மீனவர் படுகொலை இறையாண்மை என்ன செய்யும்?
ஜனவரி 23, 2011 § 2 பின்னூட்டங்கள்
மீனவர்கள் என்ன பாவம் செய்தார்கள் தமிழர்களாய் பிறந்ததை தவிர?
“இலங்கை கடற்படை, ஊனமுற்ற தமிழக மீனவர் ஒருவரை கொடூரமாக படுகொலை செய்துள்ளது ” என்ற செய்தியை படித்த திமுக நண்பர் ஒருவருக்கு மிகவும் கடுமையான கோவம் வந்திடுச்சு குருதி கொதிக்க என்னிடம் கேட்டார் ” என்னங்க இதெல்லாம் எத்தனைமுறை சொல்வது? ஊனமுற்ற மீனவர் படுகொலை என்றா சொல்றது? மாற்றுதிறனாளி என்றல்லவா சொல்ல வேண்டும். எத்தனை முறை சொன்னாலும் இவனுகளுக்கு புரியமாட்டேங்குது” என்று அலுத்து கொண்டார். ஆமா, அவரு சொல்றதும் நியாயம்தானே?
கடந்த வாரம் பாண்டியன் கொல்லப்பட்டார் தமிழக அரசு ஐந்து லட்சம் நிவாரணத்தொகையாக வழங்கியுள்ளது கடிதம் எழுதியது கண்டனம் என்றது இப்போதும் அப்படியே. இதற்கு முன்னர் இந்தியகடற்படை தளபதி ஏதோ திட்டம் வைத்திருப்பதாகவும் அதன்மூலம் இந்த படுகொலைகளை மன்னிக்க விபத்துக்களை தடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார் அதை நாமும் படித்தோம் சொரணையோடு எந்த பத்திரிக்கையாளனும் இதைத்தானய்யா இத்தன நாளும் சொல்லுறீங்கன்னு கேக்கல. மீண்டும் ஒரு மீனவன் ஜெயக்குமார் கொல்லப்பட்டதால் பிரணாப் இது தப்பு தடுத்து நிறுத்துவோம் என்று மழுப்பி இருக்கிறார். அப்பவும் இந்த பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்கவில்லை. இதில் இலங்கை அரசு மீனவர்களை நாங்கள் கொல்லவில்லை என்று செய்தி கொடுத்தாலும் சொரணை இல்லாமல் ஒளிபரப்ப சில நாய்கள் மன்னிக்க சில நல்லவர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.
சரி இலங்கையில் தமிழர்கள் கொலை செய்யப்பட்ட பொழுது சில உதவாக்கறைகள் மன்னிக்க.. சில உடன்பிறப்புகள் அவிங்க ராஜிவை கொன்னாய்ங்க அனுபவிக்கிராய்ங்கன்னு சொன்னார்கள். மீனவர்கள் என்ன பாவம் செய்தார்கள் தமிழர்களாய் பிறந்ததை தவிர? சிங்கள இனவெறியை பவுத்த நெறி என்றும் தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்றும் இந்து ராம் போன்ற அல்லக்கைகள் எழுதி கொண்டிருக்கின்றன.
இதில் நீங்கள் கருத்து சொன்னால் இந்திய இறையாண்மை இடையில் வரும். இதே போல் ஒரு மீனவனின் படுகொலையின் பொழுது எங்கள் மீனவனை அடித்தால் உங்கள் மாணவனை அடிப்பேன் என்று பேசிய சீமானை இந்திய இறையாண்மை ஆறு மாதங்கள் சிறையில் தள்ளியது. வெறும் வார்த்தைக்கு ஆறுமாதம் சிறை ஆனால் அதற்கு பின்னால் இரண்டு கொலைகள் நடந்தும் வழக்கு போடாத இந்திய இறையாண்மை. ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு உதவ முடியாது என்று பெரியார் சொன்னது சரிதானே? ஆனால் பெரியார் இறை குறித்தும் ஆண்மை குறித்தும் என்ன சொன்னார் ?…. அது சரி பெரியாரிடம் நமக்கு எது தேவையோ அதை மாத்திரம் எடுத்து கொள்ள வேண்டும். வெங்காயம் விலை ஏற்றமா? பெரியாரிடம் கேள் என்றது போல.
அப்படியே இந்திய குடியரசுதினம் வருகிறது அப்பொன்நாளில் இந்திய கொடிக்கு ஒரு வணக்கம் வைத்து இந்தியர் அனைவரையும் எனது உடன்பிறப்பாக நினைக்கிறேன் என்று சபதம் எடுத்து கொள்ளுங்கள். அதனை தொடர்ந்து சொரணையற்ற தமிழர்களுக்கு சொரணை வரவேண்டும் என்று தற்கொடை தந்த முத்துகுமரன் நினைவுநாள் வருகிறது அந்நாளில் முத்த்துகுமரன் பத்திய செய்திகள் நம் செவிகளை அடைந்துவிட முடியாதபடி டாஸ்மார்க்கில் கட்டிங் விட்டு மனதை சாந்தப்படுத்தி கொள்ளுங்கள். அல்லது சாரு நிவேதிதாவின் குபபிகொடுத்தல் படித்து ஆறுதல் கொள்ளுங்கள். சொரணை இந்திய இறையாண்மைக்கு எதிரானது.
சொரணை இந்திய இறையாண்மைக்கு எதிரானது…….
இதற்கான பதில் வினவு தளத்தில் வந்துள்ளது நண்பா. இது போன்ற நிகழ்வுகளை வெறும் செய்தியாக படித்து விட்டு நகர முடியவில்லை. மன உளைச்சல் அதிகமாகி விடுகின்றது.
எங்கே செல்லும் இந்த பாதை?