நாங்கள் இருக்கிறோம் வீதியின் ஓரத்தில்……

பிப்ரவரி 9, 2010 § 2 பின்னூட்டங்கள்


நாங்கள் இருக்கிறோம் வீதியின் ஓரத்தில்………….நம்மூரு ஜனங்க எல்லோருக்கும் வணக்கமுங்க…..  சம்சாரியா பிறந்து இப்போ பரதேசியா அலையும் மதுரைவீரனோட பேச்சை கேட்டுட்டு போங்கப்பா…..!


ஒரு காலத்துல நெல்லும் எள்ளும் விளைந்த இடமெல்லாம் புல்லுகூட விளையாத பொட்டல்காடா ஆகிப்போச்சுங்க. பசுமைபுரட்சி பசுமைபுரட்சின்னு சொல்லி விளங்காத ரசாயன உரத்தைபோட்டு மண்ணை மலடாக்கிபுட்டீங்க. பேச்சு நடத்துறோம் வழக்குநடத்துரோம்னு சொல்லி ஆத்துல வெள்ளாமைக்கு தண்ணி இல்லாம பண்ணிபுட்டீக.

வானம்பாத்தபூமி எல்லாம் மழை இல்லாம வாடிபோச்சு.   கடன்கொடுக்குறோம்  விவாசாயம் பண்ணுன்னு.. சொல்லிட்டு வெளிநாட்டுக்காரன் தந்த விதையை போடச்சொல்லி விளைச்சலே இல்லாம கடனாளி ஆக்கிப்புட்டீங்க.  சரி நமக்குத்தான் பொழைக்கவழி இல்லாம போச்சேன்னு கிடைக்கிறகாசுக்கு விளைகிறநிலம் அம்புட்டையும் பணக்கார பயளுவகிட்ட வித்துபுட்டு பட்டணத்துவீதிகளில் ஒண்டிபிழைக்கிறோம் . பணக்காரபயலுவளும் காக்கா குருவிகூட அண்டாத அந்த இடத்துல எதோ ‘பொறியல் கல்லூரின்னு’ கட்டி லட்சலட்சமா சம்பாரிக்கிறானுங்க. குடிக்க சொட்டு தண்ணீகூட இல்லாத அந்த பூமியில நம்மபுள்ளைக அம்புட்டும் வெந்து நொந்து எதையாவது படிச்சுட்டு எப்படியாவது வந்துசேருதுக. படிச்சபடிப்புக்கு கிடைச்ச வேலையசெய்து பாட்டில் தண்ணியை விலைக்குவாங்கி பகுமானமா குடிச்சுகிட்டு அலையுதுக.கிராமத்துல்ல நடக்குற பாதையில மாடு சாணியபோட்டுட்டுபோயிட்டா அதை அப்படியே அள்ளி பக்கத்துவயலுல வீசிட்டு போவானுங்க நம்ம சம்சாரிக அந்தசாணியும் அந்த வயலுக்கு உரமாகிப்போகும். எதை செஞ்சாலும் அடுத்தவனுக்கு நல்லதாசெய்யணும்  சாணிகூட உரமாகிப்போகனும்னு நினைக்கிற பயலுக கிராமத்துபயலுவ..

ஆனா படுச்சபயலுவ விதைக்குகூட உரிமை கொண்டாடுறான்.  வெளிநாட்டுக்காரன்கிட்ட காசை வாங்கிக்கிட்டு மண்ணை மலடாக்கி விவசாயத்தைநாசமாக்கும் விதைகளை விவசாயிதலையில் கட்டப்பாக்குறானுங்கஇந்த பட்டணத்துல இவனுங்க குடிச்சுட்டுபோடுற தண்ணிபாட்டில மொத்தமா சேத்தா ஒரு சென்னை இல்லைங்க நாலைஞ்சு சென்னைகூடபத்தாது. இம்புட்டுகுப்பையும் எங்கன போகும்? அட எங்கள மாதிரி சம்சாரிக்கு வெள்ளாமைக்கு தண்ணி வேணாம்ங்க. நம்ம பிள்ளைக குடிக்க தண்ணி வேணாமா….?இருக்கிற மரம்மட்டை ஒன்னுவிடாம வெட்டி மழைதண்ணி இல்லாம பண்ணிபுட்டிங்க… குடிக்கிறதண்ணிக்கு எம்புட்டு நாள்தான் தரையை நோண்டிகிட்டு கிடப்பிங்க…? நிலத்துக்கு அடில இருக்கிற தண்ணியும் தீர்ந்து போனா..? குடிக்கிற தண்ணிக்கு எங்க தான்யா போவிங்க? பட்டிலுக்கு தண்ணி எங்கிட்டு இருந்து வரும்…? தின்கிறது சாப்பாடு எங்கிட்டு இருந்துவரும். ரியல் எஸ்டேட்ன்னு சொல்லி இருக்கிறகாடுகளை எல்லாம் கான்கிரிட் காடுகளாக மாத்திகிட்டே போன காக்காகுருவிகூட வாழமுடியாத பூமில நாம எப்படிய்யா? பொழைக்கிறது.

மக்கா நீங்க இராத்திரிபகலா கண்முழிச்சு என்னென்னவோ கம்பூட்டரில் பண்ணலாம்யா ஒரு நெல்லுமணியை உங்களால உருவாக்க முடியுமான்னு சொல்லுங்க…  இன்னமும் எதோ நம்பிக்கைல நம்மாளுங்க ஊருல நடத்துற வெள்ளாமையால்தான் இப்பவும் நாமெல்லாம் சோறு துண்ணுகிட்டு இருக்கோம்.உங்கள எல்லாம் வேலையைவிட்டுட்டு வெள்ளமையபார்க்க சொல்லலப்பா. உங்க படிப்பை கொஞ்சம் எங்களுக்காக பயன்படுத்துங்கன்னு சொல்லுறேன்.


எதோ பேரு தெரியாத வெள்ளைக்காரதுறைமாருகளுக்கு வேலைபார்த்து வீடுவாசல்னு வாங்கிற மக்கா. நம்ம பொழைக்கிற ஊரு எப்படி இருக்குன்னு பாருங்கப்பா. உங்க பட்டினத்துவீதிகள்ள எங்க கிராமத்து ஆளுங்க ஒண்ட இடமில்லாம இருக்கிறத பாருங்க… இந்த நிலைமை நாளைக்கு உங்களுக்கு வேணாமப்பா. உங்க அறிவை எங்களுக்காக பயன்படுத்துகப்பு. விவசாயத்தை எளிதாக்குங்க. இனி எவனும் விவசாய நிலத்துல கான்கிரிட் போடக்கூடாதுன்னு சொல்லுங்க. பக்கத்துமாநிலக்காரன்கிட்ட பேசி  தண்ணியை கொஞ்சம் திறந்து விடுங்க… விதையில வெளிநாட்டுக்காரன் கைவைக்காம பார்த்துக்கங்க.  வீடுமேல வீடுகட்டிங்கப்பா… காடுகளை காலிபன்னாதிக. அய்யா சம்சாரிக நாங்க இருந்தாத்தான்யா நீங்க சாப்பிடவும் குடிக்கவும் ஏதாவது இருக்கும். எல்லாத்தையும் இறக்குமதி பண்ணலாம்னு நினைக்காதிங்கப்பா…. குடிக்கிற தண்ணிக்கு காசுகொடுக்கனும்னா ஒண்ணுக்கும் இல்லாம போயிடுவிங்கப்பா நீங்க எல்லாம்.


ஒருகாலத்துல ஆத்துதண்ணிய அப்படியே குடிச்சுட்டு வேலைய பார்ப்போம் இப்ப எந்த தண்ணியயாவது குடிக்க முடியுதா?. கொசுவர்த்தி இல்லாம தூங்கமுடியுதா?. எல்லா இடமும் கெட்டுபோச்சுப்பா. உங்கள நம்பித்தான் நாங்க இருக்கோம். படிச்ச புள்ளைக ஏதாவது பண்ணி எங்களையும் எங்க விவசாயத்தையும் காப்பாத்துங்கப்பா. வெள்ளைக்காரன் வந்து நம்ம விதைகளையும் விவசாயத்தையும் காலிபண்ணும் முன்னால் ஏதாவது பண்ணுங்கய்யா உங்களுக்கு புண்ணியமா போகும்.

Advertisements

Tagged: ,

§ 2 Responses to நாங்கள் இருக்கிறோம் வீதியின் ஓரத்தில்……

  • Surendran சொல்கிறார்:

    //மக்கா நீங்க இராத்திரிபகலா கண்முழிச்சு என்னென்னவோ கம்பூட்டரில் பண்ணலாம்யா ஒரு நெல்லுமணியை உங்களால உருவாக்க முடியுமான்னு சொல்லுங்க…//

    உண்மை சுடுகிறது. நல்ல பதிவு. நன்றி.

  • tamizhanban சொல்கிறார்:

    மிக்க நன்றி சுரேந்திரன்……

    உங்கள் வலைப்பூ நான் ரசித்து படிக்கும் ஒன்று

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

What’s this?

You are currently reading நாங்கள் இருக்கிறோம் வீதியின் ஓரத்தில்…… at தமிழன்பன் பக்கம்.

meta

%d bloggers like this: