எம்ஆர் ராதாவை இதைவிட எவரும் அவமானப்படுத்த முடியாது !

மே 11, 2010 § 10 பின்னூட்டங்கள்


எம்ஆர் ராதாவை இதைவிட எவரும் அவமானப்படுத்த முடியாது !தமிழகத்தின் ஒப்பற்ற கலைஞன் பெரியாரின் போர்வாள் என்றெல்லாம் போற்றப்படுபவர் நடிகவேள் எம்ஆர் ராதா. இரத்தகண்ணீர் திரைப்படத்திற்கு இணையான திரைப்படம் இதுவரை தமிழ்நாட்டில் வரவில்லை. தொழிலாளிகள் மத்தியில் ராதா அவர்கள் உரையாடுவதில் துவங்கி வீடு தீப்பிடித்தால் கும்பிட வேண்டியதுதானே? என்று திருவண்ணாமலை ஜோதியை வணக்கும் பக்தனை கலாய்ப்பது வரை காலத்தால் அழியாத  திரைகாவியத்தை தனது நடிப்புத்திறனால் நிரப்பிய கலைஞன் ராதா.  நடிகவேளின் நாடகங்கள் நாம் கண்டிராத பொழுதும் தமிழக சூழலில் நடிகவேள் ஏற்படுத்திய அதிர்வுகளை நாம் அவரின் திரைப்படங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ராமர்வேடத்தில் ராதா நடித்த நாடகங்களை திரையிட காங்கிரசு அரசு தடைவிதித்தது. துவக்ககாட்சியிலேயே சோமபானம் அருந்திய ராமராக அறிமுகமாகி  ராமர்வேடத்திலேயே  காவல்துறையிடம் கைதாகி ஒரு கலகத்தையே உண்டு பண்ணியவர் ராதா. இரத்தகண்ணீர் திரைப்படத்தில் ஆடம்பரமாக வாழும் சீமானாக நடித்து இருந்தாலும் இறுதி காட்சியில் தனது மனைவியின் மறுமணத்தை வலியுறுத்தும் நபராக வருவார்.அரசியல் கட்சிகள் எல்லாம் வியாபாரத்தில் இறங்கிவிட்டன என்ற வசனத்தை இரத்தகண்ணீரிலேயே  பேசி நடித்து இருப்பார்.  தனது வாழ்நாள் முழுமைக்கும் தான் ஏற்றுக்கொண்ட ஒரே தலைவனாக பெரியாரை போற்றியவர் ராதா. பெரியாரின் கருத்துக்களை பரலாக்கியதில் ராதாவின் பங்கு முக்கியமானது தனது நாடகங்கள் மூலம் சமூக மாற்றத்திற்கு பாடுபட்ட கலைஞர்களில் எம்ஆர் ராதாவும் என்எஸ் கிருஷ்ணனும் முக்கியமானவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

சமீபத்தில் 5600 நாடகங்களை எஸ்வி சேகர் அரங்கேற்றி முதல்வர் தலைமையில் விழா எடுத்து இருக்கிறார். இவரது நாடகங்கள் பார்பனதனமானவை என்ற குற்றச்சாட்டு நீண்டநெடுங்காலமாக இருந்து வருகிறது. சங்கராச்சாரியாரை எப்போதும் ஆதரிக்கும் காஞ்சி சங்கர மடத்தின் தீவிரபக்தர் எஸ்வி சேகர். சமீபத்தில் குமுதம் இணையதளம் ஏற்பாடு செய்த ஞானி பேசுகிறேன் என்ற நிகழ்ச்சியில் எஸ்வி சேகர் நேர்காணல் ஒளிபரப்பானது. ஞானி என்னும் முற்போக்கு பார்பனரும் சேகர் என்னும் பிற்போக்கு பார்பனரும் இணைந்து வழங்கிய அந்த நிகழ்வினை பார்ப்பதவர்களுக்கு வயிற்று போக்கு வந்திருந்தாலும் ஆச்சிரியப்படுதற்க்கு இல்லை. அந்நிகழ்வில் எஸ்வி சேகர் உதிர்த்த சில முத்துக்கள்.

பார்பனராக பிறக்க முற்பிறப்பில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

நான்( எஸ்வி சேகர்) புண்ணிய ஆத்மா எனக்கு மறுபிறப்பு இல்லை.
தெரு கூட்டும் சாதியில் பிறந்த இளைஞன் தெருதான் கூட்டவேண்டும் என்று சொல்லவில்லை ஊரையே சுத்தமாக வைத்து இருப்பவன் தனது வீட்டை எவ்வளவு சுத்தமாக வைத்து கொள்வான் என்கிறேன். எல்லாம் பிறப்பில் இருக்கிறது.

திரைப்படத்தில் நடிக்கும் பொழுது இசுலாமிய பாத்திரங்கள் தொப்பி வைத்து நடிக்கலாம், கிறித்துவ பாத்திரங்கள் சிலுவை அணிந்து நடிக்கலாம் ஆனால் எங்கள் பூணுலை வெளியே தெரியவிடாமல் நடிக்க வேண்டும். பூணூல் என்பது இந்துமத அடையாளம்.

பார்பனர்களுக்கு தமிழகத்தில்தான் மரியாதை இல்லை பிறமாநிலத்தில் பிராமணர் என்றால் நிறையவே மதிக்கிறார்கள்

இது போன்ற பேச்சுக்களுக்கு ஞானி மலுப்பலாக எதிர்கேள்வி கேட்டுவிட்டு எஸ்வி சேகர் நிறைய இரத்ததான முகாம்கள் நடத்துகிறார் என்று பாராட்டிவிட்டு அனுப்பி வைத்தார்.  எஸ்வி சேகர் நாடகத்தில் பெரும்பாலும் பார்பன காதப்பாத்திரங்களே இடம்பெறும் அக்கிரகாரத்து மொழிநடையே நாடகம் முழுவதும் பயன்படுத்தப்படும். முதல்வர் பங்குகொண்ட நாடகம் கூட சங்கராச்சாரியார் புகைப்படத்துடந்தான் நடந்து இருக்கிறது.  பிராமணர்களுக்கு  7 விழுக்காடு ஒதுக்கீடு வேண்டும் என்று சேகர் தொடர்ந்து குரல்கொடுத்து வருவதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். எஸ்வி சேகர் முன்னாள் அதிமுக உறுப்பினராக இருந்து தற்போது திமுகவை  நோக்கி நகர்ந்திருக்கிறார் . அவரை மகிழ்ச்சிப்படுத்த அவரது 5600 நாடக அரங்கேற்றத்தில் தமிழினதலைவர் பங்கேற்று இருக்கிறார்.

சேகரின் நாடகவிழாவில் பங்கேற்பது முதல்வரின் சொந்த விருப்பம். ஆனால் விழாவில் சேகரை புகழும் பொழுது சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை நகைச்சுவை கலந்து சொல்வதில் எஸ்வி சேகர் நடிகவேள் எம்ஆர் ராதாவிற்கு நிகரானவர் என்று சொல்லி இருக்கிறார்.

இதுலதான் நமது பிரச்சனையே…. எதை வைச்சு எஸ்வி சேகர் எம் ஆர் ராதாவிற்கு நிகர் என்று கருணாநிதி சொல்லுகிறார் என்று நமக்கு கொஞ்சமும் விளங்கவில்லை. அப்படி என்ன சமூகத்திற்கு தேவையான கருத்தை எஸ்வி சேகர் நாடகம் மூலம் சொன்னார்?

கலைஞர் என்ற பட்டத்தை கருணாநிதிக்கு கொடுத்தவர் ராதா என்பதால் இது கருணாநிதியின் கைமாறு போலும்.  ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே “யாரு அது ராகு கேது என்ன பொண்ணோட உறவினரா? நான் சொன்னேன்னு சொல்லி  நாளைக்கு மெயில் புடுச்சு போகச்சொல்லு! என்று கிரகங்கள் இடம்பெயர்வதை வைத்து நல்ல நேரம் குறிப்பவர்களை கிண்டல் செய்த ராதா எங்கே  இன்னும் அம்புஜம் மாமி காமெடி எழுதி கொண்டிருக்கும் எஸ் வி சேகர் எங்கே?.  “நாங்க மன்னவரில்லே ஒரு மந்திரில்லே நாங்க சொன்ன இடத்தில் அமர்ந்து கொள்கிறார்!” என்று முடி திருத்தும் தொழிலாளியாக நடித்த ராதா எங்கே? பூணுல் வெளியே தெரியும்படிதான் நடிப்பேன் என்று மணல் கயிறு திரிக்கும் எஸ்வி சேகர் எங்கே.என்னங்க இது அநியாயமா இருக்கு எம்ஆர் ராதாவோடு ஒப்பிட ஒரு தகுதி வேண்டாமா? திராவிடம் நீர்த்து போயி இப்படி தெருவுக்கு வந்திருக்கிறது.

போகிற போக்கை பார்த்தால் எஸ்வி சேகரின் கோரிக்கையான பார்பனர்களுக்கான  இட ஒதுக்கீட்டை கருணாநிதி நிறைவேற்றி காஞ்சிபுரத்தில் சங்கராச்சாரி தலைமையில் விழா நடக்கும் போல் இருக்கிறது. அப்பொழுதும் விழாவில் பேசும் கருணாநிதி சமூக நீதிக்காக போராடுவதில் ஜெயந்திரரர் பெரியாராக காட்சி அளிக்கிறார் விஜயேந்திரன் சிரிப்பில் அண்ணாவை பார்க்கிறேன் என்று பேசினாலும் பேசுவார். யார் கண்டது?

Advertisements

Tagged:

§ 10 Responses to எம்ஆர் ராதாவை இதைவிட எவரும் அவமானப்படுத்த முடியாது !

 • ஜோ சொல்கிறார்:

  http://thatstamil.oneindia.in/movies/specials/2010/05/karunanidhi-praises-shekher.html

  தட்ஸ்தமிழ் சொந்தமா எழுதின தலைப்பை மட்டும் படித்து விட்டு தையக்கா தக்காண்ணு குதிக்க கூடாது ..

  அதுலயே போட்டிருக்கான் “நாடகங்களில் சமூகக் கருத்துக்களைச் சேர்த்துச் சொல்வதில் நடிகவேள் எம்ஆர் ராதாவுக்கு அடுத்து திறமை பெற்றவர் நடிகர் எஸ்வி சேகர் என்றார் முதல்வர் கருணாநிதி .” ….எம்.ஆர்.ராதாவுக்கு அடுத்து இவர் தான் -ன்னு கலைஞர் சொல்லுறதே கொஞ்சம் ஓவர் தான் ..அதை சொல்லிட்டு போங்க ..ராதாவுக்கு நிகரானவர் -ன்னு அவர் சொல்லாத ஒண்ணை வச்சு பதிவு போட மேட்டர் கிடச்சிருச்சுண்ணு துள்ளி குதிச்சிட்டிங்க போல.

 • tamizhanban சொல்கிறார்:

  எம் ஆர் ராதாவுக்கு அடுத்து என்றால் என்னவென்று நீங்கள் விளக்கினால் நல்லது.
  எஸ்வி சேகர் சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை எங்கே கூறினார் என்று கேட்டிருப்பதை படிக்காமல் நீங்கள் குதிப்பது எதனாலோ.?

  தட்ஸ் தமிழ் மாத்திரமல்ல தினமணியிலும் செய்தி வந்திருக்கிறது.

 • வேந்தன் சொல்கிறார்:

  சொல்லுங்கப்பா எஸ்வி சேகரு சமூகத்திற்கு நாடகங்கள் மூலம் என்ன கருத்து சொன்னாப்லன்னு.

  பார்ப்பான்னு சொன்னாலே சில பேருக்கு கோவம் வருமாமே உண்மையா?

 • raja சொல்கிறார்:

  ivan (karunanithi) pechellam oru pecha atha poi ivlo seriousaa edukkureenga… ada ponga sir.. ivar ponathum invanga kottame adangapoguthu…

 • amayadi mahesh சொல்கிறார்:

  நடிப்பதில் கலைஞரும் s v சேகரும் ஒன்றுதான் நெக்கு தெரியாத

 • seekay சொல்கிறார்:

  ellam arasiyal

 • sornammaran சொல்கிறார்:

  YOU ARE RIGHT. THIS VILLANIC COMEDIAN ONCE COMMENTED THE SO CALLED THAMIZHINATHTHALALIVAR AS- he is a hard worker. at this age of eigthy two(THEN) this elder man working hard to bringforth his family as the no.1 richest in asia.

  NOBODY CAN BE MATCHED WITH NADIHAVEL , THE COMMANDER -IN- CHIEF OF OUR GREAT LEADER PERIYAR.

 • vijayan சொல்கிறார்:

  அண்ணாதுரை அவர்களை கருணாநிதி & கம்பெனி தென்னாட்டு பெர்னாட்சா இந்நாட்டு இங்கர்சால்,காஞ்சி கரிபால்டி,தென்னாட்டு காந்தி ,இந்தியாவின் கமால் பாட்ஷா என்றெல்லாம் சொன்னார்கள்,அதற்காக அந்த பெரிய மனிதர்களெல்லாம் எப்படி எங்களை அந்த டுபாகூரோடு ஒப்பிடலாம் என்று கேட்கவில்லை,அதே மாதிரி ராதாவும் இதுக்கெல்லாம் கோவிட்சுக்கமாட்டாறு.

 • ramanan.pg சொல்கிறார்:

  அற்புதம். தோலுரித்தற்கு..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

What’s this?

You are currently reading எம்ஆர் ராதாவை இதைவிட எவரும் அவமானப்படுத்த முடியாது ! at தமிழன்பன் பக்கம்.

meta

%d bloggers like this: