மாறன்சகோதரர்களுக்கு சிங்களவர்கள்தான் சோறுபோடுகிறார்களா?

திசெம்பர் 12, 2009 § 2 பின்னூட்டங்கள்


மாறன் சகோதரர்களுக்கு சிங்களவர்கள்தான் சோறுபோடுகிறார்களா?  அல்லது சன் குழுமத்தின் சிங்கள பாசத்தின் காரணம் என்ன?


எல்லாம் என்னுடைய தவறுதான் அதில் துளியும் சந்தேகமில்லை. தமிழ்தொலைக்காட்சிகளின் செய்திகளின் நம்பகத்தன்மை பொய்த்து போய் பலநாட்கள் ஆகிவிட்டது. மக்கள்தொலைக்காட்சியை நாம் நம்பிக்கொண்டு இருந்தாலும் அவர்கள் கூட்டணிதாவும்  மனநிலையில் இருப்பதால் திடீரென்று செம்மொழிமாநாட்டில் கலந்துகொள்வது என்று ராமதாசு அவர்களின் அறிவிப்பை தொடர்ந்து யாரைத்தான் நம்புவதோ? என்று தமிழ்தொலைக்காட்சிகளின் செய்திகளை பார்ப்பதை நிறுத்திவிட்டேன். ஆங்கிலதொலைக்காட்சிகளில் வரும் செய்திகளை அவ்வப்போது பார்த்து வருவது வழக்கம்( அங்கென்ன வாழ்கிறது என்று நீங்கள் கேட்பது புரிகிறது). தமிழகம் குறித்த செய்திகளை தமிழர்கள் திரித்து சொல்வதைகாட்டிலும் வேறு யாராவது திரித்து சொல்வது அவ்வளவு பெரிய அதிர்ச்சியை கொடுப்பதில்லை என்பதும் காரணம். சன், ஜெயா செய்திகளையெல்லாம் பார்த்து பழகிய நமக்கு வடக்கர்களின் திரிப்பு எல்லாம் பெரியவிடயமா என்ன?

வீட்டுல எப்பபார்த்தாலும் சன் தொலைக்காட்சி இடைவிடாமல் ஓடி கொண்டிருப்பதால் எதிர்பாராத விபத்தாக சன் செய்திகள் பார்க்க நேர்ந்ததை என்ன சொல்லுவது?. சரி நான் பார்த்த ‘அந்த’ செய்தி பத்தி கொஞ்சம் பார்ப்போம்.

இலங்கை வேண்டுகோள்! என்ற தலைப்பில் ஐரோப்பிய யூனியனின் இலங்கைக்கான  வரி சலுகையை விலக்குவதை தவிர்க்குமாறு  சிங்கள அமைச்சர் வேண்டுகோள் விடுத்ததை ஒளிபரப்பியது. இலங்கையில் மனித உரிமைகள் மேம்படுத்தப்படும்(?) என்று இலங்கை உறுதி அளித்துள்ளது என்று திரும்ப திரும்ப செய்தி வாசித்தனர். செய்தியின் போது ஓடும் எழுத்துக்களிலும் இது வந்து கொண்டே இருந்தது. இதை தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக எதற்க்காக ஒளிபரப்புகிறார்கள் என்ற சந்தேகத்தை ஒத்தி வைத்துவிட்டு இவனுக என்னதான் சொல்லவரானுங்க என்று தொடர்ந்து செய்திகளை பார்த்து தொலைத்தேன்.

அடுத்ததாக வந்த செய்திகள் இசுரேலில் இருந்து ஆறு  அதிநவீன படகுகள் இலங்கை வாங்கியுள்ளதாகவும் வரும் ஜனவரியில் அவர்களின் எல்லையோர பாதுகாப்புபடையில் சேர்க்க இருப்பதாகவும், இதன் மூலம் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கபோவதாகவும் அத்தோடு தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதை இதன் மூலம் சிங்களவர்கள் தடுத்து நிறுத்த போவதாகவும் தொடர்ந்து வாசித்து கொண்டு போனார்கள்.

எனக்கு உண்மையிலேயே சந்தேகமாகிப்போனது நான் தமிழ் தொலைக்காட்சிதான் பார்த்து கொண்டு இருக்கிறேனா? சன் தொலைக்காட்சி தமிழகத்தில்தான் செயல்பட்டு கொண்டிருக்கிறதா? மாறன் சகோதரர்கள் சிங்களத்தில் ஏதும் தொலைக்காட்சிகள் நடத்துகிறார்களா அப்படி அங்கே போகவேண்டிய செய்தி அறிக்கை தவறாக தமிழ்செய்திகளுக்கு வந்துவிட்டதா? என்றெல்லாம் யோசிச்சுயோசிச்சு தூக்கம் போனதுதான் மிச்சம்.

சிங்களதொலைக்காட்சிகள் கூட இந்தளவிற்கு விசுவாசத்தோடு இருப்பார்களா? என்ற ஐயத்தை நம்மால் தவிர்க்க முடியவில்லை. சன் குழும தொலைக்காட்சிகள் அது செயல்படும் மாநிலத்தை பொறுத்து செய்திகளை திரித்து வெளியிடும் என்ற குற்றச்சாட்டு பலநாட்களாக இருந்து வருகிறது. சிங்களனுக்கு ஆதரவாக தமிழகத்தில் செய்திவாசிக்க வேண்டிய அவசியம் என்ன?
தமிழகமீனவர்கள் எல்லை தாண்டுவதை தடுக்க சிங்களன் அதிநவீன படகு வாங்குகிறான் என்று தமிழகத்தின் தலைநகரில் உற்காந்து கொண்டு செய்தி வாசிக்கும் தைரியம் மாறன் சகோதரகளுக்கு வந்திருக்கிறது.  சிங்களவன் சுட்டு வீழ்த்திய 600  மீனவர்களுக்கு நாம் நியாயம் கேட்கும் வேளையில்  தமிழகத்திலிருந்தே தமிழர்கள் எல்லை தாண்டுகிறார்கள் என்று செய்திகள் வாசிக்கிறார்கள்.

தமிழக எல்லைகளில் திருட்டுத்தனமாக கேரளாவினர் கழிவுகளை கொட்டுவதை தடுக்க தமிழகம் நடவடிக்கை எடுத்தால்( நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்பது நமக்கு தெரியும், நமக்கு ஏது அம்புட்டு தைரியம்)  அப்படியே கேராவில் இருக்கும் சன்குழும செய்திகளில் சொல்லிப்பார்க்கட்டும். அதுக்கு அப்புறம் எப்படி சேரநாட்டில் மாறன் பிரதர்ஸ் தொழில் பண்ணுரானுகன்னு பார்ப்போம்.


முரசொலிமாறன்  என்னும் திராவிடபோராளி பெற்றெடுத்த பிள்ளைகள் ராமாயண, மகாபாரத தொடர்களை ஒளிபரப்பி திராவிட சேவைசெய்தது போதாதென்று இன்று சிங்களனுக்காக செய்தி வாசித்து தமிழ்-சேவையை ஆரம்பித்து விட்டார்கள் போலும்.  சன்-குழுமம் இன்று பலதிசைகளில் வேர் பரப்பி இருந்தாலும் முதலில் தமிழ் நாட்டில் “சன் டிவியின் தமிழ் மாலை” என்று மாலை நேரங்களில் மட்டும் ஒளிபரப்பை ஆரம்பித்து தமிழர்களின் ஆதரவால் முழுநேரம் ஒளிபரப்பாகும் பல தொலைக்காட்சிகளை நடத்தி கொண்டிருக்கின்றனர். முழுநேரமாக ஒளிப்பரப்பினாலும் பழைய நியாபகத்தில் “சன் டிவியின் தமிழ் மாலை” என்றே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். தமிழர்கள் தங்களை வளர்த்து விட்டதற்கு விசுவாசம் காட்ட தமிழர்களின் மார்பில் பாய்ந்து இருக்கிறார்கள் போலும்.இவர்களின் குடும்பத்திற்கு இடையிலான அதிகாரபோட்டியில்  தினகரன் ஊழியர்கள் மூன்றுபேர் இறந்ததையே தங்கள் ஆதாயத்திற்காக பயபடுத்திகொண்டவர்கள் இவர்களிடம் தமிழகமீனவர்களை பற்றி  நீதியை எதிர்பார்க்க முடியாது என்பதும் நாம் அறிந்ததே. இப்படியே போனால் தமிழ்நாட்டில் மேலும் ஒரு சிங்கள ரத்னா கிடைத்து விடுவார் என்பதில் ஐயமில்லை. செம்மொழி மாநாட்டிலேயே அந்த விருதினை தமிழினதலைவர் கையினால் மாறன்களுக்கு கையளிக்கப்பட்டாலும் நாம் ஆச்சரியப்பட போவதில்லை.

Advertisements

Tagged: ,

§ 2 Responses to மாறன்சகோதரர்களுக்கு சிங்களவர்கள்தான் சோறுபோடுகிறார்களா?

  • arasan சொல்கிறார்:

    இந்த மாறன் கள்ளபசங்க இருக்கனுன்களே.. இந்த கருணாநிதியின் விஷ விருஷங்கள் என்பது தான் நிஜ உண்மை.. இந்த விதைகளை இரவும் பகலும் தின்றுதான் தமிழ் (மக்கள் ) ஜந்துகள் உயிர் வாழுதுகள். என்ன செய்வது நானும் இந்த ஜீவ ராசிகளோட தான் சேர்ந்து உயிர் வாழவேண்டியதாக இருக்கிறது.. இந்த உலகத்தில் மிக மோசமான பூச்சி கரப்பான்.. இந்த கரப்பானை விட மோசமானது இந்த மாறன் பயல்கள்
    தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் பலர் தினந்தோறும் ரத்த கண்ணீர் விட்டு மனம் நொந்து வாழ்வது இந்த உலகத்துக்கு தெரிய வாய்ப்பில்லை.. வருடம் முழுவதும் எல்லா திரை அரங்குகளையும் மடக்கி பிடித்து பிறர் தொழில் நடத்த முடியாமல் செத்து சுண்ணாம்பாகி கொண்டிருக்கிறார்கள் .. யார் வருவார் இவர்கள் கொட்டத்தை ஒழிக்க கடவுளே உனக்கே வெளிச்சம்..

  • senthilkumaran1977 சொல்கிறார்:

    இந்த மாறன் கள்ளபசங்க இருக்கனுன்களே.. இந்த கருணாநிதியின் விஷ விருஷங்கள் என்பது தான் நிஜ உண்மை.. இந்த விதைகளை இரவும் பகலும் தின்றுதான் தமிழ் (மக்கள் ) ஜந்துகள் உயிர் வாழுதுகள். என்ன செய்வது நானும் இந்த ஜீவ ராசிகளோட தான் சேர்ந்து உயிர் வாழவேண்டியதாக இருக்கிறது.. இந்த உலகத்தில் மிக மோசமான பூச்சி கரப்பான்.. இந்த கரப்பானை விட மோசமானது இந்த மாறன் பயல்கள்
    தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் பலர் தினந்தோறும் ரத்த கண்ணீர் விட்டு மனம் நொந்து வாழ்வது இந்த உலகத்துக்கு தெரிய வாய்ப்பில்லை.. வருடம் முழுவதும் எல்லா திரை அரங்குகளையும் மடக்கி பிடித்து பிறர் தொழில் நடத்த முடியாமல் செத்து சுண்ணாம்பாகி கொண்டிருக்கிறார்கள் .. யார் வருவார் இவர்கள் கொட்டத்தை ஒழிக்க கடவுளே உனக்கே வெளிச்சம்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

What’s this?

You are currently reading மாறன்சகோதரர்களுக்கு சிங்களவர்கள்தான் சோறுபோடுகிறார்களா? at தமிழன்பன் பக்கம்.

meta

%d bloggers like this: