல்லி விளங்கவைத்ததை இப்பொழுது விளாவரியாக எழுதி அறிக்கை வெளியிட்டிருக்கிறார் தமிழினதலைவர் கருணாநிதி. விடுதலைபுலிகளின் தவறான முடிவுகளே ஈழத்தமிழர்களின் துயரிற்கு காரணம்! என்றும் ஈழத்தமிழர் நிலை குறித்து தான் மவுனமாக அழுவதாகவும் அந்த அறிக்கையில் கூறி இருக்கிறார். கருணாநிதியின் குடும்ப ஊடகங்கள் அரைப்பக்கத்தை அந்த அறிக்கைக்கு ஒதுக்கி இருக்கின்றன. ஈழத்திற்கு தனது கட்சியும் தானும் செய்த உதவிகளை வழமைபோலவே பட்டியலிட்டிருக்கிறார்.எல்லாம் குறைந்தது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பானவை என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
அப்படியே சகோதரயுத்தம் பற்றி நீட்டி முழங்குகிறார். போராளி இயக்கத்தில் “முதல் துரோகி” என்று அடையாளம் கானப்பட்டவரும் பிரபாகரனை சுட்டார் என்று ‘இந்து’ பத்திரிக்கையால் புகழாரம் சூட்டப்பட்ட மாத்தையாவை மாவீரன் “மாத்தையா” என்று பட்டம் கொடுத்திருக்கிறார். கருணாவோடு புலிகள் சண்டைபோட்டதை வருத்தத்துடன் கூறும் கருணாநிதி. அப்படியே ரணில் போல வருமா? என்கிறார் கருணாவோடான சகோதரயுத்தத்தின் சூத்திரதாரி ரணில் என்று தலைவருக்கு தெரியாது போல!.
இப்படியே பக்கத்துக்கு பக்கம் நாம் விளக்கம் கொடுத்துக்கொண்டு இருக்கலாம். அதனால் பலன் ஒன்றும் இல்லை. இவருக்கு எப்பெல்லாம் மவுனவலி வரும் எப்பெல்லாம் முதுகுவலி வரும் என்று தமிழனுக்கு தெரியாதா என்ன? இவ்வளவு நீண்ட கடிதத்தில் சிங்களவனின் இனப்படுகொலை பத்தி ஒருவரிகூட தேடினாலும் கிடைக்காது. ராஜீவ் ஈழத்தமிழர்கள் பிரச்சனை என்ன என்று எனக்கு விசாரித்து சொல்லுங்கள் நான் “தீர்த்து வைக்கிறேன்” என்று சொன்னாராம் அதுவும் ராஜீவ்-ஜெயவர்தனே ஒப்பந்தத்திற்கு பிறகு. ராஜீவ் அதற்கு முன்னரே “பிரபாகரனை போட்டுதள்ளு!” என்று உத்தரவிட்டது தலைவருக்கு தெரியாது போலும்.
மவுனமாக அழுவதாக சொல்லுகிறார் ஈழத்தை நினைத்தா? அல்லது எப்படியும் காங்கிரசு நம்மளை கலட்டி விட்டுருவானுங்க போல தெரியுதேன்னா? யாமறியோம். சத்தமாக அழுதால் முதாலளியம்மா கோவிச்சுவாங்க போல. இந்தியரசிற்கும் ஈழத்தமிழர் துயரிற்கும் எவ்விததொடர்பும் இல்லை எல்லாம் புலிகள் எடுத்த முடிவுகளே காரணம் என்றும் கதைவிட்டுட்டு இருக்கார். அப்படியே இனவெறியன் ராசபக்சேவிற்கும் அவனது தளபதிக்கும் பிரச்சனை என்றால் பிராணாப் உடனே ஓடோடி சென்று பஞ்சாயத்து பண்ணுகிறாரே அது ஏனென்று நம்ம தமிழினதலைவர் விளக்கினால் நல்லது. “கலைஞர் சொன்னதில் என்ன பிழை இங்கே இருக்கிற உணர்வாளர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்….” என்று சுபவீக்கள் நமக்கு பாடம் எடுப்பார்கள்.
முழுக்கமுழுக்க திராவிடகொள்கைகள் நீர்த்துபோன, தமிழ் இனமே அழிந்தாலும் தன் குடும்பமே தனக்கு முக்கியம் என்று சுருங்கிப்போன கருணாநிதியுடன் நாம் வேறென்ன எதிர்பார்க்க முடியும். ஈழத்தில் சுமூகநிலை, அகதிமுகாம்கள் அருமை என்றெல்லாம் முன்னர் சத்தமாகச்சிரித்தவர் “எல்லா பிரச்சனைக்கும் புலிகளே காரணம்!” என்று இன்று மவுனமாக அழுதிருக்கிறார். இவர் என்ன சொன்னாலும் வக்காலத்து வாங்க சில போலிதமிழ் உணர்வாளர்கள் உள்ளனர் அவர்களிடம் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் வேறுமாதிரியான வரலாற்றை நமக்கு சொல்லிவிட்டு போய்விடுவார்கள். நான் யாரையும் குற்றம் சொல்லும் நோக்கில் சொல்லவில்லை என்று முழுக்கமுழுக்க புலிகளையும் புலித்தலமையையும் விமர்சித்து இருக்கிறார். சிங்களர்வெற்றியை நோட்டு அடித்து கொண்டாடும்வேளையில் வேதனைமேல்வேதனையாக தமிழினதலைவர் பிரபாகரனை நோக்கி ஆட்காட்டிவிரல் நீட்டி “பிரபாகரனே இந்த இனவழிப்பிற்கு முழு பொறுப்பு!” என்று குற்றம் சுமத்துகிறார். ஈழம் மவுனவலி என்ற புத்தகத்தில் தமிழினதலைவரின் இலக்கியவரிசு கனிமொழி மகாபாரதக்கதை பேசி ரெளத்திரம் பழகாதது தனது பிழை என்று நீலிகண்ணீர் வடிக்கிறார். துரோகிகளை அடையாளம் கண்டுகொள்வதொடு துரோகிகளின் கூட்டாளிகளையும் அடையாளம் காணவேண்டியது தமிழர்களின் கடமை.
அருமை நண்பரே. அற்புதமாக எழுதியுள்ளீர்கள். கீழ்கண்ட பதிவையும் நேரமிருந்தால் படியுங்கள்.
http://savukku.blogspot.com/2009/11/blog-post_17.html
http://savukku.blogspot.com/2009/11/blog-post_17.html
மிக அருமையான கட்டுரை!
எவ்வளவு சொன்னாலும் தமிழின தலைவனுக்கு உரைக்காது என்பதே உண்மை!
தமிழன்பன்
ராஜீவ் ஜெயவர்தனே ஒப்பந்தம்…ராஜீவ் விக்ரமசிங்கே ஒப்பந்தம் அல்ல..
எத்தனை நாளைக்கு இவர் இப்படி மக்களை ஏமாற்றுவார் என்று தெரியவில்லை…மக்கள் முட்டாள்கள் என்று நினைக்கிறாரா…..போர் முடிந்து ஆறு மாதங்களுக்கு பின்பு ஏன் இந்த அறிக்கை…இவரை போல இன துரோகி உலகத்தில் எந்த இனத்திலும் இருக்க முடியாது….விமர்சனம் இருந்தால் பிரபாகரன் உயிரோடு இருக்கும் போதே செய்திருக்க வேண்டியதுதானே…போரை கூட இருந்தே நடத்திவிட்டு இப்போது என்ன அழகு வசனம்…கொஞ்சம் கூட மானமே கிடையாதா…இவருக்கு ஜெயலலிதா வே தேவலை..எதிரியை விட துரோகி மோசமானவன்..
மிக்க நன்றி kp!
எப்படி தவறான தகவல் வந்தது என்று தெரியவில்லை.
அறிவுறித்தியமைக்கு மிக்க நன்றி!