காங்கிரசின் அடுத்த காமெடி இப்போ யுவராசு !

ஜூலை 25, 2011 § 5 பின்னூட்டங்கள்

காங்கிரசின் அடுத்த காமெடி இப்போ யுவராசு !

இன்று காலையில் எல்லா செய்திகளிலும் கையில் ஏதோ பேப்பர் சகிதமாக நாலு பேரு புகார் கொடுக்க வந்திருந்ததை காட்டினார்கள். தமிழக இளைஞர் காங்கிரசில் 35 லட்சம் இளைஞர்களை சேர்த்ததாக புருடா விட்ட யுவராசால் நாலு பேருக்கு மேல ஆளு சேர்க்க முடியவில்லை.. பாவம். சரிய்யா யாரு மேல புகாரு எதுக்கு புகாரு? அப்படின்னு செய்தியை பார்த்தா அதே பழைய பல்லவி சீமான் மீது நடவடிக்கை எடுக்கணும் தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசிட்டார் அப்படின்னு. அடப்பாவிகளா நாட்டுல என்ன நடந்திட்டு இருக்கு சமச்சீர் கல்வி வருமா வரதா?ன்னு ஒவ்வொரு பெற்றோர்களும் ஏக்கத்தோடு காத்துக்கிடக்கிறார்கள். விலையேற்றம் மின் தட்டுப்பாடு, சாயக்கழிவுநீர்  எத்தனை எத்தனை மக்கள் பிரச்சனை இதுல இப்போ சீமான் மேல நடவடிக்கை எடுப்பதுதான் இவர்களுக்கு முக்கியமாப்போச்சாம். சீமான் ஆரம்பத்துல இருந்து இதைத்தானய்யா பேசிட்டு இருக்காரு. பலமுறை இதையே சொல்லி சிறைக்கு அனுப்பியும் நீதிமன்றம் தானய்யா அவர வெளிய அனுப்பி
இருக்கு. தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசுவது இந்திய இறையாண்மைக்கு எதிரானது இல்லை என்று நீதிமன்றம் வைகோவின் ‘பொடா’ கைதின் பொழுதே சொல்லிடுச்சே யுவராசு. இது தெரியாம ஏதோ கோமாவில இருந்து எந்திருச்ச மாதிரி கெளம்பி புகார் கொடுக்கிறேன் பேர்வழி என்று பப்ளிசிட்டி வேறு.

சரி, நாமளும் ஏதோ சின்னப்பய ஏதோ தெரியாம கிளம்பி வந்துட்டான் வீட்டுல இருந்து ஏதாவது பெரியவங்கள கூட்டிட்டு வாப்பான்னு சொல்லலாம்னு பார்த்தா. இவிங்க கோஸ்டில பெருசுங்க இவனைவிட  காமெடி பீசுங்க. கடந்த வார ஆனந்த விகடன்ல  தங்கபாலு கொடுத்த பேட்டியை பார்த்துட்டு அழுவதா சிரிப்பதான்னு நானே குழம்பிபோயிகிடக்கேன். இந்த வயசுலும் மனுசனுக்கு என்னவொரு
நகைச்சுவை உணர்வு. ஈழத்துக்காக தமிழ்நாட்டில் அதிகம் போராடியது ரெண்டு பேரு ஒருத்தர்  நெடுமாறன் இன்னொருத்தர் தங்கபாலுன்னு வேற சொல்லுறார் இதை படிச்சுட்டு எத்தனை பேருக்கு கிறுக்கு புடிச்சுச்சோ? எத்தனை பேருக்கு பேதியாச்சோ?. எப்படியா இப்படியெல்லாம் பேசிட்டு திரியுறீங்க எங்கள பார்த்தா அம்புட்டு மக்கு மாதிரியா தெரியுது.

தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனை என்னவென்றே தெரியவில்லை. சரி நம் தொப்புள்கொடி உறவுகள் மீது சிங்கள ராணுவம் புரிந்த இனப்படுகொலை குறித்தும் அக்கறையில்லை. மக்கள் என்றாலே அது நேருவின் மக்கள் என்று அன்றிலிருந்து புரிந்து  வைத்திருக்கிறீர்கள்.  தமிழர்களை ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டு தமிழர்கள் என்று பிரிக்கும் புத்திசாலிகள் இத்தாலியில் பிறந்தவரை அன்னை   என்கிறீர்களே? என்றால்  நம்மை தேசத்துரோகிகள் என்று சொல்லுவார்கள்.  நாளை ஸ்பெயினில் இருந்து அண்ணியை இறக்குமதி செய்ய காத்திருக்கிறார்கள். இவர்களின் ஈழத்தமிழர்கள் துயரம் பத்தி பேசினால் என்ன புரியப்போகிறது?.தமிழர் பிரச்சனையில் இவர்களிடம் நாம் பேசியதெல்லாம்  எருமைமாட்டில் பெய்த மழையாக போய்விட்டது. இனியும் இவர்களோடு சீரியஸாக பேசி நமது ஆற்றலை வீணடிப்பதை விட்டுட்டு மக்களோடு மக்களாக இந்த காமெடி பீசுகளின் காமெடிக்கு சிரித்து வைத்துவிட்டு போவோம்.

பின்குறிப்பு: மணிசெந்தில் அவர்களின் முகநூல் பக்கத்தில் இருந்து

தடை செய்யப்பட்ட இயக்கத்தினை ஆதரித்து பேசும் சீமானை கைது செய்ய வேண்டும் -இளைஞர் காங்கிரஸ் யுவராஜ் #

உண்மையில் தடை செய்யப்பட வேண்டிய இயக்கத்தில் இருக்கும் யுவராஜினை கைது செய்ய வேண்டும் – நாம் தமிழர்.

Advertisements

சீமானை நம்பி ஏமாந்த தோழர்களுக்கு ஒரு நல்வாய்ப்பு!

ஜனவரி 31, 2011 § 9 பின்னூட்டங்கள்

சீமானை நம்பி ஏமாந்த தோழர்களுக்கு ஒரு நல்வாய்ப்பு!

சீமான் வைகோவை சந்தித்து வரும் சட்டமன்றத்தேர்தலில் காங்கிரசை வீழ்த்த அதிமுக கூட்டணியை ஆதரிப்பது என்ற முடிவினை வெளியிட்டமை கண்டு ஒட்டுமொத்த பதிவுலகமும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது. சீமானின் இந்த முடிவினை தோழர்கள் பலர் கிழித்து தொங்கப்போட்டு இருக்கிறார்கள்.நாம் பெரிதும் மதிக்கும் தாமரை அவர்கள் சீமானுக்கு எழுதிய கடிதம்தான் இப்பொழுது எங்கெங்கும் விவாத பொருளாகி இருக்கிறது. சீமானை கண்டித்து, நக்கலடித்து ஆளுக்கொரு பதிவுபோட்டு அனைவரும் பரபரப்பு கிளப்பி கொண்டிருக்கிறார்கள். எனக்கு அதிமுக என்றாலே எப்போதும் கசப்புதான். சீமானுக்கு நான் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று நீங்கள் கேப்பீர்களேயானால் அவர் தமிழகமீனவனை அடித்தால் நான் மாணவனை அடிப்பேன் என்று சொன்ன பெருங்குற்றத்திற்காக !? ஆறுமாதம் சிறையில் இருந்த பொழுது அரசை கண்டித்து ஒரு பதிவு போடாத நான் இப்பொழுது மட்டும் பதிவு போடுகிறேன் என்றால் நாடு நம்மை தூற்றாதா என்றுதான்.

ஒருலட்ச்சத்திற்க்கும் மேலான  ஈழத்தமிழர்களை கொன்றழித்த சிங்களப்பேரினவாதிகளுக்கு  அனைத்துவகைகளிலும் உதவிகள் செய்து தமிழினத்தை கருவறுத்த காங்கிரசை தோற்கடிக்க வேண்டும் என்ற நமது லட்சியத்தை நிறைவேற்ற ஒரு அரியவாய்ப்பு.வரும் சட்டமன்றத்தேர்தலில் காங்கிரசை தோற்கடிக்க காங்கிரசு போட்டியிடும் தொகுதி தோறும் காங்கிரசிற்கு  ஓட்டு போடாதே ( அதிமுகவிற்கு வாக்களி என்றல்ல! ) என்று பரப்புரை செய்ய இருக்கிறோம். சீமானை நம்பி ஏமாந்த தோழர்கள் தொடர்பு கொள்ளவும்.  சீமானின் முடிவு தவறானது என்று கருதும் தோழர்கள் எம்மோடு இணைந்து பரப்புரை செய்வீர்கள் என்று நம்புகிறேன்.விரைந்து அணிதிரளுங்கள் தோழர்களே!

கடந்த பாராளுமன்ற தேர்தலில் சிவகங்கையில் போட்டியிட்ட “ராஜீவ் காந்தி” காங்கிரசை தோற்கடி என்று பரப்புரை செய்வதற்கான அனுமதிகளை பெற்று தந்தார். ஆனால் இம்முறை அவர் நாம் தமிழர் இயக்கத்தில் இருப்பதால் அவர் காங்கிரசை தோற்கடி என்றும் அதனை எதிர்த்து நிற்கும் அதிமுக, மதிமுக, கம்யுனிஸ்ட், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களி என்றும் பரப்புரை செய்வார் என்று தெரிகிறது. காங்கிரசு நிற்காத தொகுதிகளில் நாம் தமிழர் பரப்புரை செய்யப்போவதில்லை என்றும் தகவல்கள் வருகின்றன.

கடந்த பாராளுமன்றத்தேர்தலில் சிவகங்கையில் காங்கிரசை தோற்கடி என்று பரப்புரை செய்த தோழர்களோடு இணைந்து பணியாற்றிய அனுபவம்  இருப்பதால் உங்களுக்கு இந்த அழைப்பை அனுப்புகிறேன்.  ஒருவேளை நீங்கள் மாற்றுத்திட்டம் வைத்திருந்தாலும் அதனை தெரிவிக்கவும்.   நாம் தமிழர் காங்கிரசை தோற்கடி அதிமுக கூட்டணிக்கு வாக்களி என்று பரப்புரை செய்யும் நேரத்தில் கொள்கை பிடிப்புள்ள தோழர்கள் காங்கிரசிற்கு வாக்களிக்காதே வேறு யாருக்கு வேணும்னாலும் வாக்களி என்று பரப்புரை செய்வோம் வாருங்கள்.

தமிழ் பேசுகிறார்கள் என்ற காரணத்தினாலே ஒரு லட்சத்து ஐம்பதாயித்திற்கும் மேலான தமிழர்கள் புதைகுழிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழகமீனவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கதையாகி வருகிறது. காங்கிரசு எந்தக்காலத்திலும் தமிழனுக்கு நன்மை செய்யாது என்பதை நாம் அனைவரும் அறிவோம். திராவிடகட்சிகளும் நீர்த்து போய் காங்கிரசிற்கு காவடி தூக்கிக்கொண்டு இருக்கின்றன. அனைவரும் சந்தர்ப்பவாதிகளாகி  போனமையால். இணையத்தில் எழுதும் நீங்கள் கைகொடுத்தாலன்றி தமிழின விரோதிகளை ஒழிக்க வழியேதும் இல்லை என்பதே உண்மை. தேர்தல் நெருங்கி வருவதால் உடனடியாக பதில் அனுப்புங்கள் உங்கள் பயண அனுபவங்களை பின்னர் நிதானமாக பதிவிட்டு கொள்ளலாம் ஹிட்சிற்கு நான் பொறுப்பு.

உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்……..!

தமிழச்சி நாம்தமிழர் என்னதான் பிரச்சனை?

ஜனவரி 1, 2011 § 4 பின்னூட்டங்கள்

தமிழச்சி நாம்தமிழர் என்னதான் பிரச்சனை?


சீமான் சிறையிலிருந்து விடுதலை என்ற செய்தி வெளியான அடுத்த நாளே சீமானை விடுதலை செய்வதன் மூலம் காங்கிரசை திமுக கூட்டணியில் இருந்து கழட்டிவிட வேலைகள் நடக்கிறது என்பது போன்ற முகநூல் செய்தியை வெளியிட்டார் தமிழச்சி. அதனை தொடர்ந்து அவரது வலைப்பூவில் நாளொரு கட்டுரை வீதம் நாம் தமிழர் மற்றும் சீமான் குறித்து எழுதி வருகிறார்.

நான் வலைப்பூக்கள் வாசிக்க துவங்கிய நாட்களிலேயே அறிமுகமானது தமிழச்சியின் எழுத்துக்கள். பெரியாரியத்தை பன்மடங்கு வீரியத்தோடு இணையம் பயன்படுத்தும் இன்றைய இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதில் தமிழச்சியின் பங்கு மகத்தானது என்பதை அறிவேன்.  சீமான் மீதும் நாம் தமிழர் இயக்கத்தினரிடமும் அவர் முன்வைத்த கேள்விகள் கண்டிப்பாக பதில் அளிக்கப்பட வேண்டியவை என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. விமர்சனம் என்பதையும் மீறி காழ்புணர்ச்சி என்ற நிலையை நோக்கி தமிழச்சியின் எழுத்துக்கள் சென்று கொண்டிருக்கிறதோ? என்ற சந்தேகத்தில்தான் (குறித்து கொள்ளுங்கள் சந்தேகத்தில் தான்) இந்த கட்டுரையை எழுதுகிறேன்.

கடந்தாண்டு கனடாவில் சீமான் காவல்துறையால் கைது செய்யப்பட்டபொழுது கைகளை பின்புறம் கட்டி விலங்கிட்டது கனடா காவல்துறை என்று சீமான் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். இது சாதாரண பகிர்தல்தான் இதற்குக்காரணம் இந்திய தூதரக அதிகாரிகள் என்றளவில் இருந்தது சீமானின் குற்றச்சாட்டு. உடனே தமிழச்சி தனது வலைப்பூவில் அதிரடியாக மீனகத்தில் இருந்து செவ்வி ஒன்றை ஆதாரமாக வழங்கி சீமான் ஒரு பொய்யர் செவ்வியில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்படவில்லை விசாரணைக்கே அழைத்து செல்லபடுகிறார் என்று இருக்கிறது சீமான் விலங்கிடப்பட்டதாக பொய் சொல்கிறார் பாருங்கள் என்று கட்டுரை வெளியிட்டார்.

மீனகத்திற்கு அந்த செய்தியை வழங்கியவர் நமக்கு நன்கு அறிமுகமான சே.பாக்கியராசன் என்பவரே. சே. பாக்கியராசன் உடனடியாக விளக்கமும் அளித்தார் கனடா காவல்துறை சீமானை சந்திக்கும் முன்னர் அங்கிருந்த அனைவரையும் அப்புறப்படுத்திவிட்டது மாவீரர் நாளின் பொழுது புலம்பெயர் தமிழர்களிடம் பதட்டத்தை ஏற்படுத்த வேண்டாம் என்பதற்காகவும் இது வெறும் விசாரணையே கைது நடவடிக்கை அல்ல என்ற செவ்வியை வழங்கியதாக கூறினார். செவ்வியை வழங்கியவரே விளக்கம் அளித்த பின்னரும் தமிழச்சி தனது கட்டுரை குறித்த வருத்தமோ அல்லது விளக்கமோ அளித்ததாக தெரியவில்லை.

சீமானை ஓட்டுப்பொறுக்கி என்றும் கடந்த தேர்தலில்  அதிமுகவோடு கூட்டுவைத்து ஓட்டுபொறுக்கினார் சீமான் என்றும் வலைப்பூவில் எழுதி உள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் என்ற இயக்கமே தோன்றி இருக்கவில்லை பிறகு எப்படி சீமான் கூட்டணி வைத்திருக்க முடியும் தனியாளாக கூட்டணியில் சேர்ந்து கொண்டாரா?  இயக்குனர் சங்கத்திலிருந்த எடுத்த முடிவே தவிர அது சீமானின் முடிவு அல்ல. தேர்தலுக்கு பின்னர் பொருளாதார நெருக்குதலுக்கு ஆளான பாரதிராசா ஈழ ஆதரவு போராட்டத்திலிருந்து கழட்டி கொண்டு  கருணாநிதியிடம் சரணடைந்தார்.
பெரியார்வாதிகளின் எஞ்சி நிற்கும் நம்பிக்கையான  பெரியார் திராவிடர் கழகம் கடந்த தேர்தலில் காங்கிரசை வீழ்த்த அதிமுக கூட்டணிக்கு வாக்குகள் சேகரித்தது பெரியார் திகவை ஓட்டுப்பொறுக்கி என்று தமிழச்சி இதுவரை எங்கும் கண்டித்து எழுதவில்லை அப்பொழுது தோன்றிராத நாம்தமிழர் இயக்கத்தை சாடுகிறார். பெரியார் திராவிடர் கழகத்திற்கு ஒரு நியாயம் சீமானுக்கு ஒரு நியாயமா என்ற எனது எளிமையான கேள்விக்கு தமிழச்சியிடமிருந்து பதில் கிடைக்குமா? என்று காத்திருக்கிறேன்.

பிகு : பதிவில் உள்ள புகைப்படம் ஓடும்நதி என்ற பிளாக்கில் இருந்து எடுக்கப்பட்டது.

சீமானை கண்டாலே உதறல் கொள்ளும் தமிழின விரோதிகள்!

ஒக்ரோபர் 6, 2009 § 14 பின்னூட்டங்கள்

சீமானை கண்டாலே உதறல் கொள்ளும் தமிழின விரோதிகள்!

seeman

சமீபகாலமாகவே ‘சீமான்’ என்ற பெயரினை கேட்டாலே தமிழின விரோதிகளுக்கு உதறல் எடுக்க ஆரம்பித்து விடுகிறது. சீமானை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள துணிவில்லாத கோழைகள் சீமானை சைமன் என்றழைத்து தங்கள் அரிப்பை தீர்த்து கொள்கிறார்கள்.  சீமானை பெரும்பாலும் குறிவைப்பவர்கள் இந்துத்துவாசக்திகளே என்பதை நான் சொல்லி தெரியவேண்டுமா என்ன?  சிலநேரம் தவறான புரிதல்காரணமாக சில முற்போக்குவாதிகளும் தங்களை முற்போக்குவாதிகள் என்று காட்டதுடிக்கும் சில பிழைப்புவாதிகளும் சீமானை எதிர்ப்பது உண்டு. சீமான் பெரியாரின் பேரனா? என்று இவிகேஸ் இளங்கோவனின்  குரலை கடன்வாங்கி சில பெரியார்வாதிகள் கேள்விகள் எழுப்பினது வேதனையிலும் வேதனை.

சீமான் இந்துத்துவவாதிகளை நோக்கி தொடுத்த கேள்விகணைகள் கண்டிப்பாக அவர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கும். கண்டிப்பாக அவர்களால் சீமானை கருத்துரீதியாக எதிர்கொள்ள முடியாது. உடனே நம்மாளுக கையில் எடுத்த ஆயுதம்தான் சைமன். அதாவது சீமான் என்பது உண்மையான பெயர் இல்லையாம் சைமன் என்பதுதான் அவரின் உண்மையான பெயராம். இதன் மூலம் இவர்கள் நிறுவமுயல்வது சீமான் என்ற கிருத்துவன் எப்படி இந்துமதம் பத்தி பேசலாம் என்பதே. அப்படியே இந்த இந்துமதவெறியர்கள் தமிழினகாவலர்களாக வேடமணிந்து கொண்டு “நாம்தமிழர் இயக்கம்” குறித்து அவதூறுகள் பரப்பி கொண்டு இருக்கிறார்கள். சரி அப்படியே  தமிழினத்தை காப்பதே இவர்களின் குறிக்கோள் என்றால் ஈழத்தில் செத்துமடிந்த தமிழ் உறவுகளுக்காக குரல்கொடுத்து இருக்கலாமே? அங்கேயும் போராளிகள் குறித்து அவதூறுகளை அள்ளிவீசினார்கள்.  கிருத்துவன் எப்படி தமிழர்களுக்காக போராடலாம்? என்று புதிதாக கண்டுபிடித்திருக்கிறார்கள் போலும். ஈழத்தில் தமிழர்கள் செத்துவிழுந்தபொழுது தமிழனுக்காக குரல்கொடுக்காமல் ராசபக்சேவுடன் கைகுலுக்கியவர்கள் பார்பன இந்து ‘ராம்’கள் என்பதை தமிழன் மறந்துவிடவில்லை.  இந்த பார்பன இந்துத்துவா கூட்டமே தமிழனுக்கு காலம்காலமாக தூரோகம் இழைத்து வந்தாலும். நாமெல்லாம் இந்து என்று நம்மை நோக்கி வேப்பிலை அடிக்க தவறியதில்லை. இதை நம்பி கொஞ்ச பேரு நாமெல்லாம் இந்துன்னு நினைச்சுக்கிட்டு இருக்கலாம் ஆனால் ஓட்டு மொத்த தமிழினமும் ஏமாந்துவிடாது.

ஈழத்தில் போரை நிறுத்து! என்று நாமெல்லாம் குரல் கொடுத்து கொண்டிருந்த பொழுது நமது குரல்வளையை நெறிப்பது போலே சீமான் மீதும் கொளத்தூர் மணி அவர்கள் மீதும் தேசியபாதுகாப்பு சட்டத்தை வீசியது ஆளும்வர்க்கம். அந்த சட்டத்தை உடைத்து வெளியேவந்த சீமான் மீண்டும் மீண்டும் தமிழின தூரோகத்தை அம்பலப்படுத்தினார். அடக்குமுறைகளை மீறி தமிழகம் எங்கும் ஈழப்போராட்டத்தில் தமிழர்களின் தார்மீக உரிமையை எடுத்து சொல்லிவந்தார்.சீமான் செல்லும் இடமெல்லாம் இளைஞர்படை அவருக்கு பின்னால் அணிவகுத்து நின்றது.  தனிநபரின் பழிவாங்கல் உணர்வுகாரணமாக சிங்களனோடு கைகுலுக்கிய  காங்கிரசின் இரத்தம் தோய்ந்த ‘கை’யை தமிழகத்தில் வீழ்த்துவது என்று சபதம் ஏற்ற சீமான்   தமிழகம் முழுவதும் வலம்வந்தார். சீமானை அரசியல் இயக்கம் எதுவும் ஆதரிக்காத நிலையில் அதிமுக கூட்டணிக்கு ஓட்டுபோடுங்கள் என்று பரப்புரை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். தமிழனின் உணர்வுகளை பிரதிபலிக்க ஒரு கட்சிவேண்டுமென்றே ‘நாம்தமிழர்’ இயக்கத்தினை கட்டும் முயற்சியில் இருக்கிறார் சீமான். அரசு சீமான் மீது தொடுத்த தேசியபாதுகாப்பு சட்டத்திலேயே ‘சீமான்’  என்று குறிப்பிட்டு இருக்கிறது. இந்தியரசு வழங்கிய கடவுசீட்டிலும் சீமான் என்ற பெயரே இருக்கிறது அப்படி இருக்கும் பொழுது இந்த பார்ப்பன கும்பல் சைமன் என்று எதன் அடிப்படையில் கூறுகிறது என்று தெரியவில்லை. அப்படியே சைமன் என்பது உண்மையான பெயராக இருந்தாலும் உங்களுக்கு என்னடா பார்ப்பன நாய்களா? என்று கேட்க தமிழன் தயாராகவே இருக்கிறான்.

சீமானை அவதூறு செய்த அதே கும்பல் ஒரு காலத்தில் பெரியாருக்கு எதிராக இயங்கியது. இந்துமதம் குறித்து பெரியார் என்ன விமர்சித்தாரோ அதையேதான் சீமானும் விமர்சிக்கிறார். ஈவிகேஎஸ் இளங்கோவன் தேர்தல்நேரத்தில் சீமான் பெரியாருக்கு தவறானவழியில் பேரனாக பிறந்து இருக்கலாம் என்று பெரியாரையும் சீமானின் பிறப்பையும் தவறாக விமர்சித்து தேர்தலில் மண்ணை கவ்வி இன்று வீட்டிற்குள் பதுங்கிகிடக்கிறார். இந்த பைத்தியக்காரன்தான் முத்துகுமார் யாருன்னு கேட்ட மேதாவி என்பது கொசுறு தகவல். இப்படி பல்முனை எதிர்ப்புகள் சீமானுக்கு எதிராக எழுப்பபட்டாலும் மக்கள்மன்றத்தில் சீமானின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்ததே தவிர சிறிதும் குறையவில்லை.ஈழத்திற்காக சீமான் பேசியபேச்சுகள் தமிழ் உணர்வாளர்களின் நெஞ்சில் அவருக்கு நிரந்தர  இடத்தை ஒதுக்கிதந்துள்ளது. தமிழ் உணர்வுள்ள இளைஞர்கள் தொடர்ச்சியாக சீமானை நோக்கி நகரத்துவங்கி இருப்பது பார்ப்பனர்களுக்கு எரிச்சலை உண்டுபண்ணி  இருக்கிறது. எங்கே தமிழனுக்காக வலுவான இயக்கம் தோன்றிவிடுமோ? என்ற அச்சத்தில்  சீமானுக்கு எதிராக அவதூறுகளை அள்ளிவிடுகின்றனர். “புரட்சி எப்போதும் வெல்லும் அதை நாளைய தமிழீழம் சொல்லும்” என்று தொடர்ந்து முழங்கி ஈழத்திற்கான பரவலான ஆதவை சீமான் திரட்டிவருகிறார். “இங்கே செத்தவிழுந்த தமிழகமீனவனுக்காகவும் ஈழத்தில் செத்துவிழுந்த நமது தாய்த்தமிழ் உறவுகளுக்காகவும் எதுவும்செய்யாத இந்த அரசியல்கட்சிகளை தூக்கி எறியவேண்டும்” என்ற கோரிக்கையோடு நாம்தமிழர் இயக்கம் தொடர்ந்து நடைபோடுகிறது.

seeman1

சீமான் குரல் எப்போதும் பாமரதமிழனின் குரலாகவே இருக்கும். “உலகெங்கும் அடிவாங்கிய தமிழன் திருப்பி அடித்த ஒரே இடம் தமிழீழம் மட்டுமே!” “உலகபந்தில் தமிழன் வாழாத நாடில்லை ஆனால் தமிழனுக்கு என்று ஒரு நாடில்லை!” என்று சீமான் எழுப்பிய சொற்றொடர்கள் உலகமெங்கும் தொடர்ந்து ஒலித்து கொண்டுதான் இருக்கிறது. பெரியாரின் பேரன் பிரபாகரனின் தம்பி தொடர்ந்து தனது லட்சியபாதையில் முன்னேறட்டும்.

சீமானை சைமன் என்பவர்கள் தங்களை தாங்களே அம்பலப்படுத்தி கொள்கிறார்கள்.  ஈழப்போரில் தமிழர்களுக்கு எதிராக துரோகங்களை செய்த இந்துபாசிச அமைப்புகள் திடீரென்று தமிழர்கள் மீது பாசம் கொண்டதைபோலே சீமானை கிருத்துவர் என்று வசைபாடுகிறது.  கிறுத்துவன் பிறப்பால் திராவிடனாகவும் உணர்வால் தமிழனாகவும் இருக்கிறான். பார்ப்பான் ஒருபோதும் தமிழனாக இருந்ததில்லை என்று எங்களுக்கு தெரியும் பார்பனர்களே இந்த சோ, சுப்பிரமணியசாமி, இந்து ராம் வேலைகள் எல்லாம் எங்களிடம் வேண்டாம்.சீமான் கிறுத்துவன் என்று இந்துத்துவா சக்திகளின் பரப்புரையை தமிழகத்தில் யாரும் பெரிது படுத்தவில்லை. யார் உண்மையான தமிழன் என்பதில் தமிழர்கள் தெளிவாக இருக்கிறார்கள். முட்கம்பிவேலிகளை அறுத்தெறிவோம் என்று தமிழகம் முழுவதும் குரல்கள் ஒலிக்கத்துவங்கி விட்டன.  தடுப்புமுகாமில்  இருக்கும் தமிழர்களை விடுவிக்க தாயகதமிழர்கள் ஓரணியில் கைகோர்ப்பது அவசியம்.கடந்த காலத்தில் அதிமுகவை ஆதரித்தது போன்ற தவறான சூழலுக்கு நாம் தள்ளப்படாமல் இருக்க “நாம்தமிழர் இயக்கம்” வலுப்பெறுதல் அவசியம்.

இந்துத்துவா சக்திகள் முடிந்தால் சீமானோடு ஒரேமேடையில் விவாதிக்கட்டும்.  விவாதிக்கும் திறன் அவர்களுக்கு இல்லை என்பது நமக்கு நன்றாகத்தெரியும். இவர்களின் அவதூறுகள் காலத்தால் புறம் தள்ளப்படட்டும். சீமான் என்ற எளியவன் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமால்  ஈழ ஆதரவு போராட்டத்தில்  தொடர்ந்து செல்லட்டும். உலகத்தமிழனை ஒருங்கிணைக்கும் பேச்சாற்றலும் சிந்தனையும் சீமானுக்கு உண்டு என நாமறிவோம்.  சீமான் பெரியாரியலை பரப்ப கருவியாக இருக்கிறார் என்பது பெரியாரின் தொண்டர்களுக்கு நன்றாகத்தெரியும். சீமானின் பேச்சுகள் தொடர்ந்து இந்துத்துவவாதிகளின் தூக்கத்தை கெடுக்கட்டும் தமிழர்களுக்கு பகுத்தறிவை கொடுக்கட்டும்.

Where Am I?

You are currently browsing the சீமான் category at தமிழன்பன் பக்கம்.