தமிழர்களுக்கு எதிரானவை மாத்திரமே புரட்சி! புரட்சிகரநாட்டாமை வினவின் புதியதீர்ப்பு.

பிப்ரவரி 16, 2010 § 17 பின்னூட்டங்கள்


தமிழர்களுக்கு எதிரானவை மாத்திரமே புரட்சி! புரட்சிகரநாட்டாமை வினவின் புதியதீர்ப்பு.


மகஇக  என்னும் புரட்சிகர அமைப்பின் அதிகாரப்பூர்வ வலைப்பூவான வினவு  வலையுலகில் ஒட்டுமொத்த புரட்சியையும் மொத்த குத்தகைக்கு எடுத்துகொண்டது போல செயல்பட்டு வருகிறது.  சகபதிவர்கள் மொக்கைவாக எழுதுவபவர்களாக , திரைவிமர்சனம் எழுதி காலத்தை ஓட்டுபவர்களாக , வடிவேல் ஸ்லாங்கில் எழுதி காலம்கழிப்பவர்களாக இருக்கிறார்களே  என்ற ஆதங்கத்தோடு அவ்வப்போது புரட்சிகரமான கட்டுரைகளை எழுதி வலையுலகை காப்பவர்களாக தங்களை அடையாளப்படுத்தி கொள்கிறார்கள். சினிமா நடிகர்கள் மற்றும் சினிமா பற்றி ‘கழிசடை’ என்று ஒருபுறம் சொல்லிக்கொண்டே ஏதாவது புதியதிரைப்படம் வந்துவிட்டால்  முண்டியடித்து  டிக்கெட் வாங்கி முதல் ஆளாக அந்த திரைப்படம் குறித்த புரட்சிகரமான தங்கள் கருத்துகளை எழுதி தங்கள் புரட்சிபயணத்தை . உன்னை போல் ஒருவனோ அல்லது ஆயிரத்தில் ஒருவனோ முதல் விமர்சனம் நாட்டாமை வினவுடையதாக இருக்க வேண்டும். படத்தை விளாவரியாக விமர்சித்துவிட்டு கடைசியில் அத்திரைப்படம் ஒரு கழிசடை என்று தீர்ப்பு கூறுவார் வினவு. புரட்சி வரும்வரை திரைப்படம் பார்ப்பதில் தப்பில்லை போலும்.

ஜெயராம் என்ற நடிகர்  மலையாள தொலைக்காட்சி நிகழ்வில் தன்னுடையவீட்டு வேலைக்காரப்பெண்ணை கறுத்ததமிழச்சி தடித்த எருமை போன்று இருப்பாள் என்று கூறியதாக குமுதத்தில் செய்தி வெளியானது. செய்தி வெளியிடுவதற்கு முன்னர் குமுதம் நிருபர் பேசியபொழுது அது நகைச்சுவைக்காக சொன்னது என்று திரும்பதிரும்ப சொன்னார்  என்று குமுதம் செய்தி வெளியிட்டது.

செய்தியை படித்தபொழுது அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உங்கவீட்டு வேலைக்காரியை ‘சைட்’ அடிப்பீங்களா என்ற எழுப்பப்பட்ட கேள்வி வன்மம் நிறைந்தது என்று தோன்றியது. வீட்டில் வேலைசெய்தாலே அவரை சைட் அடிக்கும் உரிமை வீட்டுமுதலாளிக்கு இருக்கிறது என்ற   மனநிலை கேள்வி கேட்டவரிடம் இருக்கிறது. சரி கேள்விதான் மோசம் என்றால் பதில் சொன்ன ஜெயராம் என் வீட்டு வேலைக்காரப்பெண் எனக்கு சகோதரி மாதிரி என்று சினிமாத்தனமாக சொல்லி சமாளித்திருக்கலாம் ஆனால் நகைச்சுவைக்காக என் வீட்டு  வேலைக்காரி கறுப்பான தமிழச்சி எருமை போல இருப்பாள் அவளை எப்படி சைட் அடிக்க முடியும் என்று சொல்லி பிரச்னைக்கு துவக்கபுள்ளி வைத்தார். செய்தியை குமுதம் வெளியிட்டதும் சென்னையில் இருக்கும் ஜெயராம் வீட்டில் கல்லெறியப்பட்டது . உடனே ஜெயராம் பகிரங்க மன்னிப்பு கேட்டார். உடனே தமிழினத்தலைவரும் தான் மன்னித்ததோடு  மறக்காமல் நாம்தமிழர் இயக்கத்தினரை  கைது செய்து மீண்டும் தான் யார் என்று நிருபித்து இருக்கிறார்.

உடனே நம்ம வினவு சும்மா இருப்பாரா? பஞ்சாயத்து செய்ய கிளம்பிவிட்டார். இது சமூகத்தின் குறைபாடு ஜெயராமை எப்படி குறை சொல்லமுடியும் என்ற வியாக்கினத்தொடு தொடர்ந்து தனது விமர்சன அரிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இதே வேலைக்காரப்பெண் தமிழச்சி என்று சொல்லாமல் இருந்திருந்தால் இவர்கள் எதிர்ப்பார்களா? என்று கேள்வி கேட்டு இருக்கிறார். கல்வியறிவில் நூறு விழுக்காடு தன்னிறைவு பெற்ற கேரளத்து சேட்டன்களும் சேச்சிகளும் எப்படி ஒரு பெண்ணை இழிவு படுத்தலாம் என்று ஏன் கேள்வி கேட்கவில்லை என்ற கேள்வி கேட்க வினவுக்கு தோணவில்லை போலும்.  அதுசரி ஊருக்கு இழைத்தவன் தமிழ்நாட்டு தமிழன்தானே என்று எடுத்து கொள்ளவேண்டியதுதான்.

வினவு அத்தோடு விட்டாரா? விவேக் பத்தாண்டுகளுக்கு முன்பாக வந்த திரைப்படம் ஒன்றில் நகைச்சுவை காட்சியில் சேச்சிகளை இழிவு செய்துவிட்டாரே? என்று இன்று புதிதாக விழித்துக்கொண்டிருக்கிறார். புரட்சிகள் முடிந்தபின்னால் பார்த்துகொள்ளலாம் என்று இத்தனை ஆண்டுகள் பொறுமைகாத்தார்களோ என்னவோ ? மும்தாஜ் என்ற மார்பு பெருத்த பெண்ணை கேரளாக்காரப்பெண்ணாக( சேச்சியாக)  நடிக்கவைத்து சேச்சிகளை தமிழர்கள் இழிவு செய்துவிட்டார்களே என்று புதிய கண்டுபிடிப்பு வேறு.

புரட்சிகர இயக்கத்தை சேர்ந்தவர்கள் சமீபத்தில் இப்படி ஏதாவது கருத்துகணிப்பு நடித்தினார்களா? என்று சந்தேகப்படும் அளவிற்கு வினவுதளத்தில் கருத்துக்கணிப்புகளை காணமுடிகிறது.

“மலையாளப் பெண்களுக்கு மார்பகங்கள் பெரிது, காம உணர்ச்சி அதிகம், கணவன் வெளிநாட்டில் இருப்பதால் சுலபமாக சேச்சிகளை வளைக்கலாம், அல்லது சேச்சிகள் இன்பத்திற்காக அலைவார்கள், அங்கே கள்ள உறவு அதிகம்” இப்படித்தான் தமிழக இளைஞர்களிடம் மலையாளச் சேச்சிகளைப் பற்றி பொதுக்கருத்து நிலவுகின்றது”

இதுதான் வினவின் சமீபத்திய கண்டுபிடிப்பு. சேச்சி என்பதன் அர்த்தம் அக்கா என்பது வினவிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  தமிழர்கள் மலையாளிகளை காலம்காலமாக சேச்சி, சேட்டன் என்று  அக்கா, அண்ணாஎன்று விளித்து கொண்டிருக்கிற எதோ இவர்கள் தமிழக வாலீப வயோதிக அன்பர்கள் சேச்சிகள் மீது அதாவது தமிழர்க் தங்களது மூத்த சகோதரிகள் என்று அழைப்பவர்கள் மீது காமத்தோடு அலைகிறார்கள் என்னும் கருத்து தமிழர்களை அவமானப்படுத்துவது மட்டுமல்ல கேரளப்பெண்கள் மீதான புரட்சிகர இயக்கத்தினரின் வக்கிர பார்வையை  அம்பலப்படுத்துகிறது. தாராளமா மனசிருந்தா கேரளா என்று புரிஞ்சுக்கோ என்று கும்பகோணத்து பார்பான இளைஞன் பாடியதும் பார்பன தலைமையின் கீழ் இயங்கும் மக இகவின் வ(க்கிர)ர்கப்பார்வையும் ஒத்து போவதாக கொள்ளலாமா?

ஜெயராம் என்ற அந்த நடிகன் வாய்கொழுப்பெடுத்து பேசியதற்கு வக்காலத்து வாங்குவதாக நினைத்து கொண்டு தமிழினத்தின் மீது காரித்துப்புகிறது வினவு.  தேநீருக்கு நன்றி சொல்ல வேண்டுமாம். உலக அரசியல் எல்லாம் பேசும் வினவு எதோ தேயிலை என்பது கேரளாவிலிருந்து  வரும் மலையாளிகள் கையேடு பறித்துவந்து அப்படியே தேநிராக வடித்து தருவது போன்று தனது கற்பனையை தட்டிவிட்டிருக்கிறார். தேயிலைக்கு பின்னாலே ஒளிந்திருக்கும் உலகமயமாக்கல் வினவிற்கு தெரியாமல் போனது ஆச்சரியமே. தேயிலை கொடுத்த மலையாளிக்கு நன்றி சொல் என்று சொல்லும் வினவிற்கு சோறுபோட்ட தமிழன் மறந்து போய்விட்டான் போல.  விட்டால் தமிழன் எவனுக்கும் தேநீர் போடவே தெரியாது என்று புரட்சிகர இயக்கம் அறைக்கூவல் விடுத்தாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை.

இப்படியே தனது கற்பனைகளை கட்டுரை முழுக்க அள்ளித்தெரித்து இருக்கிறது புரட்சிகர அமைப்பு. ஜெயராம் வீட்டில் கல்லெறிந்தது ஏதோ மலையாளிகள் மீது தமிழகத்தில் வன்மம் தலைவிரித்து ஆடுவதை வெளிப்படுத்துவதாக சித்தரிக்கிறார்கள். இதே தமிழகத்தில் சீமானின் வாகனம், தா.பாண்டியன் வாகனம் எரிக்கப்பட்டபொழுது எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. பாரதிராசா அலுவலகம் தாக்கப்பட்ட பொழுது வினவின் வாய்திறக்கவே இல்லை. ஒருவேளை தமிழன் எவனுக்காவது ஆதரவாக பேசினால் அது புரட்சிக்கு கேடு என்று நினைத்துவிட்டார்களா?வினவில் சில கட்டுரைகள் எழுதிய வில்லவன் ஜெயராம் பேசியதை கண்டித்து தமிழின உணர்வோடு எழுதிய கட்டுரையை வினவில் காணமுடியவில்லை. மகஇகவை பொறுத்தவரை தமிழர்களுக்கு எதிரானவை மாத்திரமே புரட்சி போலிருக்கிறது.

முல்லை பெரியார் பிரச்சனைஎல்லாம் ஒரு பிரச்சனையா? என்று கேள்விகேட்காத குறை. அங்கே ஆக்கிரமிப்பு செய்திருக்கும்  மலையாளிகளின் ஆயிரம் ஓட்டுகளுக்காக அணைந்து அரசியல் கட்சிகளும் முல்லை பெரியாரில் தமிழகத்துக்கு எதிராக நடந்து கொள்கிறார்களாம். அது என்னப்பா அந்த ஆயிரம் ஓட்டுக்கு அம்புட்டு மரியாதை?.   இதுதான் புரட்சிகள புண்ணாக்குகளின் முல்லைபெரியாறு  குறித்த பார்வை அங்கே மாற்று அணைக்கு அத்தனை முன்னேற்பாடு வேலைகளும் நடந்து கொண்டிருக்கிறது இவர்கள் என்னவென்றால் ஆயிரம் ஓட்டுக்காக அரசியவாதிகள் நாடகமாடுகிறார்களாம்  என்ன ஒரு ஆராய்ச்சி. குமுளி நகராட்சியின் சாக்கடை நீர் தமிழனின் குடிநீர் ஆதனமான முல்லை பெரியாறோடு கலக்கும் கயமையை வினவிற்கு யார் சொல்வது?. கேட்டால் இதெல்லாம் பூர்விக சொந்தம் சேட்டன்களின் மூத்திரம் குடித்தால்தான் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும் என்று சொன்னாலும் சொல்வார்கள்.

Advertisements

§ 17 Responses to தமிழர்களுக்கு எதிரானவை மாத்திரமே புரட்சி! புரட்சிகரநாட்டாமை வினவின் புதியதீர்ப்பு.

 • அடங்கொக்கா மக்க சொல்கிறார்:

  ஹ்ம்ம்ம். வினவு கெடக்கட்டும்! மலையாள நடிகர்களில் ஜெயராம் ஒருவர் தான் தமிழ் என் தாய்மொழி என்று சொல்லிக் கொண்டு இருப்பவர். மன்னிப்பும் கேட்டுவிட்டார். ஆண்டாண்டு காலமாக தன் படங்களில் தமிழரைப் பாண்டி என்றும் வில்லன்களாகவும் காட்டி வரும் மோகன்லாலை விட்டு விட்டு நல்லா மாட்டிக் கிட்டான்னு தமிழோடு என்றும் தன்னைப் பிணைத்துக் காட்டும் ஜெயராமை, அவரின் வீட்டை விளாசியது தேவையற்ற ஒன்று. அடித்தவர்களுக்கு ஒன்றும் வேலைக்காரிகளிலோ தமிழ் பெண்களிலோ தனிப் பாசம் கிடையாது. ஜெயராமின் பேச்சுக்கு முன்னும் பின்னும் வேலைக்காரிகளும் தமிழ்ப் பெண்களும் இச்சமுகத்தில் அடக்குமுறைக்கும் அவமானங்களுக்கும் உள்ளாகிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
  உரையாடல்களின் மூலம் புரிதல்களை வளர்ப்பது விடுத்து, சிந்தியாத உந்துணர்ச்சி வன்முறை தேவையற்றது.

 • Nagaraj சொல்கிறார்:

  சில சந்தேகங்கள்
  1) செயராம்தான் எந்த மொழிக்காரர்களைச் சரியாக அலசும் தத்துவார்த்த வாதியா…?
  2) செயராம் தாய் தமிழ்க்காரர் என்பது தெரியுமா..?
  3) செய்தியை வெளியிட்ட குமுதம் இதழ் என்ன தமிழர் இன உணர்வு இதழா..?
  4) தாராளமா மனசிருந்தா கேரளான்னு தெரிஞ்சுகோ என்று எழுதியது ஒரு புரட்சிகர பாடலாசிரியரா அல்லது வினவு ஆட்களா?
  5) தேனீர் கடை நடத்தும் நாயர்கள் என்ன டாடா அம்பானி வகையறாக்களா?
  6) பா ராஜா, சீமான் பிரச்சனை தேர்தல் போது நடந்தது ஏன் நடந்தது ஜெ யை ஆதரித்து வந்ததால் காங் திமுக அனுதாபிகள் செய்ததா வினவு ஆட்கள் செய்தததா?
  7) செயராம் செயல் நியாயமில்லை அதைப் போல அவர் வீட்டை அவர் இல்லாத போது அடித்ததும் நியாயமில்லை என்பது சரியா தவறா-

 • நாகராசன்! சொல்கிறார்:

  1. செயராம் குறித்து வினவிடம்தான் கேட்க்க வேண்டும்.

  2. பார்பனர்களை தமிழர்கள் என்று சொல்ல முடியுமா?

  3. இதே ஆங்கில ஊடகத்தில் இந்த செய்தி வந்திருந்தாலும் அதை நாம் எதிர்க்கத்தான் வேண்டும் . செய்தி உண்மையா என்பதைத்தான் பார்க்க வேண்டும். குமுதம் தமிழின விரோத இதழ் என்பதை இந்தவாரம் ஞானியின் ஓட்டை பக்கங்களின் மூலமே அறியலாம்.

  4. எழுதிய கழிசடை எவனென்று தெரியவில்லை ஆனாலும் அது கும்பகோணத்து பார்ப்பானுக்காக எழுதப்பட்டது. ஜெயராமும் கும்பகோணத்து பாப்புதான்.

  5. அம்பானி கேரளா என்று நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. ஜோய் ஆலுக்காஸ், மலபார் கோல்டு எல்லாம் குப்பன் சுப்பன் வகையறாக்களா?

  6. காங் திமுக வன்முறை செய்தால் அதை கண்டுக்க மாட்டோம் என்பதுதான் வினவின் புரட்சியா?
  7. வீட்டில் அவர் இருக்கும் பொழுது கல்லெறிந்தால் சரியா?

 • pukalini சொல்கிறார்:

  ஜோய் ஆலுக்காசுக்கு போனால் சூப்பர் பிகருகளாக பையனுகள் இருப்பானுகள். இந்த தமிழ் எருமை மாடுகளை விட நல்லா சைட் அடிச்சு பேசுவானுகள். எந்தப் பெண்ணு கரிக்கட்டை தமிழ் பையனை விரும்புவாள்?

 • Rayan சொல்கிறார்:

  அது வினவு! தெளிவு அல்ல…அவர்களிடம் தெளிவு பற்றி பேச முடியாது…வினவி செயல் சிந்தனை மழுங்க செய்வதே வேலை!

 • Nagaraj சொல்கிறார்:

  1) செயராம் பற்றி நீங்களும் சொல்லுங்களேன் வினவை நான் ஏற்றுக் கொள்ளவில்லை (உம்மையும் சேர்த்துதான்)
  2) தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் பார்ப்பாக இருந்தால் நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள் சரி.. நானும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது தலியான்தனம் அல்லவா?
  3)திருடன் திருடன் என்று ஒரு கொள்ளைக் காரன் கத்தினாலும் அதை நீங்கள் ஏற்கலாம் நானும் ஏற்றுக் கொள்ளவேண்டுமா?
  4)கழிசடை என்று நீரும்தான் இப்போது கூறுகிறீர்கள். அது செயராமுக்கா மாதவனுக்கு யாராக இருந்தாலும் அது தவறு என்று ஏன் அப்போது சொல்லவில்லை.. காரணம் அடி நமக்கில்லை என்ற நினைப்புதானே
  5)ஜாய் அலுக்காஸ் சூத்திரன்தானே.. சரி அவரும் சின்ன டீக்கடை நடத்தி தினம் அரைவயிற்றுக்குப் போராடும் நாயரும் ஒன்றா.. அட… டிவீஎஸ் வேணு சீனுவாசனும் ஏதோ பிராமண மடத்தில் வாசலில் பிச்சை எடுக்கும் பார்ப்பனும் ஒன்றா.. நீங்கள் ஏற்கலாம் நான் ஏற்கவில்லை
  6) காங் திமுகவை விளாசி வினவு எழுதியது ஏராளம் நான் படித்திருக்கிறேன்.. நான் அதை ஏற்காவிட்டாலும் கூறுகிறேன்
  7)செயராமை கேரா செய்.. அதைவிட்டு அவர் வீட்டு பெண்கள் மீது கல் ஏன் என்பதுதான் கேள்வி.

 • நாகராசன்! சொல்கிறார்:

  1. ஜெயராம் பற்றி தமிழன்பன் தனது கட்டுரையில் சொல்லிவிட்டாரே!
  2. தமிழன் என்பவன் இனத்தால் திராவிடன் ஆரிய இனத்தை சேர்ந்த பார்பனர்களை எப்படி தமிழனாக ஏற்க்க முடியும்?. தாலிபானை விடுங்கள் தமிழை கோவிலுக்கு வெளியே நிறுத்தி நீசபாசை என்றவர்களை அகிம்சாமூர்திகள் என்று சொல்லலாமா?

  3. வினவு பத்தி சொல்லிறீங்களா?

  4. கழிசடை என்று சொல்லிவிட்டு சினிமா விமர்சனம் செய்து காலம்கழிப்பவர்களை சொல்லுகிறார் தமிழன்பன். தமிழன்பன் சினிமா விமர்சனம் எழுதியதாக தெரியவில்லையே?

  .5 உங்களின் வலதுசாரி தத்துவம் மலையாளி என்றாலே தேநீர் கடை நோக்கி ஏன் ஓடுகிறது என்பதுதான் கேள்வி. மலபார் கோல்டு பத்தி தகவல் கிடைக்கவில்லையா? பிச்சை எடுக்கும் பார்ப்பானும் பணக்கார பார்ப்பானும் ஒன்றுதான். பிச்சை எடுக்கும் பார்பான் கூட பிரமாண மடத்தின் வாசலில்தான் பிச்சை எடுப்பானாம். என்ன ஒரு வலதுசாரி பார்வை.

  6. நீங்களே ஏற்க்கவில்லை என்றல் எப்படி?

  7. கல் எறிவதற்கு முன்னர் வீட்டில் ஜெயராம் இருக்கிறாரா என்று விசாரித்துவிட்டு எறியவேண்டுமா? அது என்னப்பா ஒரு பிரச்சனை வந்ததும் பெண்கள் பின்னால் போய் ஒளிந்து கொள்வது? பேசுவதற்கு முன்னாள் அவர் வீட்டு பெண்ணை நினைத்து பார்த்து இருக்கலாமே?

 • எழில் வேந்தன் சொல்கிறார்:

  Nagaraj எனபது திருச்சிக்காரனையும் அதியமானையும் கலந்து செய்த கலவையாக இருக்கிறது. ஒருவேளை இருவரும் ஒருவர்தானோ?

 • Nagaraj சொல்கிறார்:

  1) நான் கேட்ட கேள்விகள் சரியான வகையில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
  2) திருமணங்கள் சொர்க்கத்தில் அல்ல வர்க்கத்தில் நிச்சயக்கப்படும் என்ற மாவோ கூற்று சரியானது அதனால் வேணு சினுவாசனும் உஞ்சவர்த்தி பார்ப்பானும் ஒன்று அல்ல என்னைப் பொருத்த மட்டில்.. உங்கள் வாதம் தமிழ் திராவிட தலிபானிசம். நான் அதை ஏற்கவில்லை.
  3) நீங்கள் திராவிட பணக்காரர் அதனால் மலையாள ஜாய் அலுக்காசைத்தான் பார்க்கிறீர்கள்.. நான் உழைத்தால் தான் சோறு என்று இருப்பவன். அதனால் டீக்கடை நாயரை பார்க்கிறேன்
  4) வினவை நான் முழுவதும் ஏற்கவில்லை.. அதற்காக அவர்கள் சரியாக ஒரு் கட்டுரையை எழுதினாலும் அதை பாராட்டக் கூடாது என்பது சரியான வாதம் அல்ல.. 50 சதம் ஏற்பு 50 சதம் கருத்து வேறுபாடு கூடாது என்பதும் தலிபானிசமே
  5) சரி இனி மேல் அறிவித்துவிடுங்கள்.. பேட்டி கொடுப்பவக்ள் உங்கள் வீட்டுப் பெண்களை நினைத்து பேட்டி கொடுங்கள் என்று

 • எழில் வேந்தன் சொல்கிறார்:

  தாலிபானிசம் பத்தி சங்கராச்சாரியாரின் சீடர்கள் பேசுகிறார்கள். தமிழன் என்ற சொல்லை கேட்டாலே மோடியிசம் வந்துவிடும்.

  வர்க்கம் என்று வந்தால் கூட உஞ்சவர்த்தி பார்பான்தான் இவர்கள் கண்ணுக்கு தெரியும் சாக்கடை அள்ளும் தோழனின் அவலத்தைவிட உஞ்சவர்த்தி பார்ப்பானின் அவலம் இவர்கள் கண்ணுக்கு தெரியும். இதுதான் மோடியிசம்.

  உழைத்து பிழைக்கும் இவருக்கு அம்பானி எப்படி தெரிந்தது? அம்பானியை தெரியுமாம் ஜாய் ஆளுக்காசை தெரியாதாம்.

  ஆதாவது இவர் ஏழை பார்ப்பானாம். ஏழை பார்ப்பானுக்கு இணையத்தில் என்ன வேலை.

 • tamizhanban சொல்கிறார்:

  இங்கே யாரும் கேரளாக்காரர்கள் அடித்து விரட்டு என்று சொல்லவில்லை. விடுதலை ராஜேந்திரன் வெளியிட்ட மலையாளிகள் பட்டியலில் இருப்பவர்கள் என்ன தேநீர் கடை ஊழியர்களா?

  முல்லை பெரியாறை சிதைக்க நினைக்கும் ஆதிக்கசக்திகளை பணிய வைக்கவே பொருளாதாரதடை கோருகிறோம். உடனே கேரளாக்காரன் முட்டை சாப்பிடலன்ன நாமக்கல் முட்டை வியாபாரி நட்டப்பட்டுடுவான்னு கதை விடுறீங்க. முட்டை வியாபாரி நட்டப்படக்கூடது முல்லை பெரியாறு விவசாயி நாசமாப்போகலாமா?

  தேக்கடி படகு விபத்தில் இறந்து போனவர்கள் யாரும் மலையாளிகள் இல்லை என்று செய்தி வாசித்த கேரளத்து ஊடகங்களுக்கு எது தாலிபானிசம் அல்லது மோடிசம் என்பதை விலக்கிவிட்டு என்னிடம் வாருங்கள்.

  வினவின் கட்டுரைக்கு எனது எதிர்வினையே இந்த கட்டுரை தவிர மலையாளிகளை குற்றம் சுமத்தி தமிழர்களை புனிதர்களாக்கும் முயற்சி அல்ல.

  நீங்கள் சொல்வதுபோல மலையாள தொழிலாளிகளை தமிழகத்தில் யாராவது விரட்டி அடித்தால் சொல்லுங்கள் மலையாளித்தொழிலாளர்களுக்காக நானும் களம் காணுகிறேன். சும்மா தாலிபானிசம் மோடியிசம் என்று வகுப்பெடுக்க வேண்டாம்.

  தமிழன்பன்

 • Nagaraj சொல்கிறார்:

  லும் சில….
  நான் நாகராசு அய்யர் அல்லன். சூத்திரன் தான்
  எழி்ல் வேந்தர்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை
  காரணம் எனக்கும் வேந்தர்களுக்கும் ஆகாது நான் சாதாரணன்.
  தமிழ் அன்பர் அப்படியில்லை.. நான் உங்களை தலிபான் என்று
  கூறவில்லை. ஆனால் கஞ்சிக்கு இல்லாதவனைப் பார்க்கும் போது
  அவன் “நம்மாளா” என்று பார்க்க இயலவில்லை.. ஒரு வேளை வர்க்க
  கண்ணோட்டமும் தலிபான் தனம்தான் என்று நீங்கள் விஞ்ஞானப் பூர்வமாக நிறுவினால்…………………அதை அந்த நிமிடத்திலிருந்து நான் எற்றுக் கொண்டு வர்க்கக் கண்ணோட்டத்தை கைவிட சம்மதிக்கிறேன். நன்றி
  உங்களை புண் படுத்தயிருந்தால் வருந்துகிறேன். என் நோக்கம் அதுவல்ல….
  நாகராஜ்

 • இரணியன் சொல்கிறார்:

  தோழர் தமிழன்பன் அவர்களுக்கு!

  நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆர்குட் விவாதங்களின் நினைவுகளோடு இந்த உங்களது தனிப்பட்ட வலைதளத்தில் சந்தித்து விவாதிப்பது குறித்து மகிழ்ச்சி.

  வினவு வெளியிட்டிருந்த ஒரு குறிப்பிட்ட பதிவிற்கு எதிர்வினை என்று சொல்லிக்கொண்டு இப்பதிவைப் பதிந்துள்ளீர்கள்; மகிழ்ச்சி! ஆனால் ஒரு சிறு வருத்தம், என்னவென்றால் உங்களுடைய இப்பதிவு வினவின் அந்த குறிப்பிட்ட பதிவுக்கு எதிர்வினையாக மட்டும் அமையாமல், ம.க.இ.க.விற்கும் அது முன்வைக்கும் புரட்சிகர அரசியலுக்கும் எதிராக உங்களை நிறுத்திக்கொண்டு, அந்த ‘இயல்பான’ உங்களது எதிர்ப்புக்கு உகந்த காரணத்தை நீங்கள், வினவின் அப்பதிவில் தேடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

  ஜெயராம், விவேக் உள்ளிட்ட சினிமாக் குப்பைகளைக் குறித்து வினவு பதிந்துள்ள கருத்துக்களை விட்டுத்தள்ளுங்கள். அப்பதிவு மையமாக முன்வைக்கும் கருத்து இனவாதம் இனவெறியாக மாற்றப்படுவதைத்தான் சுட்டுகிறது. குமுதம் என்கிற பார்ப்பன கழிசடைப் பத்திரிக்கையும் ஜெயராமும் இணைந்து வெளியிட்ட அக்கருத்து தமிழச்சிகளை அவமதித்திருக்கிறது என்பதிலோ அதற்காக சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படவேண்டுமென்பதிலோ எனக்கு மாற்றுக்கருத்தில்லை.

  ஆனால், நமது பெண்களை அறிவும் மான உணர்ச்சியுமற்ற சடப்பொருள்களாகவும், வெறும் கவர்ச்சி உடல்களாகவும் சித்தரித்து, பெண்களுக்கெதிரான பாலியல் ரீதியிலான குற்றங்கள் அதிகரிப்பதற்குக் காரணமாக இருக்கின்ற சினிமா, தொலைக்காட்சி நிறுவனங்கள் குறித்து எந்தவிதமான கவலையையும் எதிர்வினையையும் காட்டமறுக்கும் கனவான்கள், அந்த அக்கிரமங்களில் பங்கெடுத்துக் கொண்டிருந்த சிலரும் கூட இப்போது தமிழச்சி என்ற அடையாளத்திற்காக மட்டும் ஆர்ப்பரிப்பது எதனால்?

  தமிழச்சிகள் மட்டுமல்லாமல் மலையாளப் பெண்களுக்கும், ஏன் அனைத்து இன பெண்களுக்கும் இன அடையாளங்களுக்கு அப்பாற்பட்ட எதிரிகளே கிடையாதா? பொதுவாக உடல்மொழியில் பெண்களை இழிவுபடுத்திப் பேசும் ஆணாதிக்க வக்கிர புத்தியும், வேலையாட்களின் ஏகபோக உரிமையாளர்கள்போல் காட்டிக்கொள்ளும் பணக்கார கொழுப்பும் தான் ஜெயராமனின் அந்த பேச்சில் வெளிப்பட்டுள்ளது. சினிமாக் கழிசடை ஜெயராம் ஒன்றும் மலையாள மக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியுமல்ல, அவனது ஆணாதிக்கப் புத்தியும் பணக்காரக் கொழுப்பும் மலையாள தேசத்தின் தனிப்பட்ட விழுமியங்களுமல்ல. எனவே ஜெயராமோடு சேர்த்து, அனைத்து உழைக்கும் மக்களுக்கும் பெண்களுக்கும் எதிரான சினிமாக் கழிசடைத்தனங்கள் அம்பலப்படுத்தி ஒழிக்கப்படவேண்டும் என்பதுதான் எனது கருத்து.

  வெறும் இன அடையாளத்தோடு இப்பிரச்சினையை அனுகுவது முறையா? ஏதோ நமது தமிழச்சிகள் இங்கு பாலின சமத்துவத்தில் திளைப்பதாகவும், இந்த மலையாளத்துக்காரன் ஜெயராம்தான் அவர்களை இழிவுபடுத்துவதாகவும் உருவகப்படுத்துவது முறையா? தமிழச்சிகளுக்கும் மலையாளத்து பெண்களுக்கும் பொது எதிரிகளான சினிமாக்காரர்களை அம்பலப்படுத்த வேண்டியது அவசியமா இல்லையா? ஜெயராமின் கொழுப்பு நிறைந்த அவனது அந்த நடவடிக்கைக்கான விலையை மலையாள துவேஷத்தின் மூலம் மலையாள மக்களிடம் கோருவது நியாயமா?
  என்பதுதான் வினவு அப்பதிவினூடாக முன்வைக்கும் கேள்விகள்.

  இக்கேள்விகளோடு முல்லைப்பெரியாறு விஷயத்தில் நமது தமிழினவாதிகள், மற்றும் அனைத்து ஓட்டுப் பொறுக்கிகள், தமது வழக்கமான பானியில் ஒட்டுமொத்த மலையாள மக்களுக்கு எதிரான பிரச்சினையாக இதனை மாற்ற முற்படுவது குறித்தும் சில கருத்துக்கள் வினவு பதிந்துள்ளது.

  மக்கள் ஒற்றுமை, ‘புனிதமான’ இந்திய தேசிய ஒற்றுமை என்றெல்லாம் வாய்கிழிய பேசிவரும் சி.பி.எம்., முல்லைப்பெரியாற்று பிரச்சினையில் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் எதிராக மலையாளிகளை இன உணர்வூட்டும் அரசியல் நடத்திவருவது எதனால்? இதில் ஓட்டுப் பொறுக்குவதைத்தவிர வேறெந்த உள்நோக்கத்தையும் காணமுடியவில்லை. ஓட்டுப்பொறுக்குவதற்காக இன உணர்வை, மத உணர்வை, சாதி உணர்வை உயர்த்திக்காட்டும் கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் இங்கு பஞ்சமா என்ன? ஓட்டுப்பொறுக்கி நாற்பது இடங்களையும் கைப்பற்றுவதற்காக, ஈழ மக்களின் ‘நிரந்தர’ எதிரியான ஜெயா மாமியே ஈழப் போராளியாக மாற்றம் பெற்ற போது, கேரளத்து ஓட்டுப்பொறுக்கிகள் மட்டும் இதிலென்ன விதிவிலக்கா?

  குஜராதில் இந்துத்துவ பயங்கரவாதி மோடி நடத்திய படுகொலைகளுக்குப் பின்னும் அவனையே அம்மக்கள் மீண்டும் தேர்ந்தெடுத்து முதல்வராக்கியது எதனால்? இந்துத்துவம் என்னும் மத உணர்வூட்டப்பட்டு நியாய தர்மங்களைப் புறந்தள்ளிச் செயல்படும் தன்மைக்கு அம்மக்கள் சிறுகச் சிறுக மாற்றப்பட்டதுதான் அதற்கான காரணம். இதற்கு எதிராக, பெரும்பான்மையான இந்து மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி வீழ்த்தப்படவேண்டிய இந்துத்துவ வெறியர்களை அம்மக்களின் பிரதிநிதிகளாக்கி, குருட்டுத்தனமாக மோத முற்படுகிறார்கள், இசுலாமிய அடிப்படைவாதிகள். இதுபோன்ற எதிர்வினைகள் மோடிகளை வீழ்த்தியழிப்பதற்குப் பதில் வளர்த்துக் கொண்டிருக்கிறது.

  இசுலாமிய அடிப்படைவாதிகளின் பானியில்தான், முல்லைப் பெரியாறு உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் ந்மது தமிழினவாதிகளும் இதர ஓட்டுப்பொறுக்கிகளும் அனுகுகிறார்கள். ஆனால், இவர்களது நடவடிக்கைகள் இசுலாமிய அடிப்படைவாதிகளைப் போல எதிரிக்கு வலுவூட்டும் குருட்டு நடவடிக்கையல்ல; மாறாக தத்தமது இருத்தலை நிலைப்படுத்தும் உள்நோக்கமே நமது தமிழக, மலையாள ஓட்டுப் பொறுக்கிகளிடத்தில் மேலோங்கி இருக்கிறது. அதற்குத்தான் இப்படிப்பட்ட இனவாத, மதவாத அரசியல்கள் உதவுகிறது.

  முல்லைப் பெரியாறு பிரச்சினையாகட்டும், ஆந்திர பாலாற்றுப் பிரச்சினையாகட்டும், காவிரி-ஒகேனேக்கல் பிரச்சினைகளாகட்டும் அனைத்திலும் மக்களிடம் அம்பலப்படுத்தி வீழ்த்தவேண்டிய விஷயம், பார்ப்பன இந்துதேசியம்தான். பல்வேறு தேசிய இனங்களின் சிறைக்கூடமாக திட்டமிட்டு பராமரிக்கப்படும் இந்து தேசியத்தை நேரடியாக அம்பலப்படுத்தி வீழ்த்துவதை விடுத்து, மலையாள மக்களுக்கு எதிராகவும் இதர தேசிய இனத்துக்கும் நமக்குமான தனிப்பட்ட பிரச்சினையாகவும் இப்பிரச்சினைகளைப் பார்ப்பது, முறையான பார்வையா என்பதை நீங்கள்தான் தோழர் சொல்லவேண்டும். நமது தமிழக மக்களுக்கும், அண்டை மாநிலங்களைச் சார்ந்த மக்களுக்கும் பொது எதிரியாக இருந்துகொண்டு, இதுபோன்ற சச்சரவுகளில் இவர்களை மோதவிட்டு அனைவரையும் ஒடுக்கிவரும் இந்திய தேசியத்தை அம்பலப்படுத்தி ஒழிக்காமல், அண்டை தேசிய இனத்து மக்களுக்கு எதிராக இப்பிரச்சினைகள் நிறுத்தப்படும் வரை தீர்வேதும் எட்டப்படப் போவதில்லை.

  மற்றபடி, விவாதிக்க ஏராளமான விஷயங்கள் இருக்கின்றது எனினும், இப்பின்னூட்டத்தின் நீளம் பதிவின் நீளத்தைத் தாண்டிக் கொண்டிருப்பதாலும், படிப்பவர்களுக்கு சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதாலும் இத்தோடு முடித்துக் கொள்கிறேன். மாற்றுக்கருத்தை தயங்காமல் நீங்கள் தெரியப்படுத்தி விவாதத்தைத் தொடருவீர்கள் என்கிற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்.

  தோழமையுள்ள,
  இரணியன்.

 • tamizhanban சொல்கிறார்:

  தோழர் இரணியனின் பதிவுக்கு நன்றி!

  வினவின் கட்டுரை ஜெயராமை சிறிதும் கண்டிக்காமல் தமிழர்கள் மலையாளப்பெண்களை மனதால் கற்பழிப்பதாக விவேக் என்னும் காமந்தககாமெடியனை முன்வைத்து இருப்பதாலே இந்த கட்டுரையை வெளியிட்டேன். முத்துகுமரன் மரணத்தின் பொழுது மகஇகவை களத்தில் கண்டபொழுது உண்மையிலேயே ஆச்சரியப்பட்டேன் அதனை எனது பதிவிலும் குறிப்பிட்டேன்.

  ஆனால் வினவு என்னும் மகஇகவின் அதிகாரப்பூர்வமான வலைப்பூ விவேக் போன்ற சினிமா கழிசடைகள் ஏதோ தமிழர்களின் பிரதிநிதி போல சித்தரித்து எழுதியது கோபத்தை தூண்டியது. மேலும் முல்லைபெரியாறு விடயத்தில் வெறும் ஆயிரம் ஓட்டுகளுக்காக மாத்திரமே அரசியல்வாதிகள் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்ற வாதம் என்னால் ஏற்க்க முடியவில்லை இரணியன்.

  முல்லை பெரியாறு பிரச்சனையாகட்டும் கேரளாகழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படும் பிரச்சனையாகட்டும் தேனி மாவாட்டப்பகுதியில் களத்தில் நின்று போராடிவரும் ஒரே அமைப்பாக விவிமு இருந்துவருகிறது. விவிமு மகஇக எல்லாம் ஒன்று என்றுதான் நம்பப்படுகிறது. அப்படி இருக்கையில் வினவின் முல்லைபெரியார் குறித்த பார்வைகள் உள்முரணாக இருக்கிறது. ஜெயராம் என்ற நடிகன் எப்படி மலையாளிகளின் பிரதிநிதி இல்லையோ அதுபோல தமிழககாமெடியன்களும் தமிழர்களின் பிரதிநிதிகள் அல்ல.

  வினவு தளத்தை நீண்ட நாட்களாக வாசித்து வருபவன் என்பதால் வினவில் வெளிவரும் சினிமா விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சினிமா விமர்சனத்திற்கு என்று வலையுலகில் பல முகவர்கள் இருக்கிறார்கள். மேலும் மகஇக தனது சகோதர இயக்கங்களை அதிகமாக விமர்சிக்கும் இயக்கமாக இருக்கிறதே என்பதாலும் நமது ஒரே நம்பிக்கையாக இருக்கும் பெரியார் திராவிடகழகத்தையும் மகஇக தொடர்ச்சியாக அவதூறு செய்கிறார்களே என்பதாலே இந்த பதிவினை வெளியிட்டேன்.

  உங்களை போன்ற நண்பர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டமையால் மகஇக இயக்கத்தின் மீதான ஆதங்கத்தை கட்டுரையாக வெளியிட நேர்ந்தது இரணியன். கட்டுரையை வாசித்தால் நீங்களே பல இடங்களில் முரண் கொள்வீர்கள் என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகமில்லை.

  நட்புடன்!
  தமிழன்பன்

 • இரணியன் சொல்கிறார்:

  உடன் தங்களது பதிலைப் பதிந்தமைக்கு நன்றி தோழர்!

  வினவு பதிந்த அந்த கட்டுரையில் ஜெயராமைக் கண்டிக்காமல் விட்டதில் மட்டும்தான் நீங்கள் முரண்படுகிறீர்களா? தமிழினவாதம் இனவெறியாக மாற்றப்படுவது குறித்த வினவு மற்றும் எனது கருத்துக்களில் நீங்கள் மாறுபடுகிறீர்களா என்பதைப் பதியுங்கள். ஜெயராம் விமர்சிக்கப்படுவதற்கும் சகோதர அமைப்புகளான தமிழினவாத அமைப்புகள் விமர்சிக்கப்படுவதற்கும் பாரிய வித்தியாசங்கள் உள்ளது தோழர்.

  சினிமாக் கழிசடை ஜெயராமையும் தமிழர் அமைப்புகளையும் ஒருசேர கண்டிப்பது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? மலையாளிகளின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக ஜெயராம் சித்தரிக்கப்படுவதையும், அவனை எதிர்ப்பதற்கு பதில் ஒட்டுமொத்த மலையாள மக்களையும் எதிர்ப்பது என்கிற நிலையையும் உணர்த்துவதற்காகத்தான், பெண்களை இழிவு படுத்துவதில் மலையாள நடிகர்களுக்கும் தமிழ் நடிகர்களுக்கும் இருக்கும் ஒற்றுமையினை விளக்குவதற்குத்தான் விவேக் நடித்த காட்சிகளை வினவு சுட்டிக்காட்டியிருந்தது என்பதுதான் எனது கருத்து. அதற்குமேல் விவேக்கை தமிழர்களின் பிரதிநிதியாக்க வினவு முயன்றதாகத் தெரியவில்லை. மேலும் மலையாள நடிகைகள் மும்தாஜ், ஷகீலா குறித்த வினவின் கருத்துக்கள் கூட பெண்கள் என்பதனால் இழிவுபடுத்தப்படும் ஆணாதிக்க சினிமாத்தனத்தை அம்பலப்படுத்துவதுவதும், அத்தன்மை அனைத்து மொழி சினிமாக் காரர்கள் மத்தியிலும் விரவியுள்ளதையும் குறிப்பிடுவதற்காகத்தான் வினவு எழுதியிருக்கிறது. மற்றபடி தமிழ்னவாதிகளையும் ஜெயராமையும் சரிசமமாக விமர்சிப்பது சரியான அரசியல் விமர்சனமாக இருக்காது என்று கருதுகிறேன்.

  வினவையும் எமது அமைப்பையும் சப்பைக்கட்டு கட்டி நியாயப்படுத்துவதாக நினைக்க வேண்டாம். ஓட்டுப்பொறுக்கிகளின் மோசடி அரசியலை நுனுகிப்பார்த்தால் நதிநீர்ப் பங்கீட்டு பிரச்சினைகளில் உள்ள அண்டைமாநிலப் பிரச்சினைகள் நமக்குத் தெளிவாகத் தெரியும். இந்திய தேசியத்தின் மீதான மக்களின் நம்பிக்கையினை குலைப்பதற்கு இந்த நதிநீர்ப் பிரச்சினைகள் பெரிதும் உதவியாக இருக்கும் என்பதையும் நமது மதிப்பிற்குரிய இனவாதிகள் அறிந்திருப்பதாகத் தெரியவில்லை. அதேபோல ஜெயராமின் தமிழச்சி குறித்த கொழுப்பெடுத்த கருத்துக்களுள் துருத்தித் தெரிவது சினிமாக்கழிசடைகளுக்கும் பொதுப்புத்தியிலும் பரவிவிரவிக்கிடக்கும் ஆணாதிக்க வக்கிரபுத்திதான் என்பதை நாம் புரிந்துகொண்டு, அந்த கருத்தியலுக்கு எதிராக சமரசமின்றி போராடவேண்டும். வினவின் சினிமா விமர்சனங்கள் அதன்மீதான பொதுவாக உருவாக்கப்பட்டுள்ள தவறான பிம்பத்தைச் சிறிதளவேனும் தகர்த்திருப்பதை, அப்பதிவுகளில் நடைபெற்றுள்ள விவாதங்களையும் பின்னூட்டங்களையும் பார்த்தாலே புரியும், தோழர்.

  வினவு இணையதளம் ம.க.இ.க. தோழர்களால் நடத்தபடுவதுதான், ஆனால் எமது அமைப்பின் அதிகாரப்பூர்வ தளம் அல்ல, என்பதை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன். இருப்பினும் வினவின் கருத்துக்களை விமர்சிப்பதும் பரிசீலிப்பதும் வரவேற்கத்தக்கதுதான். உங்களது எதிர்வினையை நான் முழுமையாக வரவேற்கிறேன், தோழர். எதிர்வினைகளிலிருந்துதான் பரிசீலனைகளின் மூலம் சரியான அரசியல் நடைமுறைக்கு நாம் வந்து சேரமுடியும், என்று நான் உறுதியாக நம்புகிறேன். உங்களின் விமர்சனத்தின் மீதான எனது கருத்தைத்தான் நான் மேலே குறிப்பிட்டிருந்தேன்.

  முல்லைப்பெரியாறு பிரச்சினை மட்டுமல்ல அனைத்துவகையான அண்டைமாநிலப் பிரச்சினைகளும் ஓட்டுப்பொறுக்கிகளின் சுயலாபத்திற்காக ஊதிப்பெருக்கப்பட்டு பராமரிக்கப்படுபவைதான். உதாரணத்திற்கு ஒகேனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை முடக்க கன்னட வெறியன் வாட்டாள் நாகராஜைவிட பலமடங்கு அதிகமாக எடியூரப்பா தனது கன்னடப் ‘பற்றை’ காட்டிக்கொண்டது ஓட்டுப்பொறுக்குவதன்றி வேறு எதற்காக? அதேபானியிலான எடியூரப்பாக்கள் அனைத்து மாநிலங்களிலும் ஓட்டுப் பொறுக்கும் அரசியலில் நிறைந்திருக்கிறார்கள், என்பதுதான் வினவின் கருத்து என்று நம்புகிறேன். இக்கருத்தில் நீங்கள் மாறுபடமாட்டீர்கள் என்றும் நம்புகிறேன், தோழர்.

  சகோதர அமைப்புகளை விமர்சிக்கிறார்களே என்று மகஇக மீது மாற்றுக்கருத்துக்களைக் கொண்டிருக்கும் நீங்கள், அந்த விமர்சனங்களை பரிசீலித்து தங்களது வேறுபாடுகளைத் தெரியப்படுத்தலாம். விமர்சனம் என்பது நமது தவறுகளைக் களைந்து முன்னேறுவதற்கு உதவும் என்று மகஇக நம்புகிறது. அரசியல் ரீதியிலான மாற்றுக்கருத்துக்களை வெளியிட்டு பரிசீலிப்பது அனைத்து அமைப்புகளுக்கும் அடிப்படையான தேவை என்றே கருதுகிறேன். மகஇக மீதான விமர்சனங்களுக்கு உடனடியாக எமது தோழர்கள் பதிலளித்து விவாதத்தைத் தொடருவதன் நோக்கம் கூட அதுதான். விமர்சிப்பதனாலேயே ஒரு அமைப்பை குற்றம்சாட்டுவது நியாயமானது அல்ல, தோழர்.

  பார்ப்பனத் தலைமை என்கிற தேய்ந்துபோன ரெக்கார்டை பெ.தி.க.வும் விடுதலை ராசேந்திரனும்தான் மாற்றி மாற்றி தேய்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு வரிந்துகட்டிக் கொண்டு பதிலெழுதி அலுத்துவிட்டது. எம்மை விமர்சிப்பதற்கு எந்த நேர்மையான காரணமும் கிடைக்கப்பெறாத பரிதாபமான நிலையில்தான் அவர்கள் இந்த இழிவான விமர்சனத்தை கையிலெடுக்கிறார்கள். இதற்காக நான் அவர்கள் மீது பரிதாபப்படுகிறேன்.

  பொதுவாக எல்லாவகையான விவாதங்களுக்கும் மிகமுக்கியமாக இருக்க வேண்டிய அம்சம் என்னவென்றால் விமர்சனமும் பரிசீலனையும்தான். உங்களை நான் விமர்சிக்கிறேன் என்றால், அதற்காக நீங்கள் தெரிவிக்கும் பதிலை நான் பரிசீலித்து நேர்மையாக விவாதத்தைத் தொடரவேண்டும். உதாரணத்திற்கு இடஒதுக்கீடு குறித்து ம.க.இ.க. வெளியிட்ட வெளியீட்டை இன்று வரை மறுத்தோ விமர்சித்தோ கருத்து தெரிவிக்காத பெ.தி.க., அல்லது விடுதலை ராசேந்திரன், மணியரசன் போன்றோர் தொடர்ந்து இடஒதுக்கீட்டு விசயத்தில் எமது அமைப்பை இந்துவெறி அமைப்புகளுடன் ஒப்பிட்டு கீழ்த்தரமாக விமர்சித்து வருகிறார்கள். விமர்சனங்கள் என்கிற பெயரில் முன்வைக்கப்படும் அவர்களது வாதங்கள் அனைத்தும் அவதூறுகள் என்பதையும் நாங்கள் உடனுக்குடன் மறுத்து தெளிவுபடுத்தியிருக்கிறோம்.

  பொதுவாக எமது விமர்சனங்கள் ஏதோ போகிற போக்கில் பதியப்படுவது அல்ல. விவாதத்தை முறையாகத் தொடர்ந்து நடத்தி தீர்வை எட்டும் வரை நாங்கள் அதிலிருந்து விலகுவது கிடையாது. பொறுப்பற்ற முறையில் முன்வைக்கப்படும் இந்த தமிழனவாதிகளின் வாதங்கள் அவர்களது அணிகளாலேயே பலமுறை புறக்கனிக்கப்பட்டு நகைப்புக்குள்ளாக்கப்படுவது, நின்று விவாதிக்காமல் போகிற போக்கில் விமர்சித்துவிட்டு அல்லது வசைபாடிவிட்டு செல்வதால்தான்.

  எனவே, ஓட்டுப்பொறுக்கிகளையும் போலிகம்யூனிஸ்டுகளையும் தமிழனவாதிகளையும் மதவெறி அடிப்படைவாதிகளையும் சினிமாக்கழிசடைகளையும் நாம் விமர்சித்து வருவதன் நோக்கம் இதுதான். விமர்சிப்பதும் விமர்சிக்கப்படுவதும் தான் முன்னேற்றத்திற்கான இயங்கியல், தோழர்.

  தொடர்ந்து விவாதிப்போம், தங்களது கருத்து எதுவாகிலும் தயங்காமல் தெரியப்படுத்துங்கள். எத்தனை கடுமையாக வேணும் எமது அமைப்புகளை விமர்சியுங்கள். அனைத்துக்கும் பதிலளித்து பரிசீலித்து சரியான நடைமுறையை எட்டுவோம். நன்றி!

 • ஜோதிஜி சொல்கிறார்:

  சீறிய சீற்றம். உங்கள் சமூக அக்கறை, இடைவிடாத நோக்கத்தை நோக்கி முடிந்த அளவு முன்னேற்றம்.

  மொத்தமாய் என் வாழ்த்துகள்.

 • mallu Ahamad சொல்கிறார்:

  ஜோய் ஆலுக்காசுக்கு போனால் சூப்பர் பிகருகளாக பையனுகள் இருப்பானுகள். இந்த தமிழ் எருமை மாடுகளை விட நல்லா சைட் அடிச்சு பேசுவானுகள். எந்தப் பெண்ணு கரிக்கட்டை தமிழ் பையனை விரும்புவாள்?antha Nagaraj kerlavila tamil karikattaipayanunga pottu thalli piranthavano?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

What’s this?

You are currently reading தமிழர்களுக்கு எதிரானவை மாத்திரமே புரட்சி! புரட்சிகரநாட்டாமை வினவின் புதியதீர்ப்பு. at தமிழன்பன் பக்கம்.

meta

%d bloggers like this: