தமிழன் நாதியற்ற இனமா?

திசெம்பர் 3, 2009 § 7 பின்னூட்டங்கள்


“முல்லைபெரியாரில் அணைகட்ட ஆய்வினை மேற்கொள்ள காங்கிரசு அரசு அனுமதி வழங்கியதால் குடிமூழ்கி போய்விடவில்லை!” என்று அறிக்கை வாசிக்கிறார் தமிழகத்தில் இருக்கும் காங்கிரசு தலைவர்.  தமிழகமீனவர்களை சிங்களவன் சுடவில்லை மீனவர்கள் பிரச்சனை குறித்து தொடர்ந்து பேசுகிறோம் என்கிறார் தமிழகத்தில் பிறந்த காங்கிரசு மத்தியமைச்சர்.  தமிழகத்தின் எல்லைபகுதியில் துவங்கப்பட்ட குடிநீர் திட்டத்தை கர்நாடகாவின் தேர்தல் முடியும்வரை ஒத்திவையுங்கள் என்று தமிழக முதல்வருக்கு உத்தரவிடுகிறார் காங்கிரசு தலைவி. இதுவரை ஒகேனக்கல் குடிநீர் திட்டம் என்னவானது என்று தெரியவில்லை.

மேலே கூறிய அனைத்து விடயமும் காங்கிரசு கட்சி சமீபத்தில் தமிழகத்தில் நடத்திகாட்டிய தமிழ்நாட்டு மக்களுக்கு பாதகமான நிகழ்வுகள். இந்தியாவின் ஒரு பகுதியாக தமிழகத்தில் எல்லையில்  இருந்த கச்சத்தீவை  தமிழனின் இனப்பகைவனான சிங்களவனிடம் காங்கிரசு தாரை வார்த்தது பழைய வரலாறு. அந்த வரலாறில் முல்லைபெரியாரும் ஒகேனக்கலும் சேர்ந்துவிடுமோ என்ற அச்சம் இப்பொழுது உருவாகி இருக்கிறது.தமிழ் நாட்டில் வாழ்ந்துகொண்டு தமிழர்களின் ஓட்டுகளை பெற்றுகொண்டு தமிழர்களுக்கே எதிராக காங்கிரசு கட்சி செயல்பட்டு கொண்டு இருக்கிறது. காங்கிரசு காலால் இட்டதை தலையால் முடிக்கும் தலைமையிலான அரசு தமிழகத்தில் வாய்க்கப்பட்டிருக்கிறது. தமிழனும் சுய உணர்வற்று அந்த காங்கிரசு கட்சிக்கு காலம்காலமாக வாக்களித்துவிட்டு தனது உரிமைகளை இழந்துவிட்டு நடுத்தெருவில் நிற்கிறான். தமிழகதமிழன்  நிலை இதுவென்றால்  ஈழத்தமிழன் நிலை என்னவாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். வன்னி நிலப்பரப்பில் வாழ்ந்த தமிழன் இன்று அகதி முகாம்களில் கண்ணீரோடு உலகநாடுகளுக்கு கருணை மனு நீட்டுகிறான். ஈழத்தமிழன் அழிவிற்கும் இன்று அனுபவிக்கும்  துயரத்திற்கும்  முழுப்பொறுப்பு காங்கிரசு கட்சியே.

நமது அண்டை மாநிலங்களில் வேறெங்கும் இல்லாதா அளவிற்கு தமிழகத்தில் தமிழன் என்று உணர்வு சிறிதும் இல்லாதவர்களாக காங்கிரசுக்காரர்கள் இருக்கிறார்கள். அந்த காங்கிரசின் ஆதரவோடு கொள்ளை அடித்து அதிகாரத்தை அனுபவிக்க துடிப்பவர்களாகவே திராவிடத்தை தங்கள் கட்சியின் பெயரில் தாங்கியவர்கள் இருக்கிறார்கள.

உலகில் வேறு எந்த மூலையிலும் இல்லாத அளவிற்கு மீனவர்கள் அண்டை நாட்டு கப்பல்படையால் சுடப்படுவது அதிகமாக இந்தியாவில் நமது  தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. ஆடைகளை அவிழ்த்தார்கள், அடித்து உதைத்தார்கள், வலையை அறுத்தார்கள், படகை சேதப்படுத்தினார்கள் என்று மீனவர்கள் கூறும் குற்றச்சாட்டு அதிகமாக இருந்தாலும் அவனுக்காக குரல்கொடுக்க எவனுமில்லை என்பதால் மீனவர்கள் சோகம் தொடர்கதையாகிகொண்டே போகிறது. தமிழகமீனவர்கள் 600 பேர் படுகொலை செய்யப்பட்ட பொழுதும் இதுவரை ஒரு வழக்கை கூட சிங்களவன் சுட்டு தமிழக மீனவன் செத்தான் என்று பதிவு செய்யாத காவல்துறையாக தமிழககாவல்துறை இருக்கிறது. 600 மீனவர்களும் விபத்தில் இறந்துவிட்டார்கள் என்று பொய்வழக்கு போட்டு சட்டம் தன்கடமையை செய்துள்ளது.

காங்கிரசுகட்சி தமிழின அழிப்பில் மிக உறுதியாக இருப்பது தெளிவாகிறது. திராவிடகட்சிகள் காங்கிரசுக்கு காவடி தூக்குவதை நிறுத்துவதாக தெரியவில்லை. “தமிழ அரசியல்வாதிகளை கோமாளிகள்” என்று வர்ணித்த பொன்சேகாவின் வார்த்தைகளில் ஒளிந்திருக்கும் உண்மையை நாம் இன்னும் விளங்கி கொள்ளவில்லை.

ஈழத்தில் செத்துவிழுந்த ஆயிமாயிரம் தமிழர்களின் புகைப்படங்களை தமிழகவீதிகளில் வைத்து பாருங்கள்அதில் உறுப்புகளை இழந்து செத்து விழுந்த சிறுவர் சிறுமிகளை பற்றியோ உயிரிழந்த தமிழர்கள் பற்றியோ சிறிதும் கவலை இல்லாது.
அதில் எங்காவது பிரபாகரன் படம் தெரிகிறதா? புலி கொடி தெரிகிறதா என்று உத்துபார்த்து உடனே அதனை அகற்று என்று ஆரம்பித்து விடுகிறார்கள் காங்கிரசு புண்ணியவான்கள்.

ராணுவவாகனங்கள் தாக்குதல், இலங்கை தூதரகத்தாக்குதல், இளங்கோவன் வீடு தாக்குதல் என்று தொடர்ச்சியாக தமிழ் உணர்வாளர்களை வேட்டையாடி விளையாடும் காவல்துறை. தா.பாண்டியன் மற்றும்  சீமான் காரை எரித்தவர்கள் பாரதிராசா அலுவலகத்தை தாக்கியவர்கள் என்று எவரையும் கண்டு கொள்வதில்லை. தமிழகத்தில் தமிழனுக்கத்தான் பாதுகாப்பில்லை .தாயகதமிழன் மெளனசாட்சியாக   கொன்றழிக்கப்பட்ட ஈழத்தமிழனின் நிலை தாயகதமிழனுக்கும் வரும்நிலை வெகுதொலைவில் இல்லை. காங்கிரசு பேரியக்கம் தமிழக மண்ணில் துடைத்து எறியப்படும் வரையில் தமிழனின் கண்ணீரை துடைக்கும் வழி பிறக்க போவதில்லை. நீர்த்து போன திராவிட இயக்கங்களை தமிழன் வீழ்த்தும் நாளே தமிழனின் விடியலுக்கான துவக்கம்.

லண்டனில் செத்த தமிழன் உடலை மீட்க இந்தியா உதவவில்லை என்று அனைவரும் அலறி கொண்டிருக்கிறோம். இதில் நாம் அதிர்ச்சி அடைய ஏதும் இருப்பதாக தெரியவில்லை. தமிழன் எங்கே செத்து விழுந்தாலும் அங்கே முதலில் மகிழ்ச்சி அடையவது இந்தியாவின் அதிகார மையம்தான்.   இந்தியகடல்  எல்லையில் செத்துவிழும் தமிழனாக இருக்கட்டும் அல்லது எங்கோ உலகின் ஒரு மூலையில் தமிழன் செத்து விழுந்திருந்தாலும் அதில் சிறிதும் கவலை கொள்ளாத திராவிடகட்சிகளும்  காங்கிரசு கட்சியும் தமிழனின் முதல் எதிரி என்பதை இன்னும் உணராத இனமாக தம்ழினம் இருக்கும்வரை நாதியற்ற இனம்தான் தமிழினம்.

Advertisements

Tagged:

§ 7 Responses to தமிழன் நாதியற்ற இனமா?

 • minnal சொல்கிறார்:

  நல்ல பதிவு.
  என்னோட பதிவையும் கொஞ்ஜம் பாருங்க

 • Arun சொல்கிறார்:

  Nanba, ungal eluthukkal theerkamana karuthukkalai eduthuraikirathu…thodaranthu vidamal eluthungal – Save Tamils Arun

 • இந்தியாவின் அதிகார மையம்

  இன்னும் சற்று விரிவாக உள்ளே புகுந்து வெளியே வந்து இருந்தால்?

  முயற்சிக்கவும். இந்த இடம் தான் அணைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்.

 • Uzhavan சொல்கிறார்:

  ஏன் இந்த நிலை? அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?

 • ARIVU சொல்கிறார்:

  தமிழன்பனின் கருத்து சரியானது தான்.ஒவ்வொரு தமிழனும் யோசிக்க வேண்டிய நேரமிது.

 • ஆனந்த் .ச சொல்கிறார்:

  follower switch on பன்னுங்க?

 • E.Bhu.GnaanaPragaasan சொல்கிறார்:

  யாரும் கவலைப்படாதீர்கள்! காங்கிரசுக் கட்சி தமிழ்நாட்டில் இருந்த இடம் தெரியாமல் போகும் நிலை வந்து கொண்டே இருக்கிறது. என்றும் இல்லாத வகையில், தமிழ்நாட்டில் காங்கிரசு இந்த முறை தனியாகத் தேர்தலைச் சந்திக்கிறது. அதுவும், காங்கிரசு எதிர்ப்பு அலை தமிழ்நாடெங்கும் பரவியிருக்கும் இந்த நேரம் பார்த்து! இப்பொழுது தெரிந்து விடும், காங்கிரசுக்கு வாக்களிக்கத் தமிழ்நாட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என. அதன் பிறகு தி.மு.க – அ.தி.மு.க என்ன, நேற்று தொடங்கிய ஒரு லெட்டர் பேடு கட்சி கூடக் காங்கிரசுடன் கூட்டணி வைக்க முன்வராது. ஆம் தமிழ் உணர்வாளர்களே! காங்கிரசின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

  ஆனால் அதேநேரம், தமிழ் உணர்வாளர்கள் அனைவர் மீதும் எனக்கொரு வருத்தம்!

  “திராவிடக் கட்சிகள் மீண்டும் மீண்டும் காங்கிரசோடு கூட்டணி வைத்துத் தமிழர்களை இந்த நிலைக்குக் கொண்டு வந்து விட்டன” என எல்லாத் தமிழ் உணர்வாளர்களும் பொத்தாம்பொதுவாகக் குறிப்பிடுகிறார்கள். ம.தி.மு.க கூட ஒரு திராவிடக் கட்சிதான். அவர் காங்கிரசுக்கு எதிரானவர்தானே? ஈழத் தமிழர் நலனுக்காக உண்மையாகப் பாடுபடும் தலைவர்களுள் ஒருவர்தானே? உலகத் தமிழினத் தலைவர்.மேதகு.பிரபாகரன் அவர்களின் உளமார்ந்த நண்பர்தானே? அப்படியிருக்கும்பொழுது, “திராவிடக் கட்சிகள், தன் பெயரிலேயே திராவிடத்தைத் தாங்கிய கட்சிகள்” என்றெல்லாம் பொத்தாம்பொதுவாகக் குறிப்பிட்டுக் குறை கூறினால் அது ம.தி.மு.க-வையும் தாக்குவதாகாதா? ஈழத் தமிழர் பேரழிப்புக்குப் பிறகு தமிழுணர்வு பெற்று அரசியல் களத்தைக் கவனிக்கத் தொடங்கியிருக்கும் இன்றைய இளைஞர்கள் பலர் இவற்றைப் படிக்கும்பொழுது ம.தி.மு.க-வையும் சேர்த்துத் தவறாக நினைக்க மாட்டார்களா? அதுவும் உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், களத்திலிருக்கும் உண்மையான ஒரே ஒரு தமிழுணர்வுக் கட்சியான ம.தி.மு.க-வை இப்படிப்பட்ட பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டுகள் எந்தளவுக்குப் பாதிக்கும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

What’s this?

You are currently reading தமிழன் நாதியற்ற இனமா? at தமிழன்பன் பக்கம்.

meta

%d bloggers like this: