மீனவர் பிரச்சனை என்றால் சிலருக்கு தொண்டையில் குத்திய முள்

பிப்ரவரி 3, 2011 § பின்னூட்டமொன்றை இடுக

மீனவர் பிரச்சனை என்றால் சிலருக்கு தொண்டையில் குத்திய முள்! #tnfisherman

டிவிட்டரில் தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த தோழர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்! தமிழக மீனவர்கள் செத்தால் ரெண்டு நாளைக்கு மேல எவனும் கண்டுக்க மாட்டான் என்ற வாதத்தை பொய்யாக்கிய இணைய தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஒரு லட்சத்து எழுபதாயிரத்து ஆறாயிரம் கோடி.

டிவிட்டரில் தமிழன்பன் : http://twitter.com/#!/tamizhanban08

டிவிட்டரில் எழுதுவதால் மீனவர்பிரச்சனை தீர்ந்துவிடுமா என்கிறார்கள் டிவிட்டரில்கூட எதிர்க்க துணிவில்லாதவர்களோடு நமக்கென்ன பேச்சு#tnfisherman

மீனவர் பிரச்சனை என்றால் சிலருக்கு தொண்டையில் குத்திய முள் போல்தெரிகிறது எவனுக்கும் வார்த்தையே வரமாட்டேங்குதே! #tnfisherman

தமிழன் அமைச்சனானா எங்க பிரச்சனை பேசுவீங்கன்னு பார்த்தா நீரா ராடியாகிட்ட என்னென்னமோ பெசிறிக்கீங்க எங்கள பத்தி பேசலையே #tnfisherman

மீனவர்கள் பேராசைக்காரர்கள் என்றார் கருணா. வாயிற்றுபிழைப்பிற்கு வாழ்வோடு போராடும் அவன் எங்கே? தமிழகத்தையேவளைத்த நீ எங்கே?#tnfisherman

தேர்தல் வரைக்கும் மீன்பிடிக்கிறத தடுக்க போறியா? இல்ல சிங்களன்கிட்ட சொல்லி தேர்தல்வரை தற்காலிகமா சுடுறத நிறுத்தபோறியா? #tnfisherman

இத்தாலியில் இருந்து தலைவியை இறக்குமதி செய்தவர்கள் தலைவனை இலங்கையில் தேடினால் என்ன ஆச்சரியம்? #tnfisherman

போன்ல பேசினா ஒட்டுகேக்குரான்னு நிருபமாவ அனுப்பி வைச்சிருக்க. உண்மையை சொல்லு ஒரு தமிழன் தலைக்கு விலை என்ன? #tnfisherman

கச்சீவு தாரைவார்க்கப்பட்ட பொழுதும் நீ கடிதம்தான் எழுதினாய் காலம் கடத்துவதை தவிர்த்து உனது கடிதம் என்ன சாதித்து விட்டது #tnfisherman

மீனவனை அம்மணமாக்கி அடிக்கிறான் உங்களுக்கு என்னடா இனமானத்தலைவன் என்று பட்டம்? #tnfisherman

மும்பை குண்டுவெடிப்பை குப்பனும் சுப்பவுனும் கண்டிக்கவில்லை என்கிறார் ஒலக நாயகன் #tnfisherman

தமிழக காங்கிரஸ் தலைவர்களே உங்களுக்கு தமிழர்களை நினைவில் இருக்கிறதா? நீங்கள்தான் காமராசர் ஆட்சி அமைக்க போறீங்களா? தூ… #tnfisherman

ஆரியர்களை டெல்லி வரை துரத்தி சென்ற தானைதலைவன் வாழ்க வாழ்க!

-இனமானத்தலைவர் குஞ்சுமணி மன்னிக்க வீரமணி #tnfisherman

தமிழ்நாட்டில் சிறுத்தை தலைவர் கொஞ்ச நாளாய் மியாவ் மியாவ் என்றார் இப்பெல்லாம் லொள் லொள் என்றாகிவிட்டார் #tnfisherman

ஒருவேளை தென் அமெரிக்க மீனவன் சுடப்பட்டு இருந்தால் @CharuNivedita குரல் கொடுத்து இருப்பாரோ? #TNfisherman

நிருபமா ராசபக்சேவிடம் மீனவனை ஏன் கொன்றாய் என்று கேட்பாரா? அல்லது நலம் நலம் அறிய ஆவல் என்பாரா?#tnfisherman

என்னுடைய மீனவனை ஏன் சுட்டாய் என்று கேட்க துப்பில்லாத இந்தியா வளரும் வல்லரசாம். போங்க பாஸ் நீங்க ரெம்ப காமெடி #tnfisherman

இராசதந்திரத்தில் கருணா 23 ஆம் புலிகேசியை மிஞ்சிவிட்டார் பாருங்கள். காலுக்கு விழ டெல்லிக்கு போகனுமா? #tnfisherman

இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம் இலங்கையோடு இணைந்தே இன்னும் பல மீனவர்களை கொல்வோம் #tnfisherman

“இப்படியே போ கடல்ல உங்கப்பன் நண்டு வறுத்து தின்னுட்டு இருப்பான்”னு கவுண்ட மணி சொன்னது இந்திய கப்பல்படையை தானா? #tnfisherman

கொஞ்சம் பொறுத்து கொள்ளுங்கள் மீனவர்களே கருணா டெல்லியில் தன் குடும்பத்திற்கு போக உங்களுக்கு ஏதாவது வாங்கி வருவார் #tnfisherman

ஜனவரி23 ல கொல்லப்பட்ட மீனவனுக்கு பிப்ரவரி 6 ல உண்ணாவிரதம் உங்களுக்கு என்ன பிரச்சனை வைகோ? #tnfisherman

கருணாநிதிக்கு நீங்கள் ஏன் சிங்கள ரத்னா குடுக்ககூடாது ராசபக்சே ? உங்க நாட்டுல எவன்உங்களுக்காக இவரைவிட அதிகம் ஆணி பிடிங்கிட்டான்? #tnfisherman

என்ன தலைவா? உன் மக சங்கமம் நடத்த ஒரு கோடி எங்க மீனவன் சங்கருந்தா ஐந்து லட்சமா? எப்பவுமே உன் குடும்பத்துக்கு தனி கணக்கா? #tnfisherman

நூத்திபத்து கோடி பேரில் ஒரு தலைமை இல்லாமல் தலைமையை வாடகைக்கு எடுப்பவர்களிடம் நாம் என்னத்தை எதிர்பார்க்க?#tnfisherman

தமிழர்களே தமிழர்களே என்னை கடலில் போட்டாலும் உங்களை சிங்கள கப்பல்படையிடம் காட்டிகொடுத்துவிட்டுத்தான் சாவேன்! #tnfisherman

எருமை கூட தமிழர்களிடம் பொறுமை கற்கும் #Tnfisherman

தலைவா நீ சங்கத்தமிழில் நடிக்கும் பொழுது உன் சங்கையே கடிக்கும் ஆவேசம் பிறக்கிறதே என்ன செய்ய? #tnfisherman

ஐந்துமுறை ஆண்டதுக்கே #tnfishermanஐநூறு பேர முழுங்கிட்ட இன்னொரு முறையா? தமிழினம் தாங்காதுடா யப்பா!  (சந்திரமுகி நாசர் மாதிரி வாசிக்க)

இது என்னடா இந்திய இறையாண்மை? காஸ்மீருக்கு ஒரு பார்வை கச்சத்தீவுக்கு ஒரு பார்வை ?#tnfisherman

யாரவது சுபவீக்கு மேடைபோட்டு தாருங்கள் அப்புறம் எப்படி கூவுறார் என்று பாருங்கள் #tnfisherman

Advertisements

இங்கு குருவிகள் கூடி கத்துகிறோம் கொலைகார கழுகளின் தூக்கம் கெடுக்க டிவிட்டரில் #tnfisherman

பிப்ரவரி 2, 2011 § 1 பின்னூட்டம்

 

டிவிட்டரில் தமிழக மீனவர் படுகொலையை கண்டித்து கூக்குரலிட்ட குருவியின் கதறல்கள் சில :

டிவிட்டரில் தொடர: http://twitter.com/#!/tamizhanban08

 

நானில்லைஎன்றாலும் ஒருநாள் என்மகன் திருப்பி அடிப்பான் என்ற நம்பிக்கையில் உங்கள் துரோகங்களை சொல்லி சொல்லி வளர்கிறேன் #tnfisherman

“விதவை கோட்டாவில் உங்க அன்னைக்கு இந்தியா. எங்காத்தாவுக்கு சத்துணவு கூடமா?” – மீனவனின் மகன் #tnfisherman

இன்னும் சில தமிழ்மீனவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் நிருபமா சுட்டி காட்டினார் ராசபக்சே அதிர்ச்சி கருணா மகிழ்ச்சி #tnfisherman
மீன்பிடித்தலின் மூலம் வரி உங்களுக்கு வாக்கரிசி எங்களுக்கா? #tnfisherman

இப்போதெல்லாம் கருணாவின் கடிதங்களை பார்த்தால் தபால்காரரே சிரிக்கிறாராம். #tnfisherman

 

செத்தவனுக்கு அரசுவிழா மணிமண்டபம் எல்லாம் எவன்டா கேட்டா? இங்கு இருக்கும் மீனவனின் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத பொழுது #tnfisherman

 

வீரமணிக்கு சுபவீக்கும் மீனவர் பிரச்சனை பத்தி ஏதும் தெரியுமா? இன்னும் சுபவீ ஸ்பெக்ட்ரம் சில உண்மைகள் எழுதிட்டு இருக்கு #tnfisherman

இந்துராம் அடுத்த சிங்களரத்னாவிற்கு அடிப்போடுறார் போலிருக்குராசபக்சே இது போன்ற அடிமைகள் கிடைக்க கொடுத்து வைச்சிருக்கவேண்டும்.#tnfisherman

இந்து ராம் வீட்டு சந்துல எவனோ ஒன்னுக்கு அடிச்சிட்டானாம் தலை ரெம்ப கடுப்புல இருக்கு என்னமாதிரி சமூகம் இதுன்னு #tnfisherman

இந்திய பிரதமர் சிங்காச்சே மீனவர் பிரச்சனையில் சிங்கம் போல கர்ச்சிப்பார் என்று பார்த்தால் மியாவ் என்கிறாரே?#tnfisherman

சொரணை இந்திய இறையாண்மைக்குஎதிரானது ! #tnfisherman

இன்னும் எத்தனை மீனவர்கள் செத்தால் நீங்கள் எங்கள் வேதனையை புரிந்து கொள்வீர்கள்?#tnfisherman

நாம் சொன்னபடி மாணவனை அடிக்கவில்லை என்பதால் நமது மீனவனை அடிக்கிறானோ? #tnfisherman

நீதான் அவனை நண்பன் என்கிறாய் அவன் பதிலுக்கு தோட்டாக்களால் புன்னகைக்கிறான் இதுதான் நட்புநாடா? #tnfisherman

இத்தனை இனமானத்தலைவர்கள் இருந்தும் அடிபட்டு அமைதியாக சாகிறதே தமிழினம். #tnfisherman

புத்த பிக்குகளுக்கு ஒரு அடிக்கே இத்தனை அலறல் என்றால் ஏன்டா  ஐநூத்தி சொச்சம் மீனவர்களின் அழுகுரல் உங்களுக்கு கேட்கவில்லை?#tnfisherman

இது என்னடா இது தமிழன் பொறுமையில் எருமையை மிஞ்சி விடுவான் போலிருக்கிறதே #tnfisherman

பார்த்து செல்லுங்கள் நிருபமா நீங்கள் செல்வது பிணத்தையும் புணர்ந்தவர்களின் தேசம். #tnfisherman

யாருய்யா அந்த புண்ணியவான் கருணாவிற்கு தமிழினத்தலைவன் என்று பட்டம் கொடுத்தது எவனோ கொடுத்த காசுக்கு மேல கூவி இருக்கான்யா!#tnfisherman

சங்கம் வைத்து தமிழ் வளர்த்தோம் அன்று தவறானவர்களின் கையில் ஆதிகாரத்தை கொடுத்தமையால் சங்கு அறுந்து இறந்து கொண்டிருக்கிறோம் #tnfisherman

புத்த மாடாலய தாக்குதலில் வரும் பதட்டம் எங்கள் மீனவன் செத்த பொழுது ஏன் வரவில்லை? எங்கள் உயிர் அவ்வளவு மலிவா #tnfisherman

இந்தியதலைவர்களே எங்களுக்கு ஆயுதம் கொடுங்கள் இல்லை அவனை ஆயுதமில்லாமல் வரச்சொல்லுங்கள் நாங்கள்பார்த்துகொள்கிறோம்#tnfisherman

சீமானை நம்பி ஏமாந்த தோழர்களுக்கு ஒரு நல்வாய்ப்பு!

ஜனவரி 31, 2011 § 9 பின்னூட்டங்கள்

சீமானை நம்பி ஏமாந்த தோழர்களுக்கு ஒரு நல்வாய்ப்பு!

சீமான் வைகோவை சந்தித்து வரும் சட்டமன்றத்தேர்தலில் காங்கிரசை வீழ்த்த அதிமுக கூட்டணியை ஆதரிப்பது என்ற முடிவினை வெளியிட்டமை கண்டு ஒட்டுமொத்த பதிவுலகமும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது. சீமானின் இந்த முடிவினை தோழர்கள் பலர் கிழித்து தொங்கப்போட்டு இருக்கிறார்கள்.நாம் பெரிதும் மதிக்கும் தாமரை அவர்கள் சீமானுக்கு எழுதிய கடிதம்தான் இப்பொழுது எங்கெங்கும் விவாத பொருளாகி இருக்கிறது. சீமானை கண்டித்து, நக்கலடித்து ஆளுக்கொரு பதிவுபோட்டு அனைவரும் பரபரப்பு கிளப்பி கொண்டிருக்கிறார்கள். எனக்கு அதிமுக என்றாலே எப்போதும் கசப்புதான். சீமானுக்கு நான் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று நீங்கள் கேப்பீர்களேயானால் அவர் தமிழகமீனவனை அடித்தால் நான் மாணவனை அடிப்பேன் என்று சொன்ன பெருங்குற்றத்திற்காக !? ஆறுமாதம் சிறையில் இருந்த பொழுது அரசை கண்டித்து ஒரு பதிவு போடாத நான் இப்பொழுது மட்டும் பதிவு போடுகிறேன் என்றால் நாடு நம்மை தூற்றாதா என்றுதான்.

ஒருலட்ச்சத்திற்க்கும் மேலான  ஈழத்தமிழர்களை கொன்றழித்த சிங்களப்பேரினவாதிகளுக்கு  அனைத்துவகைகளிலும் உதவிகள் செய்து தமிழினத்தை கருவறுத்த காங்கிரசை தோற்கடிக்க வேண்டும் என்ற நமது லட்சியத்தை நிறைவேற்ற ஒரு அரியவாய்ப்பு.வரும் சட்டமன்றத்தேர்தலில் காங்கிரசை தோற்கடிக்க காங்கிரசு போட்டியிடும் தொகுதி தோறும் காங்கிரசிற்கு  ஓட்டு போடாதே ( அதிமுகவிற்கு வாக்களி என்றல்ல! ) என்று பரப்புரை செய்ய இருக்கிறோம். சீமானை நம்பி ஏமாந்த தோழர்கள் தொடர்பு கொள்ளவும்.  சீமானின் முடிவு தவறானது என்று கருதும் தோழர்கள் எம்மோடு இணைந்து பரப்புரை செய்வீர்கள் என்று நம்புகிறேன்.விரைந்து அணிதிரளுங்கள் தோழர்களே!

கடந்த பாராளுமன்ற தேர்தலில் சிவகங்கையில் போட்டியிட்ட “ராஜீவ் காந்தி” காங்கிரசை தோற்கடி என்று பரப்புரை செய்வதற்கான அனுமதிகளை பெற்று தந்தார். ஆனால் இம்முறை அவர் நாம் தமிழர் இயக்கத்தில் இருப்பதால் அவர் காங்கிரசை தோற்கடி என்றும் அதனை எதிர்த்து நிற்கும் அதிமுக, மதிமுக, கம்யுனிஸ்ட், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களி என்றும் பரப்புரை செய்வார் என்று தெரிகிறது. காங்கிரசு நிற்காத தொகுதிகளில் நாம் தமிழர் பரப்புரை செய்யப்போவதில்லை என்றும் தகவல்கள் வருகின்றன.

கடந்த பாராளுமன்றத்தேர்தலில் சிவகங்கையில் காங்கிரசை தோற்கடி என்று பரப்புரை செய்த தோழர்களோடு இணைந்து பணியாற்றிய அனுபவம்  இருப்பதால் உங்களுக்கு இந்த அழைப்பை அனுப்புகிறேன்.  ஒருவேளை நீங்கள் மாற்றுத்திட்டம் வைத்திருந்தாலும் அதனை தெரிவிக்கவும்.   நாம் தமிழர் காங்கிரசை தோற்கடி அதிமுக கூட்டணிக்கு வாக்களி என்று பரப்புரை செய்யும் நேரத்தில் கொள்கை பிடிப்புள்ள தோழர்கள் காங்கிரசிற்கு வாக்களிக்காதே வேறு யாருக்கு வேணும்னாலும் வாக்களி என்று பரப்புரை செய்வோம் வாருங்கள்.

தமிழ் பேசுகிறார்கள் என்ற காரணத்தினாலே ஒரு லட்சத்து ஐம்பதாயித்திற்கும் மேலான தமிழர்கள் புதைகுழிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழகமீனவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கதையாகி வருகிறது. காங்கிரசு எந்தக்காலத்திலும் தமிழனுக்கு நன்மை செய்யாது என்பதை நாம் அனைவரும் அறிவோம். திராவிடகட்சிகளும் நீர்த்து போய் காங்கிரசிற்கு காவடி தூக்கிக்கொண்டு இருக்கின்றன. அனைவரும் சந்தர்ப்பவாதிகளாகி  போனமையால். இணையத்தில் எழுதும் நீங்கள் கைகொடுத்தாலன்றி தமிழின விரோதிகளை ஒழிக்க வழியேதும் இல்லை என்பதே உண்மை. தேர்தல் நெருங்கி வருவதால் உடனடியாக பதில் அனுப்புங்கள் உங்கள் பயண அனுபவங்களை பின்னர் நிதானமாக பதிவிட்டு கொள்ளலாம் ஹிட்சிற்கு நான் பொறுப்பு.

உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்……..!

எஸ்வி சேகர் என்னும் பப்ளிசிட்டி பைத்தியம்!

ஜனவரி 28, 2011 § 8 பின்னூட்டங்கள்

எஸ்வி சேகர் என்னும் பப்ளிசிட்டி பைத்தியம்!

இப்போதெல்லாம் எங்கெங்கே ஈழத்தமிழர் படுகொலை, போர்குற்றம், மீனவர் படுகொலை என்று பேசுகிறோமோ அங்கெல்லாம் குழப்பம் விளைவிக்கவே ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருக்கிறது. வலைப்பூக்களாகட்டும் முகநூல் ஆர்குட் என்று அனைத்து இடங்களிலும் சிங்களப்பேரினவாதம் குறித்து ஏதும் விவாதம் நடந்துவிடாதபடி ஒட்டுக்குழுக்களின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.  இந்த ஒட்டுக்குழுக்களை விட ஒரு ஒட்டுண்ணி இந்திய தேசியகொடியை சட்டையில் குத்திக்கொண்டு ஊடகங்களில் செய்யும் அலும்பு சொல்லிமாளாதது.

இந்த பைத்தியம்தான் அடுத்த எம்ஆர் ராதாவென்று செம்மொழி கொன்றானே கூறிவிட்டார் என்றால் பார்த்து கொள்ளுங்கள். விஜய் தொலைக்காட்சி நடத்தும் “நடந்தது என்ன?” என்ற நிகழ்ச்சியில் சில நாட்களுக்கு முன்னாள் திருவாளர் எஸ்வி சேகர் தனது தகப்பனாரின் ஜீவ ஆத்மாவோடு தினந்தோறும் நடத்தும் விவாதம் குறித்து உளறியது. இதைவேறு ஆவியுலத்தோடு நேரடி தொடர்பில் இருக்கும் பிரபலங்கள் என்று எஸ்வி சேகர் அவிழ்த்துவிட்ட கட்டுக்கதைகளை புலனாய்வு என்று பீத்தி கொண்டது விஜய் தொலைக்காட்சி. சங்கரராமன் கொலைவழக்கில் சிக்கிய பெரியவாள் என்னும் பொறுக்கிக்கு தொடர்ச்சியாக சொம்பு தூக்கி கொண்டு திரிபவர்தான் இந்த எஸ்வி சேகர். ஏற்கனவே ஞானி பேசுகிறேன் நிகழ்வில் ஞானி என்னும் முற்போக்கு நரியும் பிற்போக்கு சேகரும் கலந்துகட்டி அடித்த கூத்தை ஏற்கனவே எழுதியிருந்தேன்.இப்பொழுது நான் சொல்ல வரும் நிகழ்வு வின் தொலைக்காட்சியில் நீதியின் குரல் என்னும் நிகழ்வில் கொழுப்பெடுத்து பேசிய நிகழ்வு குறித்தது.தொடர்ச்சியாக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவது குறித்தும் சிங்கள இனவெறியன் ராசபக்சேவின் அமெரிக்க பயணம் குறித்தும் நீதியின் குரலில் விவாதம் சென்று கொண்டு இருந்தது சில நேயர்கள் தொடர்பு கொண்டு மோடிக்கு விசா வழங்காத அமெரிக்கா அதேபோன்று இனப்படுகொலை செய்த  ராசபக்சேவை எப்படி அனுமதித்தது என்பது போன்று கருத்துக்களை பகிர்ந்து கொண்டு  இருந்தனர் திடீரென்று நிகழ்வில் புகுந்த எஸ்விசேகர் என்னும் புண்ணிய ஆத்மா வழமையாக தனது வன்மத்தையும் வாய்கொழுப்பையும் காட்டத்துவங்கியது.

“ஐநூறுக்கும் மேலான மீனவர்களை சிங்கள கப்பல்படை சுட்டு கொலை செய்தபொழுது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத இந்திய அரசை குற்றம் சொல்லுவீர்களா?” என்ற எளிமையான கேள்விக்கு இந்த பைத்தியம் அளித்த பதில் ” நான் கண்டிப்பேங்க, ஒருத்தன் சாலை ஓரம் சிறுநீர் கழித்தாலே நான் அரசை குறை சொல்லுவேன் ஏனென்றால் அரசுதானே கழிப்பிடம் கட்டி கொடுக்க வேண்டும்?”  மீனவர் படுகொலையும்  சாலையோர கழிப்பறை பிரச்சனையும் ஒன்றாம். “தமிழக மீனவர்கள் குறித்து அக்கறை செலுத்தாத இந்திய அரசை கண்டித்து நாம் ஏன் குடியரசு தினத்தை புறக்கணிக்க கூடாது?” என்ற கேள்விக்கு இந்த லூசு சொன்ன பதில் “குளத்தை கோவித்தால் ——- க்குத்தான் நட்டம்”. என்ன திமிர்?

நீதியின் குரல் நிகழ்ச்சிக்கு இந்த பைத்தியத்தை யார் அழைத்தது என்று தெரியவில்லை. தமிழர் வீட்டில் இழவு விழுந்தாலும் சட்டை பையில் கொடியை குத்திக்கொண்டு இது போன்ற பப்ளிசிட்டி பைத்தியங்கள் செய்யும் சேட்டைகளை கவனியுங்கள்.  எவனும் தமிழன் குறித்து பேசவே கூடாது என்று முடிவெடுத்து எங்கே ஏதேனும் விவாதம் நிகழ்ந்தாலும் அதை குழப்பவே இப்படி ஒரு கூட்டம் அலைகிறது . இன மானத்தலைவர்களும் தமிழினத்தலைவர் தமிழர் தலைவரென்று இத்தனைபேர் இருந்தும் மீனவர் படுகொலையின் பொழுது இப்படி கொழுப்பெடுத்து இவர்கள் பேசுவதும் இது போன்ற மனநோயாளிகளை அரவணைக்க நமது திராவிட தலைவர்கள் ஓடோடி வருவதும் வேதனையிலும் வேதனை.

மீனவர் படுகொலை இறையாண்மை என்ன செய்யும்?

ஜனவரி 23, 2011 § 2 பின்னூட்டங்கள்

மீனவர்கள் என்ன பாவம் செய்தார்கள் தமிழர்களாய் பிறந்ததை தவிர?

“இலங்கை கடற்படை, ஊனமுற்ற தமிழக மீனவர் ஒருவரை கொடூரமாக படுகொலை செய்துள்ளது ” என்ற செய்தியை படித்த திமுக நண்பர் ஒருவருக்கு மிகவும் கடுமையான கோவம் வந்திடுச்சு குருதி கொதிக்க என்னிடம் கேட்டார் ” என்னங்க இதெல்லாம் எத்தனைமுறை சொல்வது? ஊனமுற்ற மீனவர் படுகொலை என்றா சொல்றது? மாற்றுதிறனாளி என்றல்லவா சொல்ல வேண்டும். எத்தனை முறை சொன்னாலும் இவனுகளுக்கு புரியமாட்டேங்குது” என்று அலுத்து கொண்டார். ஆமா, அவரு சொல்றதும் நியாயம்தானே?

கடந்த வாரம் பாண்டியன் கொல்லப்பட்டார் தமிழக அரசு ஐந்து லட்சம் நிவாரணத்தொகையாக  வழங்கியுள்ளது கடிதம் எழுதியது கண்டனம் என்றது இப்போதும் அப்படியே. இதற்கு முன்னர் இந்தியகடற்படை தளபதி ஏதோ திட்டம் வைத்திருப்பதாகவும் அதன்மூலம் இந்த படுகொலைகளை மன்னிக்க விபத்துக்களை தடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார் அதை நாமும் படித்தோம் சொரணையோடு எந்த பத்திரிக்கையாளனும்  இதைத்தானய்யா இத்தன நாளும் சொல்லுறீங்கன்னு கேக்கல. மீண்டும் ஒரு மீனவன் ஜெயக்குமார் கொல்லப்பட்டதால் பிரணாப் இது தப்பு தடுத்து நிறுத்துவோம் என்று மழுப்பி இருக்கிறார். அப்பவும் இந்த பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்கவில்லை. இதில் இலங்கை அரசு மீனவர்களை நாங்கள் கொல்லவில்லை என்று செய்தி கொடுத்தாலும் சொரணை இல்லாமல் ஒளிபரப்ப சில நாய்கள் மன்னிக்க சில நல்லவர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.

சரி இலங்கையில் தமிழர்கள் கொலை செய்யப்பட்ட பொழுது  சில உதவாக்கறைகள் மன்னிக்க.. சில  உடன்பிறப்புகள் அவிங்க ராஜிவை கொன்னாய்ங்க அனுபவிக்கிராய்ங்கன்னு சொன்னார்கள். மீனவர்கள் என்ன பாவம் செய்தார்கள் தமிழர்களாய் பிறந்ததை தவிர? சிங்கள இனவெறியை பவுத்த நெறி என்றும் தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்றும் இந்து ராம் போன்ற அல்லக்கைகள் எழுதி கொண்டிருக்கின்றன.

இதில் நீங்கள் கருத்து சொன்னால் இந்திய இறையாண்மை இடையில் வரும். இதே போல் ஒரு மீனவனின் படுகொலையின் பொழுது எங்கள் மீனவனை அடித்தால் உங்கள் மாணவனை அடிப்பேன் என்று பேசிய சீமானை இந்திய இறையாண்மை ஆறு மாதங்கள் சிறையில் தள்ளியது. வெறும் வார்த்தைக்கு ஆறுமாதம் சிறை ஆனால் அதற்கு பின்னால் இரண்டு கொலைகள் நடந்தும் வழக்கு போடாத இந்திய இறையாண்மை. ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு உதவ முடியாது என்று பெரியார் சொன்னது சரிதானே? ஆனால் பெரியார் இறை குறித்தும் ஆண்மை குறித்தும் என்ன சொன்னார் ?…. அது சரி பெரியாரிடம் நமக்கு எது தேவையோ அதை மாத்திரம் எடுத்து கொள்ள வேண்டும். வெங்காயம் விலை ஏற்றமா? பெரியாரிடம் கேள் என்றது போல.

அப்படியே இந்திய குடியரசுதினம் வருகிறது அப்பொன்நாளில்   இந்திய கொடிக்கு ஒரு வணக்கம் வைத்து இந்தியர் அனைவரையும் எனது உடன்பிறப்பாக நினைக்கிறேன் என்று சபதம் எடுத்து கொள்ளுங்கள். அதனை தொடர்ந்து சொரணையற்ற தமிழர்களுக்கு சொரணை வரவேண்டும் என்று தற்கொடை தந்த முத்துகுமரன் நினைவுநாள் வருகிறது அந்நாளில் முத்த்துகுமரன் பத்திய செய்திகள் நம் செவிகளை அடைந்துவிட முடியாதபடி டாஸ்மார்க்கில் கட்டிங் விட்டு மனதை சாந்தப்படுத்தி கொள்ளுங்கள். அல்லது சாரு நிவேதிதாவின் குபபிகொடுத்தல் படித்து ஆறுதல் கொள்ளுங்கள். சொரணை இந்திய இறையாண்மைக்கு எதிரானது.

தமிழக மீனவர்களும் திராவிடமுன்னேற்றகழக நாடககுழுவும் !

ஜனவரி 12, 2011 § பின்னூட்டமொன்றை இடுக

தமிழக மீனவர்களும் திராவிடமுன்னேற்றகழக நாடககுழுவும்!(மீள்பதிவு)

கச்சத்தீவு ஒப்பந்தம் ஒரு புனிதமான ஒப்பந்தம்.
இலங்கை நமது நட்புநாடு என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்!

— இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா

fisherman

நீங்கள் இந்த கட்டுரையை வாசிக்கும் நேரத்தில் கூட தமிழகமீனவன் ஒருவன் இலங்கை கடல்படையினால் தாக்கப்பட்டு கொண்டு இருக்கலாம்,  அனுராதாபுரத்தின் சிறைக்கூடத்தில் ஒவ்வொரு வினாடியையும் நரகமாக எண்ணி கண்ணீர்விட்டு கொண்டு இருக்கலாம். சிங்களனால் சுடப்பட்ட தமிழகமீனவனின் சடலத்தை சுத்தி நின்று அவனது உறவுகள் அழுது கொண்டு இருக்கலாம்.  மத்திய அரசுதலைவிட வலியுறுத்தி தனது பத்தாயிரத்தொன்றவது கடிதத்தை திமுக நாடகக்குழுவின் தலைவர் எழுதி கொண்டு இருக்கலாம். கன்னித்தீவு கூட ஒருநாள் முடிந்து போகலாம் முடியாமல் தொடரும் தமிழக மீனவனின் கண்ணீரும் திமுக தலைமையின் நாடகமும்.

உடல்மண்ணுக்கு உயிர் தமிழுக்கு இதை உரக்க சொல்வோம் உலகிற்கு! என்று நாடக வசனங்களை எழுதியும் உச்சரித்தும் ஆட்சியை பிடித்தவர்கள் தமிழனுக்கும் தமிழுக்கும் ஏதாவது செய்தார்களா? இருப்பது ஒரு உயிர் அதுபோவது தமிழுக்கென்றால் அதைவிட பெருமை உண்டா? என்றெல்லாம் உணர்ச்சிகரமான நாடகபாணி வசனங்களை பேசி கழகம் வளர்த்தவர்கள் தமிழனுக்கு இன்னல் நேர்ந்தால் அதே நாடகத்தை தங்கள் ஊடகங்கள் வாயிலாக நடத்திகாட்டுகிறார்கள்.

adadey-kalainjar-karunanidhi-murasoli-letters-govt-dmk

தமிழ் தமிழன் என்று பேசினால் நம்மை பிரிவினைவாதி என்று முத்திரை குத்துபவர்கள் செத்து விழுந்த தமிழகமீனவர்களுக்காக ஏதேனும் செய்தார்களா? எல்லை கடக்காதே!என்று எச்சரிக்கை செய்கிறார்கள் கடலில் எல்லை தெரியாமல் தமிழன் இலங்கை எல்லைக்குள் காலடி வைக்கிறான் என்றே வைத்து கொண்டாலும் சுட்டு வீழ்த்தும் சிங்களனை தட்டி கேட்க்க தைரியமில்லாத இந்தியா வளரும் வல்லரசு என்றால் நகைப்பிற்கு உரியது அல்லவா?

சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளும் மன்மோகன்சிங் மீனவர் பிரச்சனை குறித்து இலங்கையோடு பேசமாட்டோம் என்று அறிக்கையோ வாசிக்கிறார். பிரனாப்முகர்சி மீனவர்கள் உயிருக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று சொல்லுகிறார். எண்ணி பாருங்கள் தமிழன் தவிர வேறு எந்த மாநிலத்தவனையும் நோக்கி இவ்வாறு ஆளும்வர்க்கம் அறிக்கை வாசிக்க முடியுமா? உலகெங்கிலும் இப்படித்தான் மீனவர்கள் கேள்வி இன்றி சுடப்படுகிரார்களா? கடிதம் எழுதுவதோடு முதல்வரின் கடமை முடிந்து விடுகிறதா?

முதல்வர் ஆவேசம் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் உயர்மட்ட காவல்துறை அதிகாரிகள் மத்தியில் மீனவர் குறித்து பேசினார் என்று செய்தி வருகிறது. உங்கள் நடிப்பிற்கு அளவில்லையா?  தமிழக மீனவர்களின் உடைமைகள் சிங்களவனால் சூறையாடப்பட்டு கைது செய்யப்பட்டு அடித்து துன்புறுத்தப்பட்டு, அனுராதாபுரத்தில் அவமானத்திற்கு ஆளாகும் மீனவனுக்கு திராவிட கட்சிகள் என்ன செய்தன? கடிதம் எழுதியே காலம் காலத்தை கடத்தியதை தவிர.நீங்கள் உணர்ச்சிகரமாக கடிதங்கள் எழுதி கொண்டிருந்த நாட்களில் ஐநூறு மீனவர்கள் செத்து விழுந்து இருக்கிறார்கள். உங்கள் நாடகமும் நாளுக்கு நாள் அதிக பார்வையாளர்களுடன் அமோகமாக ஓடுகிறது. கச்சத்தீவை தாரைவார்த்த பொழுதும் இப்படித்தான் எங்களுக்கு மத்தியில் நடித்து கொண்டு இருந்தீர்கள். நாடகம் பார்த்தே நாசமாய்போன தமிழக தமிழனும் கொல்லப்படுவது தனது சகோதரன் என்று உணராமல் உங்கள் நாடகத்தில் தன்னை மறந்து இருந்தான்.

ஈழத்தமிழனுக்காக போர்நிறுத்தம் கேட்க்கிறோம் என்று நீங்கள் நடத்திய நாடகங்கள் ஒன்றா ரெண்டா? உங்கள் கல்லா நெம்பியத்தை தவிர வேறதுவும் நடக்கவில்லை. இப்பொழுது ஈழத்தமிழர்களின் அகதிமுகாம் பத்தி தயாநிதிமாறன் பிரதமருடன் பேசுகிறாராம் கூடவே எம் கே நாரயனமேணனை அழைத்து செல்கிறார். இன்னுமா உங்கள் நாடகம் ஈழத்தமிழர்களின் இந்த நிலையிலும் உங்கள் இதயம் இறங்கவில்லையா? பாவம் ஈழத்தமிழர்களுக்கு உங்களால் அடுத்து என்ன துன்பம் வரப்போகிறதோ என்று இதயம் பதறுகிறது. எப்படியும் இந்த நாடகக்குழு ஆட்சியின் போதே ஈழத்தமிழன் என்ற இனத்தை அழித்து முடித்துவிடுவது என்று சிங்களன் முடிவு எடுத்துவிட்டான் போல.ஈழத்தில் தமிழர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்த பின்னர் தமிழக கடல்கறைபக்கம் கவனம் செலுத்துகிறான் சிங்களன் என்று எடுத்துக்கொள்ளலாம். மீனவர்கள் எத்தனை பேர் செத்துவிழுந்தாலும் சங்கத்தமிழில் இவர்கள் நடத்தும் நாடகங்கள் நிற்காது.

மீண்டும் கொள்ளையடிக்க வருகிறோம் :சங்கமம்

ஜனவரி 8, 2011 § பின்னூட்டமொன்றை இடுக

 

மீண்டும்  கொள்ளையடிக்க வருகிறோம் :சங்கமம்

சங்கமம் நிகழ்வில் தமிழ் மையத்தின் பெயரை எடுத்து விடத்தயார் என்று தமிழக அரசு தெரிவித்ததை தொடந்து தமிழ் மையத்தின் பெயரை விளம்பரங்களில் இருந்து எடுத்துவிடும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சங்கமம்  என்ற பெயரலில் ஸ்பெக்ட்ரம் ஜோடியின் தொடர்கொள்ளை தமிழகத்தில் தொடர்ந்து நடேந்தேறி வருவது நாம் அனைவரும் அறிந்ததே!


கிராமிய கலைஞர்களுக்கு   மறுவாழ்வு தருகிறோம் என்ற பெயரில் கவிஞர் கனிமொழியும் தமிழ் மையம் என்ற பெயரில் வயிர்வளர்க்கும் கஸ்பாரும் இணைந்து வருடாவருடம் சங்கமம்  என்ற பெயரில் நிகழ்வுகளை நடத்தி வருகிறார்கள்.அந்நிகழ்விற்கு கனிமொழியின் தந்தையும் தமிழகமுதல்வருமான கருணாநிதி ஒரு கோடி வாரி வழங்கி இருக்கிறார் (எவன் அப்பன் வீட்டுக்காசு?)  ஸ்பெக்ட்ரம் ஊழலில் தமிழ்மையம் அலுவலகம் சோதனையிடப்பட்டத்தை தொடர்ந்து சங்கமம் குறித்து நீதிமன்றத்தின் கதவுகளை தட்டியுள்ளார் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்.  நீதிமன்றமும் ஊழல் கறைபடிந்த அமைப்பின் பெயரை சங்கமம் குறித்த விளம்பரங்களில் இருந்து நீக்கிவிடுங்கள்  என்று உத்தரவிட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம்மிற்கு  முன்பு  கஸ்பார் பத்தி யாரும் கிசுகிசுக்க கூட முடியாது. அப்படி மீறி யாரேனும் கேள்வி கேட்டால் “என்னைவிட்டால் தமிழை காக்க வேறு யாரு இருக்கா?” என்று இந்தாளு கேள்வி கேப்பாரு. போதாதுக்கு இவருக்கு நக்கீரனோட நெற்றிக்கண் பார்வை வேறு பக்கபலமாக இருந்து வந்தது. ஈழம் மவுனவலி என்ற தலைப்பில் இவர்கள் ஈழத்தமிழ் உணர்வுகளை வியாபாரம் செய்தபொழுது நான் எழுதிய ஈழம் மவுனவலியும் கருணாநிதி  முதுகுவலியும் கட்டுரை வெளிவந்தது ஈழத்தமிழ் உணர்வாளர்கள் சிலரே நம்மை கண்டித்தார்கள் “எது எப்படியோ இந்த புத்தகத்தை இனப்படுகொலையின் ஆவணமாகத்தான் நாம் பார்க்கவேண்டும்” என்று  சில நண்பர்கள் அறிவுரை கூறினார்கள் மேலும் ஈழத்தமிழர்களை இரட்சிக்க ஜெகத் கஸ்பார் ஒருவராலே முடியும் என்று ஒரு சிலநண்பர்கள் உறுதியாக நம்பினார்கள்.ஈழம் மவுனவலியை இவர்கள் ஜாக்கிவாசுதேவை  வைத்து வெளியிடவைத்தது ஈழப்போரில் உடன் இருந்தே துரோகம் செய்த கனிமொழிக்கு தளம் அமைத்து என்று அன்றே இவரின் சுயரூபம் புரிந்துவிட்டது. இதில் கனிமொழியில்  ஈழம் மவுனவலியில் ரவுத்திரம் பழகாத என்னை மன்னித்து விடுங்கள் என்று நீலிகண்ணீர்  வடித்திருந்தார். ஈழத்தை வைத்து இவர்கள் செய்த வியாபாரம் ஈழத்தமிழ் ஆதரவாளர்களுக்கு சிறிது புரிந்துவிட கூட்டம் கலைந்துவிட்டது இன்னும் தொட்டு தொடர்கிறது சங்கமம் தொடர் கொள்ளைகள்.

திரைப்படங்கள் தொலைக்காட்சித்துறை போன்றவற்றின் தாக்கத்தால் வழக்கொழிந்துவரும் கலைகளையும் கலைஞர்களையும் மீட்டெடுக்கும் முயற்சி என்ற பெயரில் சங்கமம் துவக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் இருக்கும் கலைஞர்களை  சென்னை அழைத்து வந்து மக்கள் அதிகமாகக்கூடும் பூங்காக்கள் அரங்கங்கள் போன்றவற்றில் நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதுதான் சங்கமம் நிகழ்வு. இந்த நிகழ்வினை ஒருங்கிணைப்பது ஜெகத் கஸ்பாரின் சங்கமம் தமிழக அரசின் ஒருகோடியோடு பிற விளம்பரதாரர்களும் உண்டு.  கிராமியக்கலைஞர்கள் இதன் மூலம் ஒரு மாதத்திற்கு தேவையான வாழ்வாதாரத்தை பெறலாம்.

இந்நிகழ்வில் முறைகேடுகள் நடப்பதற்கு எக்கச்சக்கமான வாய்ப்புகள் இருந்தாலும் அதையெல்லாம் பற்றி முதல்வருக்கு கவலை இல்லை வழக்கம் போல என் வீட்டு பிள்ளைகள் என்னைக்கும் பொய் சொல்லாது என்கிற மனநிலையிலேயே இருக்கிறார். சில நண்பர்கள் நலிவடைந்த கிராமிய கலைஞர்கள் வாழ்வை கெடுக்கலாமா? என்று கேட்கிறார்கள். இந்நிகழ்வினால் வருடத்திற்கு ஒருமுறை மாத்திரமே அவர்களுக்கு வருமானம் வருகிறது எஞ்சிய நாட்களில் அவர்கள் வருமையுடந்தான் கழிக்கிறார்கள். இவர்களுக்கு வழங்கப்படும் தொகை சரியாக சென்று சேர்கிறதா? என்று சோதிப்பவர் யார்?

உண்மையிலேயே கிராமியக்கலைகளை பாதுகாப்பது அரசின் நோக்கம் என்றால் தமிழ அரசின் சுற்றுலாத்துறையின் மூலம் வருடம் முழுவதும் கலைஞர்களுக்கு  வருவாய் வருவது மாதிரி மாவட்டங்கள் தோறும் நிகழ்வுகளை ஒருங்கிணைக்கலாம். வருடம் முழுவதும் கிராமிய கலைகள் நடந்தேற மாவட்டங்கள் தோறும் அரங்குகள் அமைத்து, கிராமியக்கலைகளில் இன்றைய தேதிக்கு தேவையான மாற்றங்களை புகுத்தி மக்கள் இரசிக்கும் படி மாற்றிகாட்டலாம் . கலைஞர்களை  மாத்திரமல்ல நமது பண்டைய கலைகளையும் காத்திட இது உதவும். இந்நிகழ்வை அரசே முன்னின்று நடத்தலாம் தமிழ்மையம்  போன்ற இடைத்தரகர்கள் எதற்கு?அரசு கிராமியக்கலைஞர்களின்  மீது உண்மையில் அக்கறையிருந்தால் அரசே தலையிட்டு கலைஞர்கள்  வாழ்வில் விளக்கேற்றலாம் அல்லது எங்களுக்கு கமிசன்தான் முக்கியம் என்றால் தமிழ் மையம் போன்ற ஊழல் பேர்வழிகளின் கையில் ஒப்படைத்து கிராமியக்கலை என்ற ஒன்றை தமிழகத்தில் இல்லாமல் துடைத்தெடுக்கலாம் .