தமிழச்சி நாம்தமிழர் என்னதான் பிரச்சனை?

ஜனவரி 1, 2011 § 4 பின்னூட்டங்கள்


தமிழச்சி நாம்தமிழர் என்னதான் பிரச்சனை?


சீமான் சிறையிலிருந்து விடுதலை என்ற செய்தி வெளியான அடுத்த நாளே சீமானை விடுதலை செய்வதன் மூலம் காங்கிரசை திமுக கூட்டணியில் இருந்து கழட்டிவிட வேலைகள் நடக்கிறது என்பது போன்ற முகநூல் செய்தியை வெளியிட்டார் தமிழச்சி. அதனை தொடர்ந்து அவரது வலைப்பூவில் நாளொரு கட்டுரை வீதம் நாம் தமிழர் மற்றும் சீமான் குறித்து எழுதி வருகிறார்.

நான் வலைப்பூக்கள் வாசிக்க துவங்கிய நாட்களிலேயே அறிமுகமானது தமிழச்சியின் எழுத்துக்கள். பெரியாரியத்தை பன்மடங்கு வீரியத்தோடு இணையம் பயன்படுத்தும் இன்றைய இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதில் தமிழச்சியின் பங்கு மகத்தானது என்பதை அறிவேன்.  சீமான் மீதும் நாம் தமிழர் இயக்கத்தினரிடமும் அவர் முன்வைத்த கேள்விகள் கண்டிப்பாக பதில் அளிக்கப்பட வேண்டியவை என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. விமர்சனம் என்பதையும் மீறி காழ்புணர்ச்சி என்ற நிலையை நோக்கி தமிழச்சியின் எழுத்துக்கள் சென்று கொண்டிருக்கிறதோ? என்ற சந்தேகத்தில்தான் (குறித்து கொள்ளுங்கள் சந்தேகத்தில் தான்) இந்த கட்டுரையை எழுதுகிறேன்.

கடந்தாண்டு கனடாவில் சீமான் காவல்துறையால் கைது செய்யப்பட்டபொழுது கைகளை பின்புறம் கட்டி விலங்கிட்டது கனடா காவல்துறை என்று சீமான் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். இது சாதாரண பகிர்தல்தான் இதற்குக்காரணம் இந்திய தூதரக அதிகாரிகள் என்றளவில் இருந்தது சீமானின் குற்றச்சாட்டு. உடனே தமிழச்சி தனது வலைப்பூவில் அதிரடியாக மீனகத்தில் இருந்து செவ்வி ஒன்றை ஆதாரமாக வழங்கி சீமான் ஒரு பொய்யர் செவ்வியில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்படவில்லை விசாரணைக்கே அழைத்து செல்லபடுகிறார் என்று இருக்கிறது சீமான் விலங்கிடப்பட்டதாக பொய் சொல்கிறார் பாருங்கள் என்று கட்டுரை வெளியிட்டார்.

மீனகத்திற்கு அந்த செய்தியை வழங்கியவர் நமக்கு நன்கு அறிமுகமான சே.பாக்கியராசன் என்பவரே. சே. பாக்கியராசன் உடனடியாக விளக்கமும் அளித்தார் கனடா காவல்துறை சீமானை சந்திக்கும் முன்னர் அங்கிருந்த அனைவரையும் அப்புறப்படுத்திவிட்டது மாவீரர் நாளின் பொழுது புலம்பெயர் தமிழர்களிடம் பதட்டத்தை ஏற்படுத்த வேண்டாம் என்பதற்காகவும் இது வெறும் விசாரணையே கைது நடவடிக்கை அல்ல என்ற செவ்வியை வழங்கியதாக கூறினார். செவ்வியை வழங்கியவரே விளக்கம் அளித்த பின்னரும் தமிழச்சி தனது கட்டுரை குறித்த வருத்தமோ அல்லது விளக்கமோ அளித்ததாக தெரியவில்லை.

சீமானை ஓட்டுப்பொறுக்கி என்றும் கடந்த தேர்தலில்  அதிமுகவோடு கூட்டுவைத்து ஓட்டுபொறுக்கினார் சீமான் என்றும் வலைப்பூவில் எழுதி உள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் என்ற இயக்கமே தோன்றி இருக்கவில்லை பிறகு எப்படி சீமான் கூட்டணி வைத்திருக்க முடியும் தனியாளாக கூட்டணியில் சேர்ந்து கொண்டாரா?  இயக்குனர் சங்கத்திலிருந்த எடுத்த முடிவே தவிர அது சீமானின் முடிவு அல்ல. தேர்தலுக்கு பின்னர் பொருளாதார நெருக்குதலுக்கு ஆளான பாரதிராசா ஈழ ஆதரவு போராட்டத்திலிருந்து கழட்டி கொண்டு  கருணாநிதியிடம் சரணடைந்தார்.
பெரியார்வாதிகளின் எஞ்சி நிற்கும் நம்பிக்கையான  பெரியார் திராவிடர் கழகம் கடந்த தேர்தலில் காங்கிரசை வீழ்த்த அதிமுக கூட்டணிக்கு வாக்குகள் சேகரித்தது பெரியார் திகவை ஓட்டுப்பொறுக்கி என்று தமிழச்சி இதுவரை எங்கும் கண்டித்து எழுதவில்லை அப்பொழுது தோன்றிராத நாம்தமிழர் இயக்கத்தை சாடுகிறார். பெரியார் திராவிடர் கழகத்திற்கு ஒரு நியாயம் சீமானுக்கு ஒரு நியாயமா என்ற எனது எளிமையான கேள்விக்கு தமிழச்சியிடமிருந்து பதில் கிடைக்குமா? என்று காத்திருக்கிறேன்.

பிகு : பதிவில் உள்ள புகைப்படம் ஓடும்நதி என்ற பிளாக்கில் இருந்து எடுக்கப்பட்டது.

Advertisements

§ 4 Responses to தமிழச்சி நாம்தமிழர் என்னதான் பிரச்சனை?

 • ஜோதிஜி சொல்கிறார்:

  இது நான் அறியாத செய்தி.

 • saravanan சொல்கிறார்:

  Thamilichi is a sadist. Dont give publicity to her.
  She needs publicity only.

 • Pulliraaja சொல்கிறார்:

  தமிழிச்சி சில காலங்கலுக்கு முன்னர் தமிழ்மணத்தை நாறடித்து வெளியேற்றப்பட்டவர். பெரியாரின் பல நல்ல கருத்துக்களை எல்லாம் தவிர்த்துவிட்டு இன உறுப்புக்களை கருப்பொருளாக வைத்து சுய விளம்பரம் தேடியவர். வெளிப்படையாக சொல்வதானால் அவர் ஒரு விளம்பரப் பேர்வழி. இருப்பதைக் காட்டிலும் ஏதோ அதிகமாக இருப்பதாக காட்ட நினைக்கும் மேதாவி எண்ணம் கொண்டவர்.
  என்வே உங்கள் கேள்விகளுக்கு அவரிடம் நேர்மையான பதில் இருக்காது. அவரைக் கண்டுகொள்ளாமல் விடுவதே நல்லது.

  புள்ளிராஜா

 • Jay சொல்கிறார்:

  நாம் தமிழரையோ , பெதிக வோ……
  ‘ அவன் செஞ்சா நியாயம் , நான் செஞ்சா தப்பா ‘ என்று சிறுபிள்ளைத்தனமாக கேள்வி கேட்டுக்கொண்டிருப்பது நம்மை பார்த்து நாமே எச்சில் துப்பிக் கொள்வது போல.
  பெதிக வினரின் தீராத போராட்டம் பற்றி அனைவருமே அறிவர்.
  நாம் தமிழர் அவர்களை இகழ்வது நன்றி கெட்டதனம்.
  யார்மீது தவறாக இருந்தாலும், உணர்வில் ஒன்றுபடுங்கள்.
  யாரும் வாக்குவாதத்தில் வெற்றி பெற்று ஈழம் அமைக்கப்போவதில்லை…..
  சிந்திப்பீர்….
  நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

What’s this?

You are currently reading தமிழச்சி நாம்தமிழர் என்னதான் பிரச்சனை? at தமிழன்பன் பக்கம்.

meta

%d bloggers like this: