சீமானை நம்பி ஏமாந்த தோழர்களுக்கு ஒரு நல்வாய்ப்பு!
ஜனவரி 31, 2011 § 9 பின்னூட்டங்கள்
சீமானை நம்பி ஏமாந்த தோழர்களுக்கு ஒரு நல்வாய்ப்பு!
சீமான் வைகோவை சந்தித்து வரும் சட்டமன்றத்தேர்தலில் காங்கிரசை வீழ்த்த அதிமுக கூட்டணியை ஆதரிப்பது என்ற முடிவினை வெளியிட்டமை கண்டு ஒட்டுமொத்த பதிவுலகமும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது. சீமானின் இந்த முடிவினை தோழர்கள் பலர் கிழித்து தொங்கப்போட்டு இருக்கிறார்கள்.நாம் பெரிதும் மதிக்கும் தாமரை அவர்கள் சீமானுக்கு எழுதிய கடிதம்தான் இப்பொழுது எங்கெங்கும் விவாத பொருளாகி இருக்கிறது. சீமானை கண்டித்து, நக்கலடித்து ஆளுக்கொரு பதிவுபோட்டு அனைவரும் பரபரப்பு கிளப்பி கொண்டிருக்கிறார்கள். எனக்கு அதிமுக என்றாலே எப்போதும் கசப்புதான். சீமானுக்கு நான் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று நீங்கள் கேப்பீர்களேயானால் அவர் தமிழகமீனவனை அடித்தால் நான் மாணவனை அடிப்பேன் என்று சொன்ன பெருங்குற்றத்திற்காக !? ஆறுமாதம் சிறையில் இருந்த பொழுது அரசை கண்டித்து ஒரு பதிவு போடாத நான் இப்பொழுது மட்டும் பதிவு போடுகிறேன் என்றால் நாடு நம்மை தூற்றாதா என்றுதான்.
ஒருலட்ச்சத்திற்க்கும் மேலான ஈழத்தமிழர்களை கொன்றழித்த சிங்களப்பேரினவாதிகளுக்கு அனைத்துவகைகளிலும் உதவிகள் செய்து தமிழினத்தை கருவறுத்த காங்கிரசை தோற்கடிக்க வேண்டும் என்ற நமது லட்சியத்தை நிறைவேற்ற ஒரு அரியவாய்ப்பு.வரும் சட்டமன்றத்தேர்தலில் காங்கிரசை தோற்கடிக்க காங்கிரசு போட்டியிடும் தொகுதி தோறும் காங்கிரசிற்கு ஓட்டு போடாதே ( அதிமுகவிற்கு வாக்களி என்றல்ல! ) என்று பரப்புரை செய்ய இருக்கிறோம். சீமானை நம்பி ஏமாந்த தோழர்கள் தொடர்பு கொள்ளவும். சீமானின் முடிவு தவறானது என்று கருதும் தோழர்கள் எம்மோடு இணைந்து பரப்புரை செய்வீர்கள் என்று நம்புகிறேன்.விரைந்து அணிதிரளுங்கள் தோழர்களே!
கடந்த பாராளுமன்ற தேர்தலில் சிவகங்கையில் போட்டியிட்ட “ராஜீவ் காந்தி” காங்கிரசை தோற்கடி என்று பரப்புரை செய்வதற்கான அனுமதிகளை பெற்று தந்தார். ஆனால் இம்முறை அவர் நாம் தமிழர் இயக்கத்தில் இருப்பதால் அவர் காங்கிரசை தோற்கடி என்றும் அதனை எதிர்த்து நிற்கும் அதிமுக, மதிமுக, கம்யுனிஸ்ட், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களி என்றும் பரப்புரை செய்வார் என்று தெரிகிறது. காங்கிரசு நிற்காத தொகுதிகளில் நாம் தமிழர் பரப்புரை செய்யப்போவதில்லை என்றும் தகவல்கள் வருகின்றன.
கடந்த பாராளுமன்றத்தேர்தலில் சிவகங்கையில் காங்கிரசை தோற்கடி என்று பரப்புரை செய்த தோழர்களோடு இணைந்து பணியாற்றிய அனுபவம் இருப்பதால் உங்களுக்கு இந்த அழைப்பை அனுப்புகிறேன். ஒருவேளை நீங்கள் மாற்றுத்திட்டம் வைத்திருந்தாலும் அதனை தெரிவிக்கவும். நாம் தமிழர் காங்கிரசை தோற்கடி அதிமுக கூட்டணிக்கு வாக்களி என்று பரப்புரை செய்யும் நேரத்தில் கொள்கை பிடிப்புள்ள தோழர்கள் காங்கிரசிற்கு வாக்களிக்காதே வேறு யாருக்கு வேணும்னாலும் வாக்களி என்று பரப்புரை செய்வோம் வாருங்கள்.
தமிழ் பேசுகிறார்கள் என்ற காரணத்தினாலே ஒரு லட்சத்து ஐம்பதாயித்திற்கும் மேலான தமிழர்கள் புதைகுழிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழகமீனவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கதையாகி வருகிறது. காங்கிரசு எந்தக்காலத்திலும் தமிழனுக்கு நன்மை செய்யாது என்பதை நாம் அனைவரும் அறிவோம். திராவிடகட்சிகளும் நீர்த்து போய் காங்கிரசிற்கு காவடி தூக்கிக்கொண்டு இருக்கின்றன. அனைவரும் சந்தர்ப்பவாதிகளாகி போனமையால். இணையத்தில் எழுதும் நீங்கள் கைகொடுத்தாலன்றி தமிழின விரோதிகளை ஒழிக்க வழியேதும் இல்லை என்பதே உண்மை. தேர்தல் நெருங்கி வருவதால் உடனடியாக பதில் அனுப்புங்கள் உங்கள் பயண அனுபவங்களை பின்னர் நிதானமாக பதிவிட்டு கொள்ளலாம் ஹிட்சிற்கு நான் பொறுப்பு.
உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்……..!
அருமையான, அவசியமான பதிவு தோழர்.
பார்ப்போம் எத்தனை இணைய போராளிகள் அணி திரள்கிறார்கள் என ;))
சரியான நேரத்தில்,தெளிவான பதிவு..
தமிழ்நாட்டில் காங்கிரசை அழிக்க ஒவ்வொரு தமிழனும் சபதம் ஏற்போம்!
சீமானை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்ற போக்கு சமீபகாலத்தில் உருவாகியுள்ளது. இது தமிழர்களிடையே உள்ள பலவீனம். சீமானுக்கு உள்ள நெருக்கடி (தமிழக அரசியல் சார்ந்தது அல்ல) உணர்ந்து கொண்டு அவரோடு பணியாற்ற முன்வாருங்கள்! கண்தெரியாதவர் யானையை பிடித்துப்பார்த்த கதையாக அவரின் செயல்தி்ட்டங்களை விமர்சிக்க வேண்டாம்.
It is not good to split the anti-congress vote. If naam-tamilar plans to call for anti congress compaign only in the places where congress places its candidate and asks to vote for ADMK front (not just ADMK. It will involve MDMK , COMMUNIST etc. also) I think we should accept it. Please consider this.. our enemy is congress.. we cant let it to win another election. Its not a wrong decision from seeman to do that.
நண்பர். தமிழன்பனுக்கு,
உங்களுக்கு முன்னரே இது போல் எல்லாம் அறிக்கை விட்டு, பெங்களூரில் நாமும், நம் நண்பர்களும் நடத்திய(எந்த வித கட்சி ஆட்களையும் அழைக்காமல்) கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கும், கருத்தரங்களுக்கும் இணைய நண்பர்கள் வருவார்கள், அரங்கு நிறைந்து வழியும் என்று கருதி, பெரிய அரங்குகளாக பார்த்து நிகழ்வுகளை நடத்தி நொந்து போய், வெந்து போய் இருக்கும் எனது கணிப்பு. ஏதாவது ஒருவர் இந்த கட்டுரைக்கு பதிலளித்து உங்களுடன் பிரச்சாரத்திற்கு வந்தால் அதுவே மிகப்பெரியதாகும்.
அப்படி யாரும் உங்களுக்கு பதிலளிக்கவில்லை என்றால் வருத்தப்படவே வேண்டாம். சிதம்பரத்தை எதிர்த்து சிவகங்கைக்கு சென்றதை போல நாம் இருவராவது செல்வோம்…
அன்புமிக்க தமிழன்பன்.. சென்ற பாராளுமன்ற தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் மணிசங்கரய்யருக்கு எதிராக பிரச்சாரம் செய்ய நண்பர்களோடு சென்றிருந்தேன். இம்முறையும் அவ்விதமாக செல்லவே இருக்கிறேன். உங்களுடன் என் கரங்களையும் இணைத்துகொள்கிறேன்.
சரியான பதிவு, தமிழின துரோகி காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டை விட்டே விரட்டி அடிப்போம் ….. congress means corruption…..
Enadhu ratham angey sithariya podhu ingey soniyavuku munthanai piditha karunanithikum, Kodura ennam konda congresskum sariyana pathiladi kodukka tholarkaley ondrinaivom…. Urakka Mulakamiduvom! Eela tamilkalai nammal kappatrathan mudiyavillai… Aanaal nammidam Oottu engira asthiram irrukirathu.. Tholarkaley congressku intha therthalil mattumalla vara pogum atthanai therthalilkalum kodura savukadi kodhu veelthuvom…!
நல்ல முயற்சி நண்பா!!!!!! நானும் உங்களுடன் இணைய நினைக்கிறேன்,இணைத்துக்கொள்வீர்களா?