சூரியனுக்கே டார்ச் அடிப்போம் என்கிறது தமிழ் இந்து!

திசெம்பர் 21, 2009 § 6 பின்னூட்டங்கள்


பெரியாருக்கு எதிராக புழுதிவீசும் தமிழ் இந்து -2

சூரியனுக்கே டார்ச் அடிப்போம் என்கிறது   தமிழ்இந்து!


இதுவரை நான் சந்தித்திராத அளவு அதிகமான பின்னூட்டங்களும் வசைமொழிகளும் தமிழ் இந்து விமர்சன பதிவிற்கு வந்திருக்கிறது. இதன்மூலம் தமிழ் இந்து எவ்வளவு தொண்டர்களை தம்வசம் வைத்துள்ளது என்பது புரிகிறது. தமிழ் இந்துவிற்கு ஆதரவாக எழுதுபவர்கள் பொதுவாக சிறுபான்மை மக்கள் மீது தங்கள் கசப்பு உணர்வை வெளிப்படுத்துபவர்களாகவும் இப்பெல்லாம் யாருங்க சாதி பார்கிறா? என்று அப்பாவி(?) தனத்துடன் கேள்வி கேட்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

தமிழ் இந்துவில் பெரியாருக்கு எதிராக  ஒரு தொடரே எழுதி கொண்டிருக்கிறார்கள். விட்டால் பெரியார்தான் தமிழகத்தில் சாதியத்தை கொண்டுவந்தார் என்று வரலாறு எழுதினாலும் எழுதிவிடுவார்களோ என்ற ஐயம் எழாமல் இல்லை. எல்லோரும் வேதநூல் படிக்கலாம் என்றும் ஒரு தொடர் போனசாக போய்க்கொண்டு இருக்கிறது. ஆனால் மனுதர்மம் வேறுமாதிரியாக சொல்லுகிறது.

மனு தனது அத்தியாயம் 12, ஸ்லோகம் 4 இல் இவ்வாறு சொல்கிறார்:
“வேதத்தைக் கற்க முனையும் சூத்திரனின் காதில் ஈயத்தையும், அரக்கையும் காய்ச்சி ஊற்ற வேண்டும், மீறிப் படிப்பானேயானால், அவனது நாக்கைத் துண்டிக்க வேண்டும், வேதத்தை முழுமையாக ஒரு சூத்திரன் படித்து அறிவானேயானால் அவனைக் கண்டதுண்டமாக வெட்டிக் கூறு போடவேண்டும்”.

இவர்கள் புதிதாக வேதம் எல்லோருக்கு பொது என்று  கதைவிட்டு கொண்டிருக்கிறார்கள்.
மூட நம்பிக்கையில் ஒட்டுமொத்த குத்தகைதாரர்களாக தம்மை தமிழ் இந்து நம்பிக்கொண்டு இருக்கிறது போலும். சுயமரியாதை இயக்கத்தினரின் எழுதிய புத்தகங்களை பெருச்சாளி போல குடைந்து குடைந்து எங்காவது இவர்களுக்கு சாதகமாக ஏதாவது எழுதிவிடமாட்டர்களா? என்று ஏங்கிய ஏக்கம் நமக்கு புரிகிறது.

“சகோதரர்களே! நான் சொல்வன எல்லாம் எனது சொந்த அபிப்ராயங்கள்தாம் என்று சொல்வதோடு நான் ஒரு சாதரண மனிதன்தான். எவ்விதத் தன்மையும் பொருந்திய தீர்க்கதரிசியல்லன். ஆகையால் தனிமனிதன் என்கிற முறையில்தான் என்னுடைய அபிப்ராயங்களையும் – நான் பார்த்தும் ஆராய்ச்சி செய்தும் அனுபவத்தில் அறிந்ததுமானவைகளைத்தாம் – எதிலும் எனக்குச் சரியென்று பட்டதைத்தான் உரைக்கிறேன். ‘ஒரு பெரியார் உரைத்துவிட்டார்’ என நீங்கள் கருதி அப்படியே கேட்டு நம்பிவிடுவீர்களானால் அப்போது நீங்கள் யாவரும் அடிமைகளே!… யார் உரைப்பதையும் நாம் கேட்டு ‘வேத வாக்கு’ என்று நம்பி நடப்பதால் தான் நாம் இன்று அடிமைகளாக இருக்கிறோம். ஆகவே நான் உரைப்பவைகளை ஆராய்ந்து பாருங்கள். உங்களுக்கு அவை உண்மையென்று தோன்றினால் அவைகளை ஏற்றுக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் தள்ளி விடுங்கள்”
– பெரியார்

இன்னும் சந்திரகிரகணகாலங்களில் பாம்பு நிலவை விழுங்கிவிடுகிறது என்று நம்பிக்கொண்டு அலையும் இந்த மூடநம்பிக்கை கூட்டம் சுயமரியாதை இயக்கத்திற்கே பகுத்தறிவை போதிக்கிறது.  உதாரணமாக சம்பூகனை ராமன் கொலைசெய்ததற்கு காரணம் வர்ணாசிரம கொள்கைகள்தானே? என்று சுயமரியாதை இயக்கத்தினர் கேட்டால் இவர்கள் பொங்கி விடுகிறார்கள்.
உங்களுக்குத்தான் ராமாயணத்தின் மீது நம்பிக்கை இல்லையே ராமன் மீது நம்பிக்கையில்லையே அப்புறம் எதுக்கு ராமாயணம் பத்தி எல்லாம் கேள்வி கேட்குறீங்க? என்று சுயமரியாதைக்காரர்கள் பகுத்தறிவுவாதிகளுக்கு பகுத்தறிவை போதிக்கிறார்கள்.  இவர்களிடம் கொஞ்சமாவது பகுத்தறிவு இருந்தால் இவர்கள் இப்படி எழுதுவதை நாம் கருத்தில் கொள்ளலாம் ஆனால் இவர்கள் மூடநம்பிக்கைகளின் காவலர்களாக இருந்துகொண்டு நமக்கே பகுத்தறிவினை போதிப்பது கிராமத்தில் நடைமுறையில் இருக்கும் ஒரு பழமொழிதான்   நியாபகத்திற்கு வருகிறது.
இவர்களின் தயாரிப்புகள்தான்  தேவநாதன் கருவறைக்குள் செய்தது குறித்து பகுத்தறிவாளர்கள் எழுதினால் “உங்களுத்தான் கோவில் பிடிக்காதே அப்புறம் எதற்கு கோவில் குறித்து கவலை படுகிறீர்கள் என்று புத்திசாலித்தனமாக கேள்வி கேட்கிறார்கள் போலும்.
எதனால் வேதத்தை எதிர்க்கிறோம் என்பதற்கான காரணங்களை நாம் சொல்ல கூடாதாம். உங்களுக்கு நம்பிக்கை இல்லையே பிறகு எதற்கு அதை பற்றி பேசுகிறீர்கள் என்கிறார்கள்.

மணியம்மை மனசோர்வு ஏற்படும் பொழுதெல்லாம் பெரியார் கூறிய வாசகங்கள் என் மனதில் தோன்றி என் சோர்வை நீக்கி விடுகிறது என்று எழுதியதை ஏதோ புராணக்கதைகளில் வானத்தில் இருந்து ஒலிக்கும் அசரிரீயோடு  ஒப்பிட்டு மணியம்மை அவர்களை மூடநம்பிக்கைவாதி என்று முத்திரை குத்த முயல்கிறார்கள்.

பெரியார் தனது மனைவி நாகம்மையார் இறந்தபொழுது  அங்கே வந்த பெண்களை அழவிடாமல் செய்தார் அதே பெரியார் ராஜாஜி இறந்தபொழுது கண்ணீர்விட்டு அழுதார் பார்த்தீர்களா ஊருக்கு ஒரு நியாயம் பெரியாருக்கு ஒரு நியாயம் என்று தப்பாக அர்த்தம் கற்பிக்கிறது தமிழ் இந்து.

பொதுவாக ஒருவர் இறந்துவிட்டால் “ஒப்பாரி” என்ற பெயரில் இறந்தவரின் உடலைசுற்றி அமர்ந்து கொண்டு பெண்கள் ஒப்புக்காக அழுவார்கள். அது உண்மையில் அழுவதில்லை வெறும் ஒப்புக்கு அழுவதால்தான் அதன் பெயர் ஒப்பாரி அதனை தடை செய்யவேண்டும் என்று பெரியார் விரும்பினார் நடத்தி காட்டினார். ஒருவரின் பிரிவால் வருந்துவது வேறு பாசங்கிற்காக அழுவது வேறு. இறந்தவீட்டின் இறுக்கமான சூழலை மேலும் இறுக்கமாக்கும் ஒப்பாரியை தடை செய்தததை ஏதோ பெரியார் உறவினர் யார் இறந்தாலும் அழக்கூடாது என்று சொன்னது போல திரித்து எழுதி தனது வன்மத்தை தீர்த்து கொள்கிறது.

இறந்தவர்களின் உடலை சுற்றி மத சடங்குகள் என்ற பெயரில் நடக்கும் அவலங்களைத்தான் பெரியார் கண்டித்தார் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். ஒருவரின் பிரிவினால் கண்ணீர் அரும்புவது இயற்கையான ஒன்று அதனை சுயமரியாதை என்றும் தவறு என்று சொல்லவில்லை.

அதாவது பெரியாரின் பிரிவால் மணியம்மை கண்ணீர் சிந்தினாலும் ராஜாஜி இறந்ததும் பெரியார் கண்ணீர் சிந்தினாலும் அது தவறு என்கிறது தமிழ் இந்து. சுயமரியாதைக்காரனுக்கு கண்ணீர் விடுவது கூட மூடநம்பிக்கை என்று புதிதாக நமக்கு பகுத்தறிவு போதிக்கிறது இந்த மூடநம்பிக்கை குழு.

பெரியார் நிகழ்விற்கு மொமரியல் ஹாலில் அனுமதி கிடைக்கவில்லை என்பதற்காக பெரியார்திடல் நிறுவப்பட்டது அந்த நிகழ்வில் பெரியார் கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பளித்து இந்த அரங்கை யார் வேண்டுமானாலும் மாற்று கருத்து இருப்பினும் அவர்கள் நிகழ்வை நிகழ்த்த அனுமதிக்கும் படி இந்த திடல் திகழட்டும் என்று பேசினார்.

தமிழ் இந்துவிலிருந்து

ஈ. வே. ராமசாமி நாயக்கர் எவ்வளவு முட்டாள்தனமான காரியத்தை செய்திருக்கிறார் என்பது புலனாகும். மற்றொன்றையும் யோசிக்கும்போது ஈ. வே. ராமசாமி நாயக்கரே, மூடநம்பிக்கை வளர ஏற்படுத்தித்தந்த இடம்தான் பெரியார் திடல் என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது.

ஈ. வே. ராமசாமி நாயக்கருடைய இந்த வழி எப்படி தவறானது என்பதை இப்போது பார்க்கலாம்.

மெமோரியல் ஹால் என்ற கிறிஸ்தவர் இடம் கொடுக்கவில்லை என்றால் யாருக்கு நஷ்டம்? இடம் கொடுக்காதவர்களுக்குத்தானே நஷ்டம்! அந்த இடம் இல்லையென்றால் வேறு இடத்தில் நடத்தலாம் அல்லவா? அதைவிட்டுவிட்டு அவர் இடம் தரவில்லை. அதனால் பொது மன்றம் ஒன்றை ஆரம்பித்தேன் என்று ஈ. வே. ராமசாமி நாயக்கர் சொன்னது பகுத்தறிவின் செயலா? அதுவும் கொண்ட கொள்கைக்கு ஆபத்து ஏற்படுவதென்றால் அது வீண்வேலை தானே!

உதாரணமாக ஒன்றை நினைத்துப்பாருங்கள்.

ஈ. வே. ராமசாமி நாயக்கரின் பேட்டியை ஒரு பத்திரிகை அவர்களின் கொள்கைக்கு முரணாக இருப்பதால் வெளியிடவில்லை என்பதற்காக எல்லோருடைய கொள்கைகளையும் சொல்லும் பத்திரிகை ஒன்றை ஆரம்பிக்கிறேன் என்று  ஈ. வே. ராமசாமி சொல்வாரா?

###################################################

பெரியார் கருத்துகளை பார்பன ஊடகங்கள் இதுவரை வெளியிட்டத்தில்லை அவரது சிந்தனைகளை குடியரசு மூலம்தான் மக்களை அடைந்தது இவர்களுக்கு தெரியாது போலும். எங்களோடு மாற்று கருத்து இருந்தாலும் தைரியமாக எங்கள் திடலை தருகிறோம் நிகழ்வு நடத்தி கொள்ளுங்கள் என்ற தைரியம் பெரியார் தவிர்த்து வேறு யாரிடமும் இருந்ததாக தெரியவில்லை. பார்பன ஏடுகள் முதல் அரங்கங்கள் வரை அவர்கள கொள்கைகைகளோடு ஒத்து போகாதவர்களை புறக்கணிக்கும் சூழலில் மாற்று கருத்தை மதிக்கும் பெரியாரின் உயர்ந்த உள்ளம் இது போன்று பார்பனிய கும்பலிடம் நாம் எதிர்பார்க்க முடியாதுதான்.

பிறமாநிலங்களில் இன்னும் சாதிய பெயர்களை தாங்கிக்கொண்டு நாயர், நாயுடு, கவுடா என்று அலையும் வேளையில் பெயரில் இருக்கும் சாதிய பெயரை விட்டொழித்துள்ளது தமிழ்நாடு அதற்கு முழு காரணம் பெரியாரும் அவரது இயக்கமும். சாதி வெறிபிடித்த பார்பனிய கும்பல் இன்னும் பெரியாரை நாயக்கர் என்று அழைத்து தங்கள் அரிப்பை தீர்த்து கொள்கிறார்கள்.

தான் இறக்கும் பொழுது இந்துவாக இருக்கமாட்டேன் என்றும் இந்துமதத்தின் புராண குப்பைகளை அதன் வேத நூல்களின் வாயிலாகவே அம்பலப்படுத்திய அண்ணல் அம்பேத்காரை துணைக்கு அழைக்கிறார்கள் பெரியாரை எதிர்க்க. பெரியாரை எதிர்க்க இவர்கள் அண்ணலை நாடுகிறார்கள் என்றாலே அது பெரியாரை கண்டு இவர்கள் எவ்வளவு நடுங்கி போயிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

சில அறிவிலிகள் பெரியார் எங்களுக்காக உழைக்கவில்லை அவர்களுக்காக உழைக்கவில்லை என்று உளறி கொண்டு இருக்கிறார்கள் அவர்களுக்கான பதிலை அடுத்த கட்டுரையில் கொடுக்கலாம் என்று இருக்கிறேன். தமிழ் இந்துவின் முகத்திரை தொடர்ந்து கிழிப்போம்.

Advertisements

Tagged: ,

§ 6 Responses to சூரியனுக்கே டார்ச் அடிப்போம் என்கிறது தமிழ் இந்து!

 • Arun சொல்கிறார்:

  Periyarai patri puriyamal evaru palar pesium eluthiyum ullargal…avar karuppu sattai poda villai endru nam vellai sattai potu vedhiyil nadanthirukka mudiathu, periyar seitha pala thondugal evargalathu kangallukku paduvathillai… ungalathu muyarchigallukku vazhthukkal thodarnthu eluthungal…

 • annonymus சொல்கிறார்:

  இந்து என்ற போர்வையில் பார்ப்பனீய அடிமைத் தனத்தைத் தந்திரமாகப்

  பாதுகாக்க முயல்கிறார்கள். இதிலே ஏமாறும் பார்ப்பனரல்லாத இந்துக்கள்

  கொஞ்சமாவது சிந்தித்துச் செயல் படட்டும்.

  “இந்து” என்ற வார்த்தை வேதத்தில் இருக்கிறதா? “இந்து”க்கு முன் இருந்த வழிபாடு, மதம் என்ன? இறைச்சி உண்பது, சோமபானம் அருந்தியது யார்? யார் யாரைக் காப்பி யடித்து தங்களை மாற்றிக் கொண்டு விட்டுக் கடைசியில் அவர்களையேக் கீழ் ஜாதி ஆக்க்கிவிட்டார்கள்.

  பழைய கதை வேண்டாம். ஆர் எஸ் எஸ் ஸில் பார்ப்பனரல்லாதவர்கள் கரிவேப்பில்லையாக்கப் படுவது அவர்கள் இந்துக்கள் இல்லையென்பதாலா? பூணூல் இல்லையென்பதாலா?

  ஒரு காலத்திலே காங்கிரசை ஆட்டிப் படைத்தப் பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் காங்கிரசை ஒழிக்கத் துடித்தார்களே ஏன்? பி ஜே பி யில் உள் குழப்பத்தின் முக்கிய காரணம் என்ன?

  இந்துக்களே கரிவேப்பிலை ஆகிவிடாதீர்கள்.பூணூல் போட்டு வரவேற்றால் இந்துக்களாகி விடுங்கள். இல்லை அவர்களைப் பூணூலைக் கழற்றிவிட்டு இந்துக்கள் ஆகச் சொல்லுங்கள்.

  பூணூல் தொங்கும் வரை அவாள் பிராமணாள், மத்தவா சூத்ராள் !!!

  ஆர் எஸ் எஸ் ஆட்டிப் படைக்கும் அடிமைகள் ஆகி விடாதீர்கள்.

 • commie.basher சொல்கிறார்:

  யோவ் தமிழன்பன்,
  பதில் ஒன்னும் உருப்படியா இல்லையே யா…
  என்னத்துக்கு எழுதுற ?

  உன்னால பார்ப்பானர்களைத் திட்டாமல் பெரியாரைப் பாராட்ட முடியுமா ?
  முடியாதா ?

  பெரியாரின் தாடி மயிருக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு தாக்கும் ஈன இசுலாமிய நாய்களுக்கு என்ன மரியாதை கிடைக்குமோ அது தான் அவர்களுக்குக் கொடுக்கப்படும்…உடனே சிறுபான்மையினரைத் தாக்குகிறார்கள் என்று சொல்வதால் பிரயோசனம் இல்லை.

  தமிழகத்தில் ஜாதி பெயரளவில் மட்டும் தான் இல்லை. பெயரில் ஜாதி நீங்கியதால் ஜாதி அழிந்துவிடவில்லை. நாயர், நாயுடு, கவுடா (கவுண்டர்) எல்லாம் தமிழகத்தில் இல்லையா ? பூனூல் அறுக்கப்பட்டதால் பார்ப்பானன் இல்லாமல் ஆகிவிடமாட்டான். வெளித்தோற்றத்தை மட்டுமே நீங்கள் எதிர்க்கிறீர்கள்.

  ஜாதி ஏற்றத்தாழ்வைத்தான் ஒழிக்க முடியும், ஜாதியை அல்ல. ஆகவே உங்கள் energy எல்லாம் இப்படி வீணடிக்காமல் நல்ல காரியங்களுக்குப் பயன் படுத்துங்கள்.

 • முகமது பாருக் சொல்கிறார்:

  பார்ப்பன பண்டாரங்கள் ஒருநாளும் திருந்தவே மாட்டார்கள்.. எப்படி மக்களை ஏமாற்றி பிழைக்கலாம் என்றே சிந்திப்பார்கள்.. பெரியார் என்ற பெயரை கேட்டதுமே அடிவயிறு எரிய ஆரம்பித்துவிடும் இந்த அம்பிகளுக்கு, செய்த தவறை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள் இன்னும் எப்படி எப்படி ஏமாற்றலாம் என்றே அலையும் இந்த குடிமிகள்..

  நம்ம ஊரில் உண்மையான நாத்திகர்கள் இந்த பார்ப்பனர்களே, உதாரணம் கோவில் கருவறையில் கற்பழிப்பும், கோவிலுக்குள் கொலையும் செய்யும் இந்த பார்ப்பன பயங்கரவாத கூட்டத்திற்கு தெரியும் கடவுள் இல்லையென்று.. ஆனால் என்ன பண்ண நம்ம பாமர மக்களை ஆண்டாண்டு காலமாக வேதங்களை காட்டியும் கடவுளை காட்டியும் ஏமாற்றி பிழைத்த இவர்களின் வாழ்கையை வளப்படுத்திக்கொண்டனர்.. நம்மை கோவிலுக்குள் வரக்கூடாது அப்படியே வந்தாலும், கருவறைக்குள் நுழையக்கூடாது நுழைந்தால் தீட்டு ஆகிவிடும் என கூறும் இந்த கும்பல் செய்யும் செயல்கள் பல்லாயிரம்.. நம்மண்ணை பிடித்த மிகப்பெரிய நோய்தான் இந்த பார்ப்பீனியம்..

  * தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமியர் மற்றும் கிறித்தவர்கள் இந்த மண்ணின் பூர்வக்குடிகளே.. பார்ப்பனீயத்தின் கொடூரத்தால் அவர்கள் பாலைவன மதங்களை ஏற்றுக்கொண்டார்கள்..இன்றும் பார்ப்பீனியத்தின் நிழல் எல்லா இடங்களிலும் பரவிவருகிறது.. காரணம் அழிக்கப்படவேண்டியது மீண்டும் மீண்டும் தழைத்துக்கொண்டே இருக்கிறது..

 • திருச்சிக் காரன் சொல்கிறார்:

  //ஜாதி ஏற்றத்தாழ்வைத்தான் ஒழிக்க முடியும், ஜாதியை அல்ல. ஆகவே உங்கள் energy எல்லாம் இப்படி வீணடிக்காமல் நல்ல காரியங்களுக்குப் பயன் படுத்துங்கள்//

  ஜாதி வேறு பாட்டையும் நீக்க‌ முடியும். சாதிக‌ள‌ற்ற‌ ச‌ம‌த்துவ‌ ச‌முதாய‌மும் அமைக்க‌ இய‌லும்.இந்திய ச‌மூக‌த்தில் உள்ள‌ சாதிப் பாகுபாபாடு குறைந்து கொண்டே வ‌ருகிற‌து.

  பிற‌ ம‌த‌த்தவ‌ரும் ந‌ம‌து ச‌கோத‌ர‌ரே. பிற‌ ம‌த‌ங்க‌ளில் உள்ள‌ ந‌ல்ல‌ க‌ருத்துக்க‌ளை பாராட்டி ஆக்க‌ பூர்வ‌மாக‌ அணுகுவொம். அதே நேர‌ம் ஆபிர‌காமிய‌ ம‌த‌ங்க‌ள் ச‌கிப்புத் த‌ன்மை இல்லாம‌லும், வெறுப்புக் க‌ருத்துக்களை , இர‌த்த‌ வெறி க‌ருத்துக்களையும் ம‌ற்றும் காம‌ச் ச‌லுகைக்காக பெண்க‌ளை அடிமையாக்கி உள்ள‌ நிலையையும் சுட்டிக் காட்ட‌த் த‌ய‌ங்க‌ மாட்டோம்.

  பெரியாரும், அம்பேத்க‌ரும் இந்து ம‌த‌த்தின் குறை பாடுக‌ளை சாட்டைய‌டியாக‌ விம‌ரிசித்தும் – சிந்த‌னைக்கு த‌டை போட்டு, ம‌னித‌னை அடிமையாக்கும் ஆபிர‌காமிய‌ ம‌த‌ங்கள் விரித்த‌ வ‌லையில் சிக்க‌வில்லை – என்ப‌தை இங்கெ நினைவு ப‌டுத்துகிரோம்.

  ம‌த‌ வெறியும், சாதி வெறியும் உடைய‌ சில‌ர் ம‌க்க‌ள் இணைவ‌தை த‌டுக்கும் வ‌கையிலே, சாதிக் காழ்ப்புண‌ர்ச்சியை தூண்டி குழ‌ம்பிய‌ குட்டையில் மீன் பிடிக்க‌ப் பார்க்கின்ற‌ன‌ர். த‌மிழ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளுக்கு ம‌ய‌ங்க‌ மாட்டார்க‌ள்.

  http://thiruchchikkaaran.wordpress.com/2009/12/08/casteless-homogenious-soceity-1/

 • திருச்சிக் காரன் சொல்கிறார்:

  இப்போது உள்ள‌ ந‌டை முறை என்ன‌ என்று பார்க்காமால் , ஐந்தாயிர‌ம் வ‌ருட‌த்துக்கு முன் உள்ள‌ ந‌ட‌ப்பை எழுதிக் கொண்டு இருக்கிறார்க‌ள்.

  இந்தியாவின் முக்கிய‌ பெரும்பான்மை ச‌மூக‌மான‌ இந்து ச‌மூக‌ம் த‌ன்னை சீர் திருத்திக் கொண்டால், இவ‌ர்க‌ளால் அத‌னை ஏற்றுக் கொள்ள‌ இய‌ல‌வில்லை.

  இந்த‌ ம‌னு யார்? அவ‌ன் ஒரு ப‌ழ‌ங்கால‌ அர‌ச‌ன். அவ‌ன் இந்து ம‌த‌த்தை ஆர‌ம்பித்த‌வ‌னோ, நிலை நிறுத்திய‌வ‌னோ இல்லை.
  அவனுக்கு இன்னும் முக்கிய‌த்துவ‌ம் குடுப்ப‌து சாதி காழ்ப்புண‌ர்ச்சி கொண்ட‌வ‌ர்க‌ள் தான்.

  சாதிக‌ளற்ற‌ ச‌ம‌த்துவ‌ ச‌முதாய‌ம் அமைப்போம், என்றால் இவ‌ர்க‌ளே அதை த‌டுப்பார்க‌ள் போல‌ இருக்கிற‌து. “யோவ், சாதியை விடாதீங்க‌ய்யா, அதை வைத்து தான் நாங்க‌ போணி ப‌ண்ணுகிரோம்” என்று க‌த்துகிற‌ நிலைக்கு வ‌ந்து விட்ட‌ன‌ர், சாதி காழ்ப்புணர்ச்சி சிந்த‌னையாள‌ர்க‌ள். ப‌ரிதாப‌ம் தான்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

What’s this?

You are currently reading சூரியனுக்கே டார்ச் அடிப்போம் என்கிறது தமிழ் இந்து! at தமிழன்பன் பக்கம்.

meta

%d bloggers like this: