நீ இன்னும் வளரும் வல்லரசுதாண்டா சொல்றத கேளு
செப்ரெம்பர் 16, 2011 § 1 பின்னூட்டம்
டுவிட்டரில் கூடங்குளம்
இந்திய அணு உலைகள் பாதுகாப்பானது என்கிறார் மன்மோகன். அவர் எப்பவும் இப்படித்தான் ஆரம்பிப்பார். #koodankulam
உங்கள் கழிவுகளை எல்லாம் கொட்டுவதற்கு
கடல் ஒன்றும் குப்பை தொட்டில் அல்ல மீனவனுக்கு அதுதான் வாழ்வாதாரம் #koodankulam
அணு கழிவுகளை உங்கள் வாழ்விடத்தில் கொண்டுவந்து கொட்டினாலும் அணு உலையை ஆதரிக்கும் நல்லவர்களா நீங்கள் #koodankulam
நாளை டுவிட்ட மின்சாரம் தேவையே என்று பல டுவிட்டர்கள் தயங்குகிறார்கள் # உங்க நேர்மை பிடிச்சிருக்கு டுவிட்டர்களே #koodankulam
நாளைக்கு அணு உலை வெடிச்சா நாலு மாவட்டம் காணாம போயிடும் .நமக்கு ஒவ்வொரு தமிழனும் தேவை மச்சி #koodankulam
கூடங்குளம் போராட்டம் இன்று நேற்று முளைத்த போராட்டம் அல்ல. நீண்ட நெடிய போராட்டத்தின் தொடர்ச்சியே நாம் காண்பது. #koodankulam
கச்சதீவாகட்டும் கூடங்குளமாகட்டும் மக்களிடம் கருத்து கேட்டா எதையும் முடிவு பண்ணுறானுங்க.பலியாட்டை கேட்டா பலி கொடுக்குரானுங்க #koodankulam
காங்கிரஸ் கழுகு தமிழகத்தை தொடர்ந்துசுற்றுகிறது
எங்காவது தமிழனின் பிணம் கிடைக்குமா? என்று #koodankulam
எவன கேட்டுடா ஒப்பந்தம் போட்டீங்க? தமிழன் என்ன எடுப்பார் கைப்பிள்ளையா? #koodangkulam
விவாசாயிகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டுத்தான் உங்கள் வசதிவாய்ப்பை பெருக்கிகொள்ள வேண்டுமா? #koodangkulam
உள்துறை எச்சரிக்க தவறிவிட்டது என்று மன்மோகன் மீண்டும் வாசிப்பார் அதைகேட்க தமிழன் எவனும் உயிரோடு இருப்பானா என்பதுதான் கேள்வி #koodangkulam
தயவு செய்து எங்கள் பிணங்களுக்கு கற்று கொடுங்கள் நீங்கள் வழங்கும் இழப்பீடுகளை பெற்று கொள்வது எப்படி என்று. #koodangkulam
எங்கள் வாழ்வாதரங்களை பழி கொடுத்துவிட்டு நீங்கள் தரும் இழப்பீடுகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது? #koodangkulam
ரசிய தொழில் நுட்பமோ அமெரிக்க தொழில் நுட்பமோ போகப்போவது தமிழன் உயிர் என்பதால் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்துவோம் #koodangkulam
ஆமா எங்கள் மீனவர் போராட்டம் எதனால் கண்டுகொள்ளப்படவில்லை அவர்கள் காந்தி குல்லா அணியாததாலா? இல்லை IIT யில் படிக்கததாலா? #koodankulam
இங்கு ஒரு பிரச்சனை என்றால் நீங்க இத்தாலிக்கு போயிடலாம் எங்கள் வாழ்வும் சாவும் இங்குதான் என்பதால் எதிர்க்கிறோம் #koodankulam
இத்தாலியில் இருந்து தலைவியை இறக்குமதி செய்தது போல வெளிநாட்டிலிருந்து மின்சாரம் கொண்டு வா காங்கிரஸ்காரனே! #koodankulam
தெரியாமத்தான் கேட்கிறேன் இந்தியா என்ன ஜப்பானை விட அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? # கடைய மூடுடா #koodankulam
அன்று தனுஷ்கோடியை கடல் தின்றது எஞ்சி நிற்கும் தமிழகத்தை அணு தின்ன அனுமதியோம் #koodankulam
பரமக்குடியில் ஏழு தமிழர்கள் பிணத்திற்கு அழுது கொண்டிருக்கிறோம் ஏழுகோடி தமிழருக்கும் சமாதி ரெடியாகிறது அணு உலை என்ற பெயரில் #koodankulam
அணு உலை வெடித்தாலும் எனக்கு தெரியாது என்று எளிதாக சொல்லக்கூடிய மண்மோகன் ஆட்சியில் எதுவும் நடக்கலாம் விழித்திடு தமிழகமே #koodankulam
அணு உலை பாதுகாப்பானது என்றால் ஒவ்வொரு அமைச்சர் வீட்டருகிலும் அணு உலை அமை. #koodankulam
நிலத்தடி நீரை உறிஞ்சி விவாசாயிக்கு ஆப்பு. அணு கழிவுகளை கடலில் கொட்டி மீனவனுக்கும் ஆப்பு. சிந்திப்போம் தமிழர்களே #koodankulam
வல்லரசுகளே அணு உலைகளால் அல்லாடுகின்றன நீ இன்னும் வளரும் வல்லரசுதாண்டா சொல்றத கேளு #Koodankulam
இழவு வீடுகளில் சங்கு ஊதுவார்கள் கூடங்குளம் அணு உலையில் சங்கு ஊதத்துவங்கினால் தமிழகமே இழவு வீடாகும். #Koodankulam
இவனுக தரப்போகும் 500 டாலர் இழப்பீடு எப்படி திருப்பதரும் அவர்களின் வாழ்வையும் வாழ்வாதரத்தையும் #Koodankulam
தமிழகத்தின் தலைமாட்டில் உக்கார்ந்து சங்கூத காத்திருக்கும் அணு அரக்கனை துரத்தி அடிப்போம் #Koodankulam
இன்று மீனவன்தானே பாதிக்கப்படுகிறான் என்று அமைதியாக இருந்தால் நாளை அது நமது தலைமுறையையும் பாதிக்கும் ஆகவே குரல்கொடுப்போம் #koodankulam
போபாலில் நடந்தது தமிழ்நாட்டிலும் நடந்திடாமல் தடுக்க குரல் கொடுப்பீர் அணு உலைக்கு எதிராக #koodankulam
‘தம்பி மன்மோகனு, ஒழுங்கா போய்டு, இல்லைனா தீக்குச்சியை கிளிச்சி அணு உலை மேல போட்டுடுவேன்னு’ அணு உலையை காரணம் காட்டியே நாளைக்கு சிங்களன்-சீனா கூட்டணி இந்தியாவை சுளுக்கெடுப்பானே. அப்போ என்ன செய்வார் இந்த பிரதமர்? வழக்கம் போல எனக்கு ஒன்றும் ‘தெரியாது’ என்று தப்பித்துகொள்வாரா? கேரளா வேண்டாம் என்று தூக்கி எறிந்த ஒரு உலையை, தமிழ்நாட்டில் கொண்டாந்து கவுக்கமா வக்கிறியே…. தமிழன் நெத்தியில் ‘கெக் கேணயன்னு’ எழுதியிருக்கா?