எஸ்வி சேகர் என்னும் பப்ளிசிட்டி பைத்தியம்!

ஜனவரி 28, 2011 § 8 பின்னூட்டங்கள்


எஸ்வி சேகர் என்னும் பப்ளிசிட்டி பைத்தியம்!

இப்போதெல்லாம் எங்கெங்கே ஈழத்தமிழர் படுகொலை, போர்குற்றம், மீனவர் படுகொலை என்று பேசுகிறோமோ அங்கெல்லாம் குழப்பம் விளைவிக்கவே ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருக்கிறது. வலைப்பூக்களாகட்டும் முகநூல் ஆர்குட் என்று அனைத்து இடங்களிலும் சிங்களப்பேரினவாதம் குறித்து ஏதும் விவாதம் நடந்துவிடாதபடி ஒட்டுக்குழுக்களின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.  இந்த ஒட்டுக்குழுக்களை விட ஒரு ஒட்டுண்ணி இந்திய தேசியகொடியை சட்டையில் குத்திக்கொண்டு ஊடகங்களில் செய்யும் அலும்பு சொல்லிமாளாதது.

இந்த பைத்தியம்தான் அடுத்த எம்ஆர் ராதாவென்று செம்மொழி கொன்றானே கூறிவிட்டார் என்றால் பார்த்து கொள்ளுங்கள். விஜய் தொலைக்காட்சி நடத்தும் “நடந்தது என்ன?” என்ற நிகழ்ச்சியில் சில நாட்களுக்கு முன்னாள் திருவாளர் எஸ்வி சேகர் தனது தகப்பனாரின் ஜீவ ஆத்மாவோடு தினந்தோறும் நடத்தும் விவாதம் குறித்து உளறியது. இதைவேறு ஆவியுலத்தோடு நேரடி தொடர்பில் இருக்கும் பிரபலங்கள் என்று எஸ்வி சேகர் அவிழ்த்துவிட்ட கட்டுக்கதைகளை புலனாய்வு என்று பீத்தி கொண்டது விஜய் தொலைக்காட்சி. சங்கரராமன் கொலைவழக்கில் சிக்கிய பெரியவாள் என்னும் பொறுக்கிக்கு தொடர்ச்சியாக சொம்பு தூக்கி கொண்டு திரிபவர்தான் இந்த எஸ்வி சேகர். ஏற்கனவே ஞானி பேசுகிறேன் நிகழ்வில் ஞானி என்னும் முற்போக்கு நரியும் பிற்போக்கு சேகரும் கலந்துகட்டி அடித்த கூத்தை ஏற்கனவே எழுதியிருந்தேன்.இப்பொழுது நான் சொல்ல வரும் நிகழ்வு வின் தொலைக்காட்சியில் நீதியின் குரல் என்னும் நிகழ்வில் கொழுப்பெடுத்து பேசிய நிகழ்வு குறித்தது.தொடர்ச்சியாக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவது குறித்தும் சிங்கள இனவெறியன் ராசபக்சேவின் அமெரிக்க பயணம் குறித்தும் நீதியின் குரலில் விவாதம் சென்று கொண்டு இருந்தது சில நேயர்கள் தொடர்பு கொண்டு மோடிக்கு விசா வழங்காத அமெரிக்கா அதேபோன்று இனப்படுகொலை செய்த  ராசபக்சேவை எப்படி அனுமதித்தது என்பது போன்று கருத்துக்களை பகிர்ந்து கொண்டு  இருந்தனர் திடீரென்று நிகழ்வில் புகுந்த எஸ்விசேகர் என்னும் புண்ணிய ஆத்மா வழமையாக தனது வன்மத்தையும் வாய்கொழுப்பையும் காட்டத்துவங்கியது.

“ஐநூறுக்கும் மேலான மீனவர்களை சிங்கள கப்பல்படை சுட்டு கொலை செய்தபொழுது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத இந்திய அரசை குற்றம் சொல்லுவீர்களா?” என்ற எளிமையான கேள்விக்கு இந்த பைத்தியம் அளித்த பதில் ” நான் கண்டிப்பேங்க, ஒருத்தன் சாலை ஓரம் சிறுநீர் கழித்தாலே நான் அரசை குறை சொல்லுவேன் ஏனென்றால் அரசுதானே கழிப்பிடம் கட்டி கொடுக்க வேண்டும்?”  மீனவர் படுகொலையும்  சாலையோர கழிப்பறை பிரச்சனையும் ஒன்றாம். “தமிழக மீனவர்கள் குறித்து அக்கறை செலுத்தாத இந்திய அரசை கண்டித்து நாம் ஏன் குடியரசு தினத்தை புறக்கணிக்க கூடாது?” என்ற கேள்விக்கு இந்த லூசு சொன்ன பதில் “குளத்தை கோவித்தால் ——- க்குத்தான் நட்டம்”. என்ன திமிர்?

நீதியின் குரல் நிகழ்ச்சிக்கு இந்த பைத்தியத்தை யார் அழைத்தது என்று தெரியவில்லை. தமிழர் வீட்டில் இழவு விழுந்தாலும் சட்டை பையில் கொடியை குத்திக்கொண்டு இது போன்ற பப்ளிசிட்டி பைத்தியங்கள் செய்யும் சேட்டைகளை கவனியுங்கள்.  எவனும் தமிழன் குறித்து பேசவே கூடாது என்று முடிவெடுத்து எங்கே ஏதேனும் விவாதம் நிகழ்ந்தாலும் அதை குழப்பவே இப்படி ஒரு கூட்டம் அலைகிறது . இன மானத்தலைவர்களும் தமிழினத்தலைவர் தமிழர் தலைவரென்று இத்தனைபேர் இருந்தும் மீனவர் படுகொலையின் பொழுது இப்படி கொழுப்பெடுத்து இவர்கள் பேசுவதும் இது போன்ற மனநோயாளிகளை அரவணைக்க நமது திராவிட தலைவர்கள் ஓடோடி வருவதும் வேதனையிலும் வேதனை.

Advertisements

§ 8 Responses to எஸ்வி சேகர் என்னும் பப்ளிசிட்டி பைத்தியம்!

 • வெற்றிவேல்குமார் சொல்கிறார்:

  நம்மை போன்றவர்கள் இணைந்து இது போன்ற பைத்தியங்களை
  நாடு கடத்த சொல்லி விடூவோம், என்று பயந்து தான் தன்
  சட்டை பையில் கொடியை குத்திக்கொண்டு அலைகின்றன என்று நான் நினைக்கின்றேன்.

 • natramizhan சொல்கிறார்:

  த‌மிழ‌ன்ப‌ன், இவனுக்கெல்லாம் பைத்திய‌ம் என்ற வார்த்தையை ப‌ய‌ன்ப‌டுத்த வேண்டாமே. சிற‌ப்பு ம‌ன‌ ந‌ல‌ம் கொண்ட‌வ‌ர்க‌ள் என்று நாம் அவ‌ர்க‌ளை அழைத்துக் கொண்டிருக்கும் போது, இவனையும் அந்த வார்த்தைப் ப‌குப்பில் சேர்த்துக் கொள்வ‌து ச‌ரியாக‌ இருக்காது என்ப‌து என் க‌ருத்து. வேண்டுமென்றால் இவ‌னை நீங்க‌ள் ப‌ப்ளிசிட்டி பிசாசுக‌ள், அல்ல‌து தூய‌ த‌மிழில் வேண்டுமென்றால் விள‌ம்ப‌ர‌ப் பேய்க‌ள் என்று அழைத்துக் கொள்ளுங்க‌ள். ம‌ற்ற‌ப‌டி உங்க‌ள‌து க‌ருத்துக‌ளில் நான் ஒத்துப் போகின்றேன்.

  ந‌ட்புட‌ன்.
  ப‌.ந‌ற்ற‌மிழ‌ன்.

 • raj சொல்கிறார்:

  ithula muta kan chovaiyum sethukinga

 • படைப்பாளி சொல்கிறார்:

  தமிழனின் ஒற்றுமையின்மையே இந்த கொழுப்பெடுத்த நாய்களை இவ்வாறு பேச வைக்கிறது.என்ன பேசினாலும் ஆதரிக்கவும்,அரவணைக்கவும் துரோக கருணாக்கள் உள்ளே இருக்கிறார்கள் என்கிற தைரியம்தான்.

 • Nithil சொல்கிறார்:

  எம் ஆர் ராதாவின் கால் தூசுக்கு சமானம் இல்லாத இதப் போய் ராதாவின் வாரிசுன்னு கருணா கூறியத நினைச்சா எரியுதுங்க. பெரியாரின் போர்வாளாக செயல்பட்டவர் ராதா. இதுவோ பெரியவாளுக்கு!!! சொம்பு தூக்கிற காரியவாதி.

 • M.S.Vasan சொல்கிறார்:

  மீன‌வ‌ர் சாவுக‌ளால், ச‌முதாய‌மே கொதி நிலையிருப்ப‌தைக் குளிர்விக்க‌ இர‌ட்டைம‌லை சீனிவாச‌னுக்கு 151வது பிற‌ந்த‌தின‌ விழா வ‌ரும் 13ஆம் தேதி கொண்டாட‌ அர‌சு வருகிற‌து.
  மீன‌வ‌ச‌முதாய‌மே வாருங்க‌ள். த‌லைவ‌னைப் பார‌ட்ட‌ புதிய‌ எழுச்சியோடு க‌ட‌ல் அலையென கூடுங்க‌ள்.

 • துளிர் சொல்கிறார்:

  உங்கள் உணர்வு உண்மையானது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

What’s this?

You are currently reading எஸ்வி சேகர் என்னும் பப்ளிசிட்டி பைத்தியம்! at தமிழன்பன் பக்கம்.

meta

%d bloggers like this: