சிங்கள பேரினவாதத்தின் கோரமுகத்தை துகிலுரிக்கும் அடுத்தகட்ட நகர்வு!

ஜூன் 30, 2011 § 1 பின்னூட்டம்

சிங்கள பேரினவாதத்தின் கோரமுகத்தை துகிலுரிக்கும் அடுத்தகட்ட நகர்வு!

பெங்களூரில் ஜூலை 2 இல் சிங்களப்பேரினவாதத்தின் இனப்படுகொலை குறித்த செய்திகளை விளக்கும் பொருட்டு மனித உரிமை அமைப்புகள் மற்றும் இடதுசாரி அமைப்புகளின் கூட்டமைப்பினால் நிகழ்வு ஒன்று ஒருங்கிணைக்கப்படுகிறது. சேனல்-4 வெளியிட்ட இனப்படுகொலை குறித்த ஆவணங்களை திரையிடல் மூலம் மனித உரிமை அமைப்புகளின் கவனத்தை இலங்கை அரசின் இனப்படுகொலை நோக்கி திருப்புவது இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.

Save-tamils தோழர்களின் பல்வேறு முயற்சிகளின் பலனாக இலங்கை அரசின் இனபடுகொலைகளுக்கு எதிரான அமைப்பொன்றை இந்தியாவில் வசிக்கும் பல்வேறு தேசிய இனங்களின் பிரதிநிதிகளின் பங்களிப்போடு உருவாக்கி இருக்கிறார்கள். தமிழர்களிடையே மாத்திரம் விவாதிக்கப்பட்டு வந்த இலங்கை அரசின் இனவெறி இந்தியாவில் வசிக்கும் பிற  தேசிய இனங்களின் செவிகளில் ஒலிக்க இந்நிகழ்வு ஒரு துவக்க புள்ளியாக இருக்கும் என்று நம்புகிறேன். பெங்களூர் வாழ் தோழர்கள் இந்த செய்தியை பரவலாக்குவதோடு இந்நிகழ்வில் கலந்து கொண்டு இந்நிகழ்வை வெற்றிகரமாக்கிட வேண்டிக்கொள்கிறேன், அது நமது கடமையும் கூட! .

Advertisements

இங்கு குருவிகள் கூடி கத்துகிறோம் கொலைகார கழுகளின் தூக்கம் கெடுக்க டிவிட்டரில் #tnfisherman

பிப்ரவரி 2, 2011 § 1 பின்னூட்டம்

 

டிவிட்டரில் தமிழக மீனவர் படுகொலையை கண்டித்து கூக்குரலிட்ட குருவியின் கதறல்கள் சில :

டிவிட்டரில் தொடர: http://twitter.com/#!/tamizhanban08

 

நானில்லைஎன்றாலும் ஒருநாள் என்மகன் திருப்பி அடிப்பான் என்ற நம்பிக்கையில் உங்கள் துரோகங்களை சொல்லி சொல்லி வளர்கிறேன் #tnfisherman

“விதவை கோட்டாவில் உங்க அன்னைக்கு இந்தியா. எங்காத்தாவுக்கு சத்துணவு கூடமா?” – மீனவனின் மகன் #tnfisherman

இன்னும் சில தமிழ்மீனவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் நிருபமா சுட்டி காட்டினார் ராசபக்சே அதிர்ச்சி கருணா மகிழ்ச்சி #tnfisherman
மீன்பிடித்தலின் மூலம் வரி உங்களுக்கு வாக்கரிசி எங்களுக்கா? #tnfisherman

இப்போதெல்லாம் கருணாவின் கடிதங்களை பார்த்தால் தபால்காரரே சிரிக்கிறாராம். #tnfisherman

 

செத்தவனுக்கு அரசுவிழா மணிமண்டபம் எல்லாம் எவன்டா கேட்டா? இங்கு இருக்கும் மீனவனின் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத பொழுது #tnfisherman

 

வீரமணிக்கு சுபவீக்கும் மீனவர் பிரச்சனை பத்தி ஏதும் தெரியுமா? இன்னும் சுபவீ ஸ்பெக்ட்ரம் சில உண்மைகள் எழுதிட்டு இருக்கு #tnfisherman

இந்துராம் அடுத்த சிங்களரத்னாவிற்கு அடிப்போடுறார் போலிருக்குராசபக்சே இது போன்ற அடிமைகள் கிடைக்க கொடுத்து வைச்சிருக்கவேண்டும்.#tnfisherman

இந்து ராம் வீட்டு சந்துல எவனோ ஒன்னுக்கு அடிச்சிட்டானாம் தலை ரெம்ப கடுப்புல இருக்கு என்னமாதிரி சமூகம் இதுன்னு #tnfisherman

இந்திய பிரதமர் சிங்காச்சே மீனவர் பிரச்சனையில் சிங்கம் போல கர்ச்சிப்பார் என்று பார்த்தால் மியாவ் என்கிறாரே?#tnfisherman

சொரணை இந்திய இறையாண்மைக்குஎதிரானது ! #tnfisherman

இன்னும் எத்தனை மீனவர்கள் செத்தால் நீங்கள் எங்கள் வேதனையை புரிந்து கொள்வீர்கள்?#tnfisherman

நாம் சொன்னபடி மாணவனை அடிக்கவில்லை என்பதால் நமது மீனவனை அடிக்கிறானோ? #tnfisherman

நீதான் அவனை நண்பன் என்கிறாய் அவன் பதிலுக்கு தோட்டாக்களால் புன்னகைக்கிறான் இதுதான் நட்புநாடா? #tnfisherman

இத்தனை இனமானத்தலைவர்கள் இருந்தும் அடிபட்டு அமைதியாக சாகிறதே தமிழினம். #tnfisherman

புத்த பிக்குகளுக்கு ஒரு அடிக்கே இத்தனை அலறல் என்றால் ஏன்டா  ஐநூத்தி சொச்சம் மீனவர்களின் அழுகுரல் உங்களுக்கு கேட்கவில்லை?#tnfisherman

இது என்னடா இது தமிழன் பொறுமையில் எருமையை மிஞ்சி விடுவான் போலிருக்கிறதே #tnfisherman

பார்த்து செல்லுங்கள் நிருபமா நீங்கள் செல்வது பிணத்தையும் புணர்ந்தவர்களின் தேசம். #tnfisherman

யாருய்யா அந்த புண்ணியவான் கருணாவிற்கு தமிழினத்தலைவன் என்று பட்டம் கொடுத்தது எவனோ கொடுத்த காசுக்கு மேல கூவி இருக்கான்யா!#tnfisherman

சங்கம் வைத்து தமிழ் வளர்த்தோம் அன்று தவறானவர்களின் கையில் ஆதிகாரத்தை கொடுத்தமையால் சங்கு அறுந்து இறந்து கொண்டிருக்கிறோம் #tnfisherman

புத்த மாடாலய தாக்குதலில் வரும் பதட்டம் எங்கள் மீனவன் செத்த பொழுது ஏன் வரவில்லை? எங்கள் உயிர் அவ்வளவு மலிவா #tnfisherman

இந்தியதலைவர்களே எங்களுக்கு ஆயுதம் கொடுங்கள் இல்லை அவனை ஆயுதமில்லாமல் வரச்சொல்லுங்கள் நாங்கள்பார்த்துகொள்கிறோம்#tnfisherman

சீமானை நம்பி ஏமாந்த தோழர்களுக்கு ஒரு நல்வாய்ப்பு!

ஜனவரி 31, 2011 § 9 பின்னூட்டங்கள்

சீமானை நம்பி ஏமாந்த தோழர்களுக்கு ஒரு நல்வாய்ப்பு!

சீமான் வைகோவை சந்தித்து வரும் சட்டமன்றத்தேர்தலில் காங்கிரசை வீழ்த்த அதிமுக கூட்டணியை ஆதரிப்பது என்ற முடிவினை வெளியிட்டமை கண்டு ஒட்டுமொத்த பதிவுலகமும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது. சீமானின் இந்த முடிவினை தோழர்கள் பலர் கிழித்து தொங்கப்போட்டு இருக்கிறார்கள்.நாம் பெரிதும் மதிக்கும் தாமரை அவர்கள் சீமானுக்கு எழுதிய கடிதம்தான் இப்பொழுது எங்கெங்கும் விவாத பொருளாகி இருக்கிறது. சீமானை கண்டித்து, நக்கலடித்து ஆளுக்கொரு பதிவுபோட்டு அனைவரும் பரபரப்பு கிளப்பி கொண்டிருக்கிறார்கள். எனக்கு அதிமுக என்றாலே எப்போதும் கசப்புதான். சீமானுக்கு நான் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று நீங்கள் கேப்பீர்களேயானால் அவர் தமிழகமீனவனை அடித்தால் நான் மாணவனை அடிப்பேன் என்று சொன்ன பெருங்குற்றத்திற்காக !? ஆறுமாதம் சிறையில் இருந்த பொழுது அரசை கண்டித்து ஒரு பதிவு போடாத நான் இப்பொழுது மட்டும் பதிவு போடுகிறேன் என்றால் நாடு நம்மை தூற்றாதா என்றுதான்.

ஒருலட்ச்சத்திற்க்கும் மேலான  ஈழத்தமிழர்களை கொன்றழித்த சிங்களப்பேரினவாதிகளுக்கு  அனைத்துவகைகளிலும் உதவிகள் செய்து தமிழினத்தை கருவறுத்த காங்கிரசை தோற்கடிக்க வேண்டும் என்ற நமது லட்சியத்தை நிறைவேற்ற ஒரு அரியவாய்ப்பு.வரும் சட்டமன்றத்தேர்தலில் காங்கிரசை தோற்கடிக்க காங்கிரசு போட்டியிடும் தொகுதி தோறும் காங்கிரசிற்கு  ஓட்டு போடாதே ( அதிமுகவிற்கு வாக்களி என்றல்ல! ) என்று பரப்புரை செய்ய இருக்கிறோம். சீமானை நம்பி ஏமாந்த தோழர்கள் தொடர்பு கொள்ளவும்.  சீமானின் முடிவு தவறானது என்று கருதும் தோழர்கள் எம்மோடு இணைந்து பரப்புரை செய்வீர்கள் என்று நம்புகிறேன்.விரைந்து அணிதிரளுங்கள் தோழர்களே!

கடந்த பாராளுமன்ற தேர்தலில் சிவகங்கையில் போட்டியிட்ட “ராஜீவ் காந்தி” காங்கிரசை தோற்கடி என்று பரப்புரை செய்வதற்கான அனுமதிகளை பெற்று தந்தார். ஆனால் இம்முறை அவர் நாம் தமிழர் இயக்கத்தில் இருப்பதால் அவர் காங்கிரசை தோற்கடி என்றும் அதனை எதிர்த்து நிற்கும் அதிமுக, மதிமுக, கம்யுனிஸ்ட், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களி என்றும் பரப்புரை செய்வார் என்று தெரிகிறது. காங்கிரசு நிற்காத தொகுதிகளில் நாம் தமிழர் பரப்புரை செய்யப்போவதில்லை என்றும் தகவல்கள் வருகின்றன.

கடந்த பாராளுமன்றத்தேர்தலில் சிவகங்கையில் காங்கிரசை தோற்கடி என்று பரப்புரை செய்த தோழர்களோடு இணைந்து பணியாற்றிய அனுபவம்  இருப்பதால் உங்களுக்கு இந்த அழைப்பை அனுப்புகிறேன்.  ஒருவேளை நீங்கள் மாற்றுத்திட்டம் வைத்திருந்தாலும் அதனை தெரிவிக்கவும்.   நாம் தமிழர் காங்கிரசை தோற்கடி அதிமுக கூட்டணிக்கு வாக்களி என்று பரப்புரை செய்யும் நேரத்தில் கொள்கை பிடிப்புள்ள தோழர்கள் காங்கிரசிற்கு வாக்களிக்காதே வேறு யாருக்கு வேணும்னாலும் வாக்களி என்று பரப்புரை செய்வோம் வாருங்கள்.

தமிழ் பேசுகிறார்கள் என்ற காரணத்தினாலே ஒரு லட்சத்து ஐம்பதாயித்திற்கும் மேலான தமிழர்கள் புதைகுழிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழகமீனவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கதையாகி வருகிறது. காங்கிரசு எந்தக்காலத்திலும் தமிழனுக்கு நன்மை செய்யாது என்பதை நாம் அனைவரும் அறிவோம். திராவிடகட்சிகளும் நீர்த்து போய் காங்கிரசிற்கு காவடி தூக்கிக்கொண்டு இருக்கின்றன. அனைவரும் சந்தர்ப்பவாதிகளாகி  போனமையால். இணையத்தில் எழுதும் நீங்கள் கைகொடுத்தாலன்றி தமிழின விரோதிகளை ஒழிக்க வழியேதும் இல்லை என்பதே உண்மை. தேர்தல் நெருங்கி வருவதால் உடனடியாக பதில் அனுப்புங்கள் உங்கள் பயண அனுபவங்களை பின்னர் நிதானமாக பதிவிட்டு கொள்ளலாம் ஹிட்சிற்கு நான் பொறுப்பு.

உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்……..!

பார்ப்பன ஞாநியின் சிங்கள பாசம் !

ஜூன் 7, 2010 § 6 பின்னூட்டங்கள்

பார்ப்பன ஞாநியின் சிங்கள பாசம் !

நாம எவ்வளவுதான் அம்பலப்படுத்தினாலும்  முற்போக்கு முகமூடிக்குள் ஒளிந்திருக்கும் பார்ப்பன ஞாநி தன்னோட திரிப்பு வேலையை நிறுத்துற மாதிரி தெரியல. வழமை போல தனது “ஓ”ட்டை பக்கத்தில் பார்பன வன்மத்தை அள்ளித்தெளித்திருக்கிறார் பார்பன ஞாநி.  இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா கொழும்பில நடைபெறுவதை கண்டித்து பல்வேறு உணர்வாளர்களும் போராடி, விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்வது தமிழர்களின் உள்ளங்களை புண்படுத்தும் என்ற எண்ணத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கின்றனர். முன்னர் கலந்து கொள்வதாக கூறிய முன்னணி திரைக்கலைஞர்கள் தமிழர்களின் உணர்வுகளை மதித்து நிகழ்வை புறக்கணித்து இருக்கின்றனர் என்ற செய்தி நம்மை வந்தடைவதற்கு முன்னர்  பார்ப்பன ஞாநியின் வன்மம் நிறைந்த கட்டுரையை நாம் வாசிக்க வேண்டியிருக்கிறது. ஞாநி எழுத்துக்களில் நேர்மையை எதிபார்ப்பது கூட ஒருவகையில் மூட நம்பிக்கைதான் போலும் .

இந்த வார குமுதம் இதழில் சங்கரனின் பார்ப்பன மனசாட்சி வெளிப்படையாக சிங்கள பேரினவாதத்திற்க்கு வருவாய் இழப்பு ஏற்படலாமா? என்று வருந்தியிருக்கின்றது. இந்திய திரைக்கலைஞர்கள் சில அமைப்புகளின் போராட்டங்களைக் கண்டு நிகழ்வை புறக்கணித்தது சரியல்ல என்று மனம் குமுறியிருக்கின்றார். ஈழம் என்றாலே அரைவேக்காடுத் தனமான கருத்துகளை வெளியிடுவது ஞாநியின் வழக்கம்.

முன்னர் “ஓ”ட்டைப் பக்கங்களில் ஈழப்பிரச்சனை குறித்து எழுதும் போது மலையக தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்ட போது ஈழத் தமிழர்கள் கண்டுகொள்ள வில்லை என முட்டாள் தனமாக உளறியவர் தான் ஞாநி.மலையகத் தமிழர்களின் குடியுரிமையை சிங்கள பேரினவாதம் பறித்த போது க‌ண்டிக்காத‌ த‌மிழ்த் தேசிய‌ காங்கிர‌சை விட்டு வெளியேறி த‌மிழ‌ர‌சு க‌ட்சியை த‌ந்தை செல்வா உருவாக்கினார் என்ப‌து கூட‌ தெரியாம‌ல் உள‌றிய‌த‌ன் மூல‌ம் ஈழ‌ வ‌ர‌லாற்றின் அரிச்சுவ‌டி கூட‌த் தெரியாத‌வ‌ன் தான் என்ப‌தை த‌ன் எழுத்துக‌ள் மூல‌ம் அம்ப‌ல‌ப‌டுத்திக் கொண்ட‌வ‌ர் தான் ஞாநி.
ஏதோ இந்திய‌ திரைப்ப‌ட‌க்க‌லைஞ‌ர்க‌ள் இல‌ங்கைக்கு சென்று அங்குள்ள‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ளையும் த‌மிழ‌ர்க‌ளையும் ஒருங்கிணைத்து அப்ப‌டியே இந்தியாவிற்க்கும் இல‌ங்கைக்கும் ந‌ல்லுற‌வை பேண‌ப் போவ‌து போல‌வும், இது பொறுக்காம‌ல் த‌மிழ் உண‌ர்வாள‌ர்க‌ள் பிர‌ச்ச‌னை செய்துவிட்டார்க‌ள் என்ப‌து போல‌ க‌தை க‌ட்டுகிறார் ஞாநி. IIFAவின் நோக்க‌ம் என்ன‌வென்று எல்லோருக்கும் தெரியும். உலக மனித உரிமை அமைப்புகள் இலங்கையின் போர் குற்றத்தை உலகுக்கு அம்பல படுத்துகின்ற இந்த நேரத்தில், இந்த‌ நிக‌ழ்வு மூல‌ம் இல‌ங்கையில்  மக்கள் மகிழ்வுடன் இருப்பது போலும், இலங்கை ம‌னித‌ உரிமை பேணும் நாடு போன்று ஒரு மாயையை உல‌க‌ நாடுக‌ளுக்கு பிரக‌ட‌ன‌ ப‌டுத்துவ‌தே இத‌ன் உள்நோக்க‌ம்.திரைக்க‌லைஞ‌ர்க‌ள் ஆபாச‌ ந‌ட‌ன‌ங்க‌ள் மூல‌மும், 20க்கு 20 கிரிக்கெட் போட்டியின் மூல‌மும் க‌லை வ‌ள‌ர்ப்ப‌தை த‌டுக்க‌லாமா? என்று ரொம்ப‌வே கோப‌ப்ப‌டுகின்றார் ஞாநி.

த‌மிழ‌ர்க‌ள் இன்ன‌மும் முகாம்களில் அடைக்கப்பட்டு வாழ‌ வ‌ழி இல்லாத‌ ஒரு ம‌ண்ணில், இர‌த்த‌ம் சிந்திக்கொண்டிருக்கும் ஒரு ம‌ண்ணில் கேளிக்கை விழாவா? என்று மே 17 இய‌க்க‌ம்,நாம் தமிழர் இயக்கம், சேவ் த‌மிழ் இய‌க்க‌ம், பெரியார் திராவிட கழகமும் மற்றும் ப‌ல‌ இய‌க்க‌ங்க‌ளும், க‌விஞ‌ர். தாம‌ரை , சீமான், இய‌க்குந‌ர். இராம் போன்ற‌ த‌மிழ் க‌லைஞ‌ர்க‌ளும் முன்னெடுத்த‌ போராட்ட‌ங்க‌ளை போகிற‌ போக்கில் ச‌க‌தி வாரி இரைத்திருக்கின்றார் பார்ப்ப‌ன‌ ச‌ங்க‌ர‌ன்.

த‌மிழ் உண‌ர்வாள‌ர்க‌ள் ப‌டைப்பாளிக‌ளாக‌ சாதித்த‌து என்ன‌ என்ற‌ கேள்வி மூல‌ம் ப‌டைப்புல‌கில் உள்ள‌ க‌விஞ‌ர். தாம‌ரை நோக்கி கேள்வியை வைக்கின்றார். சிங்க‌ள‌ பேரின‌வாத‌ம் த‌மிழ‌ர்க‌ளை கொன்ற‌ழித்த‌து க‌ண்டு ம‌ன‌ம் வெதும்பிய‌தால் தன்னால் முன்பு போல‌ க‌விதைக‌ளை ப‌டைக்க‌முடிய‌வில்லை என்று க‌விஞ‌ர். தாம‌ரை ப‌ல‌ இட‌ங்க‌ளில் ப‌திவு செய்துள்ளார். மேலும் த‌மிழ‌ர்க‌ளின் இத‌ய‌ங்க‌ளில் நீங்காத‌ இட‌ம் பிடித்து விட்ட‌ “க‌ண்ண‌கி ம‌ண்ணிலிருந்து ஒரு க‌ருஞ்சாப‌ம்” என்ற‌ க‌விதையினை எழுதிய‌வ‌ர் க‌விஞ‌ர்.தாம‌ரை என்ப‌து பார்ப்ப‌ன‌ ச‌ங்க‌ர‌னுக்கு தெரியாம‌ல் போன‌து விய‌ப்ப‌ல்ல‌.

த‌மிழ் உண‌ர்வாள‌ர்க‌ளை நோக்கி கேள்வி எழுப்பும் பார்ப்ப‌ன‌ ச‌ங்க‌ரா. சிங்க‌ள‌ ப‌த்திரிகையாள‌ரான‌ இல‌ச‌ந்த‌ விக்க‌ர‌ம‌துங்கா சிங்க‌ள‌ பேரின‌வாத‌த்தின் கோர‌ முத‌த்தை அம்ப‌ல‌ ப‌டுத்தி ம‌ர‌ண‌த்தை ப‌ரிசாக‌ பெற்ற‌ போது நீ என்ன‌ எழுதினாய் என்று நினைவிருக்கின்றதா. திசைநாய‌க‌த்திற்க்கு இருப‌து ஆண்டு க‌டுங்காவ‌ல் த‌ண்ட‌னை விதிக்க‌ப்ப‌ட்ட‌ போது க‌ந்த‌சாமி ப‌ட‌க்குழுவின‌ரோடு க‌தா கால‌ச்சேப‌ம் ந‌ட‌த்திக் கொண்டிருந்த‌வ‌ன் நீ என்ப‌தை ம‌ற‌ந்து விட்டாயா?. சிங்க‌ள‌ இய‌க்குந‌ர் ச‌ட்டை கிழிந்தால் “நீதி செத்துருச்சு” என்று சொம்பு தூக்கும் நீ, சிங்க‌ள‌ காடைய‌ன் செத்து விழுந்த போராளி பெண்ணின் ஆடைகிழித்து மிருக‌ம் கூட‌ செய்ய‌த்துணியாத‌ காரிய‌த்தை நிக‌ழ்த்திய‌ பொழுது சொம்போடு காணாம‌ல் போன‌ ம‌ர்ம‌மென்ன‌?

த‌மிழ் ப‌டைப்பாளிக‌ளை சிங்க‌ள‌ ப‌டைப்பாளிக‌ளுட‌ன் ஒப்பிடுவ‌த‌ற்கு முன் இல‌ச‌ந்தா, திசைநாய‌க‌த்துட‌ன் உன்னை ஒப்பிட்டு உன‌து ம‌ன‌சாட்சியை வெளிப்ப‌டையாக‌ பேச‌ச் சொல். இல‌ச‌ந்தா, திசைநாய‌க‌ம் போன்ற‌ ப‌த்திரிகையாள‌ர்க‌ளுட‌ன் ஒப்பிடும் அள‌விற்க்கு நீ என்ன‌ கிழித்திருக்கின்றாய்? என்றும் உன் ம‌ன‌சாட்சியை நீயே கேள். இறுதி க‌ட்ட‌ போரின் போது த‌மிழ‌க‌ அர‌சும், த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ரும் புரிந்த‌ துரோக‌த்தை பேசுவ‌த‌ற்கு முன் அத‌ற்கான‌ த‌குதி உன‌க்கு இருகின்றதா பார்ப்ப‌ன‌ ச‌ங்க‌ரா? க‌ருணாநிதி ஆட்சியில் இருந்து துரோக‌ம் செய்த‌ பொழுது ப‌டைப்புல‌கில் ஈழ‌ப் போராட்ட‌த்திற்க்கு எதிராக‌ எழுத்துக‌ள் மூல‌ம் துரோக‌ம் செய்த‌வ‌ன் நீ என்ப‌தை த‌மிழ‌ன் இன்னும் ம‌ற‌க்க‌வில்லை.

50000 மக்கள் மீள் குடியேற்றம் என்ற பரப்புரைகளில் உண்மையில்லை.

ஒக்ரோபர் 25, 2009 § 1 பின்னூட்டம்

50000 மக்கள் மீள் குடியேற்றம் என்ற பரப்புரைகளில் உண்மையில்லை.

பெங்களூர் அக்-25

rafugee

தெற்காசியாவில் மனிதவுரிமைகள் மீறல்கள் என்ற கருத்தரங்கு (25/10/2009) நடைபெற்றது. நிகழ்வில் தெற்காசியாவின் மனிதவுரிமை மீறல்களை எடுத்து வைத்து பேசிய மனிதவுரிமை ஆர்வலர்கள் 50000 ஈழத்தமிழர்கள் மீள்குடியேற்றம் என்பது சுத்த பொய் என்றும் வன்னிமுகாமிலிருந்து ஜப்னா முகாமிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதே உண்மை என்று குற்றம் சுமத்தினர். ஈழத்தில் நடைபெற்ற மனிதபேரவலங்கள் தெற்காசியாவின் மனித உரிமை மீறல்களை மேலும் ஊக்குவிக்கும் என்றும் ஈழத்தில் வெற்றிகரமாக  செயல்படுத்தப்பட்ட சோதனைகள் இந்தியாவின் வடகிழக்கு மாகாணங்கள் மற்றும் காஷ்மீரிலும்  நடைபெறுவதற்கான அபாயங்கள் அதிகம் உள்ளன என்று கவலை தெரிவித்தனர்.

தெற்காசியாவில் மனிதவுரிமை மீறல்கள்   என்ற தலைப்பில் தெற்காசிய மனிதவுரிமை ஆர்வலர்கள் மற்றும் பெங்களூர் பல்கலைகழகம் இணைந்து யுடிசி கல்லூரியில் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்வில் சிவ சுந்தர் ( ‘o eezham’ என்ற கன்னட புத்தகத்தை எழுதியவர்), பால் நியுமென் ( விரிவுரையாளர் பெங்களூர் பல்கலைகழகம்) முருகானந்தம்( செயலாளர் தமிழக மீனவர்சங்கம் ) எலிசபெத் ( விரிவுரையாளர் National Law School ) தீனா ( பத்திரிக்கையாளர் other media ) ஆகியோர் கலந்துகொண்டனர்.

Human-rights-violations-25-10-09

நிகழ்வில் முதலாக பேசிய சிவ சுந்தர் இலங்கையின் ராணுவமயமாக்கல் மற்றும் பத்திரிக்கை சுதந்திரம் பற்றி  உரை நிகழ்த்தினார்.போரின் பிடியில் இல்லாத  ஜப்னாவில் ஐந்து லட்சம் மக்களுக்கு ஐம்பதாயிரம் ராணுவவீரர்களை இலங்கை அரசு நியமித்துள்ளது பத்து பேருக்கு ஒரு இராணுவ வீரர்  என்ற விகிதத்தில் இருப்பதால் அங்குள்ள மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டுள்ள குறித்து கவலை தெரிவித்தார் மேலும் ராணுவவீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டம் இலங்கை அரசிடம் இருப்பதையும் சுட்டிகாட்டிய சிவசுந்தர் பத்திரிக்கை சுதந்திரம் இலங்கையில் படும்பாடு குறித்தும் விளக்கமாக பேசினார்.

அடுத்தாக ‘சிறப்பு முகாம்களின் அவலங்கள்’ என்ற தலைப்பில் பேசிய பால் நியுமென் சிறப்பு முகாம்களில் இருந்து 50000 மக்கள் மீள்குடியேற்றம் செய்யபட்டுள்ளனர் என்று பொய்யான பரப்புரைகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டினார். வன்னி சிறப்புமுகாமிலிருந்து ஜப்னா முகாமிற்கு இடம்மாற்றம் செய்யபட்டதை தவறாக மீள்குடியேற்றம் என்று பரப்புரை செய்வதையும்.இலங்கையில்  தேர்தல் முடியும்வரை ராசபக்சே அரசு மீள்குடியேற்றம் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை என்பதும் முகாம்மக்களின் வாக்குகள் தமக்கு எதிராக அமையும் என்ற அச்சத்திலேயே ராசபக்சேவின் அரசு மவுனம் சாதிக்கிறது என்றும் மழைகாலம் துவங்கினால் மிகப்பெரியளவில் மனிதபேரவலம் நடைபெறவாய்புகள் உள்ளன என்றும் சுட்டிகாட்டினார்.

தமிழக மீனவர்கள் மீதான மனிதவுரிமை மீறல்கள் என்ற தலைப்பில் பேசிய முருகானந்தம் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடல்படை  நிகழ்த்திய தாக்குதல்களால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து மிகவிளக்கமாக கூறினார் மத்தியரசும் மாநில அரசும் தமிழக மீனவர்களை கைவிட்டு விட்டமையையும் ஈழத்தமிழர்கள் பக்கம் நின்றிருக்க வேண்டிய இந்தியரசு சிங்களர்கள் பக்கம் நின்றதால் இந்தியாவிற்கே அது ஆபத்தாக போய்விட்டன என்று எடுத்துரைத்தார்.தமிழக மீனவர்கள் இலங்கை கடல்படையால் சுடப்பட்டு இறக்கும்பொழுது தமிழக காவல்துறையினால் விபத்தில் மீனவர்கள் இறந்ததாகவே இதுவரை  வழக்குகள் பதியப்பட்டு வருவதாகவும். தமிழக மீனவர்கள் தம்மை தற்காத்து கொள்ள ஆயுதம் எந்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றார்.

தொடர்ந்து பேசிய எலிசபெத் இந்தியாவின் வடகிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சிறப்பு சட்டங்கள் மற்றும் ஆளும்வர்க்கத்தின் அடக்குமுறைகள் பற்றி பேசினார் ஈழத்தில் செயல்முறைப்படுத்தப்பட்ட சோதனை முயற்சிகளை இந்தியா வடகிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தும் ஆபத்து உள்ளதாக கூறினார்.

காஷ்மீரின் மனிதவுரிமைகள் பத்தி பேசிய தீனா ‘ஜம்மு காஷ்மீரில் பிறந்தவன் என்றாலே தீவிரவாதி’ என்று பார்க்கும் சூழல் உள்ளது என்றும் ராணுவமயமாக்கல் ஏற்படுத்தும் வாழ்வியல் சிக்கலையும் பட்டியலிட்ட தீனா. இலங்கையில் நடந்த மனித பேரவலம் நியாயமான உரிமைகளுக்கான போராட்டங்களை நசுக்குவதற்கு முன்மாதிரியாக அமைந்துள்ளது என்று கூறினார்.

“தெற்காசியாவில் மனித உரிமை மீறல்கள்”கருத்தரங்க‌ம்

ஒக்ரோபர் 15, 2009 § பின்னூட்டமொன்றை இடுக

பெங்களூரில் “தெற்காசியாவில் மனித உரிமை மீறல்கள்”என்ற பெயரில் கருத்தரங்கம் நடைபெறபோகிறது.

ஈழத்தில் நடைபெறும் மனிதப்பேரவலத்தை உலகிற்கு உணர்த்தும் விதமாகவும் அதேவேளையில் நம்மை சுற்றி நடைபெறும் மனித உரிமைமீறல்களை கண்டிக்கும் விதமாகவும் இந்த கருத்தரங்கு நடைபெறவிருக்கிறது.

பல்வேறு மனிதவுரிமை அமைப்புக்களை சார்ந்த உறுப்பினர்கள் பங்குபெறுவதால் கருத்தரங்கு முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே இருக்கும் என்பதை தெளிவுபடுத்திகொள்கிறோம். இந்த கருத்தரங்கின் மூலமாக மனித உரிமை அமைப்பினர் வெளியிடும் செய்திகளை ஊடகங்களின் உதவியுடன் அடுத்த தளத்திற்கு நகர்த்துவதே நமது எண்ணம். முழுக்கமுழுக்க எளிவர்களான எம்மால் முன்னெடுக்கப்படும் நிகழ்வு இது. இனமானமுள்ள தோழர்களே கைகொடுங்கள் ஈழப்போராட்டத்தை அடுத்த தளத்திற்கு நகர்த்துவோம். நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை மனித உரிமை அமைப்புகளே. அவர்கள் மூலமாக ஈழப்பிரச்சனையை அடுத்தகட்டம் நோக்கி நகர்த்துவோம்.

maanadu_tamil copy

blore maanadu copy

த‌லைப்புக‌ள் ‍மற்றும் பேச்சாள‌ர்க‌ள்


1) இலங்கையின் மனித உரிமை மீறல்கள்

அ) பத்திரிக்கைச் சுதந்திரம் மற்றும் இராணுவமயமாக்கல் .R.K.Mattu (Chief journalist – Indian express)

ஆ) இடப்பெயர்வு முகாம்களின் அவ‌ல‌ நிலை ‍.Father.Prakash louise (South asia Director – JFG REFUGEE SERIVCE)  .

2) தமிழக‌ மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் – Mr.Muruganandham (Seceretry – Tamil nadu fisherman associatioந்) .

3) இந்திய வட கிழக்கு மாநிலங்களில் மனித உரிமை மீறல்களும்

அ)வட கிழக்கு மாநிலங்களில் மனித உரிமை மீறல்கள் . Mr.Venhu (General Seceratry – Naga people movoment)

ஆ)குடிமை மீறல் சிறப்பு சட்டங்கள்.Mr.Vijay kumar (National Law school)

இ) காஷ்மீரின் வரலாறும், மனித உரிமை மீறல்களும்.Mr.Deena (Other media)

4) தெற்காசிய நாடுகளில் மனித உரிமை மீறல்கள் .Mr.Sethu(friends of Tibet)

5) புவி சார் அரசியலும் , பொருளாதார நலன்களும் .Mr.arivazhagan(Freelance journalist)

6) மனித உரிமை அமைப்பின் செயல்பாடுகள். Mr.paul Newman(Lecturer – bangalore university)

இடம்.யுனைட்டட் தியாலஜிக்கல் கல்லூரி

(United thelogical collage – #63,Millers Road,Benson Town,Bangalore-46. Landmark- Behind contonement railway station)

நாள்.25/10/2009 நேரம். மாலை 3.00 மணியிலிருந்து 7.00 மணிவரை (Evening-3.00P.m to 7.00P.M)


இந்த நிகழ்வு வெற்றிபெற உங்களது பங்களிப்பாக நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். இதனை பெங்களூர்வாழ் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள். மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தெரியப்படுத்துங்கள்.

மின்னஞ்சலுக்கு வசதியாக ஆங்கிலத்தில் கீழே:

The Conference On “ Human rights violation in South Asia”

Topics

1) srilanka’s human right violations

a)freedom of journalists.  R.K.Mattu (Chief journalist – Indian express)

b) militrization . R.K.Mattu (Chief journalist – Indian express)

c) situation’s of the IDP camps. Father. Prakash louise (South asia Director – JFG REFUGEE SERIVCE)  .

2)  Human rights violation of tamil fisherman– Mr.Muruganandham (Seceretry – Tamil nadu fisherman association) .

3) human right violations in north-east states of India

a) special laws which protect government-Mr.Vijay kumar (National Law school)

b) freedom of journalist- Mr.Venhu (General Seceratry – Naga people movoment)

c) The History of Kashmir & their human rights violation -Mr.Deena (Other media)

4) human right violations in south asian region

a) dibet , nepal , miyanmar -Mr.Sethu(friends of Tibet)

5) geographic politics & their financial supports-Mr.arivazhagan(Freelance journalist)

6) Functions of a Human right organizations -Mr.paul Newman(Lecturer – bangalore university)

Place – United thelogical collage – #63,Millers Road, Benson Town,Bangalore-46. Landmark- Behind cantonment railway station)

Date : 25/10/2009  Time – Evening-3.00P.m to 7.00P.M

தமிழகம் வழியே இலங்கைக்கு ஆயுதம்!

மே 2, 2009 § பின்னூட்டமொன்றை இடுக

தமிழகம் வழியே இலங்கைக்கு ஆயுதம்!

scania_93m_norwegian_military
இன்று மதியம் இலங்கைக்கு சேலம் கோவை கொச்சி வழியாக என்பது 80 வாகனங்களில் ஆயுதங்கள் செல்கின்றன என்ற செய்தி வந்தது. கோவையில் தடுத்து நிறுத்த பெரியார் திக தோழர்களும் தமிழ் உணர்வாளர்களும் குழுமி உள்ளனர் என்று செய்திகள் வந்தன. செய்தியை கேட்ட பொழுது இது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றியது. இம்மாதியான சூழலில் அதுவும் தமிழகம் வழியே ஆயுதம் கொண்டு செல்லும் தைரியம் நடுவண் அரசுக்கு வருமா என்ற எண்ணம் வந்தது.

சற்றுமுன் தொலைக்காட்சியை பார்த்த பொழுது இரு வெவ்வேறான செய்திகளை காண நேர்ந்தது. இலங்கைக்கு சென்ற ஆயுதம் தாங்கிய லாரிகளை பொதுமக்கள் தாக்கினர் என்று மக்கள் தொலைக்காட்சியிலும் ராணுவ வாகனங்கள் தாக்கப்பட்டது கலகக்காரர்கள் கலைக்கப்பட்டார்கள் என்று இலங்கைக்கு ஆயுதம் என்னும் செய்தியை பின்னுக்கு தள்ளிய  செய்தியை சூரிய தொலைக்காட்சியும் வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே தமிழகம் வழியே டாங்குகளை அனுப்பி வைத்தது என்ற குற்றசாட்டுகள் இருக்கும் பொழுது இப்போது மீண்டும் ஆயுதங்களா அதுவும் தமிழகத்தின் வழியாக? என்ன நடக்கிறது இப்பொழுது இந்த செய்திகளை திரித்து சொல்ல சூரிய தொலைக்காட்சி ஆரம்பித்து விட்டது.

25pdr

எத்தனை எத்தனை போராட்டங்கள் எத்தனை தீக்குளிப்புக்கள் எத்தனை உண்ணா நோம்பு இவ்வளவுக்கு பின்னும் தமிழகத்தின் வழியாக சிங்களனக்கு ஆயுதமா? சாகும்வரை உண்ணாவிரதம் அதை தொடர்ந்து போர் நிறுத்த அறிவிப்பு பின்னர் கனரக  ஆயுதங்கள் பயன்படுத்த வேண்டாம் என்று மட்டுமே அறிவுறுத்தினோம் என்று முன்னுக்கு பின்னான தகவல்கள் என்று மாபெரும் நாடகத்தை நடத்தி கட்டி விட்டு இப்பொழுது தமிழகம் வழியே ஆயுதங்களை அனுப்பி வைப்பது.

இதையும் வேறாக மாத்தி ராணுவ வாகங்களை  தாக்கிய பெரியார் திகவினர் என்று செய்தி வெளியிடும் கலைஞரின் குடும்ப தொலைக்காட்சி. மழைக்கு பின்னால் துவானம் போலே பெரிய உதவிகளை முடித்து கொண்டு சின்னதாக உதவுகிறார்கள் போல் இருக்கிறது. ராணுவ வாகனங்களை தவறான தகவல்களின் அடிப்படையில் தாக்கிவிட்டார்கள் என்று செய்திகள் நம்மை வந்தடையும் என்பதில் ஐயமில்லை.

Where Am I?

You are currently browsing the ஈழ போராட்டங்கள் category at தமிழன்பன் பக்கம்.