மீண்டும் கொள்ளையடிக்க வருகிறோம் :சங்கமம்

ஜனவரி 8, 2011 § பின்னூட்டமொன்றை இடுக


 

மீண்டும்  கொள்ளையடிக்க வருகிறோம் :சங்கமம்

சங்கமம் நிகழ்வில் தமிழ் மையத்தின் பெயரை எடுத்து விடத்தயார் என்று தமிழக அரசு தெரிவித்ததை தொடந்து தமிழ் மையத்தின் பெயரை விளம்பரங்களில் இருந்து எடுத்துவிடும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சங்கமம்  என்ற பெயரலில் ஸ்பெக்ட்ரம் ஜோடியின் தொடர்கொள்ளை தமிழகத்தில் தொடர்ந்து நடேந்தேறி வருவது நாம் அனைவரும் அறிந்ததே!


கிராமிய கலைஞர்களுக்கு   மறுவாழ்வு தருகிறோம் என்ற பெயரில் கவிஞர் கனிமொழியும் தமிழ் மையம் என்ற பெயரில் வயிர்வளர்க்கும் கஸ்பாரும் இணைந்து வருடாவருடம் சங்கமம்  என்ற பெயரில் நிகழ்வுகளை நடத்தி வருகிறார்கள்.அந்நிகழ்விற்கு கனிமொழியின் தந்தையும் தமிழகமுதல்வருமான கருணாநிதி ஒரு கோடி வாரி வழங்கி இருக்கிறார் (எவன் அப்பன் வீட்டுக்காசு?)  ஸ்பெக்ட்ரம் ஊழலில் தமிழ்மையம் அலுவலகம் சோதனையிடப்பட்டத்தை தொடர்ந்து சங்கமம் குறித்து நீதிமன்றத்தின் கதவுகளை தட்டியுள்ளார் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்.  நீதிமன்றமும் ஊழல் கறைபடிந்த அமைப்பின் பெயரை சங்கமம் குறித்த விளம்பரங்களில் இருந்து நீக்கிவிடுங்கள்  என்று உத்தரவிட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம்மிற்கு  முன்பு  கஸ்பார் பத்தி யாரும் கிசுகிசுக்க கூட முடியாது. அப்படி மீறி யாரேனும் கேள்வி கேட்டால் “என்னைவிட்டால் தமிழை காக்க வேறு யாரு இருக்கா?” என்று இந்தாளு கேள்வி கேப்பாரு. போதாதுக்கு இவருக்கு நக்கீரனோட நெற்றிக்கண் பார்வை வேறு பக்கபலமாக இருந்து வந்தது. ஈழம் மவுனவலி என்ற தலைப்பில் இவர்கள் ஈழத்தமிழ் உணர்வுகளை வியாபாரம் செய்தபொழுது நான் எழுதிய ஈழம் மவுனவலியும் கருணாநிதி  முதுகுவலியும் கட்டுரை வெளிவந்தது ஈழத்தமிழ் உணர்வாளர்கள் சிலரே நம்மை கண்டித்தார்கள் “எது எப்படியோ இந்த புத்தகத்தை இனப்படுகொலையின் ஆவணமாகத்தான் நாம் பார்க்கவேண்டும்” என்று  சில நண்பர்கள் அறிவுரை கூறினார்கள் மேலும் ஈழத்தமிழர்களை இரட்சிக்க ஜெகத் கஸ்பார் ஒருவராலே முடியும் என்று ஒரு சிலநண்பர்கள் உறுதியாக நம்பினார்கள்.ஈழம் மவுனவலியை இவர்கள் ஜாக்கிவாசுதேவை  வைத்து வெளியிடவைத்தது ஈழப்போரில் உடன் இருந்தே துரோகம் செய்த கனிமொழிக்கு தளம் அமைத்து என்று அன்றே இவரின் சுயரூபம் புரிந்துவிட்டது. இதில் கனிமொழியில்  ஈழம் மவுனவலியில் ரவுத்திரம் பழகாத என்னை மன்னித்து விடுங்கள் என்று நீலிகண்ணீர்  வடித்திருந்தார். ஈழத்தை வைத்து இவர்கள் செய்த வியாபாரம் ஈழத்தமிழ் ஆதரவாளர்களுக்கு சிறிது புரிந்துவிட கூட்டம் கலைந்துவிட்டது இன்னும் தொட்டு தொடர்கிறது சங்கமம் தொடர் கொள்ளைகள்.

திரைப்படங்கள் தொலைக்காட்சித்துறை போன்றவற்றின் தாக்கத்தால் வழக்கொழிந்துவரும் கலைகளையும் கலைஞர்களையும் மீட்டெடுக்கும் முயற்சி என்ற பெயரில் சங்கமம் துவக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் இருக்கும் கலைஞர்களை  சென்னை அழைத்து வந்து மக்கள் அதிகமாகக்கூடும் பூங்காக்கள் அரங்கங்கள் போன்றவற்றில் நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதுதான் சங்கமம் நிகழ்வு. இந்த நிகழ்வினை ஒருங்கிணைப்பது ஜெகத் கஸ்பாரின் சங்கமம் தமிழக அரசின் ஒருகோடியோடு பிற விளம்பரதாரர்களும் உண்டு.  கிராமியக்கலைஞர்கள் இதன் மூலம் ஒரு மாதத்திற்கு தேவையான வாழ்வாதாரத்தை பெறலாம்.

இந்நிகழ்வில் முறைகேடுகள் நடப்பதற்கு எக்கச்சக்கமான வாய்ப்புகள் இருந்தாலும் அதையெல்லாம் பற்றி முதல்வருக்கு கவலை இல்லை வழக்கம் போல என் வீட்டு பிள்ளைகள் என்னைக்கும் பொய் சொல்லாது என்கிற மனநிலையிலேயே இருக்கிறார். சில நண்பர்கள் நலிவடைந்த கிராமிய கலைஞர்கள் வாழ்வை கெடுக்கலாமா? என்று கேட்கிறார்கள். இந்நிகழ்வினால் வருடத்திற்கு ஒருமுறை மாத்திரமே அவர்களுக்கு வருமானம் வருகிறது எஞ்சிய நாட்களில் அவர்கள் வருமையுடந்தான் கழிக்கிறார்கள். இவர்களுக்கு வழங்கப்படும் தொகை சரியாக சென்று சேர்கிறதா? என்று சோதிப்பவர் யார்?

உண்மையிலேயே கிராமியக்கலைகளை பாதுகாப்பது அரசின் நோக்கம் என்றால் தமிழ அரசின் சுற்றுலாத்துறையின் மூலம் வருடம் முழுவதும் கலைஞர்களுக்கு  வருவாய் வருவது மாதிரி மாவட்டங்கள் தோறும் நிகழ்வுகளை ஒருங்கிணைக்கலாம். வருடம் முழுவதும் கிராமிய கலைகள் நடந்தேற மாவட்டங்கள் தோறும் அரங்குகள் அமைத்து, கிராமியக்கலைகளில் இன்றைய தேதிக்கு தேவையான மாற்றங்களை புகுத்தி மக்கள் இரசிக்கும் படி மாற்றிகாட்டலாம் . கலைஞர்களை  மாத்திரமல்ல நமது பண்டைய கலைகளையும் காத்திட இது உதவும். இந்நிகழ்வை அரசே முன்னின்று நடத்தலாம் தமிழ்மையம்  போன்ற இடைத்தரகர்கள் எதற்கு?அரசு கிராமியக்கலைஞர்களின்  மீது உண்மையில் அக்கறையிருந்தால் அரசே தலையிட்டு கலைஞர்கள்  வாழ்வில் விளக்கேற்றலாம் அல்லது எங்களுக்கு கமிசன்தான் முக்கியம் என்றால் தமிழ் மையம் போன்ற ஊழல் பேர்வழிகளின் கையில் ஒப்படைத்து கிராமியக்கலை என்ற ஒன்றை தமிழகத்தில் இல்லாமல் துடைத்தெடுக்கலாம் .

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

What’s this?

You are currently reading மீண்டும் கொள்ளையடிக்க வருகிறோம் :சங்கமம் at தமிழன்பன் பக்கம்.

meta

%d bloggers like this: