பெரியாருக்கு எதிராக புழுதி வீசும் தமிழ் இந்து!

திசெம்பர் 11, 2009 § 27 பின்னூட்டங்கள்


பெரியாருக்கு எதிராக புழுதி வீசும் தமிழ் இந்து!

தமிழ் இந்து “தமிழர்களின்  தாய் மதம்” என்ற அடைமொழியுடன் பெரியாரை நோக்கி அவதூறு கிளப்பபுறப்பட்டு இருக்கிறது பார்ப்பன கும்பல் ஒன்று.  வழமையாக இவர்கள் பெரியாரை நோக்கி அவதூறு கிளப்புபவர்கள் என்பது நாம் அறிந்ததே. ஆனால் இந்தமுறை பெரியாரின் நூல்களில் இருந்து பல செய்திகளை எடுத்து அங்கொன்றும் இங்கொன்றுமாக வார்த்தைகளை வெட்டி பெரியாரின் வார்த்தைகளுக்கு புதிய விளக்கம் கொடுக்க புறப்பட்டு இருக்கிறார்கள். பெரியாருக்கு எதிரான இந்துமத பூசாரிகளுக்கும், வலதுசாரி தமிழ்தேசியம் பேசும் சில போலிதமிழ்தேசியவாதிகளுக்கும் இவர்கள் பெரியார்வாதிகளுக்கு எதிராக ஆயுதம் தயாரித்துதரும் வேலைகளை செய்துகொண்டு இருக்கிறார்கள்.

இவர்கள் பெரியார் குறித்து வைக்கும் குற்றசாட்டுகளுக்கு பெரியார்வாதிகள் யாரேனும் கண்டிப்பாக பதில் கூறுவார்கள் என்ற நம்பிக்கையில் இதுவரை காத்திருந்தேன். தமிழ் ஓவியா போன்ற பெரியார்வாதிகள் எதிர்வினை ஆற்றி வருவது ஆறுதல் அளிக்கிறது. மதிமாறன் இதுபற்றி எழுதினால் சரியாக இருக்கும் என்பதே எனது கருத்தாக இருந்து வந்தது. சமீப காலமாக மதிமாறன் வேறுதிசையில் பயணிக்க ஆரம்பித்துவிட்டார் என்று தோன்றுகிறது. தமிழ் இந்துவில் ஆயுள்கால சந்தாதாரராக செயல்படும் திருச்சிக்காரன் மதிமாறன் வலைப்பூவை குத்தகைக்கு எடுத்து கொள்ள ஆரம்பித்து விட்டார்.பெரியாரும் அண்ணாவும் இணைந்து கொள்ளை அடித்துவிட்டு அதனை பகிர்ந்து கொள்ள சினிமா பாணியில் சண்டை பிடித்தனர் என்று கருத்து தெரிவித்த திரிச்சிகாரர்  இப்பொழுதுதான் மதிமாறன் சரியான திசையில் பயணிப்பதாக பாராட்டு பத்திரம் வாசிக்கிறார். மதிமாறன் அளவிற்கு நான் ஒன்று பெரிய ஆய்வாளன் அல்ல நேற்று எழுத துவங்கிய சின்னப்பயலாக நான் இருந்தபொழுதும் பெரியாரை நேசிப்பவன் என்ற முறையில் தமிழ் இந்துவிற்கு பதில் சொல்லும் கடமை எனக்கும் உள்ளது  என்பதால் எனது எதிர்வினையை பதிவு செய்கிறேன்.

தாழ்த்தப்பட்டோருக்குப் பாடுபட்டவரா ஈ.வே.ராமசாமி நாயக்கர்?

என்ற தலைப்பில் பெரியாரை தாழ்த்தப்பட்டோருக்கு எதிரானவர் என்று நிறுவ முயன்று இருக்கிறார்கள்.  காந்தி சூத்திரர்கள் போலவே பஞ்சமர்களும் கோவிலுக்குள் செல்லும் உரிமை உள்ளது என்று கூறியபொழுது பெரியார் இவ்வாறு கூறினார் “நடுநிலைசாதியான சூத்திரர்கள் கிழே இறங்கி கடைநிலைசாதியான பஞ்சமர்களோடு சேரலாம் என்று காந்தியாரின் கூற்று இருக்கிறது . சூத்திரர்கள் ஏற்கனவே இருந்தநிலையில் இருந்து ஒருபடி கிழே இறங்கலாம் ஆனால் பார்பனர்கள் அப்படியே இருக்க வேண்டும். இது பார்ப்பனர்களின் மனுதர்மத்தை காப்பதாக இருக்கிறது. இதை கடுமையாக எதிர்க்க வேண்டும். காந்தியாரின் பேச்சு வர்க்க வேறுபாடுகளை களைவதாக இல்லாமல். வர்க்க வேறுபாடுகளை காப்பதாகவே இருக்கிறது. “

காந்தியின் அறிவித்த கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களும் செல்லலாம் என்ற அறிவிப்பு பார்ப்பனர்களின் நிலையை காப்பதோடு வர்ணாசிரம சித்தாந்தங்களை காப்பதுமாக இருக்கிறது என்பதே பெரியாரின் கருத்து.

இதனை இவர்கள் இவ்வாறு திரித்து எழுதி இருக்கிறார்கள்.

தமிழ் இந்துவிலிருந்து:

காந்திஜி, ”கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்வதில் எந்தக் கோவிலிலும் சூத்திரர்கள் எதுவரையில் செல்லமுடியுமோ அந்த அளவுவரையில்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் (அரிஜனங்கள்) செல்லலாம்” என்று சொன்னபோது அதன் மீது ஆத்திரப்பட்டு ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறியது என்ன தெரியுமா?

”தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா? பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா? இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது” என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்.

(நூல்: வைக்கம்போராட்ட வரலாறு – வீரமணி)

தாழ்த்தப்பட்டவர்களுக்காக உழைத்தவர் என்று சொல்லுகின்ற ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான், பறையர்களை சூத்திரர்களோடு ஒன்றிணைக்கக்கூடாது என்று சொல்கின்றார். காரணம் சூத்திரர்களோடு சேர்த்தால் நடுசாதியாக இருந்த சூத்திரர் கீழ்ச்சாதியாக ஆக்கப்பட்டுவிடுவார்களாம். இதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் சாதிப்பற்று

/////////////////

இங்கே பார்பனர்கள் அப்படியே இருப்பார்கள் என்று பெரியார் கூறியதை வெட்டி வீசிவிட்டு பெரியார் சாதிய அபிமானி என்று போலி ஆவணம் தயாரித்து இருப்பது அம்பலமாகிறது.

பெரியார் தாழ்த்தப்பட்டோர் படித்து வருவதால்தான் வேலையில்லா திண்டாட்டம் ஏற்படுகிறது என்று சொன்னதாகவும் தாழப்பட்ட பெண்கள் ரவிக்கை அணிவதால் பருத்தி பஞ்சம் ஏற்படுவதுவாக கூறினார் என்று கற்பனைக்கு எட்டாத புனைவுகளை எடுத்து வைக்கிறார்கள்.
தமிழ் இந்துவிலிருந்து:


அதே போல, துணி விலை ஏறிவிட்டதற்குக் காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவதுதான். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்கு காரணம் பறையன்களெல்லாம் படித்துவிட்டதுதான் என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறியதாக தாழ்த்தப்பட்ட தலைவர்கள் இன்றும் கூறுகின்றனர். இது உண்மை இல்லை என்று இதுவரை திராவிடர்க் கழகம் தெளிவுப்படுத்தவில்லை

//////////////////////////////

திராவிடர் கழகம் தெளிவு படுத்தாவிட்டால் என்ன? இவர்களின் கற்பனைத்திறன் நமக்கு தெளிவாகிவிடுகிறது. வர்ணாசிரம கொள்கைகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்று முழங்கினார் பெரியார் என்பது சிறுவர்களுக்கும் தெரியும் அப்படி இருக்க இந்த அறிவாளிகளுக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியம்தான்

மனுதர்மத்தினை போதித்த பகவான் ஹரியையே செருப்பால் அடித்த பெரியார். அந்த மனுதர்மவாதிகளின் கூற்றை நம்பி தாழ்த்தப்பட்டவர் பத்தி அவதூறு செய்தார் என்பவர்களை செருப்பால் அடிப்பது போன்று பெரியார் பேசியதை கவனிக்கவும்.

யாரடா சொன்னா, உன்னைத் தேவடியா மகன்னு, சூத்திரன்னு சொன்னா? கிருஷ்ணன் சொன்னான்! எங்கடா சொன்னான்? கீதையிலே சொன்னான்! கிருஷ்ணனையும் கீதையையும் செருப்பால் அடிக்கத் துணியாமல் போனால் நீ சூத்திரன் தானே! பயந்தீன்னா நீ சூத்திரனாக இருந்துக்கோ!

———- தந்தைபெரியார்- நூல்: “சிந்தனையும் பகுத்தறிவும்”————-

அப்படியே போகும்போக்கில் பெரியார் பார்பனர்களை மட்டுமே எதிர்த்தார் ஆதிக்கசாதியினரை எதிர்த்தாரா? முதுகுளத்தூர் கலவரம் பத்தி பேசினாரா என்று சில போலி தலித்போராளிகளின் குரலை கடனுக்கு வாங்கி இந்த பார்ப்பன பகதர்கள் நமக்கு எதிராக கேள்வியினை முன்வைக்கிறார்கள்.

முதுகுளத்தூர் கலவரம் குறித்து பேசிய ஒரே தலைவன் பெரியார் என்பது அந்த அறிவாளிகளுக்கு தெரியாமல் போய்விட்டது போலும். . முதுகுளத்தூர் கலவரம் அடங்க ஒரேவழி முத்துராமலிங்கத்தை கைது செய்வதுதான் என்றும். பக்வத்சலத்தின் அறிக்கை மிகத்தெளிவாக இருக்கிறது அதன்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கூறிய தலைவன் பெரியார் என்பது பெரியவாள் பக்தர்களுக்கு தெரியவில்லை என்பது நம்பும்படியாக இல்லையே.

அப்படியே இந்த மனுதர்மவாதிகள் அம்பேத்காரை பெரியார் அவதூறு செய்தார் என்று அள்ளிவீசுகிறார்கள். இந்துமதத்தை அதன் வேதநூல்களின் வாயிலாகவே அம்பலப்படுத்தியவர் அண்ணல் அம்பேத்கார் என்பதை இவர்கள் வசதிக்காம மறைக்க முயல்கிறார்கள். இந்துவாதிகளின் திடீர் அம்பேத்கார்பாசம் நமக்கு விந்தையாக இருக்கிறது. எனது தலைவர் என்று அம்பேத்காரை பெரியார் கொண்டாடியதை இவர்கள் எவ்வளவு முயன்றாலும் மறைக்க முடியுமா என்ன? அம்பேத்காரை இவர்கள் பெரியார் எதிர்ப்பிற்கு கருவியாக நிறுவமுயல்வது இங்கே அம்பலப்பட்டு போய்விடுகிறது.

தமிழ் இந்துவின் பொய்பிரச்சாரத்தை முறியடிக்க தொடர்ந்து எழுதுவோம்………

Advertisements

Tagged:

§ 27 Responses to பெரியாருக்கு எதிராக புழுதி வீசும் தமிழ் இந்து!

 • அதிரடியான் சொல்கிறார்:

  நன்று..

  தொடர்ந்து எழுதுங்கள்..

  மதவெறியுடன் செயல்படும் போலிகளை அம்பலப்படுத்துங்கள்..

  நேசமுடன்,
  அதிரடியான்

 • கோகுலகிருட்டிணன் சொல்கிறார்:

  தோழர் தமிழன்பன்,

  மிகச் சிறந்த எதிர்வினை,
  ஆனால் தமிழ் இந்துவின் பெரியார் குறித்த கட்டுரைகளுக்கு யாரும் எதிர்வினை எழுதவில்லை என்று குறிபிட்டிருந்தீர்கள், எனக்குத் தெரிந்து தமிழச்சி அவர்கள் பலமுறை பெரியார் பற்றிய அவதூறு கட்டுரைகளுக்கு மறுப்பு செய்திகளை தக்க சான்றுகளுடன் அனுப்பியிருக்கிறார்கள் அனால் தமிழ் இந்து அவைகளை ஒதுக்கிவட்டார்கள், என்ன செய்ய பார்பனர்கள் என்றைக்கு நேர்மையுடன் இருந்திருகின்றார்கள்?

  அன்புடன்,
  கோகுலகிருட்டிணன்

 • tamizhanban சொல்கிறார்:

  சுட்டி காட்டியமைக்கு நன்றி!

  எல்லோரும் இணைந்து எதிர்வினை ஆற்றுவோம் கோபாலகிருஷ்ணன்.

 • tamizhanban சொல்கிறார்:

  தோழர் அதிரடியானுக்கு நன்றி!

  நம் போன்றவர்கள் பிரிந்து கிடப்பதால்தான் இவர்கள் இவ்வளவு துள்ளுகிறார்கள். ஒருங்கிணைந்து செயல்படுவோம்.

  தமிழன்பன்

 • கபிலன் சொல்கிறார்:

  பெரியார் பற்றிய உண்மைகளை சகித்துக் கொள்ள முடியாமல் பதிவு எழுதியிருப்பது விளங்குகிறது. பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலே கூற முடியாமல் பெரியார் கும்பல் தவித்துக் கொண்டிருப்பது தமிழ் ஹிந்துவின் மூலம் வெட்ட வெளிச்சமாகிறது.

  இத்தனை நாள் பெரியார் சொன்ன விஷயங்களை முழுமையாகச் சொல்லாமல், தங்களுக்கு ஏற்றார் போல பெரியார் கும்பல் பாதியை விழுங்கி, தேவையானவையை மட்டும் சொல்லி வந்திருப்பதும் தமிழ் ஹிந்துவின் மூலம் தெளிவாகி இருக்கிறது.

  வழக்கம் போல வடை ஊசி போனதுக்கு கூட பார்ப்பனன் தான் காரணம்னு சொல்லி இருக்கீங்க. பதிலை காணோமே….?

 • tamizhanban சொல்கிறார்:

  உங்க ஆதங்கம் புரியுது கபிலன்.

  எங்க போயிரப்போறோம்? இப்பத்தான முதல் கட்டுரையை எழுதி இருக்கிறேன்.

  தொடர்ந்து எழுதத்தானே போறோம்.

  சரி இதுல எழுதுனபத்தி உங்களிடம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று புரிகிறது.
  வழக்கம் போல ஊசிய பெரியார்வாதிகள்தான் திருடிட்டு போயிட்டாங்கன்னு சொல்லுவீங்க போல.

 • ram சொல்கிறார்:

  /// என்ன செய்ய பார்பனர்கள் என்றைக்கு நேர்மையுடன் இருந்திருகின்றார்கள்?/// ஐயா! அந்த தளத்தில் பெரியாரைப் பற்றி எழுதுவது பார்ப்பனர் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 • eroarun சொல்கிறார்:

  @ கபிலன்

  உங்க பார்பன பற்று மெய் சிலிர்க்க வைக்கிறது, சரி அய்யா பெரியாரை விட்டு தள்ளுங்கள், நீங்களே சொல்லுங்கள், என்னாத்து உங்களுக்கு மட்டும் பூணூல் நான் பெரியவன், என் சாதி பெருசு, என் சாமான் பெருசுன்னு ஊருக்கு காட்டவா!?

  நீங்க கும்பிடுகிற சாமியில் தப்பு செய்யாத ஒரு சாமியை காட்டுங்கய்யா முதல்ல, பத்து பொண்ணாட்டி கட்டுறவன், அடுத்துவன் பொண்டாட்டிய தூக்கீட்டு போறவன், பொம்பளைங்கல ஆடவிட்டு வேடிக்கை பாக்குறவனெல்லாம் ஒரு கடவுள், அதுக்கு ஜால்ரா அடிக்க ஒரு பார்பன கூட்டம்!.

  பெரியாரே வேண்டாமய்யா, நீர் உம்ம உழுத்து போன வேதத்தை தூக்கி போட்டு மனிதனாய் வாழ தயாரா!?

 • திருச்சிக் காரன் சொல்கிறார்:

  ச‌கோத‌ர‌ர் த‌மிழ‌ன்ப‌ன் அவ‌ர்களே,

  ம‌ற்றும் அனைத்து ச‌கோத‌ர‌ர்க‌ளே,

  த‌மிழ் இந்து இத‌ழில் நான் பெரியாரை பாராட்டிய‌தே அதிக‌ம், விம‌ரிசித்த‌து குறைவே.

  நான் பெரியாரைப் பார‌ட்டிய‌த‌ற்காக‌ அங்கே விம‌ரிசிக்க‌ப் ப‌ட்டேன்.

  //ஓகை நடராஜன்
  9 August 2009 at 10:58 pm

  பெரியாரைப் பற்றிய விவாதம் மற்றும் விமர்சனம் இப்போது தேவையற்றது என்றும் அவரது சில கருத்துகளும் வழிமுறைகளும் தமக்கு ஏற்புடையவை என்று திருச்சிக்காரர் கூறுவதை ஏற்றுக்கொள்வதற்கில்லை.
  //

  ச‌கோத‌ர‌ர்க‌ள் அனைவ‌ரும் கீழ்க் காணும் சுட்டியை அடைந்து பார்வை இட்டால் தெளிவு பெற‌லாம்.

  http://www.tamilhindu.com/2009/08/peiyar_marubakkam_part10/

  and

  http://www.tamilhindu.com/2009/08/peiyar_marubakkam_part11/

  //திரிச்சிகாரர் இப்பொழுதுதான் மதிமாறன் சரியான திசையில் பயணிப்பதாக பாராட்டு பத்திரம் வாசிக்கிறார்.//- இதையும் எழுதிய‌து நான் இல்லை. யாரோ எழுதிய‌தை எல்லாம் நான் எழுதிய‌தாக‌ போட்டு இருக்கிறார்.

  கீழ்க் காணும் சுட்டியை அடைந்து பார்வை இட்டால் தெளிவு பெற‌லாம்.

  http://mathimaran.wordpress.com/2009/11/12/article-250/

  இந்த‌ த‌ள‌த்தையும் பார்வை இடுங்க‌ள்.

  http://thiruchchikkaaran.wordpress.com/

  ந‌ன்றி

  திருச்சிக் காரன்

 • கபிலன் சொல்கிறார்:

  “eroarun சொல்வதென்னவென்றால்: ”

  இன்றைய காலத்தில்,சாதி அடிப்படையில் மனிதனை வேறுபடுத்தி பார்ப்பது பெரியார் கும்பலிடம் மட்டுமே உள்ள நல்ல பழக்கம். அந்த நல்ல வழக்கம் நமக்கு கிடையாது.

  “நீங்களே சொல்லுங்கள், என்னாத்து உங்களுக்கு மட்டும் பூணூல் நான் பெரியவன், என் சாதி பெருசு, என் சாமான் பெருசுன்னு ஊருக்கு காட்டவா!?”

  டாக்டர் மட்டும் எதுக்கு வெள்ளை சட்டை போடணும், வக்கீல் மட்டும் எதுக்கு கருப்பு கவுன் போடணும் இப்படி கேட்டுக்கிட்டே போகலாம். சாதி மத அடிப்படையில் ஒருவனை அடையாளம் காட்டிக்கொள்ள நினைப்பது எவ்வளவு கேவளமான மேட்டரோ, அதே மாதிரி படிச்சவன் படிக்காதவன், ஏழை பணக்காரன், முதலாளி தொழிலாளி என அடையாளப் படுத்திக்கொள்வதும் கேவலம் தாங்க. யாருன்னே தெரியாத ஒரு பிச்சைக்காரன் கிட்டயும், கடைக்காரன் கிட்டயும் ஒரே வேறுபாடே இல்லாம ஒரே மாதிரி நடந்துக்குறோமா?
  அந்தக் காலத்துல இருந்த வேறுபாடுகளை, ஏற்றத் தாழ்வுகளை களைய வேண்டும்னு நாங்க சொல்றோம். இல்லே அதை வச்சு அரசியல் செய்வோம்னு பெரியார் கும்பல் சொல்றாங்க. அவ்வளவு தான்.

  சரி மேட்டர்க்கு வருவோம். எனக்கும் பூநூலுக்கும் சம்பந்தமே கிடையாது. வேணும்னா போலித் தமிழ் தேசியவாதின்னு ஒரு கேடகரி வச்சு இருக்காங்களே…அதுல வேணும்னா சேத்துக்கோங்க…: )நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்று சொல்கின்றவன் யாராக இருந்தாலும் வசை பாட வேண்டியவர் தான். பார்ப்பனனாக இருந்தாலும் சரி. அதுல கருத்து மாறுபாடு கிடையாது.

  “நீங்க கும்பிடுகிற சாமியில் தப்பு செய்யாத ஒரு சாமியை காட்டுங்கய்யா ……….. பாக்குறவனெல்லாம் ஒரு கடவுள், அதுக்கு ஜால்ரா அடிக்க ஒரு பார்பன கூட்டம்!

  இதைப் பார்ப்பன கூட்டம்னு சொல்லாதீங்க. எல்லாரும் தான் சாமி
  கும்பிடுறாங்க. ஏன் எல்லா சாதிக்காரரையும் சேர்த்து சொல்ல பயமா ? சாமி அப்படிங்குற கான்செப்ட் சரி அல்லது தப்பு, அது அவரவர் கண்ணோட்டம். வெகு தொலைவில் தெரிவது

  “பெரியாரே வேண்டாமய்யா, நீர் உம்ம உழுத்து போன வேதத்தை தூக்கி போட்டு மனிதனாய் வாழ தயாரா!?”

  ஹி ஹி…இப்போ எத்தனை பேரு வேதத்தைப் படிக்குறாங்க…எத்தனை பேரு இந்து சமயத்து புத்தகத்தை படிச்சு இருக்காங்க………எல்லாம் ஒரு நம்பிக்கை தான்….மற்றவர்களை கஷ்டப்படுத்தாத வரை, எல்லா விதமான நம்பிக்கைகளும் தவறே அல்ல !

  பிட்சா நல்லா இருக்குன்னு சொல்லுங்க ஓகே….அதுக்காக நாங்க சாப்பிடுற இட்லி கேவ்லம்னு ஏன் சொல்றீங்க….?

  மற்றவர்களைப் புன்படுத்தாத முட்டாள்தனமும் பகுத்தறிவு தாங்க சார் !

 • மதுரைவீரன் சொல்கிறார்:

  கபிலன் பெரியார்வாதிகள் சாதியை விடாமல் பிடித்து இருக்கிறார்கள் என்பது மிகப்பெரிய காமெடி போங்கள். பார்ப்பனியத்தை தூக்கி பிடிப்பவர்களைத்தான் பார்பான் என்று சொல்லுகிறோம் பிறப்பை வைத்து அல்ல. உங்களை பார்பான் என்று சொல்ல உங்களுக்கு அனைத்து தகுதிகளும் இருப்பதை உங்கள் பதிவு காட்டுகிறது.

  வேதம் புனிதமானது என்று உங்களை போன்ற புத்திசாலிகள் சொல்லலாம். சூத்திரன் வேசிமகன் என்று பகவான் கிருஷ்ணனே நேரடியாக வந்து சாட்சியம் சொல்லும் பொழுது. அதனை புனிதம் என்பது உங்கள் பகுத்தறிவை பறை சாற்றுகிறது.

  நீங்கள் இட்லி சாப்பிடுங்கள் வேணாமென்று சொல்லவில்லை. அடுத்தவர்கள் உங்கள் எச்சத்தை சாப்பிட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்பதைத்தான் தவறு என்று சொல்லுகிறோம். வேதத்தை பார்பனர் தவிர பிறர் படிக்க கூடாது என்றும் பார்ப்பனர் தவறு செய்தால் அவரை தண்டிக்க கூடாது அப்படி தண்டித்தால் பிரம்மகத்தி தோஷம் வந்துவிடும் என்று வேதங்கள் அளக்கும் கதைகள் உங்களுக்கு தெரியாது போலும்.

 • திருச்சிக் காரன் சொல்கிறார்:

  ச‌கோத‌ர‌ர் த‌மிழ‌ன்ப‌ன் அவ‌ர்க‌ளே

  ச‌கோத‌ர‌ர் ம‌துரை வீர‌ன் அவ‌ர்க‌ளே,

  //சூத்திரன் வேசிமகன் என்று பகவான் கிருஷ்ணனே நேரடியாக வந்து சாட்சியம் சொல்லும் பொழுது. //

  இவ்வாறு கிருட்டிண‌ர் கூறிய‌தாக‌ ந‌ம‌க்கு தெரிந்த‌ வ‌ரையிலே இல்லை.

  கிருட்டிண‌ர் எப்போது இப்ப‌டி கூறினார் என்ப‌தை மேற்கோள் காட்டினாலன்றி, நீங்க‌ள் யாரோ கூறிய‌தை அப்ப‌டியே கேட்டு, அது உண்மையா என்று ஆராயாம‌ல் எழுதுவ‌தாக‌வே க‌ருத‌ முடியும்.

  கிருட்டிண‌ர், உயிர்க‌ள் எல்லாம் என‌க்கு ச‌ம‌ம் என‌ கூறியிருக்கிறார் என்ப‌தாக‌வே அறிகிறோம்.

  //Geetha: Chapter 9, Verse 29

  “ஸ‌மோஹ‌ம் ஸர்வ‌ பூதேஷு ந‌ மே த்வேஷ்யோ அஸ்தி ந‌ ப்ரிய”

  “நான் எல்லா உயிர்க‌ளிட‌த்தும் ச‌ம‌மாயுள்ளேன், நான் யாரையும் வெறுக்க‌வும் இல்லை, விரும்ப‌வும் இல்லை” //

  அதோடு எல்லோருட‌னும் ந‌ட்புட‌ன் இருக்க‌ வேண்டும், திமிரும் அக‌ந்தை யும் இல்லாம‌ல் இருக்க‌ வேண்டும் என‌வும் கூறியுள்ளார்.

  அத்வேஷ்டா (வெறுப்பிலாமல்),

  சர்வ பூதானம் மைத்ர (எல்லா உயிர்களிடமும் சிநேகமாக),

  கருண ஏவ ச (கருணையுடன் )”

  நிர்மமோ நிரஹங்கார (அகந்தையும், திமிரும் இல்லாதவனாக),

  ய மத் பக்த: ஸ மே ப்ரிய (எவன் என்னிடம் பக்தி உள்ளவனாக இருக்கிறானோ அவனே எனக்கு விருப்பமானவன்) ”

  நீங்க‌ள் குறிப்பிடுவ‌து போல‌ //சூத்திரன் வேசிமகன் என்று// என்று எந்த‌ இட‌த்திலும் கிருட்டிண‌ர் குறிப்பிட‌வில்லை என‌வே நான் க‌ருதுகிறேன்.
  அவ‌ர் எந்த‌ இட‌த்தில் அவ்வாறு கூறினார் என்ப‌தை நீங்க‌ள் மேற்கோள் காட்ட‌ முடியுமா?

 • tamizhanban சொல்கிறார்:

  என்ன திருச்சிகாரன் என்னுடைய வலைப்பூவிலும் வேத மந்திரங்களை அடுக்க ஆரம்பித்து விட்டீர்களே?

  நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன் என்று பகவான் பகவத்கீதையில் சொன்னாரா இல்லையா என்று மட்டுமாவது தெளிவு படுத்துங்கள். சூத்திரன் என்ற வர்ணத்திற்கு உங்களுக்கு அர்த்தம் தெரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்.

  தமிழன்பன்

 • திருச்சிக் காரன் சொல்கிறார்:

  த‌ம்பி,

  நீங்க‌ள் என்னை விம‌ரிச‌த்த‌தாலேயே வ‌ர‌ வேண்டிய‌தாகி உள்ள‌து.

  வேத‌மோ, கீத‌மோ க‌ருத்து என்ன‌ என்று மெய்ப் பொருள் காண்பீர்க‌ள் என‌ எண்ணியே ப‌திவு இட்டேன்.

  ஒருவ‌ரை உய‌ர்த்திக் கொள்வதும், தாழ்த்திக் கொள்வ‌தும் அவ‌ர‌வ‌ர் கையிலேயே உள்ள‌து. இதையே கிருட்டிண‌ர், வ‌ள்ளுவ‌ர் உள்ளிட்ட‌ எல்லா அறிங்க‌ரும் கூறியுள்ள‌ன‌ர்.

  ஆனால் பிர‌த‌ம‌ர் ம‌க‌ன் பிர‌த‌ம‌ர், முத‌ல்வ‌ர் ம‌க‌ன் முத‌ல்வ‌ர், ந‌டிக‌ர் ம‌க‌ன் ந‌டிக‌ர் என்று இப்போது ப‌ர‌ம்ப‌ரை ப‌ட்டா போடுவ‌து போல‌, அக்கால‌த்தும் சுய‌ ந‌ல‌வாதிக‌ள் அர‌ச‌ன் ம‌க‌ன் அர‌ச‌ன், பார்ப்ப‌ன‌ர் ம‌க‌ன் பார்ப்ப‌ன‌ர் என்று பிற‌ப்பின் அடிப்ப‌டையில் பிரித்து விட்ட‌ன‌ர்.

  //கீதை, அத்தியாயம் 4 , செய்யுள் (13)

  “சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண – கர்ம விபாகச”//

  குணத்துக்கும், செயலுக்கும் ஏற்ப நான்கு வகையான பிரிவுகள் , வர்ணங்கள் உள்ளன என்று கிருட்டினர் கூறியே உள்ளார்.

  ஆனால் கிருட்டினர் கூறியதை எல்லோரும் தங்களின் சுயனலத்திற்கக்காக திரித்துக் கூறிய நிலையில் கிருட்டினர் என்ன செய்ய முடியும்?

  குணத்துக்கும், செயலுக்கும் ஏற்ப நான்கு வகையான பிரிவுகள் , வர்ணங்கள் உள்ளன என்று கிருட்டினர் கூறியே உள்ளார்.

  ஆனால் அவை குணத்துக்கும், செயலுக்கும் ஏற்ப என்பது தெளிவாக, அழுத்தமாகக் கூறப்பட்டுள்ளது.

  குணத்துக்கும், செயலுக்கும் ஏற்ப என்றுதான் கூறப் பட்டுள்ளதே தவிர பிறப்பின் அடிப்படையில் வர்ணம் என்று கூறப்படவில்லை.

  இதையே வள்ளுவர்

  “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பொவ்வா
  செய்தொழில் வேற்றுமையான்”

  “பெருமைக்கும் எனைச் சிறுமைக்கும் அவரவர்
  கருமமே கட்டளைக் கல்”

  கூறியுள்ளார்.

  அதோடு

  “வெள்ள‌த்த‌னைய‌து ம‌ல‌ர் நீட்ட‌ம், மாந்த‌ர்த‌ம்
  உள்ள‌த்த‌னைய‌து உய‌ர்வு” என்றும் உள்ள‌து.

  கிருட்டினரும், வள்ளுவரும் கூறினால் என்ன? அதையும் நாம் சோதனைக்கு உள்ளாக்குவோம்.

  கர்மா – செயல்களில் பல வகையான செயல்கள் உண்டு. அதில் முக்கியமாக சில வகை மக்களுக்கு அவசியமானவை-சில வகை மக்களுக்கு அவசியம் இல்லாதவை- ஆனால் சில வகை மக்களுக்கு கெடுதல் விளைவிக்கக் கூடியவை.

  மக்களுக்கு அவசியமான கர்மாக்களை கூட இழிவான கர்மாவாக கருதுவது தவறு.

  பிணம் எரிப்பது இழிவான செயலா? பிணம் எரிப்பது எவ்வளவு முக்கியமான செயல்.

  இன்ஜினீயர் தன் வேலையை ஒரு வாரம் தாமதப் படுத்த முடியும். பிணம் எரிப்பவர் ஒரு நாள் தன் வேலையை தாமதப் படுத்த முடியுமா?

  அதே பிணத்துக்கு அருகில் நின்று மணிக் கணக்கில் பார்ப்பன் ஓதுகிறான். மறுநாள் காலையில் வந்து சாம்பலை வைத்து இன்னும் பலத்தை ஓதி, அந்த சாம்பலையும் எடுத்திக் கொண்டு நதியில் கரைக்கும் போதும் இன்னும் ஓதுகிறான்.

  இருவரும் அதே பிணத்துக்கு அருகில் நின்றுதான் தங்கள் தொழிலை செய்கின்றனர். ஆனால் பார்ப்பனர் தொழிலை உயர்வாகவும், சுடலைக் காப்பாளர் தொழிலை மட்டமாகவும் கருதும் பகுத்தறிவற்ற சமூகம் நம் சமூகம்.

  பார்ப்பனர் மகன் தான் வேதம் ஓத வேண்டும், சுடலைக் காப்பாளர் மகன் எரிக்க வேண்டும் என்று கூறுவது தான் பார்ப்பனீயம் எனக் கூறப் படுகிறது. அதை நாம் எதிர்க்கிறோம்.

  பார்ப்பன் ஓதாவிட்டால் ஒன்றும் கேடு இல்லை. ஆனால் சுடலைக் காப்பாளர் வேலை செய்யாவிட்டால் வூர் நிலைமை மோசம்.

  இன்றைய உலகச் சூழலில் மென்பொருள் பணியாளர் வேலை வாய்ப்பு இல்லை. பணிப் பாதுகாப்பு உள்ள தொழில்கள் சுடலைக் காப்பாளரும், முடி திருத்துபவரும்தான். அடிப்படை சம்பளம் ரூபாய் 20,000 என நிர்ணயித்தால் பல பார்ப்பனர் சுடலைக் காப்பான் வேலைக்கு மனுப் போடுவார்கள்.

  கிருட்டினர் எந்த இடத்திலும் தச்சனின் மகன் தச்சனாகவும், அரசனின் மகன் அரசனாகவும் , பார்ப்பானின் மகன் பார்ப்பனாகவும் இருக்கவேண்டும் என்று கூறவேயில்லை.

  ஆனால் பிரதமர் தம் மகனை பிரதமராக்குவது போல,
  முதல்வர் தம் மகனை முதல்வராக்குவது போல,
  நடிகர் தம் மகனை நடிகராக்குவது போல,
  எல்லோரும் சுயநலமில்லாமல் “மக்களின் விருப்பத்தின்” பேரில், இப்படிப் பரம்பரை பாத்தியதை கொண்டாடி விட்டனர்.

  ஆனால் நாம் ஆனால் நாம் கூற‌ வ‌ருவ‌து இதையெல்ல‌ம் விட‌ முக்கிய‌மான‌ விட‌ய‌ம்.

  எந்த‌ செய‌லை செய்தாலும் அவ‌ர் அந்த‌ தொழிலை எவ்வ‌ள‌வு திற‌மையுட‌னும், நாண‌ய‌த்துட‌னும் செய்கிறார்க‌ள் என‌ப‌தைப் பொருத்தே ச‌மூக‌ம் அவ‌ரை ம‌திக்கும்.

  ஒரு த‌ச்ச‌ர் ந‌ன்றாக‌ மேசை த‌யாரித்துக் குடுத்தால் அவ‌ரைப் பார்ர‌ட்டுகிறோம். ஒரு க‌ண‌க்க‌ர் திற‌மையுட‌ன் செய‌ல் ப‌டாவிட்டால் எந்த‌ ம‌திப்பும் குடுப்ப‌து இல்லை.

  ஒரு பொறியாள‌ர் அவ‌ர் கையூட்டு பெற்றுக் கொண்டு, பால‌த்தை இடிந்து விழும்ப‌டிக் க‌ட்டினால் அவ‌ர் பார்ப்ப‌ன‌ராக‌ இருந்தாலும், வேறு எந்த‌ சாதியின‌ராக‌ இருந்தாலும் அவ‌ர் இழிவான‌வ‌ராக‌வே, கீழ்மையான‌வ‌ராக‌வே நான் க‌ருதுவேன்.

  ஒரு காவ‌ல் துறை அதிகாரி, அவ‌ர் க‌ற்ப்ப‌ழிப்புக் கேசை மூடி அனியாய‌ம் செய்தால் அவ‌ர் பார்ப்ப‌ன‌ராக‌ இருந்தாலும், வேறு எந்த‌ சாதியின‌ராக‌ இருந்தாலும் அவ‌ர் இழிவான‌வ‌ராக‌வே, கீழ்மையான‌வ‌ராக‌வே நான் க‌ருதுவேன்.

  என‌வே குணத்தின், தொழிலை செய்யும் வித‌த்தின் அடிப்ப‌டையில் வேறுபாடுக‌ள் என்பது இய‌ற்க்கையாக‌ உருவாவ‌து. ஆனால் அதை சுய‌ன‌ல‌முடையோர், பிற‌ப்பின் அடிப்ப‌டையில் என்று மாற்றி விட்ட‌ன‌ர்.

  ஆனால் குணத்தின், தொழிலை செய்யும் வித‌த்தின் அடிப்ப‌டையில் கூட‌ வேறுபாடுக‌ள் வேண்டாம்- வேண்ட‌வே, வேண்டாம்- என்பத‌ற்க்காக‌த்தான் நான், எல்லொரும்
  க‌ன‌வானாக மாறும் வ‌கையில், ந‌ல்லொழுக்க‌த்தில், ந‌ல்லெண்ண‌தில், அன்பின் அடிப்ப‌டையில் ஒன்றாக‌ இணைவொம் என்று கூறுகிறென்.

  நான்தான் உய‌ர்ந்த‌ சாதி, என்னைத் தொடாதெ என்று கூறுப‌வ‌ன் மிக‌ இழிந்த‌வ‌ன்,

  பிற‌ர் வாயில் பீ தினிப்ப‌வ‌ன் மிக‌ இழிந்த‌வ‌ன்,

  நிதான‌த்தை இழ‌ந்து காட்டுமிரான்டித் தாகுத‌லில் ஈடுப‌டுப‌வ‌னும் ம‌ன‌ முதிற்ச்சி அடைய‌ வேண்டியுள்ளது.

  அர‌சாங்க‌ வேலையில் இருந்து ம‌க்க‌ளிட‌ம் ல‌ஞ்ச‌ம் வாங்கி சொத்து சேர்ப்ப‌வ‌ன் மிக‌ இழிந்த‌ திருட‌ன்,

  இவ‌ர் போன்ற‌ ப‌ல‌ரையும், எல்லோரையும் ப‌குத்த‌றிவின் அடிப்ப‌டையில் க‌னாவானாக்கி, வ‌ள்ளுவ‌ர் பாராட்டும் ப‌டியான‌ ம‌னித‌ராக்கி ஒன்றினைப்போம்.

  உல‌கின் ப‌ல‌ ப‌குதிக‌ளிலும் அடிமை- முறை‍ மிக‌ மோச‌மான‌ அடிமை முறை‍ இருந்துல்ல‌து. அமெரிக்காவில் அடிமைக‌ளுக்கு பிற‌ந்த‌ குழ‌ந்தைக‌ள் எஜ‌மானுக்கு சொந்த‌ம்‍ எஜ‌மானிட‌ம் ப‌ணம் இல்லை என்றால், அடிமை ம‌னைவியை த‌னியாக‌ விற்று விடுவான்.

  அவ‌ர்கள் திருந்தி விட்டார்க‌ள்.

  நாம் இன்னும் திருந்த‌ வேண்டியுள்ளது.

  ஒருவ‌ரை உய‌ர்த்திக் கொள்வதும், தாழ்த்திக் கொள்வ‌தும் அவ‌ர‌வ‌ர் கையிலேயே உள்ள‌து. வேறு யாரும் அதை உருவாக்க‌ முடியாது.

  என் க‌ருத்து த‌வ‌றாக‌ இருந்தால் விள‌க்குங்க‌ள்.

  ந‌ன்றி

  திருச்சிக் காரன்

 • திருச்சிக் காரன் சொல்கிறார்:

  //சூத்திரன் என்ற வர்ணத்திற்கு உங்களுக்கு அர்த்தம் தெரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்//

  சூத்திரர் என்பவர் அப்பாவிகள் என்பதாக பொருள் கொள்ளாலாம்.

  சூத்திரர் என்பவர் வெகுளிகள் என்பதாக பொருள் கொள்ளாலாம்.

  சூத்திரர் என்பவர் உண்மையை நிலையை அறிய முயற்சி செய்யாதவர் என்பதாக பொருள் கொள்ளாலாம்.

  சூத்திரர் என்பவர் வெளிச்சத்தை நோக்கி பயனிக்காமல் இருப்பவர் என்பதாக பொருள் கொள்ளாலாம்.

  //சூத்திரன் வேசிமகன் // என்று சொன்னார்கள் என்று சொல்வது அநியாயமான, அநாகரீகமான செயல். ஒரு சிறுவன் இன்னொரு சிறுவனிடம் சென்று ” டேய், அந்த ஆறுமுகம் பய உன்னை ‘நாய்’னு திட்டினாண்டா…… அப்படி திட்டினாண்டா………., இப்படி திட்டினாண்டா ……………..என்று தன் மனம் விரும்பியவாறு பேசுவதைப் போன்ற செயல்.

 • ஒட்டக்கூத்தர் சொல்கிறார்:

  நல்ல பதிவு தொடருங்கள் தமிழன்பன்

 • கபிலன் சொல்கிறார்:

  “மதுரைவீரன் சொல்வதென்னவென்றால்:
  ……..உங்களை பார்பான் என்று சொல்ல உங்களுக்கு அனைத்து தகுதிகளும் இருப்பதை உங்கள் பதிவு காட்டுகிறது. ”

  நீங்கள் என்னைப் பறையன் என்றாலும், பார்ப்பான் என்றாலும் கவலையில்லை. ஏனெனில் பறையன், பார்ப்பான், முதலியார், தேவர்,கௌண்டர் என எல்லோரும் எங்களுக்கு ஒண்ணு தான்.
  இதில் வேறுபாடு பார்க்கும் பெரியார் கும்பலுக்கு வேண்டுமானால் உருத்தல் இருக்கும்.

 • Matt சொல்கிறார்:

  பார்பன கும்பல் பெரியாரை பற்றிய தவறான செய்திகளை வெளியிட்டே ஆதாயம் காண முயல்கிறது. நேரிடையாக எதிர்க்க வக்கில்லை அதற்க்கு. தமிழ் ஹிந்துவில் நாம் எழுதினால் வெளியிடுவதில்லை. காஞ்சியில் கோவிலில் அர்ச்சகரனாக இருக்கும் ஒரு பார்பான் கருவறையிலேயே பெண்களுடன் சல்லாபமாக இருக்கிறான் , அதை பதிவும் செய்கிறான். இந்த மானங்கெட்ட பார்பன பொறுக்கிகள் ,இந்துத்துவ குஞ்சுகள் அதை பற்றி வாயை திறக்கவில்லை. இனிமேல் எப்படி பெண்கள் இந்த பார்பன பெண் பொறுக்கிகள் இருக்கும் இடத்திற்கு செல்ல முடியும் .

 • RAMA RAJENDIRAN சொல்கிறார்:

  vaalthukkal

 • முகமது பாருக் சொல்கிறார்:

  வாழ்த்துகள் தமிழன்பன்..

  பார்ப்பினீயம் தன்னை காலத்திற்கு ஏற்ப மீள் கட்டமைப்பு செய்து கொண்டே வருகிறது..அதன் நீட்சிதான் அந்த இணையதளம் மற்றும் திரிச்சிகாரன் போன்ற கழிசடைகள்…

  உங்களின் முயற்சிக்கு நன்றி மற்றும் வாழ்த்துகள் தமிழன்பன்.. இன்னும் தொடருங்கள்..

 • commie.basher சொல்கிறார்:

  ஒரு சில குல்லாப்பேர்வழிகள், பெரியாரின் தாடிக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு இந்து மதத்தைத் தாக்குகிறார்கள். இந்து மதத்தை இழிவாகப் பேசிய பெரியார் சைடில் நின்று கொண்டால் இசுலாமை யாரும் தாக்க மாட்டார்கள். முட்டாள் தனத்தை பகுத்தறிவு என்றும் ஒத்துக்கொள்வார்கள். என்று இவர்கள் நினைக்கும் அளவுக்கு பெரியார் கு.ந க்கள் மூடர்களாக இருக்கிறார்கள்…

 • திருச்சிக் காரன் சொல்கிறார்:

  சகோதரர் முகமது பரூக் தொடர்ந்து பல தளங்களிலும் என்னை ஆதாரம் இல்லாமல் வசை பாடி வருகிறார். நான் எந்த விதத்திலே கழிசடை என்று கூறப்பட முடியும்?

  நான் யாரிடமாவது பணம் வாங்கி விட்டு திருப்பி குடுக்கவில்லையா? பிறர் வீட்டு பெண்களிடம் தவறாக நடந்து கொண்டேனா? யாரயாவது தாழ்வாக கருதினேனா? வெறுப்புணர்ச்சியை தூண்டினேனா? இரத்த வெறியை , வன்முறையை ஆதரித்தேனா?

  என்னைக் கட்டம் கட்டி காழ்ப்புணர்ச்சி காட்டும் சகோதரர் முகமது பரூக் அவர்களே, நீங்கள் என்னை இகழ்வதனால், மிரட்டுவதனால், வைவதனால், நான் உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவது நிற்காது.

  இன்னும் தெளிவுடனும், ஆதாரத்துடனும் எழுதுவேன்.

 • ram சொல்கிறார்:

  ///ஒரு சில குல்லாப்பேர்வழிகள், பெரியாரின் தாடிக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு இந்து மதத்தைத் தாக்குகிறார்கள்.///

  குல்லாக்கள் மட்டுமில்லை பல சிலுவைக்காரர்களும் அடக்கம்.

 • கபிலன் சொல்கிறார்:

  திருச்சிக்காரரே !

  பயந்தவன் தான் பிதற்ற ஆரம்பிப்பான். அந்த வகையில் தங்கள் பின்னூட்டங்கள் அவர்களை அலற வைத்திருக்கிறது….எதற்கோ பயப்பட வைத்திருக்கிறது என்பது திண்ணம்.

  ஆகையால், இவைகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். உண்மையை உரக்கச் சொல்வோம். நரிகளின் ஊளையை தூக்கி உலையில் போட்டு நம் வேலையைப் பார்ப்போம்.

 • திருச்சிக் காரன் சொல்கிறார்:

  நன்றி கபிலன் அவர்களே,

  நாம் எல்லோருமே சகோதர்கள்தான்.

  எல்லோரும் உணமைக்ளைப் புரிந்து கொள்ளவும், வெறுப்புக் கருத்துக்களை விட்டு ஆக்க பூர்வமாக சிந்திக்கவும்தான் எழுதுகிறோமே தவிர,

  யாரையும் மடக்க வேண்டும் என்ற நோக்கிலோ , நான் பெரிய அறிவாளி என்று காட்ட வேண்டும் என்ற நோக்கிலோ நாம் எழுதவில்லை என்பதை உணர்த்துகிறோம்.

 • வால்பையன் சொல்கிறார்:

  @ கபிலன்

  சீருடை வேற்றுமை சரியான உவமையாக எனக்கு தெரியவில்லை!
  கருப்பு கோட் அணிந்து தான் கோர்டுக்கு செல்ல வேண்டும் என்ற சட்டம் பிரிட்டிஷ்காரன் கொண்டு வந்தது, அப்போதைய வக்கில்கள் பெரும்பான்மை பார்பனர்கள் தான் என்பது உலகறியும்!

  இந்த மாதிரி தனித்துவம் காட்டச்சொன்னா முன்னாடி வந்து நிக்கிற ஆள் பாப்பான் தான்!

  குடுமி வச்சிகிறது, பெருசா நாமம் போட்டுகிறது, வித்தியாசமா உடை அணிஞ்சிகிறது இந்த மாதிரி! ஆனா வேறு யாரும் இந்த மாதிரி செய்திடகூடாதுன்னு தான் வர்ணாசிரமத்தை கையிலெடுத்து நீ சூத்திரன் இப்படி செய்யக்கூடாதுன்னு சொல்லிட்டான்!

  நமக்கு தான் இட்லியோ, பீஸாவோ சோறு கிடைச்சா போதுமே, சுயமரியாதையை பற்றி யாருக்கு என்ன கவலை! அதான் அவன் ஏற ஏற நாம குனிஞ்சிகிட்டு இருக்கோம்!

 • வால்பையன் சொல்கிறார்:

  eroarun என்பதும் நான் தான்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

What’s this?

You are currently reading பெரியாருக்கு எதிராக புழுதி வீசும் தமிழ் இந்து! at தமிழன்பன் பக்கம்.

meta

%d bloggers like this: